பதிப்புகளில்

ரூ.33 கோடியில் துவங்கி ரூ.300 கோடியில் கையகப்படுத்தல்...!

 மெட்ல் வெற்றியை ஏன் கொண்டாட வேண்டும் தெரியுமா? 
posted on 16th October 2018
Add to
Shares
10
Comments
Share This
Add to
Shares
10
Comments
Share

வால்மார்ட்டின் 16 பில்லியன் டாலர் கையகப்படுத்தல் மூலம் ஃபிளிப்கார்ட் பலன் பெற்ற விதம் பற்றி பெரிதாக பேசுகிறோம். திரட்டப்பட்ட மூலதனம் மிகக் குறைவாக இருக்கும் (நாம் கேள்விப்படும் பெரிய சுற்று தொகையோடு ஒப்பிடும் போது) மற்றும் தொடர்புடைய அனைவரும் பயனடைந்த 40 மில்லியன் முதல் 50 மில்லியன் டாலர் வரையான கையகப்படுத்தல்கள் குறித்தும் பேசுவோம். மெட்ல் நிறுவனம் மெர்சருக்கு விற்கப்பட்டது பற்றி தான் குறிப்பிடுகிறேன். இதில் தொடர்புடைய அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர். மெட்ல் 60 ஊழியர்களும் நிதி பெறுகின்றனர். 

சில நாட்களுக்கு முன், குருகிராமை தலைமையகமாகக் கொண்ட, 2010 ல் கேதன் கபூர் மற்றும் டான்மாய் சிங்காலால் துவக்கப்பட்ட மனிதவள தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்பான மெட்ல் (Mettl) சர்வதேச ஆலோசனை நிறுவனமும், மார்ஷ் அண்ட் மெக்லென்னான் கம்பெனிஸ் துணை நிறுவனமுமான மெசர்சால் கையகப்படுத்தப்பட்டது.

இந்த ஒப்பந்தம் பற்றி அறிந்தவர்கள் மூலம், கையகப்படுத்தலின் மதிப்பு ரூ, 300 கோடி என யுவர்ஸ்டோரியால் அறிய முடிகிறது. கடந்த ஆண்டுகளில் இந்த ஸ்டார்ட் அப் திரட்டிய பங்கு நிதியின் அளவு படி, இது 7x $4.2 மில்லியன் முதல் $4.8 மில்லியன் ஆகும். (நீங்கள் பயன்படுத்தும் மாற்று விகிதத்திற்கு ஏற்ப இது ரூ. 33 கோடியாகும்). 

இந்த கையகப்படுத்தால் மென்பொருளை ஒரு சேவையாக வழங்கும் பிரிவில் இந்தியாவின் முதல் கையகப்படுத்தலாகும். ஆரம்ப முதலீட்டாளரான புலும் வென்சர்சுக்கு, இது முதலீட்டின் 7 மடங்கு பலனாகும்.

இடமிருந்து: சித்தார்த்த குப்தா (முதன்மை வருவாய் அதிகாரி), குனீத் எஸ்.சஹாய் (சி.டி.ஒ), டான்மாய் சிங்கால் (இணை நிறுவனர், சி.ஓ.ஓ ), கேதன் கபூர்

இடமிருந்து: சித்தார்த்த குப்தா (முதன்மை வருவாய் அதிகாரி), குனீத் எஸ்.சஹாய் (சி.டி.ஒ), டான்மாய் சிங்கால் (இணை நிறுவனர், சி.ஓ.ஓ ), கேதன் கபூர்


முதல் நிதி காசோலையை வழங்கிய கார்த்திக் ரெட்டி, (செயல்பாட்டை துவங்கியபின் ப்லும் வென்சர்ஸ் கொடுத்த 2வது காசோலை) , 

"சுழற்சியை பாருங்கள். என்னைப்பொருத்தவரை எல்லோரும் பலன் பெறும் இறுதி நிலை தான் முக்கியம். இதனால் சர்வதேச அளவில் பலன்பெறப்போகும் மெர்சர், நிறுவனர்கள், முக்கிய ஊழியர்கள் அல்லது முதலீட்டாளர்கள் என அது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். இந்திய SaaS சூழல் தான் வெற்றி பெற்றுள்ளது. இது ஒரு கையகப்படுத்தல் தான். இது உண்டாக்கக் கூடிய தாக்கத்தை பாருங்கள். இந்த பிரிவில் மேலும் முதலீடு செய்வோம். நிறுவனர்கள் சூழலில் மீண்டும் முதலீடு செய்வார்கள். மெர்சர் மேம்பாடு பெறும்,” என்கிறார்.

நாம் யோசித்து பார்க்க வேண்டிய பலன் இது. குறைந்த அளவு நிதியை திரட்டி, நிதி ஒழுங்கை கடைப்பிடித்து, விரைவில் லாபம் ஈட்டி, அதன் பிறகு வெளியேறுவதற்கான சரியான வாய்ப்பை எப்படி பயன்படுத்திக்கொள்வது?

மெட்ல் நிறுவனத்திற்கு ஏ சுற்று நிதியை வழங்கிய முதல் முதலீட்டாளரான, கலாரி கேபிட்டலின் வானி கோலா, கேதன் மற்றும் டான்மாய் மிக ஈடுபாடுள்ள தொழில் முனைவோராக கண்டதாகவும், சிறந்த பொருள் வர்த்தகத்தை உருவாக்க அவர்கள் உறுதி கொண்டிருந்ததே தன்னை முதலீடு செய்ய வைத்ததாகவும் என்னிடம் கூறினார். 

"அவர்களுடன் இணைந்து செயல்பட்டதில் பெருமை கொள்கிறோம்,” என்கிறார் அவர்.

மெட்ல் ரூ.80,000 விதை நிதியுடன் 2010 ல் துவங்கியது. இந்த நிதியை இன்மொபி இணை நிறுவனர் நவீன் திவாரி மற்றும் ஏஞ்சல் முதலீட்டாளர் சாஷா மீர்சந்தானி உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அளித்திருந்தனர். 8 மாதங்கள் கழித்து அடுத்த சுற்று நிதியான 350,000 டாலர் ப்லும் வென்சர்சிடம் இருந்து 2011 ல் கிடைத்தது. 2012ல் கலாரி கேபிட்டல் 4 மில்லியன் அளவுக்கு ஏ சுற்று நிதி அளித்தது.

மெட்ல் , 2017 நிதியாண்டில் ரூ.38 கோடி வருவாய் ஈட்டியது. ($5.1 மில்லியன்) நிறுவன வளர்ச்சியை வைத்து பார்க்கும் போது, 2018 நிதியாண்டில் இது ரூ.55 கோடியாக இருக்கலாம். ($7.5 மில்லியன்).

ஆனால் எல்லா வெற்றிக்கதைகள் போலவே மெட்ல் நிறுவனமும் சோதனைகளை எதிர்கொண்டது. ஏ சுற்று நிதி பெற்ற பிறகு அவர்கள் அமெரிக்காவில் விரிவாக்கம் செய்ய விரும்பினார்கள். சந்தைக்கு ஏற்ப சேவையை மேம்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில் அந்த சந்தையில் நிதி வெகு வேகமாக செலவாவதை உணர்ந்தனர். 

2013ல் அவர்கள் இங்கு ஆர்ம்ப வளர்ச்சியை பயன்படுத்திக்கொண்டு பெரிதாக வளர்வது எனும் தெளிவுடன் திரும்பி வந்தனர். "இந்திய சந்தையில் கவனம் செலுத்தி வெற்றி பெறுவது, அதுவும் சிக்கனமான முறையில் என்பது எங்கள் பயணத்தில் முக்கிய அம்சம்,” என்கிறார் கேதன்.

"2013- 14 ல் நாங்கள் நிதி திரட்ட முயன்ற போது முதலீட்டாளர்கள் எங்களிடம் உற்சாகம் காட்டவில்லை. (அவர்கள் அளித்த பூஜ்ஜியம் மதிப்பீடு அல்லது குறைவான மதிப்பீடு இதை உணர்த்தியது). ஆனால் நாங்கள் லாபம் ஈட்டத்துவங்கிய போது எல்லாம் மாறியது. ஆனால் அப்போது மேலும் நிதி தேவையில்லை என தீர்மானித்தோம். மிகுந்த கவனத்துடன் லாபகரமான வர்த்தகத்தை நடத்துவதாக் கிடைக்கும் தீவிரத்தை பெற்றிருந்தோம்,” என்கிறார் அவர்.

இந்திய சந்தையில் வெற்றி பெற, சேவை, பொருள், மற்றும் விற்பனை எல்லாம் ஒருங்கிணைந்து செயல்படுவதோடு கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை என்கிறார் கேதன். 

"நல்ல பொருள் காரணமாக உங்களுக்கு வர்த்தகம் கிடைக்கலாம். அந்த பொருள் வாடிக்கையாளர்கள் மத்தியில் சென்றடைய வலுவான விற்பனை குழு வேண்டும்.”

மெட்லின் தகுதி மதிப்பீடு, பாதுகாப்பான மற்றும் மேம்படுத்தக்கூடிய மென்பொருள் ஒரு சேவை (SaaS) மேடையை சார்ந்திருக்கிறது மற்றும் டேட்டா அனல்டிக்சை பயன்படுத்துகிறது. "ஆளுமை, திறன் மற்றும் பணி சார்ந்த திறன்கள் ஆகியவற்றை அளவிடுவதற்கான சொந்த உள்ளடக்கத்தை இந்த மேடை கொண்டிருக்கிறது. மெட்ல் தனது மேடையை வாடிக்கையாளர்களின் உள்ளட்டத்திற்கும் உரிமம் அடிப்படையில் வழங்குகிறது,” என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசின் ஸ்கில் இந்தியா திட்டமும் நிறுவன வளர்ச்சிக்கு உதவி, புதிய வாடிக்கையாளர்களை பெற கைகொடுத்தது. 2,000 க்கும் மேற்பட்ட கட்டணம் செலுத்தும் நிறுவனங்கள் பட்டியல் மற்றும் 94 சதவீதம் தக்க வைக்கும் விகிதத்துடன், மெட்லின் பயணம் துவங்கியிருக்கிறது என்கின்றனர் அதன் நிறுவனர்கள்.

ஸ்டார்ட் அப் அளவீட்டிற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒரு வழி, பொது பங்குகளை வெளியீடும் அளவுக்கு வளர அல்லது சர்வதேச நிறுவனம் கையகப்படுத்தும் வரை (ஃபிளிப்கார்ட்/வால்மார்ட்) அடுத்தடுத்து பெரிதாக நிதி திரட்டி பெரிதாக வளர்ந்து ஒரு வழியாகும்.).

இன்னொரு வழி, மெட்ல் உருவாக்கியுள்ளதாகும். இதில் தான் அதிக நிறுவனங்கள் உருவாக விரும்புகிறோம். இதில் குறைந்த அளவு நிதி திரட்டி, அதன் மூலமே வலுவான தொழில்நுட்பம் அடிப்படையில் வளர்ச்சி அடையக்கூடிய வர்த்தகத்தை உருவாக்கி, பலமடங்கு மதிப்பில் விற்பதாகும். நிறுவனர்கள் பணம் பெற்றிருப்பதோடு, இந்த ஒப்பந்ததில் அதன் பல ஊழியர்களும் பலன் அடைந்துள்ளனர்.

பின் ஏன் இப்போது விற்க வேண்டும்? தொடர்ந்து நிறுவனத்தை தாங்களே நடத்தியிருக்கலாம் என கேதன் ஒப்புக்கொள்கிறார். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.

"நாங்கள் காணும் தொலைநோக்கு மற்றும் அளப்பரிய சர்வதேச வாய்ப்புகளை பொருத்தவரை, அதை நிறைவேற்ற 130 நாடுகளில் இருப்பு கொண்ட மெர்சர் சிறந்த பங்குதாரராக இருக்கும். அவர்களுடன் அங்கெல்லாம் நாங்கள் செல்கிறோம்?,” என்கிறார் அவர்.

மெர்சருடன் புதிய பயணம் குறித்து தானு, டான்மாயும் உற்சாகம் கொள்வதாக அவர் சொல்கிறார்.

மெர்சர் கேரியர் லைன் ஆப் பிஸ்னசின் சர்வதேச தலைவர் இல்வா போனிக், இந்த கையகப்படுத்தல் வேகமாக வளரும் திறன் மதிப்பீடு சந்தையில் மெர்சருக்கான வாய்ப்பை அளிப்பதாகவும், நிறுவனங்களுக்கான நம்பகமான திறன் ஆலோசகர் எனும் அந்தஸ்தை மேம்படுத்திக்கிக்கொள்ள உதவுவதாகவும் கருதுகிறார்.

அனீஷ் சர்கார், மெர்சர் இந்தியா சி.இ.ஓ அனீஷ் சர்காரிடம், மெட்ல் தேர்வு பற்றி கேட்ட போது,

“பல மதிப்பீடு நிறுவனங்களை பரிசீலித்த பிறகு, மெட்ல்லை மெர்சர் கையகப்படுத்தியது, இந்தியாவில் காணப்படும் உயர்ந்தரமான தொழில்முனைவு மற்றும் புதுமைக்கான சான்றிதழாகும். மெட்டல்லின் மேடை உலகத்தரம் வாய்ந்த மேடையாகும். மற்ற வளரும் சந்தைகள் மற்றும் மேம்பட்ட சந்தைகளுக்கு இதை கொண்டு செல்வது எங்கள் நோக்கம்,” என்று தெரிவித்தார்.

அனீஷ் சர்கார் 

அனீஷ் சர்கார் 


மெர்சர் நிறுவனம் ஹெல்திஃபைமீ எனும் மற்றொரு ஸ்டார்ட் அப்புடனும் பங்கு கொண்டிருப்பதாக கூறும் அனீஷ், இந்தியாவின் துடிப்பான ஸ்டார்ட் அப் பரப்பை எதிர்கால ஒப்பந்தங்களுக்கான ஆர்வத்துடன் நோக்குவதாகவும் என்னிடம் தெரிவித்தார்..

"40 மில்லியன் முதல் 100 மில்லியன் டாலர் வரையான கையகப்படுத்தல்கள் இந்திய ஸ்டார்ட் அப் சூழல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை. அனைவரும் பணம் பெற்று, வேகமாக வெளியேறும் வாய்ப்பை பெற்றுள்ளதால் இந்த ஒப்பந்தம் நல்லது,”

என்கிறார் ஐடியாஸ்பிரிங் கேபிடல் மூலம் பி2பி ஆரம்ப கட்ட முதலீடு செய்யும் நாகானந்த் துரைசாமி கூறுகிறார்.

வெகு விரைவில் இதே போன்ற ஒரு கையகப்படுத்தலை எதிர்பார்க்கிறோம். எல்லோரும் வெற்றி பெறுவதை கொண்டாட காத்திருப்போம்.

ஆங்கில கட்டுரையாளர்: ஷ்ரத்த சர்மா | தமிழில்; சைபர்சிம்மன் 

Add to
Shares
10
Comments
Share This
Add to
Shares
10
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக