பதிப்புகளில்

ஆம் நான் ஒரு போராளி: பாலியல் பலாத்காரம், பல போராட்டங்களை சந்தித்த ஒரு தாயின் வாக்குமூலம்!

4th Apr 2017
Add to
Shares
159
Comments
Share This
Add to
Shares
159
Comments
Share

தாக்குதலுக்கு உட்பட்டவர்கள் தங்களின் தைரியத்தை ஒவ்வொரு முறை சிரிக்கும் போதும் வெளிப்படுத்துவார்கள் - ஜீன் மெக் ஆல்வனே 

தைரியமும், வீரமும் அவ்வளவு சுலபமாக ஒருவருக்கு வந்துவிடாது. முக்கியமாக உண்மையை சொல்லவேண்டும் என்றால், அது சில நம்பிக்கைகளை, வழக்கங்களை உடைத்தெரியப் போகிறதென்றால் இன்னமும் கடினமான செயலாகும். 

அப்பாவியான ஒரு இளம் பெண்ணின் கதை இது. நிலு என்ற அந்த பெண் பெற்றோர்களின் மறைவுக்கு பின்னர் ஒரு கோவிலில் வளர்ந்தார். 15 வயதாக இருந்தபோது அவர் பாலியல் வன்முறைக்கு ஆளானார். கர்பமாக ஆன அவரை அந்த ஆண் விட்டுச்சென்றார். வயிற்றில் குழந்தையோடு பிழைப்பேதும் இன்றி, கோவிலில் பிச்சை எடுத்தார் நிலு. சில தினங்களுக்கு பின் அவர் ஒரு ப்ராத்தல் தொழில் செய்யும் கூட்டத்திடம் விற்கப்பட்டார். பிறந்த குழந்தையுடன் மதுவிற்கு அடிமையாகி, குடிகாரர்களின் பாலியல் கொடுமைகளை தாங்கிக்கொண்டும் வாழ்க்கையின் மீது நிலுவிற்கு நம்பிக்கை போகவில்லை. தன் குழந்தையின் எதிர்காலத்திற்காக நல்ல வாழ்வை தேடிக் கொண்டிருக்கிறாள். 

image


நிலு ஒரு போராளி. டீபி, எச்ஐவி பாதிப்புகள் இருந்தும், ஒரு நல்ல தாயாக, தன் குழந்தைக்கு நல்ல வாழ்வை அளிக்க தீவிரமாக பாடுபடுகிறார். ஹுமன்ஸ் ஆப் பாம்பே என்ற அமைப்பிடம் பேசுகையில் நிலு சொன்னதாவது,

”நான் கோவிலில் தான் வளர்ந்தேன். அங்கிருந்த பூசாரி, என் பெற்றோர்கள் நான் பிறந்தவுடன் இறந்துவிட்டதாக சொன்னார். அவர்கள் நினைவு எனக்கில்லை. 15 வயதிலேயே தாயானேன். நேபாளை சேர்ந்த ஒருவன் என்னை பாலியல் பலாத்காரம் செய்தான். நான் கோவிலில் எந்த கவலையுமின்றி விளையாடிக் கொண்டிருப்பேன். வாழ்க்கையை பற்றி எந்த கவலையுமின்றி சுற்றித்திரிந்தேன். ஆனால் இந்த சம்பவம் என் வாழ்க்கையை மாற்றியது. என்னை கெடுத்தவன், நான் கர்பமானது தெரிந்ததும் ஒடிவிட்டான். அதனால் கோவிலில் பிச்சை எடுத்து சம்பாதித்தேன். எனக்கும் என் மகளுக்கும் சாப்பிட உணவும், உடுத்த உடையும் கூட இல்லை. கோவிலுக்கு வருபவர்களிடம் உதவி கேட்பேன்.

கோவிலில் சமைக்க உதவி புரிந்ததால் அங்கே என்னை தங்க அனுமதித்தனர். அப்போது கோவிலுக்கு அன்றாடம் வரும் ஒருவன் என்னை அணுகினான். நான் சமைத்துக் கொண்டிருந்தபோது என்னை அழைத்து, ‘நீ என்னுடன் வந்தால் நான் உன்னை என் சகோதரி வீட்டிற்கு அழைத்து செல்வேன், அங்கே பணத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது’ என்றான். 16 வயதான ஒரு பயந்த பெண்ணான நான் கையில் குழந்தையோடு அவன் பின்னால் சென்றேன். என் பெண்ணை நன்றாக வளர்க்கவேண்டும் என்ற ஆசையில் நம்பி அவனுடன் சென்றேன். புனே சென்றடைந்ததும் தான் எனக்கு புரிந்தது. நான் வீட்டு வேலை செய்யப்போவதில்லை, அவனின் சகோதரி ஒரு ப்ராத்தல் தொழில் செய்பவர் என்று. என்னை அவன் 1 லட்ச ரூபாய்க்கு விற்றிருந்தான். இடைவிடாது அழுவேன், என் முகமே சிவப்பாக மாறும் அளவிற்கு அழுதேன். முதல் ஐந்து மாதங்கள் பாலியல் தொழில் செய்ய நான் ஒப்புக்கொள்ளவில்லை. எவ்வளவோ முயற்சி செய்து முரண்டுபிடித்தேன். என்னை அவர்கள் குச்சியால் அடிப்பார்கள், அறைவார்கள். ரத்தம் வரும்வரை அடிப்பார்கள். சில ஆண்களிடம் என்னை வலுக்கட்டாயமாக அனுப்புவார்கள், அவர்களும் என்னை பலாத்காரம் செய்வார்கள்.
என்னை விற்ற அதே ஏஜெண்ட் என்னை பாம்பேவில் உள்ள ஒரு சேட்டுக்கு 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்றான். என்னை சமாளிப்பது அவனுக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் சேட் சற்று நல்லவராக இருந்தார். மும்பை வாழ்க்கை எனக்கு பிடித்திருந்தது. முன்பு பாலியல் தொழில் செய்ய மறுத்த நான் இங்கே அதை பிடித்து செய்யத்தொடங்கினேன். என் மகளை வளர்க்க, உணவு தர எனக்கு வேறு என்ன வழி இருந்தது. என் வீட்டு அருகே உள்ள ஒரு பெண்ணிடம் என் மகளை விட்டுவிட்டு செல்வேன். அவருக்கு மாதம் 4000 ரூபாய் அதற்கு கொடுத்தேன். நாட்கள் செல்ல செல்ல எனக்கு டீபி, எச்ஐவி நோய்கள் வந்துவிட்டது. என் வாழ்க்கையே தொலைந்தது போல் உணர்ந்தேன். இளம் வயதில் வாழ்க்கையை வீணாக்கிக்கொண்டேன். 
மும்பை ப்ராத்தலில் ஒன்பது ஆண்டுகள், பல சண்டைகள், பிரச்சனைகள், குடிப்பழக்கத்துக்கு அடிமை ஆனேன். மோசமான வாழ்க்கை நிலை, வீட்டில் குடிகார ஆண்கள் கூட்டம் என்று இருந்தேன். ஆனால் என் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முடிவெடுத்து, புர்னதா அமைப்பு அளித்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன். 
நான் என் மகளுடன் சேர்ந்து சந்தோஷமாக வாழ விரும்புகிறேன். அவள் தற்போது ஹாஸ்டலில் இருக்கிறாள். எனக்கு பயிற்சி முடிந்தவுடன் ஒரு நல்ல வேலை கிடைக்கும் என்று நம்புகிறேன். என் மகள் தான் என் வாழ்க்கை. நான் இன்னும் எவ்வளவு நாள் உயிருடன் இருப்பேன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அவளுக்கு நல்ல கல்வி மற்றும் ஆதரவு தேவைப்படுகிறது. 
என் வாழ்க்கை மோசமாக ஆகிவிட்டது, அதன் மூலம் கிடைத்துள்ள வலிமையை கொண்டு அவளை நான் நல்ல விதத்தில் வளர்க்க விரும்புகிறேன். இந்த மன உறுதி எனக்கு இருப்பதற்கு முக்கியக்காரணமே நான் ஒரு தாய் என்பதால் தான். இல்லையெனில் எப்போது நான் தளர்ந்து போய் இருப்பேன். இப்போது நான் விட்டுக் கொடுப்பதாக இல்லை, என் மகளை எந்த ஒரு தவறான ஆணும் அணுகுவதற்கு நான் விடப்போவதில்லை. என்னை துன்புறுத்திய ஆண்களை போன்றோர் அவளை நெருங்கக் கூட விடமாட்டேன். நான் ஒரு போராளி, அந்த கூட்டம் மீண்டும் வெற்றி பெற அனுமதிக்க மாட்டேன்...” 

நிலு கூறியுள்ள இந்த பகிரங்க வார்த்தைகள் நம் நாட்டு குடிமக்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று. இது போன்ற கொடுமைகள் யாருக்கும் நிகழாதவாறு பார்த்துக்கொள்வது எல்லா மக்களின் பொறுப்பாகும். 

அகத்தா கிருஸ்டி கூறியது போல, “ஒரு தாய் குழந்தையின் மீது வைத்துள்ள அன்பு இவ்வுலகில் உள்ள அனைத்தையும் விட அதிகமானது. அதற்கு சட்டம் தெரியாது, இரக்கம் கிடையாது, அது எவருக்கும் பயப்படாமல் நின்று, தன் பாதையில் வரும் எல்லாவற்றையும் தயவு தாட்சண்யமின்றி உடைத்து எரியும்,” என்றார். இது இப்போது நிலுவின் கதையின் மூலம் நமக்கு நன்கு புலப்படுகிறது. 

கட்டுரை: Think Change India

Add to
Shares
159
Comments
Share This
Add to
Shares
159
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக