பதிப்புகளில்

90% பக்கவாதம் பாதித்தும் சோர்ந்து போகாத ‘நேர்மறை மனிதர்’ கிரிஷ் கோகி

12th Mar 2016
Add to
Shares
1.3k
Comments
Share This
Add to
Shares
1.3k
Comments
Share

பெருங்கடல் கொந்தளிப்பின் நடுவே சுற்றி வளைந்து வருவது கிரிஷ் கோகியாவிற்கு வீட்டிற்கு சென்று வருவது போன்றது. “கோவாவிற்கு செல்லும் போதெல்லாம் அங்கு குன்றின் மீதிருந்து தலைகீழாக குதித்து (cliff-dive) நீச்சலடிப்பது என்னுடைய பழக்கம். கடலின் அழகு என்னை அழைக்கும். நான் டைவிங் செய்யாமல் இருந்ததே இல்லை. அதே போன்று தான் 1999ம்ஆண்டு எனக்கு பிடித்த இடத்திற்கு சென்று டைவிற்கு தயாரானேன், வழக்கம் போல நீரில் தலைகீழாகக் குதித்தேன், என்று சம்பவம் நடந்த தினத்தை நினைவுகூர்கிறார் கிரிஷ்.

கடலின் ஆழத்தை நான் அந்த முறை தவறாக கணக்கிட்டு விட்டேன். என்னுடைய தலை கடல் படுக்கையின் மீது மோதியது, அதிர்ஷ்டவசமாக என் தலை தப்பியது, உடலின் மொத்த எடையும் கழுத்திற்கு வந்து விட்டது இதன் விளைவாக என் உடல் முழுதும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டது. என்னால் கால்களை அசைக்க முடியாது, எனக்கு நினைவிருந்தவரை நான் கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய சக்தியை மேலும் இழப்பதை உணர்ந்தேன், கஷ்டப்பட்டு கடல் நீருக்கு வெளியே எப்படியோ வந்து விட்டேன், என்று விவரிக்கிறார் கிரிஷ்.

ஒருவர் மரணத்தின் வாசல் கதவை தட்டி வந்த தருணம் எப்படி இருக்கும் என்று உங்களால் கூற முடியுமா, அவர்களின் வாழ்வு மறுஜென்மத்திற்கு சமமானது, ஆனால் அவர்கள் அதன் பின்னர் வாழத் தொடங்கும் புதிய வாழ்க்கை புத்துணர்ச்சியூட்டுமா? கிரிஷ் இது எதையும் விரும்பவில்லை. வாழ்க்கையை தனக்கு ஏற்றாற் போல மாற்றியமைத்துக் கொண்டார், மக்கள் அவரின் தைரியத்தை பற்றி பெருமையாக பேசியபோதும் அவர் எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த சம்பவத்தை தன் கதைக்கான தொடக்கமாக மாற்ற விரும்பவில்லை. தன்னுடைய அழகான கடந்த காலங்களை துடைத்தெறிய அவர் மறுத்துவிட்டார், ஒரு நல்ல ஆன்மாவாகவும், சாதனை மனிதனாகவும் இருப்பதைவிட அவர் வேறு எதையும் விரும்பவில்லை. வாழ்க்கை எப்படி பொறுமையாக கலைநயத்தோடு உருவாக்கப்பட்டது என்பது அவர் கண் முன்னே நிழற்படங்களாக பளிச்சிட்டு சென்றன.

image


பளிச் நினைவுகள்

கிரிஷ் நம்பிக்கை இழந்து எப்படி தன் வாழ்வில் சிரமங்களுக்கு மத்தியில் மாட்டிக் கொண்டார் என்பதை நினைவுகூர்ந்தார் – அவர், தான் வளர்ந்த நகர எல்லைக்குட்பட்ட வாழ்க்கையை விட்டு பெல்காமில் கட்டுமான பொறியியல் படித்த நினைவுகளை அசைபோடுகிறார். அப்போது தன் வாழ்வில் நிகழ்ந்த திருப்புமுனை சம்பவத்தை நினைவுபடுத்திய கிரிஷ், கட்டுமானக் கலை மீது தனக்கு இருந்த தனியாத தாகமும், வடிவமைப்புகளும் தன்னை மிரட்டியதாகச் சொல்கிறார், ஏனெனில் அவர் அனைத்தையும் முதலில் இருந்தே தொடங்க வேண்டும்.

“எனக்கு வண்ணங்கள் மீது எப்போதும் விருப்பம் உண்டு அதே போன்று கட்டமைப்பு என்னை வசீகரித்தது. நான் குழந்தையாக இருந்த போதே ஐரோப்பாவை சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, அதே போன்று ரோம் கட்டுமானக் கலை மீது எனக்கு எப்போதும் தீராக் காதல் இருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளுக்குக் பிறகு என்னுடைய வாழ்வு மாறுபட்ட திறனோடு இருந்த நிலையில் கட்டுமானக்கலை என்பதே எனக்கு அச்சுறுத்தலாக இருந்தது. எனினும் நான் நம்பிக்கையோடு இருந்தேன்,” என்று கூறுகிறார் கிரிஷ்.

கிரிஷ் தன்னடைய நிறுவனத்திற்கு 'ஆம்பியன்ஸ் இன்டீரியர்ஸ்' (Ambience Interiors) என்று பெயரிட்டார், வெற்றிவாய்ப்பு எப்படி உங்களது கதவைத் தட்டும், அதற்காக நீங்கள் எவ்வாறு கதவை திறந்து வைத்திருக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்திப் பார்த்தார், இவை அனைத்தும் சாத்தியப்பட்டதற்கான காரணம் அவர் எப்படி தன்னுடைய அதீத ஆர்வத்தை வாய்ப்பிற்கு ஏற்றபடி வடிவமைத்தார் என்பதை பொருத்தே அமைந்தது.

அவர் பெருமையாகவும், கருத்துமிக்கவராகவும் உணர்ந்தார். சில கார்ப்பரேட் அலுவலகங்கள், நைஜீரியாவின் ஐவரி கோஸ்ட் திட்டங்களைப் பார்த்து டாப் வீடு மற்றும் வடிவமைப்பு இதழ்கள் இவரை பாராட்டி எழுதியதோடு, இவரால் எப்படி இவ்வளவு நல்ல முறையில் இதைச் செய்ய முடிகிறது என்று ஆச்சரியப்பட்டு புகழ்ந்தன. பணி நிமித்தமாக நாடு முழுதும் ஓய்வின்றி சுற்றித்திரிந்த நாட்களை அசை போடும் இவர், நிலையான வர்த்தகத்திற்காக மேற்கு ஆப்ரிக்காவில் 5 ஆண்டுகளை செலவிட்டார். ஆஃப்ரிக்காவில் சுற்றிலும் அமேசானின் மழைக்காடுகளுக்கு மத்தியில் தங்கியிருந்த நாட்கள் அவரது நினைவில் இருந்து நீங்காதவை. 1999ல் பல்வேறு மருத்துவ பிரச்னைகளுக்கு ஆளான போதும் தன் மனைவி அதை எப்படி அணுகினார் என்று கூறும் அவர், ஆண்டுக்கு ஆண்டு பக்கவாதம் அதிகரித்துக் கொண்டே தான் போனது எனினும் அவர்களது திருமண பந்தம் உறுதியாக இருந்தது.

இப்போதும் கூட வாழ்வின் இந்த பொன்னான காலங்கள் எப்போதும் நினைவில் இருக்கும் அதை அழிப்பது அவ்வளவு எளிதல்ல. மனதிற்கு இதமளிக்கும் வகையில் நிலா வெளிச்சத்தில் கடற்கரை மணலில் தனக்கு பிடித்தமானவர்கள் மற்றும் அன்பிற்குரியவர்கள் புடை சூழ ஒரு இனிய இரவை மகிழ்வோடு செலவிட திட்டமிட்டனர் ஆனால் மாறாக அந்த இரவை மருத்துவர்கள் சூழ, மருத்துவமனை படுக்கையில் நிலை குலைந்த நிலையில் செலவிட நேர்ந்தது.

எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த விபத்து தன் வாழ்க்கைக்கான கதையின் தொடக்கம் என்பதை அவர் அறிந்திருந்தார், மக்கள் அவருடைய கதைகளை கேட்டனர். அவர் இதை வாழ்வின் முடிவாக எப்போதும் கருதவில்லை. இவை அனைத்துமே அவருடைய அடுத்த சவாலுக்கான நம்பிக்கைக்கையை அதிகரித்தன.

வாழ்க்கை வாழ்வதற்கே

‘உங்கள் நிலைமை மோசமடைகிறது’ என மருத்துவர்கள் என்னிடம் கூறினார்கள். கழுத்திற்கு கீழே அனைத்து பாகங்களும் பக்கவாதத்தால் பாதிப்படைந்திருந்தன, குணமடைய வாய்ப்பில்லை என்றும் மருத்துவர்கள் சொன்னார்கள். ‘உண்மையில் அவர்கள் என் பெற்றோரிடம் நான் உயிர் வாழ சாத்தியமில்லை என்றே கூறினர், ஆனால் நான் தேர்ச்சிபெற்றேன்,” என்று நினைவுகூர்கிறார் கிரிஷ்.

image


உண்மையில் சொல்ல வேண்டுமெனில், அவர் உடனடியாக நம்பிக்கையை பலமடங்கு அதிகரித்தார். “இருள் என்னை ஆட்கொண்டது. என்னுடைய புதிய உண்மையான நிலையை உணர்ந்து கொள்ள எனக்கு 24 மணி நேரம் அவகாசம் தேவைப்பட்டது. இந்த நிலையை நான் ஒப்புக் கொள்ளும் போது என்னிடம் எதிர்மறை எண்ணங்களும், கசப்பும், விரக்தியுமே மிஞ்சி இருந்தது.”

“பெரும்பாலான மனிதர்கள் தங்களுக்குள்ள திறமையில் 4 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துகின்றனர். மருத்துவ அறிவியலும் மூளையை பற்றி இந்த அளவே புரிந்து வைத்திருந்தன. மூளையின் 96 சதவிகித சக்தி இன்னும் அறியப்படாமலே இருக்கும் நிலையில் எப்படி மருத்துவ வல்லுநர்கள் இவ்வளவு அதிகாரப்பூர்வமாக பேச முடியும்? நான் இந்த வாதத்தை ஏற்றக் கொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்தேன், அவர்கள் இதை ஏற்கவில்லை, இறுதியில் நான் ஒரு வழியை கண்டுபிடித்தேன். அதன் பின்னர் மனித உடல் பற்றிய வியப்பான விஷயங்களை பற்றி படித்தேன். அப்போது தான் அந்த வழி பிறந்தது. என்னுடைய ஆறாத புண்களுக்கு நேர்மறையான சக்தியை அனுப்பினால் அவை விரைவில் ஆறிவிடும் என்பதை உணர்ந்தேன். உங்கள் உடலுக்கு ஏற்ற சிறந்த மருந்தகம் உங்களுக்குள்ளாகவே இருக்கிறது.”

“என்னுடைய உணவு முறையை மாற்றினேன் – 90 சதவிகிதம் பச்சை காய்கறிகளையும் வெறும் 10 சதவிகிதம் மட்டுமே சமைத்த உணவுகளையும் உண்டேன். மருத்துவர்களே கைவிட்ட நிலையில் நான் ஏன் இந்த முயற்சிளை செய்கிறேன்? என அனைவரும் என்னைப் பார்த்து நகைத்தனர். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் என் முழு சக்தியையும் முடிந்த வரை பயன்படுத்தியதன் விளைவாக நான் தடைகளைக் கடந்து இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

ஆழ்ந்த யோசனைகள், மனதுக்குள்ளே நன்கு அலசிப் பார்த்தல் மற்றும் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவது தொடர்பான ஆலோசனைக்கு அவருக்கு ஏழு முதல் எட்டு மாதங்கள் தேவைப்பட்டது.

வாழ்வில் எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பே மிகப்பெரிய மைல்கல்லை ஏற்படுத்தியது

நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2001ல் கிரிஷ் பணிக்குத் திரும்பினார். இதற்கு இடைப்பட்ட காலத்திலும் 2011ம் ஆண்டும் மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினசின் பொலிவேற்றம் உள்ளிட்ட 15 முக்கிய திட்டங்களை கிரிஷ் செய்து முடித்திருந்தார். மும்பையின் சிறந்த மனிதருக்கான தோற்றம் 2006ல் கிடைத்தது. அவர் உயர் வகுப்பினருக்கான சொகுசு இருப்பிடங்கள், துபாய் விடுதிகள் மற்றும் இது போன்ற உயர் மதிப்புடைய திட்டங்களையும் செய்து முடித்தார்.

என்னுடைய விரல்கள் செயல்படவில்லை, ஆனால் என்னுடைய மூளை இன்னும் செயல்படுகிறது. என்னால் வரைய முடியாவிட்டால் என்ன செய்வது? நான் இது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் முடக்குவாதம் இல்லை. நான் ஒரு வரைபடைக்காரரை உதவிக்கு வைத்துக் கொண்டேன், அதன் பின்னர் அனைத்தும் நல்ல முறையில் சென்றது.”

கிரிஷ் எப்போதும் சிறப்பாக செயல்படுவார், எதிர்பாராமல் நிகழ்ந்த அந்த சம்வத்திற்கு முன்பும் பின்பும் அவர் ஒரே மாதிரி தான் இருக்கிறார். “ நான் தரத்திலும், வெளிப்படுத்தும் முறையிலும் சமரசம் செய்து கொள்ளவே மாட்டேன் – இப்போதும் என்னுடைய கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு நானே சென்று வருகிறேன், அதே போன்று என் திட்டங்களை என்னால் முடிந்த வரை நானே முன் நின்று செய்து முடிக்கிறேன்.”

image


பிறருக்கான மகிழ்ச்சியை தேடுபவர்

ஆனால் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய வாழ்வில் மீண்டும் ஒரு வெற்றிடம் உருவானது. ஆனால் இந்த முறை இது சற்று வித்தியாசமானது. “அதிருப்தி என்னைத் தூங்க விடவில்லை. இதை விட ஏதாவது பெரிதாக செய்ய வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன், இன்னும் தெய்வாதீனமாக, ஆரூடம் தேவை அதுவே நிறைவைத் தரும் என நினைத்தேன். எனக்குள் அந்தக் குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது, அது பற்றி ஒரு தெளிவு கிடைக்கும் வரை அந்த அசரிரி அதிகரித்துக் கொண்டே இருந்தது – என்னுடைய வாழ்க்கை பயணத்தை மக்களுக்கு தெரியப்படுத்த விரும்பினேன், அதன் மூலம் மற்ற அனைத்து சக்திகளையும் வெல்லும் திறன் மனித ஆத்மாவிற்கு உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.”

2011ம் ஆண்டுமுடிவில் கிரிஷ் தன்னுடைய வியாபார தாகத்தை முடித்துக் கொண்டார். இதனால் இந்த உலகம் பக்கவாதம் பற்றி உத்வேக உரையாற்றும் முதல் டெட்ராப்லெஜிக் பேச்சாளரை பெற்றது.

பேராவல் மற்றும் அரைமனதுடையவர்கள் பலரை நான் சந்திக்க நேர்ந்தது. மக்கள் எளிதில் மறந்துவிட்டு, தங்கள் குறைக்கு படவிடை தேடி கோவில்களில் தஞ்சம் அடைந்தனர். ஆனால் நான் கூறும் தீர்வு, விடை உங்களுக்குள்ளே இருக்கிறது. அனைத்தும் உங்களுக்குள் தான் ஒளிந்திருக்கிறது, உங்களுக்கு பின்னால் இருப்பவற்றிற்கும் சிறிது முக்கியத்துவம் கொடுங்கள். “உண்மையில் நீங்கள் ஏதாவது தேவை என்று விரும்பினால், அது உங்களுக்கு கிடைத்துவிடாமல் இருக்க இந்த உலகம் அனைத்து சூழ்ச்சியையும் செய்யும்” என்ற வாசகத்தில் தீராத நம்பிக்கை உள்ளவன் நான்.’ இந்த வார்த்தைகளை உலகிற்கு பரப்புரை செய்ய முடிவு செய்தேன்,” என்று தான் எடுத்த முடிவிற்கு பின்னால் இருக்கும் விஷயங்களை நினைவுபடுத்துகிறார் கிரிஷ்.

கிரிஷ், நாடகக் கலைஞர் டாலி தாகூரை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தார், அவர் கிரிஷை தாஜில் 200 பேர் முன்னிலையில் உரையாட உந்துதல் அளித்தவர்.

அதற்கு பின் பின்னடைவே இல்லை. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இவருக்கு தனித்துவம் கொடுத்தன இதைத் தொடர்ந்து கார்ப்பரேட் நிறுவனங்களும் பின்தொடர்ந்தன. கேப் ஜெமினி, சின்ட்டெல் போன்ற நிறுவனங்களிலும் பல்வேறு கல்லூரிகளிலும் கிரிஷ் கருத்தரங்கம் நடத்தினார்.

“நான் என்னைப் பற்றியும் என் மனைவியை பற்றியும் அனைவரிடமும் கூறுவேன் – என் மனைவி தான் உண்மையான ஸ்டார். அவருக்கு 90 சதவீத பேச்சுத்திறன் பாதிப்பும், உடல் 70 சதவீதம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையிலும் அவர் நான் செல்லும் இடங்களுக்கு என்னுடனே வந்து எப்போதும் புன்னகை பூப்பார்,” என்கிறார் கிரிஷ்.

(நேர்மறை பூமி திட்டம்) 'மிஷன் பாசிட்டிவ் எர்த்'

கிரிஷ் தற்போது சர்வதேச மிஷனை மேற்கொண்டிருக்கிறார், ‘மிஷன் பாசிட்டிவ் எர்த்.’ “மக்கள் என்னுடைய திட்டத்தை பைத்தியக்காரத்தனமானதாகவும், எட்டாக்கனி மற்றும் சாத்தியமில்லாதது என்றே நினைக்கிறார்கள். ஆனால் இந்த பூலோகத்தில் இருக்கும் ஒவ்வொரு ஆத்மாவையும் என்னுடைய கருத்து சென்றடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.” இவருடைய உரையால் ஈர்க்கப்பட்ட மூன்று மாணவர்கள் கிரிஷின் மிஷனுக்கு உதவி செய்யும் வகையில் தன்னார்வலர்களாக இணைந்துள்ளனர். அவர்கள் மூன்று இணையதளங்களை உருவாக்கி சமூக வலைதலங்களின் உதவியைக் கொண்டு கிரிஷின் நற்செய்திகளை மக்களுக்குச் சென்றடையச் செய்தனர்.

போராட்டம் என்பதே மிகச்சிறந்த பள்ளி, உங்கள் டிஎன்ஏ வில் அச்சிடப்பட்டிருப்பதே சிறந்த பட்டம் இவற்றை வாழ்க்கை பல்கலைக்கழகத்தில் இருந்தே பெற முடியும் என்பதில் தீராத நம்பிக்கை கொண்டிருக்கிறார் கிரிஷ் கோகியா.

கட்டுரை : பிஞ்சால் ஷா| தமிழில்: கஜலட்சுமி மகாலிங்கம்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரை:

பக்கவாத குறைபாடுடன் பிறந்த மதுமிதா சேனப்டீலின் மனிதவளத் துறை இணை இயக்குனர் ஆன கதை! 

Add to
Shares
1.3k
Comments
Share This
Add to
Shares
1.3k
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக