ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 100க்குள் இடம்பெற்ற 5 தமிழர்கள்!

சொத்து மதிப்பு விவரங்கள்!
81 CLAPS
0

புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் இதழ், இந்த ஆண்டுக்கான 100 இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 14வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து நபர்கள் இடம்பிடித்துள்ளனர். அவர்கள் யார், அவர்களின் சொத்து மதிப்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்ப்போம்.

HCL நிறுவனர் ஷிவ் நாடார்!

 • இந்திய பணக்காரார்கள் பட்டியலில் 3வது இடம்
 • உலக பணக்காரார்கள் பட்டியலில் 71வது இடம்
 • சொத்து மதிப்பு 31.6 பில்லியன் டாலர்
 • கடைசி ஒரு ஆண்டில் சொத்து மதிப்பு 10 பில்லியன் டாலர்கள் உயர்ந்துள்ளது.
 • ஜூலை 2020ல், HCL டெக்னாலஜிஸின் தலைவர் பதவியில் இருந்து விலகிய ஷிவ் நாடார் பொறுப்பை தனது மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ராவிடம் ஒப்படைத்தார்.
 • இதுவரை தனது அறக்கட்டளை மூலம் 662 மில்லியன் டாலர்களை நன்கொடையாக கொடுத்துள்ளார் ஷிவ் நாடார்.

முருகப்பா குழுமத்தை நிர்வகிக்கும் முருகப்பா குடும்பம்!

 • இந்திய பணக்காரார்கள் பட்டியலில் 41வது இடம்.
 • சொத்து மதிப்பு 4.7 பில்லியன் டாலர்.
 • கடந்த ஆண்டில் 2.4 பில்லியன் டாலர் வருவாய் உயர்ந்துள்ளது.
 • முருகப்பா குடும்பம் 28 பிசினஸ்களை நடத்தி வருகிறது.
 • நான்காம் தலைமுறை குடும்ப உறுப்பினர் எம்.எம். முருகப்பன் 2018 முதல் முருகப்பா குழுத் தலைவராக இருக்கிறார்.

முருகப்பா குடும்பத்தினர்

ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மற்றும் அவரது சகோதரர்கள்!

 • இந்திய பணக்காரார்கள் பட்டியலில் 55வது இடம்.
 • சொத்து மதிப்பு 3.75 பில்லியன் டாலர்.
 • கடந்த ஆண்டை விட 1.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.
 • ஸ்ரீதர் வேம்பு, கிளவுட் அடிப்படையிலான வணிக மென்பொருளை உருவாக்கிய தனியார் நிறுவனமான ZOHO-வின் நிறுவனர்.
 • ZOHO-வில் பெரும்பான்மை பங்குகளை ஸ்ரீதர் வேம்பு மற்றும் அவரின் இரண்டு சகோதரர்கள் வைத்துள்ளனர்.
 • உலகளவில் 60 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் மட்டும் 45 க்கும் மேற்பட்ட ஆப்களை ZOHO தயாரித்துள்ளது.
 • டெக்சாஸின் ஆஸ்டினில் 375 ஏக்கர் வளாகத்தில் புதிய ZOHO அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

அமல்கமேசன்ஸ் குடும்பம்!

 • TAFE டிராக்டர் உற்பத்தியில் புகழ்பெற்றது அமல்கமேசன்ஸ் குடும்பம்.
 • பிரபல தொழிலதிபர் மல்லிகா ஸ்ரீனிவாசன் இந்த குழுமத்துக்கு தலைமை தாங்குகிறார்.
 • TAFE உலகின் மூன்றாவது பெரிய டிராக்டர் தயாரிப்பு நிறுவனம் ஆகும்.
 • இந்திய பணக்காரார்கள் பட்டியலில் 73வது இடம் பிடித்துள்ளது இந்தக் குடும்பம்.
 • தற்போதைய சொத்து மதிப்பு 2.89 பில்லியன் டாலர்.
 • கடந்த ஆண்டை விட 0.4 பில்லியன் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.

தொழிலதிபர் மல்லிகா ஸ்ரீனிவாசன்

கலாநிதி மாறன்!

கலாநிதிமாறன் மற்றும் மகள் காவ்யா

 • பிரபல சன் குழும நிறுவனர் கலாநிதி மாறன் இந்திய பணக்கார்கள் பட்டியலில் 78வது இடம் பிடித்துள்ளார்.
 • உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 1205வது இடம் பிடித்துள்ளார்.
 • தற்போதைய சொத்து மதிப்பு 2.9 பில்லியன் டாலர்.
 • மொத்தம் 33 சேனல்களை கொண்டுள்ள சன் குழுமம் இந்தியாவில் 95 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் பார்ப்பதாக சொல்லப்படுகின்றது.