பதிப்புகளில்

ஹாலிவுட் முதல் இந்தியா வரை ரமோனாவின் உடற்பயிற்சி மந்திரம்!

9th Sep 2015
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

ஜெசிக்கா ஆல்பா, ஹல்லே பெர்ரி, ஸ்கார்லெட் ஜோஹன்சன் மற்றும் கேட் பெக்கின்சேல் - இவர்களுக்குள் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா? ரமோனா பிரகன்ஸா என்ற உடற்பயிற்சியாளர். இவரின் உடற்பயிற்சி தந்திரங்களே இந்த நட்சத்திரங்களின் உடற்கட்டிற்கு காரணம். ஜெர்மனியில் பிறந்து தற்பொழுது வான்கூவரில் (Vancouver ) வசிக்கும் ரமோனா 3-2-1 ஃபிட்நெஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர். இவரின் 3-2-1 என்ற உடற்பயிற்சி முறை மிகவும் பிரபலம். ரமோனாவின் எண்பது வயது தாயார் கூட உடற்பயிற்சி வல்லுநர். ஆகவே இவர்களின் குடும்பத்தில் இது வேரூன்றி இருப்பதில் ஆச்சர்யமில்லை. பல வருடங்கள் உடற்பயிற்சி தொழிலில் உள்ள அனுபவத்தின் காரணத்தால் 'ஃபீல் ஃபிட் லுக் ஃபன்டாஸ்டிக் 3-2-1' (Feel Fit Look Fantastic 3-2-1) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

தனது புத்தகத்தை பிரபலப்படுத்த இந்தியா வந்த பொழுது, யுவர்ஸ்டோரி அவரை சந்தித்தது ...

ஹாலிவுட் பற்றிய கனவு

ஒன்பது வயது சிறுமியான ரமோனாவின் படுக்கை அறை சுவர்களில் ஹாலிவுட் நட்சத்திரங்களின் சுவரொட்டிகளே இருக்கும். இருபது வருடங்கள் கடந்தாலும், அவரின் கனவு மெய்யாகியுள்ளது, அதுவும் அவர் நினைத்தது போலவே. தலைச்சிறந்த ஹாலிவுட் நட்சத்திரங்களின் கட்டுக்கோப்பான உடல் அமைப்பிற்கு இவரது உடற்பயிற்சி வகுப்புகள் மற்றும் ஊட்டசத்து திட்டமே காரணம் என்றால் மிகையல்ல .

முதல் முயற்சி

நான்கு வயதாக இருக்கும் போது ரமோனாவை அவரது தாயார் ஜிம்னாஸ்டிக்ஸ் வகுப்பில் சேர்த்தார். ஜிம்னாஸ்டிக்சில் தேர்ந்த பெண்ணாக இருக்கையில், பதினெட்டு வயதில் காயம் கராணமாக அப்பயிற்சியை துறக்க நேரிட்டது. ஆனால் அவர் மனம் துவளவில்லை. நாட்டியத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். எண்பதுகளில் நாட்டியம் மற்றும் ஆரவார ஊக்கமளிப்பதிலும் ஈடுபட்டார். இதன் மூலம் NLF இன் ஆரவார ஊக்கமளிப்பவராக இருந்தார்.

ஹாலிவுட் நட்சத்திரம் ஸ்கார்லெட் ஜோஹன்ச்சன்  உடன்  ரமோனா  பிரகன்ஸா

ஹாலிவுட் நட்சத்திரம் ஸ்கார்லெட் ஜோஹன்ச்சன் உடன் ரமோனா பிரகன்ஸா


ஹாலிவுட் பிரவேசம்

ரமோனா 1985 இல் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு (Los Angeles) இடம் பெயர்ந்தார். 1999 வருடம் அங்குள்ள ஒரு ஜிம்மில் பணியாற்றும் பொழுது, பதினேழு வயது பெண்ணுக்கு பயிற்றுவிக்குமாறு ஒரு தயாரிப்பளார் ரமோனாவை அணுகினார்.  அந்த பெண் வேறு யாருமில்லை ஜெசிக்கா அல்பா தான்! பத்தாண்டிற்கும்  மேலாக ஜெசிக்காவை பயிற்றுவித்தார். இதன் பிறகு ஹல்லே பெர்ரி , ஸ்கார்லெட் ஜோஹன்ச்சன், அனீ ஹாத்வே, ஜெஸ்ஸிகா பியல், கேட் பெக்கின்சலே, அமன்டா சய்ப்ரீத், ஈவா மேண்டஸ், என அவருடைய ஹாலிவுட் நட்சத்திர வாடிக்கையாளர்களின் பட்டியல் நீண்டது. ஜாக் எபிரோன், ராயன் ரெய்னால்ட்ஸ் மற்றும் பிராட்லி கூப்பர் போன்ற ஆண் பிரபலங்களும் இவரின் வாடிக்கையாளர்களே.

அவரின் 3-2-1 முத்திரை   

அவருடைய பிரத்தியேக 3-2-1 பயிற்சி முறை மற்றும் 3-2-1 ஊட்டசத்து திட்டத்தையும் பல்லாண்டு காலம் வெற்றிகரமாக பயிற்றுவித்த பிறகு, முதல் முறையாக இந்த வெற்றியின் ரகசியத்தை அவரின் புத்தகத்தில் வெளியுட்டுள்ளார். 3-2-1 என்பது உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் இணைக்கும் தத்துவம். இந்த மந்திரத்தின் படியே ரமோனாவும் வாழ்கிறார். தன்னுடைய புத்தகத்தை இந்தியாவில் பிரத்தியேகமாக வெளியுட்டுள்ளார் .

ரமோனாவின் புத்தகத்தில் மேற்குப் பகுதியின் வெற்றிகரமான உடற்பயிற்சி முறைகளையும் கிழக்கு பகுதியின் ஆரோக்கியமான உணவு வழக்கங்களையும் இணைத்து அதனுடன் நடைமுறை அவசியங்களையும் சேர்த்து தொகுக்கப்பட்டுள்ளது. இதுவே நல்ல உடலமைப்பிற்கும் ஆரோகியத்துக்கும் போதுமானது என்றும் "மாய மாத்திரைகளோ விரைவாக செயல்படும் வழிமுறைகளோ" எதுவும் இல்லை என்று கூறுகிறார்.

ஜாக் அப்ரோன் உடன்  ரமோனா  பிரகன்ஸா

ஜாக் அப்ரோன் உடன் ரமோனா பிரகன்ஸா


கட்டுபாட்டுடன் செயல்படுவதை சவாலாக மேற்கொள்ள வேண்டும் என்கிறார் ரமோனா. "3-2-1 மனதளவில் தயார் படுத்தி கொள்ளுங்கள், உடல் ரீதியாக தயாராகுங்கள், உணர்வுபூர்வமாக முன்னோக்கி செல்லுங்கள், இக்கணமே உங்களால் நல்ல எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைக்க இயலும்!"

தனது 3-2-1 ஃபிட்நெஸ் லிமிடெட் வலைதளத்தின் மூலமாக ஐந்து வருடங்களாக பல்வேறு பயிற்சிகள், ஊட்டச்சத்து திட்டங்களை சொல்லிக் கொடுக்கிறார். தன்னுடைய புத்தகம் மற்றும் டிவிடி பற்றிய தகவல்கள், தான் நடத்தியுள்ள பயிற்சி வகுப்புகள், பிரபலங்களுக்கான பயிற்சிகள் மற்றும் பயிற்றுவிப்பர்களுக்கான சான்றிதழ் பயிற்சிகள் பற்றியும் இவரது வலைத்தளத்தில் பகிர்கிறார். ஃபார்டிஸ் மருத்துவமனையின் 'மாம்மா மியா' (Mamma Mia) என்ற திட்டத்திற்கு தன்னுடைய பிரபல '3-2-1 பேபி பல்ஜ் பி கான்' (321 Baby Bulge Be Gone) என்ற பயிற்சியை அளிக்கிறார்.

ஊர்ந்துவண்டியின் வாயிலாகவும் பயிற்சி

'மொபைல் ஃபிசீக்' (Mobile Physique) என்ற வாகனத்தில் பயணிக்கும் ஜிம்மையும் ரமோனா பார்ட்னர்ஷிப் முறையில் இணைந்து நடத்துகிறார். 52 அடி கொண்ட இந்த நுட்பமான வண்டி பல பிரமாண்ட ஹாலிவுட் திரைப்படங்களுக்கு உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. பல தயாரிப்பு நிறுவனங்களும் இதை பயன்படுத்தி உள்ளது. ரோமனாவும் அவரது பங்குதாரரும் இந்த வண்டியிலும் தங்களது பயிற்சிகளை கற்பிக்கிறார்கள். கடைசியாக இந்த வண்டி Godzilla படத்திற்காக பயன் படுத்தப்பட்டது.


ஐம்பது வயதிலும் அயராது செயல்படுகிறார்

52 வயது என்று துளியும் நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறார் ரமோனா. கட்டுகோப்பான இவரது உடலமைப்பிற்கு இணையாக இளம் பெண்கள் கூட இவருடன் போட்டி போட இயலாது. பயிற்சி வகுப்புகள், சர்வதேச கருத்தரங்குகளில் பேசுதல் போன்றவற்றைத் தவிர தான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் உடற்பயிற்சியின் அவசியத்தையும் ஆரோக்கிய வாழ்வினை பற்றியும் பறைசாற்றுவதே அவரது விருப்பமாக இருக்கிறது.

வலைதள முகவரி : www.ramonabraganza.com

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக