பதிப்புகளில்

2015 தொடக்க நிறுவனங்கள் ஒரு பார்வை!

YS TEAM TAMIL
28th Dec 2015
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

2015ம் ஆண்டில், இதுவரை இல்லாத அளவுக்கு பல புதிய நிறுவனங்கள் சந்தையில் கலக்கி எடுத்திருக்கிறார்கள். சிலருக்கு 2015ம் ஆண்டு சிறப்பான ஒன்றாகவும், சிலருக்கு மோசமான ஒன்றாகவும் இருந்திருக்கின்றன. யுவர்ஸ்டோரி சார்பில் 2015ம் ஆண்டின் உச்சபட்சத்தில் நிலைநாட்டிய நிறுவனங்களை பற்றிச் சுருக்கி தருகிறோம்...

image


உள்ளூரில் நடந்த புரட்சி

இந்த ஆண்டு மளிகை கடைகள் பலவும் இணையத்தை நோக்கி நகர்ந்தன. பிளம்பரில் இருந்து வீடு தேடி வரும் உள்ளூர் உணவு வகைகள் வரை இணையப்படுத்தப்பட்டன. பெருநிறுவனங்களான அமேசான், ஓலா, ஃப்ளிப்கார்ட் மற்றும் பேடிஎம் போன்றவை வீடுதேடி கொண்டுவரும் சேவைகளில் இறங்கின. உணவை விநியோகிக்கும் சேவையில் ஈடுபட்டுவரும் நிறுவனமான யுமிஸ்ட் தங்கள் நிறுவன விரிவாக்கத்திற்காக 2 மில்லியன் டாலர் பெற்றது. அதே வேளையில் ஸ்விக்கி நிறுவனம் சென்னையில் கிளைபரப்பியது. இது ஏற்கனவே முதல் கட்ட நகரங்களில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

வீட்டு சேவைகளை வழங்கிவரும் நிறுவனமான ஹவுஸ்ஜாய் நிறுவனம் ஜனவரியில் துவங்கப்பட்டது. ஒரு நாளைக்கி நாற்பது ஆர்டர்கள் எடுத்தவர்கள், பத்து மாதங்களில் 4000 ஆர்டர்கள் எனுமளவுக்கு வளர்ந்து நிற்கிறார்கள். இதன் போட்டியாளரான அர்பன்க்ளாப், ரத்தன் டாடாவின் ஆதரவில் இயங்கிவரும் நிறுவனமான இது, மும்பையில் மட்டும் 3000 விற்பனையாளர்களை பெற்றது. இணையமற்ற வணிகத்தை ஷாப்சிட்டி நிறுவனம் எளிதாக்கியது. டிஜிட்டலில் பணம் செலுத்த உதவும் நிறுவனமான மொமொய், பியாண்ட் ரெஸ்டாரண்ட்ஸ் நிறுவனத்திடமிருந்து முதலீட்டை பெற்று, மளிகை சாமான் விற்பனை, ஸ்பா மற்றும் முடிதிருத்துதல் மற்றும் ஆடைகள் விற்பனையில் ஈடுபட்டது.

இந்திய மொழிகள் இணையப்படுத்தப்பட்டது

இந்தியாவில் 70லிருந்து 80 சதவீதத்தினர் ஆங்கிலம் பேசாதவர்களாக இருப்பதை சில தொழில்முனைவோர்கள் உணர்ந்தனர். எனவே ஸ்னாப்டீல் நிறுவனம் ரெவெய்ரி (Reverie) என்ற பெயரில் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் செயல்படத் தொடங்கியது. ஸ்டோர்கிங் என்ற நிறுவனம் உள்ளூரில் செயல்படும் மின் வணிக நிறுவனம் ஆகும். இது உள்ளூர் மொழிகளில் இயங்கக்கூடிய ஒன்றாகும். இது மொபிக்விக் நிறுவனத்தோடு இணைந்து விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டது.

இணைய இலவச விளம்பர சேவை வழங்கும் நிறுவனமான க்விக்கர் தற்போது 7 மொழிகளில் சேவை வழங்குகிறது. ஊடகத்தை பொருத்தவரை யுவர்ஸ்டோரி புதிய சாதனையாக பத்து இந்திய மொழிகளில் செயல்படத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இன்ஷார்ட் என்ற நிறுவனமும் சில இந்திய மொழிகளில் துவங்கியிருக்கிறது. இது இன்னும் பரவலாகிக் கொண்டிருக்கிறது. ப்ராசஸ் நைன் டெக்னாலஜீஸ் ப்ரைவேட் நிறுவனம் ஸ்னாப்டீல் நிறுவனத்தோடு இணைந்து ஆங்கிலத்திலிருந்து பல்வேறு மொழிகளுக்கு மொழியாக்கம் செய்துகொண்டிருக்கிறது. இந்நிறுவனம் ஏற்கனவே சில பயண மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்களோடு இணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

2'ம் கட்ட நகரங்களை இனி புறக்கணிக்க முடியாது

புதுநிறுவனங்கள் இப்போது பெருநகரங்களை தாண்டி இருக்கும் வாய்ப்புகளையும் கவனிக்கத் துவங்கியிருக்கிறார்கள். ஃபாஸோ நிறுவனம் பரோடா, அஹ்மதாபாத் போன்ற பத்து நகரங்களில் கிளைபரப்பியது. இணைய மளிகைக் கடையான க்ரோஃபர்ஸ் 17 இரண்டாம் கட்ட நகரங்களில் விரிவாக்கியது. இப்படி மொத்தம் 27 நகரங்கள் பயனடைந்திருக்கின்றன. இது ஒரு பக்கம் என்றால் ஆட்டோ ரிக்சாக்களை இணைத்து சேவை வழங்கும் நிறுவனமான ஜுக்னு ஒருபடி மேலே போய் மூன்றாம் கட்ட நகரமான உதய்பூரில் சேவை வழங்குகிறது.

டாக்ஸி இணைப்பு நிறுவனமான ஓலா கொச்சி, திருவனந்தபுரம் உட்பட 102 இரண்டாம கட்ட நகரங்களில் கால்பதித்திருக்கிறது. அதன் போட்டியாளரான உபெர் ஏழு இரண்டாம் கட்ட நகரங்கள் உட்பட உதய்பூரில் எல்லா நகரங்களையும் சேர்த்து 18 இடங்களை அடைந்திருக்கிறது. மேருகேப்ஸ் 23 நகரங்களில் கால்பதித்திருக்கிறது. சில ஆடை நிறுவனங்களின் பெரும்பாலான ஆர்டர்கள் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நகரங்களில் இருந்து வருவதை கவனித்த விநியோக நிறுவனங்கள் அந்த நகரங்களிலும் சேவையைப் பரப்பியிருக்கின்றன.

எல்லோரையும் இணைப்பது

பிரான்ஸை சேர்ந்த நிறுவனமான ப்ளாப்ளா கார்ஸ் நிறுவனம் நீண்டதூரம் பயணிக்கும் தனிநபர் காரோட்டிகளோடு இணைந்து பயணம் செய்யும் வாய்ப்பை துவங்கியது. ஜனவரியில் துவங்கப்பட்ட இந்த சேவை நாடுமுழுவதும் உள்ள கார் வைத்திருப்பவர்கள் சம்பாதிக்க ஒரு வாய்ப்பாக அமைந்தது. மேருகேப்ஸ் இதே சேவையை செப்டம்பர் மாதம் துவங்கியது. பிறகு ஓலா நிறுவனம் இதே சேவையை பெங்களூரில் அறிமுகப்படுத்தவே, அதே மாதத்தில் உபெர் நிறுவனமும் போட்டியில் குதித்தது.

டெல்லி அரசாங்கம் இரட்டைபடை ஒற்றைபடை கார்கட்டுப்பாட்டிற்கு பிறகு இந்த கார் பகிர்தல் முறை மிக வேகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 2016 பொன்னான ஒன்றாக இருக்கும் என இப்போதே கணிக்கலாம்.

பணிநீக்கம்

இந்த ஆண்டு நூற்றுக்கணக்கான புதுநிறுவன பணியாளர்கள் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். நிறுவனத்தின் அமைப்பு, செயல்பாடு மற்றும் தொழில் நலன் கருதி இவர்கள் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ராகுல் யாதவ் என்பவர் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் துணைத்தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாவார். ஜூலை மாதம் அவர் அந்நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து ஆக்ஸ்டில் 600 பணியாளர்களும், நவம்பரில் 200 பணியாளர்களும் நீக்கப்பட்டனர். பணவிரயத்தை தவிர்க்கவே இந்த வேலைநீக்கம் என தெரிவிக்கப்பட்டது. உணவு விநியோக நிறுவனமான டைனிஅவுல் நூறு பணியாளர்களை நீக்கியதோடல்லாமல், புனேவில் உள்ள தன் அலுவலகத்தையும் மூடியது. வெளியேற்றப்பட்ட ஊழியர்கள் மீத பணத்தை செட்டில் செய்ய சொல்லி அந்நிறுவனத்தின் இணை நிறுவனரான கவுரவ் சௌத்ரியை பிடித்துவைத்திருப்பதாக கூறப்பட்டது.

இந்நிறுவனத்தின் போட்டியாளரான ஜொமாடோ இந்த ஆண்டு யுனிகார்ன் க்ளப்போடு இணைந்தது. நவம்பரில் தன் பணியாளர்களில் பத்து சதவீதத்தை வெளியேற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபேந்தர் கோயல், ஒழுங்காக பணியாற்றுங்கள் இல்லையேல் வெளியேறுங்கள் என மற்ற பணியாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக செய்தி வெளியானது. க்ராப்ஹவுஸ் கடந்த சில தினங்களுக்கு முன் தன் பணியாளர்களில் 150க்கும் மேற்பட்டவர்களை வெளியேற்றி இந்த பட்டியலில் இணைந்தது.

கைப்பேசி செயலி வணிகம் சூடுபிடித்தது

ஃப்ளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் போன்ற நிறுவனங்கள் மொபைல் வாடிக்கையாளர்களின் மீது அதிக கவனம் செலுத்தியதை தொடர்ந்து இந்த ஆண்டு கைப்பேசி செயலி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது. உலகில் மொபைல் பயன்பாட்டில் முதலிடத்தை நோக்கி இந்தியா வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதால் கைபேசி செயலியின் மீது எல்லா பெரிய நிறுவனங்களும் கவனம் செலுத்த துவங்கியிருக்கிறார்கள். புது நிறுவனமான எலானிக் கைபேசி செயலியில் மட்டுமே செயல்படப்போவதாக தெரிவித்திருக்கிறது.

மே மாதம் மின்த்ரா நிறுவனம் தன் இணையதளத்தை இழுத்து மூடிவிட்டு கைபேசியில் மட்டுமே இயங்கப்போவதாக தெரிவித்தது. ஃப்ளிப்கார்ட்டும் இனி மொபைலில் மட்டுமே செயல்படும் என்பதாக ஒரு வதந்தி பரவியது, ஆனால் அவர்கள் தங்கள் கைபேசி தளத்தை மூடிவிட்டு, அதற்கு பதிலாக ஃப்ளிப்கார்ட் லைட் எனப்படும் புதிய கைபேசி தளத்தை வெளியிட்டார்கள். இந்த தளம் 99 சதவீதம் கைபேசி செயலி போன்ற தோற்றத்தை கொண்டது வெறுமனே பத்து கேபி அளவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக அதன் போட்டியாளர் ஸ்னாப்டீல் நிறுவனமும் தனது ஸ்னாப்-லைட் தளத்தை வெளியிட்டது. இது சாதாரண கைபேசி தளத்தைவிட 85சதவீதம் வேகமானது, எல்லாவகையான இணைய உலாவியிலும் செயல்படக்கூடியது. தங்களுக்கு வரும் 70 சதவீத ஆர்டர்கள் கைபேசி வழியாக வருவதை கவனித்த ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனம், விழாக்காலங்களில் அவர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக சில சலுகைகளை வழங்கினர்.

ஆம்னி சேனல் துவங்கியது

இணைய வணிகமானது சில இணையமற்ற நிறுவனங்களோடு கைகோர்த்து புதியதாக ஆம்னி சேனல் என்ற ஒன்றை துவக்கியது. இதன்மூலம் உள்ளூர் சேவைகளை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும். செங்கல் மற்றும் சுண்ணாம்புக்கலவை சார்ந்த சேவைகளை இணையத்தின் மூலம் ஆர்டர் செய்யும் வாய்ப்பை பயனர்கள் பெற்றனர். ஃபாஷாலாட் நிறுவனம் இதற்கு சில சலுகைகளையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது. ஸ்னாப்டீல் இந்த சேவையை அக்டோபர் மாதம் துவங்கியது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகில் உள்ள இணையபடுத்தப்படாத கடைகளில் அந்த பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும். பெருநிறுவனங்களான டாடா, ரிலையன்ஸ், யுனிலிவர் மற்றும் ஆதித்ய பிர்லா போன்றோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். சிலர் ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசானில் இணைந்து தங்கள் பொருட்களை விற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உணவு நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி

உணவு சார்ந்த புதுநிறுவனங்கள் இந்த ஆண்டின் முதல் பாதியில் பெரும்பங்கு பணத்தை செலவிட்டன. அடுத்த பாதியில் அந்த நிறுவனங்களே வீழ்ந்ததை என்பதை பார்க்க முடிந்தது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 74 மில்லியன் டாலர்களை பெற்று உணவு நிறுவனங்கள் கணிசமான ஏற்றத்தை பெற்றன. எனினும் ஆகஸ்ட் மாதம் செமத்தியான அடியை சந்தித்தனர். ஜொமாடோ, டைனிஅவுல் போன்ற நிறுவனங்கள் தங்களின் ஊழியர்கள் பலரை வெளியேற்றியதாக செய்திகள் வெளியாகின. ஃபுட்பாண்டாவும் சில பிரச்சினைகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. ஸ்பூன்ஜாய் மற்றும் டசோ நிறுவனங்கள் நிதிபற்றாக்குறையின் காரணமாக அக்டோபர் மாதம் இழுத்து மூடப்பட்டன. ஈட்லோவும் விரைவில் மூடுவிழா காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரியான நேரத்திற்கு விநியோகிக்காதது, மோசமான வருவாய் திட்டம் போன்றவை தான் இந்த பின்னடைவுக்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டது. இது அடுத்த ஆண்டுகளில் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரத்தன்டாடாவின் கைகளுக்குள் புதுநிறுவனங்கள்

2012ஆம் ஆண்டில் டாடா குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற ரத்தன் டாடா புதுநிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களில் கணிசமாக முதலீடு செய்தார். கடந்த ஆண்டு ஸ்னாப்டீல், அர்பன் லாட்டர் மற்றும் ப்ளூஸ்டோன் ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்தார். ஆனால் 2015ல் ஓலா, பேடிஎம், அர்பன் லேட்டர், ஜியோமி, கார்யா, ஹோலாசெஃப், கார்தேகோ மற்றும் லைப்ரேட் போன்ற பதினோரு நிறுவனங்களில் முதலீடு செய்தார். இவருக்கு போட்டியாக விப்ரோ நிறுவனத்தின் அசிம் ப்ரேம்ஜி மின்த்ரா மற்றும் ஸ்னாப்டீல் ஆகிய நிறுவனங்களில் 2014ம் ஆண்டு முதலீடு செய்தார். அதே சமயத்தில் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி அமேசான் நிறுவனத்தில் முதலீடு செய்தார். கார்ப்பரேட் நிறுவனங்களும் இந்த ஆட்டத்தில் களம் இறங்கியிருப்பதை பார்க்க முடிகிறது. இளைஞர்கள் இவர்களிடமிருந்து நல்ல பாடத்தைக் கற்றுக்கொள்வதற்காக வாய்ப்பை இது அளிக்கும்.

சிலிக்கன் வேலி தொழில்முனைவோர்கள் வீடு திரும்பினர்

சிலிக்கன்வேலியில் இயங்கும் கூகிள், யாஹூ, ஃபேஸ்புக் போன்ற பல பெருநிறுவனங்கள் பலத்த அடியை சந்தித்ததை தொடர்ந்து இந்தியாவின் லாபத்தை நோக்கி நகரத்துவங்கியது. கூகிள் நிறுவனத்தில் இருந்து மோட்டரோலா மற்றும் சில ஆரம்பகால தயாரிப்புகளில் பணியாற்றிய புனித் சோனி 2015ம் ஆண்டு ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் தலைமை தயாரிப்பு நிர்வாகியாக இணைந்தார். கூகிள் கலிஃபோர்னியாவில் பணியாற்றிய நிகெத் தேசாய் கடந்த ஏப்ரல் மாதம் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் தலைமை பணியாளராக இணைந்தார். ஸ்னாப்டீல் நிறுவனம் சிலிக்கன் வேலியில் இருந்த கவுரவ் குப்தாவை பொறியியல் துணைத்தலைவராக இணைத்துக்கொண்டது.

வெளிநாட்டில் இருந்து வந்த இந்தியர்கள் பலரும் தங்கள் புதுநிறுவனத்தை துவங்கினர். விக்ரம் பி குமார், எக்ஸ்ப்ளோர் என்ற நிறுவனத்தையும், மேஹுல் சுடாரியா, ட்ரான்சிட்பீடியா என்ற நிறுவனத்தையும், சன்கேத்அவ்லானி, டாக்சி ஃபேப்ரிக் என்ற நிறுவனத்தையும் துவங்கியதை சில உதாரணமாக கொள்ளலாம்.

கையகப்படுத்துதல்

2015ம் ஆண்டு 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கையகப்படுத்தப்பட்டது. ஸ்னாப்டீல் நிறுவனம்- ஃப்ரீசார்ஜ் நிறுவனத்தையும், ஓலா நிறுவனம்-டாக்சிஃபார்ஸ்யூர் நிறுவனத்தையும், மஹிந்த்ரா நிறுவனம்- பேபி ஓயையும், ப்ராக்டோ நிறுவனம்-குய்க்வெல் மற்றும் இன்ஸ்டாஹெல்தையும், ஹவுசிங்க்.காம் நிறுவனம் ஹோம்பை360ஐயும் கைபற்றினர். இது 2016ம் ஆண்டும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

புதுநிறுவனங்களின் மனிதநேயம்

உலகமே பார்த்த பலபேரழிவுகளில் புதுநிறுவனங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்தது கவனிக்கத்தக்கது. சென்னை வெள்ளத்திற்கு ஓலா நிறுவனம் படகு சேவையை வழங்கியது, உபெர் நிறுவனம் இலவச கார்சேவையை வழங்கியது. பேடிஎம் நிறுவனம் இலவச ரீசார்ஜ் வசதியையும், ஜொமாடோ சென்னையில் இருந்து வரும் ஒவ்வொரு ஆர்டருக்கும் அதற்கு இணையான இலவச உணவை வழங்கியது. சோசியல்காப்ஸ் நிறுவனம் சென்னை வெள்ள நிவாரண உதவிகளையும் வழங்கியது.

ஆங்கிலத்தில் : ATHIRA A NAIR தமிழில் : Swara Vaithee

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக