பதிப்புகளில்

ரம்யா ஸ்ரீராம்- காண்கதைகளின் வழியே வாழ்க்கை!

16th Aug 2015
Add to
Shares
75
Comments
Share This
Add to
Shares
75
Comments
Share

“என் வாழ்க்கையின் மிகப் பெரிய ஆசீர்வாதமாக நான் நினைப்பது, என் எண்ணங்களை எல்லாம் பின் தொடர நான் அனுமதிக்கப்பட்டது தான். ஒவ்வொரு பொழுதின் ஆசைகளை பொறுத்து என் கவனமும் மாறிக் கொண்டே இருக்கும். ஒரு நாள், மிருகக்காட்சி சாலையில் வேலை செய்ய ஆசைப் படுவேன், மறு நாளே வீட்டில் இருக்கும் காகிதங்களை மறு சுழற்சி (Recycle ) செய்ய விரும்புவேன். இந்த லட்சியங்களை மிக தீவிரமாக எடுத்துக் கொண்டதும் , அதற்கான ஊக்குவிப்புமே பல அனுபவங்களுக்கு காரணமாய் இருந்திருக்கின்றன” என்கிறார், "தி டேப்’பின் (The Tap) நிறுவனர் ரம்யா ஸ்ரீராம், ‘. அவரைப் பொறுத்தவரையில் ,‘தி டேப்’, “ அலையும் மனதிலும் சிந்திக்கும் பென்சிலிலும் இருந்து உருவாகும் கதைகளுக்கான களஞ்சியம்” .

image


‘தி டேப்’, வாழ்க்கையை காமிக்குகளாக எளிமைப்படுத்த முன் நின்று,மொழியின் தடைகளை காட்சிகளின் அகராதி கொண்டு உடைக்க வைக்கிறது. ரம்யா, தன் கற்பனையை காண்கதைகளாக உருவாக்க வைக்கிறார்.

தான் ஒரு கார்ட்டூனிஸ்ட், என்று எப்பொழுதுமே நினைத்ததில்லை. அவர், தன் ஃபேஸ்புக்கில் நண்பர்களை வரைந்ததைப் பார்த்த நண்பர் ஒருவர் அவர் நடத்தும் பத்திரிக்கைக்கு ‘ காமிக் ஸ்ட்ரிப்’ வரையும்படி கேட்டது தான் முதல் வாய்ப்பு. “ எனக்கு கிடைத்த முதல் ஆர்டர் தான், வரைவது வெறும் பொழுதுபோக்கு அல்ல என்று யோசிக்க வைத்தது. அதற்கு பிறகு நான் என் வேலையை தீவிரமாக எடுத்துக் கொண்டேன், நிறைய யோசித்து,பலவிதமான கதைகளை சொல்ல பல்வேறு வழிகளை கண்டு, வடிவங்களோடு விளையாடத் தொடங்கினேன். பிறருக்காக யோசித்து, அதை காட்சிகளாக மொழிப் பெயர்ப்பதை நான் மிகவும் என்ஜாய் செய்கிறேன்” என்கிறார்.

ஹைதராபாத்தில், பள்ளிக் காலத்திலும், ரம்யா விளையாட்டு வகுப்பைவிட கலை,கைவினை,பாடல்,நடனம் போன்றவற்றின் மீதே அதிகம் ஆர்வம் காட்டினார்.தான் செய்ய வேண்டியவைகள் பற்றி முடிவு எடுக்க முழு சுதந்திரம் இருந்த போதிலும், மேற்கொண்டு என்ன படிப்பது என்பதில் ஒரு குழப்பம் இருந்த நிலையிலே பள்ளி வாழ்க்கை முடிந்தது. அதே குழப்பத்தோடு, வேலூர் இன்ஸ்டிட்டுயூட் ஆஃப் டெக்னாலஜியில் ,எஞ்சினியரிங் சேர்ந்தார்.

பட்டப்படிப்பிற்கு பின்னர், மறுபடியும் குழப்பம்.பல்வேறு கல்லூரிகளுக்கும்,கம்பெனிகளுக்கும் அப்ளை செய்தார், சில நுழைவுத் தேர்வுகளை எழுதினார். இறுதியில், ஒரு பதிப்பகத்தில் ஆசிரியரக சேர்ந்து, ஐந்து ஆண்டுகள் பணி புரிந்தார்.

பதிப்பகத்தில் வேலை செய்தது, ரம்யா தன்னை புரிந்து கொள்ள உதவியது. “நான் பணியிடத்தில் புத்தகங்களை திருத்தினேன்; வீட்டிற்கு வந்து காமிக்குகள் வரைந்தேன். பாடப் புத்தகங்களை ப்ரூஃப் ரீட் செய்து விட்டு, பயணக் கதைகளை எழுதினேன். அப்போது தான்,எழுதுவதும்,வரைவதும் என் நிலையான தோழமைகள் என உனர்ந்தேன். எனக்கான அழைப்பு அது! அது மிக தற்செயலாக நடந்தது.” என்று சிலாய்கிக்கிறார் ரம்யா. ரம்யா ‘தி டேப்’ நிறுவனத்தை, கதைகளை குவிக்கும் இடமாகத் தான் தோற்றுவித்தார்.

“நான் கிளையண்ட் மீட்டிங்குகளில் உட்கார்ந்து கொண்டு,காமிக்குகள் வரைவது பற்றியும், ‘தி டேப்’-ற்கு இன்னும் நேரம் செலவிடுதல் பற்றியுமே யோசித்துக் கொண்டிருப்பேன். எனவே, களத்தில் இறங்கினேன்”


image


ரம்யா, தன் முழு கவனத்தையும் ‘தி டேப்’ன் மீது செலுத்தினார். தன்னை , ‘ ஒன் வுமன் ஆர்மி’,என்றழைக்க முடியாது ,என்று கூறும் அவர், “எனக்கு என் குடும்பத்தில் இருந்தும் நண்பர்களிடம் இருந்தும் நிறைய ஆதரவு கிடைக்கிறது, பார்வையாளர்களிடம் கத்துவதற்கும் ,சந்தைக்கு சென்று எனக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கும்,எனக்கு ‘ எக்ஸெல் ஷீட்’ பற்றி சொல்லிக் கொடுப்பதற்கும், நான் வரையும் மாடு மாடு போல் இல்லை என்று சொல்லுவதற்கும் எப்பொழுதுமே நான் அவர்களை நம்பி இருக்கலாம்”, என்கிறார் விளையாட்டாய்.

இத்தனை அன்புக்கும் ஆதரவிற்கும் மத்தியிலும்,தொழில் முனைவு என்று வரும் போது சில சவால்களையும் சந்தித்து இருக்கிறார். “முடியாது என்று சொல்வது எனக்கு மிகக் கடினமானது.தொடக்கத்தில் நான் எல்லாவற்றையுமே எடுத்துக் கொள்வேன். சில சமயங்களில், நான் எவ்வளவு நேரமும் சக்தியும் செலவழிக்கிறேன் என்று உணராமலே , மிகவும் குறைந்த விலையில் வேலை செய்திருக்கிறேன்” என்கிறார். பின்னர், அது ஒரு அரோக்கியமான வழி இல்லை என்று புரிந்து கொண்டுள்ளார். “ உங்களுக்கு விருப்பமான ஒன்றை செய்யத் தொடங்கும் போது அதில் நிறைய முதலீடு செய்ய வேண்டி இருக்கிறது. அந்த முதலீட்டிலும் ஒரு கண் இருப்பது அவசியம்.வெறும்,பணம் பற்றிய முதலீடு அல்ல அது” என்று முதிர்ச்சியுடன் பேசுகிறார்.

பொதுவாகவே குழுக்களில் ஆட்களை சந்தித்து பேசுவதில் தேர்ந்தவர் இல்லை ,எனினும், அதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், திட்டமிடுதல் குறித்து அறிந்துக் கொள்ள தொழில் முனைவோருக்கான படிப்பு ஒன்றை மேற்கொண்டு தனக்கென சில திட்டங்களையும் வகுத்துள்ளார்.“ என்னை பாதித்த மற்றுமொரு விஷயம், ஒரு வாய்ப்பின் மதிப்பு. பெரிய,சிறிய விஷயங்களுக்கு அதை ஒரே மாதிரி பொருத்தி பார்ப்பேன். ஒவ்வொரு முடிவு எடுப்பதற்கு முன்னரும், அதனால் நான் இழக்கப் போவது என்ன என்று என்னையே கேட்டுக் கொள்வேன், அதற்கான பதிலின் தெளிவு, முடிவை எடுக்கவோ உடைக்கவோ வைக்கும்”, என்று கூறுகிறார்.

தொழில் முனைவராக, சில விதிமுறைகளை பின்பற்றுவது, சின்ன சின்ன குறிக்கோள்களோடு இருப்பது நிச்சயாமாக உதவும் என்று பல அனுபவங்களுக்குப் பின்னரே உணர்ந்திருக்கிறார். “நீங்கள் திருப்தியாகத் தான் இருக்கிறீகள் என்று மற்றவர்கள் சமாதானப் படுத்தும்வரை அல்ல, உண்மையிலேயே உங்கள் வேலை உங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வரையில் நீங்கள் பல பரிசோதனைகள் செய்து கொண்டே இருக்கலாம்” என்கிறார். மேலும் நிறைய புராஜெக்ட்களையும், சித்திரங்களையும், சவால்களையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரம்யாவை, வருங்காலம் வரவேற்கிறது. “ தி டேப்"ன் விற்பனைப் பொருட்களை விரிவு படுத்தவும், அதை ஆன்லைன் ஸ்டோரில் அதிகப்படுத்தவும் திட்டமிட்டுருக்கிறேன்” என்கிறார் ரம்யா.

ரம்யாவின் கதைகளில் ஒன்று-

image


Add to
Shares
75
Comments
Share This
Add to
Shares
75
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக