பதிப்புகளில்

ஆல் இன் ஆல் அழகுராஜாவாகும் ஃபேஸ்புக்!

YS TEAM TAMIL
3rd Mar 2016
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், மெசஞ்சர் என பல தளங்கள் இருந்தாலும் ஃபேஸ்புக்தான் நாம் அதிகம் பயம்படுத்தும் தளமாக விளங்குகிறது. ஒரே ஒரு குறைபாடு மட்டும்தான் அந்தத் தளத்தின் உலகளாவிய ஆதிக்கத்தை தடுத்துவருகிறது. அது- 'சர்ச்' ஆப்ஷன். இதை களையவும் திட்டங்கள் வகுத்து வருகிறது ஃபேஸ்புக்.

image


திட்டம்-1 : உங்கள் சொந்த நிறுவனங்களையே தனித்தனி நிறுவனங்களை போல் நடத்துங்கள்!

ஃபேஸ்புக் தன் கிளை நிறுவனங்கள் மேல் தன் ஆதிக்கத்தை செலுத்தாமல் அவற்றை சுதந்திரமாக செயல்பட வைக்கிறது. இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஒக்குலஸ் போன்றவை எல்லாம் தத்தமது தனித்திறமைகளோடு விளங்குகின்றன. இதற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது. கூகுள் தன் கிளை நிறுவனங்களை எல்லாம் ஒரே குடையின் கீழ் கொண்டு வர முயற்சித்து வரும் வேளையில் அதற்கு நேர்மாறான பாதையில் நடை போடுகிறது ஃபேஸ்புக். இப்படி ஒரே குடையின் கீழ் நிறுவனங்களை கொண்டுவரும்போது வெளிப்பார்வைக்கு கூகுள் டெக் உலகின் அரசன் போல காட்சியளித்தாலும் நிஜம் அதுவல்ல. ஃபேஸ்புக்தான் டெக் உலகின் ரியல் சாம்ராட். ஃபேஸ்புக்கில் பயனாளிகள் தாங்களாக முன்வந்து தங்களைப் பற்றிய தகவல்களை பகிர்கிறார்கள். இதனால் கூகுளை விட பயனாளிகள் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கிறது ஃபேஸ்புக்.

கூகுளின் வசம் ஒரு சமூக வலைதளம் கூட இல்லாத நிலையில் ஃபேஸ்புக் மெல்ல மெல்ல கூகுளின் பிரம்மாண்டத்தை அரிக்கத் தொடங்கியிருக்கிறது. 2005-ல் ஆண்ட்ராய்ட் என்ற ஸ்டார்ட் அப்பை மட்டும் வாங்காமல் போயிருந்தால் நாம் இன்று பார்க்கும் கூகுள் வேறுமாதிரி இருந்திருக்கும்.

திட்டம் 2: மின்னஞ்சலை ஒழிப்பது எப்படி? 

ஜிமெயில்தான் கூகுளின் வரலாற்று சிறப்புமிக்க சாதனை. உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் வசதி அது. ஜிமெயிலின் மூலம் கூகுளின் பிற பலங்களான மேப், காலண்டர், டாக்ஸ் ஆகியவற்றையும் பயன்படுத்த முடியும். தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை 12 பில்லியன் பயனாளிகளை சென்று சேர்ந்திருக்கிறது கூகுள். ஆனால் இந்த எண்ணிக்கையை வெறும் 50 ஊழியர்களைக் கொண்ட வாட்ஸ் அப் நிறுவனம் ஆறே ஆண்டுகளில் எட்டிவிட்டது. இப்போது கூகுளையும் ஃபேஸ்புக்கையும் ஒப்பிட வேண்டிய அவசியம் என்ன? நிச்சயம் இருக்கிறது.

கடந்த மாதம் தன் ஒரு டாலர் சந்தா முறையை கைவிட்டது வாட்ஸ் அப். இப்போது தன் பயனாளிகளை வாட்ஸ் அப் மூலம் வர்த்தக பரிவர்த்தனைகள் மேற்கொள்ளவும் தூண்டுகிறது. ஜிமெயிலில் வரும் சம்பந்தமேயில்லாத பெரிய பெரிய வர்த்தக மெயில்களுக்கு எல்லாம் இனி வேலை இல்லை. க்ரியேட்டிவிட்டிக்கு தான் இனி இடம் இங்கே. நிறுவனங்கள் தங்கள் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வாட்ஸ் அப்பை பயன்படுத்தத் தொடங்கும் காலம் தூரத்தில் இல்லை. வாட்ஸ் அப்பில் இருக்கும் இன்னொரு வசதி நாம் அனுப்பிய தகவலை மறுமுனையில் இருப்பவர் படித்துவிட்டாரா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள முடியும். இதுவும் வர்த்தக நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும். ஃபேஸ்புக் மெசஞ்சரும் இந்த பரிவர்த்தனைகளுக்கு பயன்படும். அதனால் வாட்ஸ் அப், மெசஞ்சர், ஸ்லாக் ஆகியவற்றுக்கு நடுவே மாட்டிக்கொண்டு திணறுகிறது ஜிமெயில்.

திட்டம் 3: இளைஞர்களை கவர வேண்டும் 

வைனை விட இன்ஸ்டாகிராமிற்கு அதிக பயனாளிகள் இருக்கிறார்கள். வளரும் நாடுகளில் அந்த தளம் மிகவும் பிரபலமாக இருக்கிறது. எளிமையான ஒரு தளம் என்பதால் அனைவரின் ஏகோபித்த ஆதரவும் இன்ஸ்டாவுக்கே. அது போக, ஃபேஸ்புக்கின் துணையும் இருக்கிறது. இந்தக் காரணங்களால் வைனிலிருந்து இன்ஸ்டாகிராமிற்கு மாறி வருகிறது இளைய தலைமுறை.

ஐ-போனில் தன் சர்ச் பாரை தக்க வைக்க கூகுள், 1 பில்லியன் டாலர் தந்தது நினைவிருக்கிறதா? காரணம், ஆப்பிள் பயனாளிகளை கவர்வதுதான். அதேபோல் ஃபேஸ்புக்கும் இன்ஸ்டாகிராம் படங்களை பயன்படுத்த ட்விட்டருக்கு பணம் தரவேண்டும். இதன்மூலம் ஸ்னாப்சாட் செயலி மட்டுமே களத்தில் போட்டிக்கு நிற்கும். (ஸ்னாப்சாட்டை முடக்க ஃபேஸ்புக் கொண்டுவந்த ஸ்லிங்சாட் வெற்றி பெறவில்லை) கூகுளின் வர்த்தக பலங்கள் அனைத்தும் ஃபேஸ்புக்கிற்கும் உள்ளது. சொல்லப்போனால் கூகுளால் செய்ய முடியாதவை எல்லாம் ஃபேஸ்புக்கால் செய்யமுடியும். ஆல்பபெட்டின் வேலையே வருமானத்தை பெருக்குவதுதான் என்பதால் ஃபேஸ்புக் வேகம் எடுப்பதை தவிர்க்க முடியாது. 

திட்டம் 4: கூகுளை நேரடியாக தாக்குவது

மெசஞ்சர் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் முறையில் செயல்படுவதால் வீசாட் செயலிக்கு போட்டியாக விளங்குகிறது. இப்போதே நீங்கள் மெசஞ்சர் மூலம் உபேர் டாக்ஸி புக் செய்யலாம். சில குறிப்பிட்ட தேடுதல்களை மேற்கொள்ளலாம். இதிலிருந்தே ஃபேஸ்புக் கூகுளை குறி வைப்பதை புரிந்து கொள்ளலாம்.

மெசஞ்சர் கூகுள் சர்ச்சை விட இன்னும் துல்லியமானதாக இருக்கும். தேவையற்ற பக்கங்கள் எல்லாம் நீக்கப்பட்டுவிடும். உங்கள் தேடுதலை எளிமையாக்கி உதவி செய்ய ஒரு டிஜிட்டல் அசிஸ்டென்ட்டும் செயல்படும்.

ஆனால் கூகுள் அளவிற்கு வாடிக்கையாளர்களை கவர இந்த வசதிகள் எல்லாம் பத்தாது. மளிகை சாமான்கள் வாங்க, போக்குவரத்துகளை ஏற்பாடு செய்ய என அனைத்திற்கும் மெசஞ்சர் பயன்பட்டால் எப்படி இருக்கும்? இதற்கெல்லாம் ஃபேஸ்புக் நிறைய உழைக்க வேண்டும்.

ஃப்ரீ பேஸிக்ஸ் திட்டத்தை ஃபேஸ்புக் திரும்பத் திரும்ப வலியுறுத்துவதன் நோக்கமே இதுதான். இணையத்தின் ராஜாவாக தான் மட்டுமே இருக்கவேண்டும் என நினைக்கிறது அந்த நிறுவனம். செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள், படங்கள், மெசேஜ்கள் என அனைத்தும் அதன் வழியேதான் பார்வைக்கு வரவேண்டும் என விரும்புகிறது. WWW என்பதை மாற்றி தன் ஆதிக்கத்தை செலுத்தம் முயற்சிதான் இது. 

(பொறுப்புத்துறப்பு: இந்தக் கட்டுரையின் கருத்துகள் முழுக்க முழுக்க எழுதியவரின் சொந்தக் கருத்துகள். இதற்கு இந்த தளம் பொறுப்பாகாது.)

ஆக்கம்: ஆதித்யா வெங்கடேசன் | தமிழில்: சமரன் சேரமான்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

Free Basics கோரிக்கை மூலம் பயனர்களை ஏமாற்றப் பார்க்கிறதா ஃபேஸ்புக்?

இணைய சமநிலைக்கு ஆதரவாக டிராய் உத்தரவு; கொண்டாடும் இணையம்!


Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக