பதிப்புகளில்

உங்கள் விமானம் தாமதமானாலோ, ரத்தானாலோ இனி இழப்பீடு உறுதி!

19th Jul 2016
Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share

விமானத்தை ரத்து செய்தாலோ, டிக்கெட் உள்ள பயணிகளை பயணம் செய்ய அனுமதிக்காமல் தடுத்தாலோ, இனி உள்ளூர் விமான நிறுவனங்கள் டிஜிசிஏ வின் புதிய கோட்பாடுகளின் படி பயணிகளுக்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தி அமைக்கப்பட்டுள்ள இழப்பீடு விதிமுறைகள் படி, இந்த ஆணை வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. விமான நிறுவனம் விமானத்தை ரத்து செய்தாலோ/இரண்டு மணி நேரத்துக்கு மேல் தாமதம் ஏற்பட்டாலோ, பயணி ஒருவருக்கு தலா ரூ.10000 நஷ்ட ஈடும், பயணியை விமானம் ஏற தடை செய்தால் ரூ.20000 இழப்பீடாக வழக்க வேண்டும். இந்த புதிய இழப்பீடு முறை, விமான நிறுவனங்கள் உட்பட சம்மந்தப்பட்டவர்களிடன் கலந்து ஆலோசனை நடத்திய பின்னரே அறிவிக்கப்பட்டுள்ளது. 

image


டெக்கன் ஹெரல்ட் செய்திகள், ஃப்ளையர்ஸ் பாடி மற்றும் ஏர் பாசஞ்சர்ஸ் அசோசியேஷன் தலைவர் மற்றும் நிறுவனர் டி.சுதாகர ரெட்டி, "இந்த புதிய விதிமுறைகளில் சில பகுதிகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்," என்று கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. விமான நிறுவனம், ரூ.5000 அல்லது ஒரு வழிக்கான அடிப்படை விமான கட்டணம் இதில் எது குறைவோ அதை விமான ரத்து/தாமதம் செய்து, அது குறித்து பயணிகளிடம் தெரியப்படுத்தாவிட்டால் அந்த இழப்பீடு அளிக்க வேண்டும் என்று டிஜிசிஏ விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஒரு விமானம் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஆனால் 2 மணி நேரத்துக்குள் தாமதிக்கப்பட்டால், நஷ்ட ஈடு தொகை ரூ.7500 அல்லது ஒரு வழி அடிப்படை கட்டணம் இதில் எது குறைவோ அதை பயணிகளுக்கு அளிக்கப்படவேண்டும். ரூ.10000 அல்லது ஒரு வழி அடிப்படை கட்டணம் இதில் எது குறைவோ அது 2 மணி நேரத்துக்கும் மேலான விமான தாமதத்தின் போது இழப்பீடாக பயணிகளுக்கு அளிக்கப்படவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பயணிகள் சில காரணங்களால் டிக்கெட் இருந்தும் விமானத்தில் பயணிக்க மறுக்கப்பட்டால், விமான நிறுவனம், ஒரு வழி விமான கட்டணத்தின் அடிப்படை கட்டணம் மற்றும் விமான எரிப்பொருள் கட்டணத்தில் 200 மடங்கு அளவு பணத்தை நஷ்ட ஈடாக வழங்கவேண்டும். இது அதிகப்பட்சமாக 20000ரூபாய் வரை அனுமதிக்கப்படும். அது மட்டுமின்றி, அந்த விமான நிறுவனம் 24 மணி நேரத்திற்குள் அந்த பயணிக்கு மாற்று விமான ஏற்பாட்டை அளித்திட வேண்டும் என்றும் புதிய விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. 

கட்டுரை: Think Change India


Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக