பதிப்புகளில்

'ஸ்டார்ட்அப் ஷக்தி'- பெண் தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்தி, வழிகாட்டிய நிகழ்வு!

5th Jul 2016
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கவும், தொழில்முனைவில் ஏற்படும் சாவல்களை எதிர்கொள்ளவும், அவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தீர்க்கவும், 'ஸ்டார்ட்அப் லீடர்ஷிப்' எனும் அமைப்பு, கடந்த ஜூலை 2-ந்தேதி சென்னையில் "ஸ்டார்ட்அப் ஷக்தி" என்ற நிகழ்வை நடத்தியது. இதில் 50-க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

image


இதில் ஜீயஸ் கேரியர் மற்றும் பர்ஃபாமென்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனரான 'சாதனா சோமசேகர்', இ.ஜெட் வித்யா (EZ vidhya) நிறுவனத்தின் நிறுவனரான, 'சித்ரா ரவி' மற்றும் சென்னை லைவ் எப்.எம்யின் வானொலி தொகுப்பாளரான 'ரூபி ஆன்' ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்குக்கொண்டு, தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

பெண்கள் தொழில்முனைவு மேம்பாடு அமைப்பின் நிறுவனர் காதம்பரி சதீஷ் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து செயல்படுத்தினார்.

"ஸ்டார்ட்அப் ஷக்தி" நிகழ்ச்சியில் கலந்துரையாடப்பட்ட முக்கிய கருத்துகள் இதோ உங்கள் பயனுக்கு!

கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

பொதுவாகவே பெரும்பாலான பெண்கள், தொழில் சார்ந்த நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது, அங்கிருப்பவர்களிடம் கூச்சப்பட்டு உரையாட மாட்டார்கள். இது மிக பெரிய தவறாகும். முடிந்தவரையில் நிகழ்வுக்கு வந்திருப்பவர்களிடம் கலந்துரையாட வேண்டும். தொடர்புகள் வைத்து கொள்ளுவது நல்லது. இது தொழில் முன்னேற்றம் காண உதவும் என்பது மட்டுமல்லாமல், நமக்கு நாமே வாய்ப்புகள் உருவாக்கி கொள்ளவும் உதவும். ஆதலால், சந்திக்கும் நபர்களிடையே ஒரு நல்ல பிணையத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியம் என்று அறிவுரைக்கிறார், சாதனா.

சாதனா கூறியதற்கு மாறாக சித்ரா, பிணையம் உருவாக்குவது என்பது தொழில் முனைதலில் அவசியம் தான். ஆனால், நான் எளிதில் பிறரிடம் பழகுபவர் அல்ல. இதுவரை வாடிக்கையாளர்களுடன் விருந்துணவு சாப்பிடாத ஒரு தலைமை அதிகாரி நானாகத்தான் இருப்பேன் என்று நகைத்தார். நல்ல குழுவும், நல்ல திட்டமும் செயல்முறைகளும் கொண்டிருந்தால், நமக்கு சவுகரியம் இல்லாத ஒரு செயலை செய்ய வேண்டியதற்கான கட்டாயம் இருக்காது. ஆனால், நம் குழுவுடன் ஒரு பிணையம் இருக்கவேண்டியது தொழில் முனைதலில் அத்தியாவசியம் ஆகும். அவர்கள் செய்யும் பணிகளையும் பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும் என்று பேச கூச்சப்படுவோர்களை சமாதானம் செய்யும் வகையில் தன் கருத்தைச் சொன்னார்.

பொதுவான சவால்களை எதிர்கொள்ளும் வியூகம்:

எத்தனை சவால்கள் வந்தாலும் இரண்டு விஷயங்களை நன்கு மனதில் வைத்து கொள்ளுங்கள்! 

முதலாவது: "நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன், மரணம் அளவான சவால் அல்ல இது, என்று தைரியத்தை உங்களுக்குள் உருவாக்கிக் கொள்ளுங்கள்".
இரண்டாவது: "நான் என்ன செய்ய விரும்பினேனோ அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறேனா? நோக்கத்தை நோக்கியே பயணிக்க வேண்டும் என்பதை நன்கு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்". 

இந்த இரண்டும் சரியாக இருந்தால், வரும் இன்னல்களை ஜெயிக்கும் சாதுரியம் உங்களுக்கே தெரிய வரும் என்றார், சி.இ.ஓ சித்ரா.

குடும்பமா? வேலையா? - எதற்கு முக்கியத்துவம்?

"நிறுவனம் நிறுவிய நாளில் இருந்து, இன்றுவரை நான் ஒருநாள் கூட என் லேப்டாப்பை வீட்டுக்குக் கொண்டு சென்றது இல்லை. என் கைபேசியையும் இந்நாள் வரை நான் சுவிட்ச் ஆப் செய்ததில்லை என்று சாதனா கூறினார். குடும்பத்தைப் பார்த்து கொண்டே, நான் வேலையில் ஈடுபடுவது, எனக்கு சுலபமாக இருக்கிறது. குடும்பத்தையும் வேலையையும் சமமாய் பார்த்து கொள்ளவேண்டியது முக்கியமாகும். 

வீட்டிற்கு வரும்போது, வேலை பற்றியோ அல்லது வேலை செய்யும்போது குடும்பத்தை பற்றியோ சிந்தித்து, மன அழுத்தம் ஏற்படுத்திக் கொள்ளகூடாது என்றார், சாதனா.

வானொலி தொகுப்பாளர் ரூபி இதுகுறித்து கூறியது,

குடும்பத்தையும் வீட்டையும் பார்த்துக்கொள்ளும்படி, நம்மை நாம் தயாராக வைத்து கொள்ள வேண்டும். நம் வலிமைகள், குறைகள் என்னெனவென்று அறிந்து, அதற்கு ஏற்றபடி, நம் நேரத்தைப் பிரித்து வேலை பார்க்க வேண்டும். குழந்தைகள், அவர்கள் நேரத்தை அமைதியாக விளையாடி கொள்ளவதுபோல் அமைத்து விட்டால், நாம் அவர்களை நினைத்து பயந்து வேலை செய்யும் அவசியம் இருக்காது.

"வேலை என்பது, நம் அன்றாட வாழ்வில் ஒன்றாக ஒன்றி போக வேண்டும். வீட்டில் அமைதியை உறுதிபடுத்திக் கொண்டால்தான், தொழிலில் மகிழ்ச்சியுடன் ஈடுபட முடியும்".
image


விருந்தாளர் சித்ரா ரவியின் கருத்து,

என் கணவரிடம், நான் எப்பொழுதும் கேட்பதுண்டு, "நீங்கள் ஏதேனும் பேட்டிகளில் கலந்து கொள்ளும்போது, உங்களிடம் ' குடும்பத்தையும் வேலையும் எப்படி பார்த்து கொள்கிறீர்கள்' என்ற கேள்வி கேட்கிறார்களா? நான் எங்கு சென்றாலும் என்னை கேட்கிறார்கள் என்று".

இப்படி பெண்களிடம் மட்டும் இந்த கேள்வி கேட்பதை, நான் பெருமையாக எடுத்துக் கொள்கிறேன். இது எனக்கு மட்டுமல்ல, அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் பெருமைதான்.

என் குடும்பத்தவர்கள் என்னை எதிர்பார்ப்பது, எனக்கு மிகவும் பிடிக்கும். நான் மீட்டிங்கில் இருக்கும்போதும், யோசிக்காமல் ஒரு கால் ஐ அட்டென்ட் செய்கிறேன் என்றால், அது என் மகள் தான் என்று என் ஊழியர்களுக்குத் தெரியும். அதேபோல், என் குடும்பத்தவர்களும், நான் பிஸியாக இருக்கும் காலங்களில் என்னை தொந்தரவு செய்ய மாட்டார்கள்.

"நாம் வீட்டில் இருப்போரிடம் நம் வேலைகள் குறித்து கூற வேண்டும். அதனால், ஒரு வாரத்திற்கோ ஒரு மாதத்திற்கோ, நம்மை எதிர்பார்க்காதபடி, அவர்களே அவர்களைப் பார்த்து கொள்வர். நம் கனவுகள், ஆசைகள் குறித்து, குடும்பத்துடன் பேசுவதால், அவர்களும் நமக்கு துணை புரிவார்கள்", என்று அறிவுரைத்தார் சித்ரா.

தொழிலை விரிவடைய செய்வது எப்படி?

தொழில் முனைவதற்கு, தற்போது இருக்கும் சலுகைகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து, போதிய அறிவு இல்லாததே தொழிலில் முன்னேற்றம் காணாததற்கு முக்கியக் காரணம். அனுபவசாலிகளிடம் கலந்துரையாட வேண்டும். முதலீட்டாளர்களிடம் அதிகம் பேசாதீர்கள், ஆனால் உங்கள் இலக்கை தெளிவாய் கூறி, அவர்களை முதலீடு செய்ய ஒப்புதல் பெறுங்கள். தொழில் முனைதலில் அரசு, பெண்களுக்கு அளிக்கும் சலுகைகள் குறித்தும் தெரிந்து கொள்ளவேண்டும்.

"நம்மிடன் கையில் இருப்பதை வைத்து, எப்படி தொழிலை விரிவடையச் செய்வது என்று நினைக்காதீர். நாம் இன்னும் என்னெனவெல்லம் சேர்த்து கொள்ள முடியும் என்று சிந்தியுங்கள். தொழில் தன்னால் விரிவடையும்" என்றார் சாதனா.
image


தொழிலில் வெற்றி காண பின்பற்றவேண்டியவை

தொழிலில் சாதிக்க நினைவில் கொள்ளவேண்டியவை என்று இந்திய மகளிர் தொழில்முனைவோர்கள் நிறுவனத்தின் நிறுவனரான "மகாலட்சுமி சரவணன்" கூறியவை:

1. உங்களுக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்குங்கள்.

2. நம் வாழும் வாழ்க்கையின் காரணம் என்ன? - பதில் அறிந்து, செயல்படுங்கள்.

3. நீங்கள் நீங்களாய் இருங்கள்.

4. நல்ல சுற்றத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். தொழில் நண்பர்களிடம் சிறந்த பிணையம்   உருவாக்கிக் கொள்ளுங்கள்.

5. உங்கள் வலிமைகள் மற்றும் குறைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.

6. செய்வதை முழு ஆர்வத்துடன் செய்யுங்கள்.

7. உறுதியான முடிவு எடுங்கள்.

8. யோசியுங்கள். ஒவ்வொரு செயலுக்கு முன், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுங்கள்.

9. புகழ், பெருமைகளை நாடி செல்லாதீர்கள். உங்கள் உழைப்புக்கான உயர்வு உங்கள் தேடி வரும்.

10. உறவினர்களை மறக்காதீகள். அவர்கள் துணை மிக முக்கியம்.

இறுதியாக, 

"அதிகாரத்தில் உள்ள பெண்கள் அனைவரும் அளவில்லா சக்திவாய்ந்தவர்கள், விவரிக்க முடியாத அழகானவர்கள். பெண்மையைக் கொண்டாடுங்கள்! " 

என்று கூறி, தன் உரையை முடித்தார், மகாலட்சுமி சரவணன்.

தொழில் முனைதல் பற்றி ஊக்கம் பெறவும், உதவி பெறவும் சென்னை ஸ்டார்ட்அப் லீடர்ஷிப் அமைப்பை அணுகி பயன் பெறலாம்.

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக