பதிப்புகளில்

ஒரு தொழில்முனைவரின் அனுபவம்: முதல் தேடல் #FundSeeking - பாகம் 4

ஒரு தொழில்முனைவோராக என் ஸ்டார்ட்அப்பிற்கு தேவையான முதல் தேடும் பயணத்தில் நான் கற்ற பாடங்களும் அனுபவங்களும்...

23rd Oct 2017
Add to
Shares
91
Comments
Share This
Add to
Shares
91
Comments
Share

ஸ்டார்ட்அப்பில் உள்ள முதலீட்டு சுற்றுக்களை தெரிந்து கொள்வோம். பின்னர் உங்களின் முதலீடு எப்படி ஒவ்வொரு சுற்றிலும் வளர்கிறது என்று பார்ப்போம்.

image


• Bootstrapping ( சுய முதலீடு)

• Seed Funding ( நண்பர்கள் உறவினர்கள் அறிந்த தெரிந்தவர்களின் ஆரம்ப முதலீடு)

• Angel Investment ( தனிநபர் முதலீட்டாளர்களின் முதலீடு)

• Venture Capital Funding ( முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு)

• Initial Public Offer ( பங்கு சந்தையில் முதலீடு கோருதல்)

(முன்குறிப்பு: இனிவரும் பகுதிகளை பொறுமையாக படியுங்கள். புரியாவிட்டால் கமென்ட்டில் கேளுங்கள்.)

ஒரு Case Study-க்காக கூகிளில் முதலீடு செய்த முதல் நால்வர்களுள் ஒருவரான ஆன்டி பெக்டோல்சிம் கதையை எடுத்துக்கொள்வோம்.

அவர் கூகிளில் முதலீடு செய்தது 100,000 டாலர்கள். அவருடன் அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ், பேராசிரியர் டேவிட் செரிட்டன், ராம்ஸ்ரீராம் உள்ளிட்ட மேலும் மூவர் தலா 200,000 டாலர்கள் வீதம் முதலீடு செய்கிறார்கள். அவர்களுக்கு அன்று கொடுக்கப்பட்ட கம்பெனி பங்கு ஈவு தலா 5% இருக்கும். நிறுவனம் பதியும் முன்பே முதலீடு செய்தவர் என்பதால் ஆன்டிக்கு 10% பங்குகள் கிடைக்கிறது.

மற்ற மூவர் தலா 5%க்கு 200,000 என்ற வீதத்தில் முதலீடு செய்தபின் ஆன்டியின் முதலீட்டின் மதிப்பு நான்கு மடங்கு உயர்ந்து 400,000 தொடுவதை பாருங்கள்.

அடுத்த முதலீட்டு சுற்று 1999 ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டு ஜூனில் முடிகிறது. வென்ச்சர் கேபிட்டல் நிறுவனங்களான Sequoia Capital மற்றும் Kleiner Perkins Caufield நிறுவனமும் இணைந்து 25 மில்லியன்கள் முதலீடு செய்கின்றன. இதன் மூலம் ஆன்டியின் பங்கு 7.5 சதவீதமாக குறைகிறது. ஆனால் மதிப்பு 18 மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்து 75 லட்சம் டாலர்களை தொடுகிறது.

2004-இல் பங்கு சந்தையில் கூகிள் கால் பதிக்கிறது. நிறுவனத்தின் 30 சதவீத பங்கை 19,605,052 பங்குகளாக பிரித்து பங்கு ஒன்று 84 டாலர்களுக்கு கணக்கிட்டு 1.6 பில்லியன் டாலர்கள் விற்கப்படுகிறது. இப்போது ஆன்டியின் பங்கு சதவீதத்தில் 30% குறைந்து 5.25% ஐ தொடுகிறது. ஆனால் அதன் மதிப்பு 250 மில்லியன் டாலர்களை தொடுகிறது. கிட்டத்தட்ட 860 மடங்கு வளர்ச்சி. 2017ல் கூகிள் நிறுவனத்தின் ஒரே ஒரு சதவீத மதிப்பு மட்டும் 1.01 பில்லியன் டாலர்கள். ஆக நம் தலைவன் ஆன்டியின் சொத்து மதிப்பு 5 பில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பிற்கு 32000 கோடி ரூபாய்கள். ஐம்பது லட்சம் ரூபாய் முதலீட்டிற்கு 19 வருடங்களில் 64000 மடங்கு ரிட்டன்ஸ் வேறு எங்கு கிடைக்கும் சொல்லுங்கள்.

1998 இல் நீங்கள் ஐம்பது லட்சத்திற்கு வீடு அல்லது நிலம் வாங்கியிருந்தால் இன்று அதன் மதிப்பு அதிகபட்சம் 10 கோடி ரூபாய்கள். தங்கம் ஏழு மடங்கு உயர்ந்திருக்கிறது. பங்கு சந்தையில் அதிகபட்சமாக தொழில்நுட்ப நிறுவனங்கள் 200 மடங்கு உயர்வை தொட்டிருக்கிறது. எங்கேயும் 64000 மடங்கு உயர்வை காணமுடியாது. ஆனால் ஒரு நல்ல ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் ஆரம்பகாலத்தில் செய்யப்படும் முதலீடு கொடுக்கும் ரிட்டன்ஸ் போல வேறு எதுவும் கொடுக்காது. கூகிள் அளவிற்கு கொடுக்காவிட்டாலும் நூறில் ஒரு பங்கு கொடுத்தாலும் பல கோடிகள் நிச்சயம். அது தான் ஸ்டார்ட்அப் முதலீட்டின் சிறப்பு.


ஒரு நல்ல ஸ்டார்ட்அப்பை கண்டறிந்து விட்டீர்கள். அதில் முதலீடு செய்வது என்றும் முடிவு செய்துவிட்டீர்கள். அதில் உள்ள நடைமுறைகள் என்ன? உங்கள் முதலீட்டிற்கான பங்கை எப்படி உறுதி செய்வீர்கள்? அதற்கு தரப்படும் பத்திரங்கள், சான்றிதழ்கள் என்னென்ன என்பதை அடுத்த பதிவில் விரிவாக பார்க்கலாம்...

(கட்டுரையாளர்: கார்த்திகேயன். இவர் ஃபாஸ்துரா டெக்னாலஜீஸ், நிறுவனத்தின் நிறுவனர். இது விருந்தினர் கட்டுரைப் பகுதி. கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். யுவர்ஸ்டோரியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)

Add to
Shares
91
Comments
Share This
Add to
Shares
91
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக