பதிப்புகளில்

சிக்கனமாக போக்குவரத்து சிக்கலை தவிர்க்க: 'ஐரைட்'

19th Feb 2016
Add to
Shares
103
Comments
Share This
Add to
Shares
103
Comments
Share
image


அடுத்த ஐந்து வருடங்களில் நகர்ப்புற இடம்பெயர்வு என்பது உலகமெங்கும் அதிகரிக்கும் என உலக வங்கி கூறியுள்ளது. டாட்டா இன்ஸ்டியுட் ஆப் சோசியல் சயின்ஸ்யின் அறிக்கை படி, ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் பெங்களுருவிற்கு, பத்து லச்சம் மக்கள் புலம்பெயருகிறார்கள். அதில் 47% மக்கள் படித்து நகரத்தில் ஒரு வேலை தேடி வருபவர்களாக இருக்கிறார்கள். இந்தத் தகவலை மனதில் வைத்து, மூன்று பட்டைய கணக்காளர்கள் ஐரைட் நிறுவனத்தை ஆரம்பித்தனர். இந்நிறுவனத்தின் நிறுவனர்கள், மக்கள் ஒரு புள்ளியில் இருந்து மற்றொரு புள்ளிக்கு செல்ல வேண்டும், அதனை செய்ய ஒரு இரு சக்கர மோட்டார் வாகனம் தான் சிறந்த வழி என்பதனை ஒப்புக்கொள்கின்றனர்.

மேலும் வாகனத்தின் பாதுகாப்பை பற்றி கவலை இல்லாமல் அவற்றில் நகரத்தை சுற்றி வர அனைவர்க்கும் ஆசையே. அதற்கு உதவும் விதமாக, ஐரைடின் செயலி மூலம், அருகில் இருக்கும் ஹோண்டா ஆக்டிவா வாகனத்தை நாம் பதிவு செய்துகொண்டு, நாம் செல்லவேண்டிய இடத்திற்கு அருகில் உள்ள ஐரைட் மையத்தில் நிறுத்தி விடலாம். மேலும் வாகனங்களில் பொருத்தபட்டுள்ள ஜிபிஎஸ் கருவி மூலம் வாகனங்களை ஐரைட் கண்டுகொள்ள இயலும்.

தற்போது இந்நிறுவனம் கோரமங்களா, மேஜஸ்டிக், பசவனகுடி, பனஷங்கரி ஆகிய பகுதிகளில் 2௦ வாகனங்களை வைத்து ஒரு பரிசோதனை முயற்சியில் இறங்கியுள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு, 1௦ கிலோமீட்டருக்கு 6௦ ரூபாய் கட்டணமாக பெறுகின்றனர். அதன் படி கிலோமீட்டருக்கு நான்கு ருபாய் செலவாகின்றது. ஆட்டோவில் கிலோமீட்டருக்கு 13.5 ருபாய் செலவாகின்றது.

எங்களது நோக்கம் வாடிக்கையாளர் வசதியே. அவருக்கு வாகனம் அவரது இல்லத்திலும் கொண்டு தரப்படும். நாள் முழுதும் உபயோகிக்க ருபாய் 36௦ கட்டணம்

துவக்கம் :

ஆறுமாதங்களுக்கு முன்பு ரோஹன், சஷான்க் மற்றும் யஷ்வன்த் தங்களது பயணத்திற்காக ருபாய் 3௦௦ கட்டணம் செலுத்தியபோது, இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் எண்ணம் அவர்களுக்கு தோன்றியது. மேலும் நான்கு சக்கர வாகன பயணத்தை காட்டிலும் இரு சக்கர வாகன பயணத்திற்கு மக்கள் அதிகம் விரும்புவர் என்ற காரணத்தால், உடனடியாக ஒரு செயலி தயாரித்து, தங்கள் நிறுவனத்தைத் துவக்கினர்.

மேலும் பட்டைய கணக்காளர்களாக இருந்ததால் நிறுவன துவக்கத்திற்கு தேவைப்பட்ட காலஅளவு 3௦ நாட்களே. மற்ற தொழில்முனைவுகளை காட்டிலும் இது 2 மடங்கு வேகமாகும்.

தொழில்முனைவதில் மிகமுக்கியமான பங்கு சரியான பட்டையகணக்காளரை கண்டுகொள்வதில் அடங்கும்” 
என்கிறார் ரோஹன். அவர் மெரிக்கன் கன்சல்டன்ட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர்கள் நோக்கம் தொழில்முனைவோருக்கு தேவைப்படும் உதவிகளை செய்வதே ஆகும்.

தற்போது 2௦ வாகனங்களோடு களத்தில் ஜனவரி 21 அன்று இறங்கிய நிறுவனம், ஆரம்பித்த 1௦ நாட்களில் ஐநூறு சவாரிகளுக்கும் அதிகமாக சென்றுள்ளது. நிறுவனர்கள் மூவரும் நாற்பது லட்சத்திற்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளனர். மேலும் முதலீடிற்காக பல நிறுவனங்களோடு பேச்சுவார்த்தையில் உள்ளனர்.

போட்டியாளர்கள் :

ஐரைட் நிறுவனத்தின் போட்டியாளர்கள் என்றால் சில நிறுவனங்கள் உள்ளன. ஆனால் அவற்றிற்கான தனித்துவத்தோடு அவை இயங்கி வருகின்றன. பெங்களுருவின் விக்கட்ரைட் நிறுவனம் உயர்ரக இருசக்கர வாகனங்களை கொண்டு “அப்னாரைட்” என்ற சேவையை துவக்கியுள்ளனர். மேலும் ஜூம்கார் நிறுவனம் தனது சேவையை இருசக்கர வாகனங்களுக்கும் விரிவுபடுத்தும் முயற்சிகளில் உள்ளது. மேலும் புல்லெட் பிரியர்களுக்காக “ராயல் பிரதர்ஸ்” நிறுவனம் புல்லட்களை வாடகைக்கு கொடுத்து வருகின்றது. ஐரைட் நிறுவனம் மட்டுமே செயலியை மையமாக வைத்து இயங்கும் நிறுவனம். மேலும் பாதுகாப்பு வைப்பு நிதியை வாடிக்கையாளரிடம் பெறாமல், எரிபொருளுக்கு கட்டணம் பெறாமலும் இயங்குவதும் இவர்கள் மட்டுமே.

“இம்மாதிரி நிறுவனங்கள் மிகஅதிக அளவில் முதலீடு பெற வேண்டும். அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக நெருக்கமாக இருப்பதே அதற்கு காரணம். ஆனால் மிகபெரிய அளவில் வளர்வதற்கான வாய்ப்பும் இத்தொழில் உள்ளது,” 

என்கிறார் ஆர் நட்ராஜன், ஹீலியன் வெண்சர் நிறுவனத்தின் தலைமை நிதிநிர்வாக அதிகாரி.

யுவர்ஸ்டோரி கருத்து :

இந்த தொழில்முனைவின் நிறுவனர்கள் மிகவலுவான தொழில்நுட்ப அடித்தளத்தை அமைக்க வேண்டும் ஏனெனில் அவர்கள் அனுபவம் நிதித்துறையில் இருப்பதே. ஆனால் அதற்கான சரியான திறமைசாலிகளை கண்டறிவது சவாலான ஒரு காரியம். அதனால் தற்போது வெகுவிரைவாக விரிவாக்கம் செய்து, முதலீடு திரட்டுவதே சரியான வழியாகும். மேலும் கிராமப்புறங்களை விட்டு மக்கள் நகரங்களுக்கு புலம்பெயர்வது அதிகரித்து கொண்டே இருக்கும். எனவே செலவுகளை கட்டுக்குள் வைக்கமுடிந்தால் கண்டிப்பாக வெற்றிகரமான தொழிலாக இது அமையும். 2௦22 டில் 32 மில்லியன் இருசக்கர வாகனங்கள் இந்தியாவில் விற்பனையாகும் என தி சொசைடி பார் இந்திய மேனுபாக்சர் கூறுகின்றது. எனவே ஐரைட் போன்ற தொழில்முனைவுகள் தயாரிப்பு நிறுவனங்களின் விளம்பரஅடையாளங்களை அதிகரிக்கவும், மக்களின் போக்குவரத்து தடங்கல்களை தீர்க்கவும் நல்ல ஒரு தீர்வாக அமையும்.

வலைத்தளம்

ஆக்கம் : விஷால் கிருஷ்ணா | தமிழில் : கெளதம் s/o தவமணி

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

பைக், கார் பழுதடைந்து நின்று விட்டதா? 'GoBumpr' செயலி மூலம் மெக்கானிக்கை உடனே அழையுங்கள்!

கார் பூலிங்கில் இருந்து விலகி தனியார் போக்குவரத்து சேவையில் கவனம் செலுத்தும் 'கியூபிட்டோ '

Add to
Shares
103
Comments
Share This
Add to
Shares
103
Comments
Share
Report an issue
Authors

Related Tags