பதிப்புகளில்

அ, ஆ, முதல் அவெஞ்சர்ஸ் வரை... பென்சில் நுனியில் சிற்பங்கள் செதுக்கும் நுண்கலை கலைஞன்!

பென்சில் முனையில் 5செ.மீ உயரத்தில் 9 படிக்கட்டு அமைத்து 36 பொம்மைகள் கொண்ட கொலு உட்பட நான்கு உலகசாதனைப் படைத்திருக்கிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த சவித்ரு. 

26th Nov 2018
Add to
Shares
1.2k
Comments
Share This
Add to
Shares
1.2k
Comments
Share

90’ஸ் கிட்ஸ்களின் புல்லரிப்பு விஷயங்களுள் ஒன்றான பென்சில், வாட்ஸ் அப்பில் வீட்டுப்பாடம் அனுப்பி வைக்கும் பள்ளிகளின் அப்டேஷன் வெர்ஷனில் இல்லாமல் ஒழிந்துவிடும் போலும். புது பென்சிலுக்காக ஊக்கை உடைத்து தள்ளும் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கே தெரியும் பென்சிலின் மகிமை. ஆனால், தஞ்சாவூரைச் சேர்ந்த சவித்ரு என்பவர் மகிமைமிக்க  பென்சிலுக்கு மதிப்பு சேர்த்து வருகிறார். யெஸ், பென்சிலை சீவி சீவி அதன் ஊக்கில் சிற்பங்களை செதுக்கிவருகிறார். 

அ, ஆ, இ, ஈ என தமிழ் எழுத்துகள் தொடங்கி, காந்தி, நேரு, அண்ணா, பெரியார், திருக்குறள் என பென்சில் நுனியில் அழகிய சிற்பங்களை செதுக்கி வருகிறார். அத்தனையும் அம்புட்டு அழகு. அதிலும் எக்ஸ்ட்ரா அழகு அவர் செதுக்கிய நம்மாழ்வாரின் சிற்பம். 

சவித்ருவின் கலைப்பயணம் தஞ்சாவூர் பெரியகோவில் இருந்தே தொடங்கியுள்ளது. கோபுரங்களில் உள்ள சிலைகளின் மீது கொண்ட ஈர்ப்பால், சிறு வயதியே ஓவியங்கள் வரைந்துள்ளார். காலேஜ் பய்யனாகிய சமயத்தில் சவித்ரூவின் கசின்கள் காய்கறியில் சிற்பங்களை செதுக்கியுள்ளார். அதையே சோப்பில் முயற்சிக்கலாம் என்ற எண்ணத்தில் முதன் முதலில் சோப்புக்கட்டியில் புத்தர் உருவத்தை வடித்திருக்கிறார். ஆனால், அது காய்கறி சிற்பத்தை காட்டிலும் அழகில் மின்னியுள்ளது. விளைவு, சாக்பீஸ், தெர்மாக்கோல், மரக்கட்டை, கற்கள், மெழுகு என கிடைத்த பொருள்களை எல்லாம் சிற்பமாக்கினார். 

image


புத்தர் சிலை ஒன்றை செதுக்க 8 மணி நேரங்கள் மெனக்கெட்டிருக்கிறார். ஆனால், இப்போது உருவங்களுக்கு 3 மணி நேரம், ஒரு எழுத்து உருவாக்க பத்தே பத்து நிமிடங்களே எடுத்துக் கொள்கிறார். 

கோயம்புத்தூரில் பேஷன் டெக்னாலஜி படித்தேன். நானா ஒவ்வொரு பொருளாக சிற்பங்களை செதுக்க முயற்சித்து, கடைசில வெளிநாட்ல பென்சில் நுனியில் சிற்பங்கள் செதுக்குதலுக்கு நல்ல மவுசுனு தெரிஞ்சுகிட்டு, அந்த முயற்சியில் இறங்கினேன். காலேஜ் நிகழ்ச்சிகளில் வரும் சிறப்பு விருந்தினர்களுக்கு, நினைவு பரிசா பென்சிலில் சிற்பங்களை செதுக்கிக் கொடுத்தேன். 

”டெக்காதலான் எனும் ஸ்போர்ட் கம்பெனியில் இருந்து அவர்களது லோகோவை சோப்பில் உருவாக்கி தர ஆர்டர் கொடுத்தனர். பாக்கெட் மணிக்கு யூஸ்சாகியதுடன், காலேஜ் முடித்து பேஷன் டிசைனராக பணிப்புரிந்த போது பார்ட் டைம் வேலையாக மாறியது,” என்கிறார். 
image


ஒரு கட்டத்தில் கலை சார்ந்தே பயணிக்க வேண்டும் என்று உள் மனம் உற்சாகம் அளித்ததால், வேலையை விட்டு, பிரத்யேகமாய் பெயர்கள், உருவங்கள் செதுக்கி கொடுக்கும் தொழிலாய் மாற்றியுள்ளார். மற்ற வீடுகளை போன்றே பெற்றோர்கள் வசவுக்கு ஆளாகி பின், சொந்த ஊரிலே தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளார். அந்த ஒரு வருட பிரிவுக்காலத்தில், நிறைய கற்றுக்கொண்டதுடன் பெரிசா சாதித்து விட்டு தான் பெற்றோர்களிடம் பேச வேண்டும், வீட்டுக்கு திரும்ப வேண்டும் என்று தனக்குள் சபதம் எடுத்துள்ளார். இன்று, பெற்றோர்களிடம் பேசிவிட்டார். ஏனெனில், சவித்ரு 4 உலக சாதனைக்கு சொந்தக்காரர்.

கடந்த பிப்ரவரி மாதத்தில், 24 மணி நேரம் தொடர்ச்சியாய் காய்கறிகள், சாக்பீஸ், பென்சில், மற்றும் சோப்பில் 175 சிற் பங்களை செதுக்கி யுனிவர்சல் ஃபுக் ஆஃப் ரெக்கார்ட்சில் இடம் பிடித்துள்ளார். தவிர, 1 cm x 1 cm அளவில் உலகின் மிகச்சிறிய செஸ் போர்டும், 5 செ.மீ உயரத்தில் ஒன்பது படிக்கட்டுகளில் 36 பொம்மைகளை கொண்ட கொலு, உலகின் மிகச்சிறிய பென்சில் நுனி சிற்பம் என நான்கு உலக சாதனைகளை படைத்திருக்கிறார்.

கல்லூரியில் படிக்கும் போதிருந்தே முழுமூச்சாய் பென்சில் நுனி சிற்பங்களை செதுக்க தொடங்கியவர், இதுவரை 200க்கும் அதிகமாக பென்சில் நுனி சிற் பங்களையும், 100க்கும் அதிகமான சாக்பீஸ் சிற்பங்களையும் செதுக்கியுள்ளார். 

பிக்காசோ, மில்லியன்ஸ், அவெஞ்சர்ஸ் கேரக்டர்கள், கார்டூன் கதாபாத்திரங்கள், திரைப்பிரபலங்கள் என அவர் செதுக்கியிருப்போர்களின் லிஸ்ட்டு போயிட்டேட இருக்கிறது. அத்தனையையும் புகைப்படமெடுத்து அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டும் வருகிறார். 

image


எவ்வித விளம்பரங்கள் இன்றியே மாதம் 15 முதல் 20 ஆர்டர்கள் வரை கிடைக்கிறது என்கிறார். இந்நுண்கலை பலரும் கற்க வேண்டும் என்ற நோக்கில் வகுப்புகளும் எடுக்கத் தொடங்கியுள்ளார். அவ்வப்போது, பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று பயிற்சி அளித்து வரும் அவர், அடுத்த மாதம் சென்னையில் நடக்கவிருக்கும் ஸ்பெஷல் கண்காட்சியில் சுதந்திர வீரர்களை காட்சிப்படுத்தும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான சிலைகளை தயாரித்து கொண்டும், கஜா புயல் நிவராண பணிகளிலும் விறுவிறுப்பாய் பணிப்புரிந்து கொண்டுள்ளார். 

Add to
Shares
1.2k
Comments
Share This
Add to
Shares
1.2k
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக