பதிப்புகளில்

திருமணம் முடிக்க உங்களுக்கு ஏற்ற துணையை தேர்ந்தெடுக்க உதவும் VFE!

YS TEAM TAMIL
24th Nov 2015
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

மிகக்குறைவானவர்களுக்கே நம் திருமணத்தின் மீது மிகுந்த அக்கறை இருக்கும், நம் அம்மா அப்பாவை போல. ஒவ்வொருவரும் திருமணத்திற்கான வயது வந்த உடனேயே தங்களது வரனை தேடத்துவங்குகிறார்கள். பெரும்பாலானவர்கள் இப்போது இணையத்திலேயே தேடுகிறார்கள் என்பது வரவேற்கத்தக்க அம்சம்.

எல்லோருக்குமே தங்களது ரசனைக்கும் வாழ்க்கை தரத்துக்கும் ஏற்றவாறு தங்களை திருமணம் செய்துகொள்ளப்போகிறவர் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் எல்லா இணையதளங்களும் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கின்றனவா என்ற மிகப்பெரிய கேள்வி இருக்கிறது.

நீங்கள் உங்களது வரனை எவ்வளவு சிரத்தையோடும் அக்கறையோடும் கவனத்தோடும் தேடுவீர்களோ அதே தனிப்பட்ட அக்கறையோடு செயல்படுகிறது 'வொவ்ஸ் ஃபார் எடர்னிட்டி' (Vows For Eternity (VFE))எனப்படும் வரன் தேடும் சேவை நிறுவனம். இதன் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான அனுராதா குப்தா ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் விசாரித்து தகவல் சேகரித்து தங்கள் தளத்தில் சேமித்து வைத்துக்கொள்கிறார். இதற்காக ஒருவார காலம் கூட செலவிடுகிறார்.

image


என்ன செய்கிறார்கள் இவர்கள்

"உங்கள் வாழ்க்கையில் எவ்வளவோ நபர்களை சந்திக்கிறீர்கள். சிலரோடு மட்டும் தான் நம் குடும்பத்தினரோடு பழகுவது போலவோ, நண்பர்களுடன் இருப்பது போலவோ சந்தோசமாகவும் வசதியாகவும் உணர்வோம். என்னை பொருத்தவரை அது மாதிரி ஒரு நபரோடு தான் நாம் திருமணம் செய்து வாழ முடியும். அந்த நபர் உங்கள் கூட்டாளியாகவும், காதலராகவும் குறிப்பாக உங்கள் நண்பராகவும் இருப்பார்”, திருமணம் என்பதை அனு இவ்வாறு தான் வரையறுக்கிறார்.

சிறந்த நட்பானது நமக்கு இருக்கும் அதே எண்ண ஓட்டம் கொண்டவர்களோடும், நாம் எப்படி வாழ்க்கையை பார்க்கிறோமோ அதை போலவே பார்ப்பவரோடும், தத்துவம் சார்ந்தும் புரிதல் சார்ந்துமே ஏற்படுகிறது. ரிமோட்டுக்காக அடித்துக்கொண்டு டிவி பார்க்கலாமா கேம் ஆஃப் த்ரோன்ஸ் விளையாடலாமா என வாழ்நாள் முழுக்க சண்டை போடுபவர்களோடு கூட அது ஏற்படலாம்.

“எனக்கு 32 வயதாக இருந்தது, திருமணமாகவில்லை. இந்த அளவீட்டை பொறுத்தவரை இது தாமதம். எனக்கு புதிய பொறுப்புகளின் மீதிருந்த பயம் காரணமாக இருக்கலாம். ஒருகட்டத்தில் நான் திருமணத்திற்கு தயாராகி நின்ற போது எனக்கான ராஜகுமாரன் என் முன் தோன்றுவான் என்று நினைத்திருந்தேன். என் நெருங்கிய நண்பர்களுக்கும் அதே பிரச்சனை. தொடர்ச்சியாக பல வரன்களை பார்த்து பார்த்து அலுத்துவிட்டிருந்தார்கள். அவர்களுக்கு சரியான துணையை அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. இவர்களுக்கு பொருந்தி வரும் பலருக்கும் இசை ரசனை சார்ந்த சில ஒற்றுமைகளே இருந்தன. எனவே தான், தனிப்பட்ட திருமண வரன் தேடும் சேவையை துவங்கினால் என்ன என்ற சிந்தனை எனக்கு உதயமானது” என்கிறார் அனு.

"வொவ்ஸ் ஃபார் எடர்னிட்டி" (Vows For Eternity VFE) அந்த வேலையைத்தான் செய்கிறது. நம்பகத்தன்மை வாய்ந்த ஊடகங்கள் மூலம் வரன்களை பற்றிய முழு தகவல்களையும் திரட்டுகிறார்கள். வரனின் அடிப்படை நம்பிக்கைகள், அவரின் ஆளுமைத்தன்மை, மதிப்பீடுகள் போன்றவற்றை திரட்டுகிறார்கள். இதை அடுத்தடுத்த பல்வேறு சுற்றுகளில் சரிபார்த்து உண்மைதானா என உறுதி செய்கிறார்கள். அதன்பிறகே அந்த தகவலோடு பொறுந்தும் வரன்களை பட்டியலிடுகிறார்கள்.

செயல்பாடு

இவர்களின் தளத்தில் எல்லோருமே பதிவு செய்ய முடியாது. ஒருவர் தனது இடம், வேலை குறித்த தகவல்கள் போன்ற நூறுக்கும் மேற்பட்ட தகவல்களை பதிவு செய்ய வேண்டும். இது அவரின் கணக்கிற்கு பலம்சேர்க்கும். இவற்றையெல்லாம் பூர்த்தி செய்ய சாதாரணமாகவே ஒருவார காலம் ”ஆகும்.

“இது நிச்சயமாக டேட்டிங் சேவை இல்லை. திருமணம் செய்ய வேண்டும் என்று தீவிரமாக இருப்பவர்களுக்கானது” என்கிறார் அனு.

ஒவ்வொருவரையும் உணர்வுகள் சார்ந்து வகைப்படுத்துகிறார்கள். எந்தவித கணினி அல்காரிதத்தையும் இதற்காக பயன்படுத்துவதில்லை என்பது இவர்களின் சிறப்பம்சம் ஆகும். ஒவ்வொருவரின் கணக்கையும் படித்து புரிந்துகொண்டு, அவர்களை தனிப்பட்டமுறையில் நேரிடையாக சந்தித்து தகவல்களை சரிபார்த்த பிறகே அவர்களை பட்டியலிடுகிறார்கள். ப்ரீமியம் கணக்கர்களை அனுவே நேரடியாக சந்திக்கிறார் அல்லது ஸ்கைப் காலில் அவர்களோடு இரண்டு மூன்று மணிநேரம் பேசிவிடுகிறார். இது அவர்களை முழுமையாக புரிந்துகொள்ள உதவுகிறது. ஒருவரை சந்திப்பதற்கு முன்பு அவர்களின் வயது, படிப்பு, வசதி, சமூக பின்னணி போன்றவற்றை சேகரித்துக்கொள்கிறார்.

“நான் பயோடேட்டாவையோ போட்டோக்களையோ சார்ந்து இருப்பதில்லை. எனக்கு அவர்களின் ஆளுமை தெரியவேண்டும். அவர்களுக்குள் பொழுதுபோக்கு மற்றும் ஆர்வத்தை தாண்டிய ஒருவர் இருக்கிறார். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கனவுகள் இருக்கிறது. தங்கள் வாழ்க்கைத் துணைகளிடம் வெவ்வேறு வகையில் எதிர்பார்க்கிறார்கள். பலவிதமான ஒழுக்க நெறிகளையும், முன்னுரிமைகளையும் எதிர்பார்க்கிறார்கள்” என்கிறார்.

இந்த தகவல்கள் மூன்று கட்டங்களை உள்ளடக்கியது. அடிப்படைத் தகவல்கள் “எது எனக்கு ரொம்ப முக்கியம்”, "வாழ்க்கை துணையை தாண்டி வேறு என்ன எதிர்பார்க்கிறேன்” அந்த நூறு கேள்விகளில் அவர்களின் வேர்கள், பால்யகால வாழ்க்கை, ஆளுமை, மதிப்பீடுகள், வாழ்க்கையின் புற தன்மை, குறிப்பிட்ட சூழ்நிலைகளில் எப்படி வெளிப்படுகிறார்கள் போன்ற பல அம்சங்களை சேகரிக்கிறார்கள்.

“வாடிக்கையாளர்களுக்கு நம்பகத்தன்மையை உருவாக்க வேண்டும் என்பதில் கவனத்தோடு இருக்கிறேன். அவர்களுக்கு உண்மையில் என்ன தான் தேவை என்பதை வெளிப்படையாக பேச வேண்டும் என எதிர்பார்க்கிறேன். நாட்கள் கடந்த பிறகு அவர்கள் எங்களை மேலும் நம்பி சில முக்கியமான தகவல்களை பகிர்ந்துகொள்கிறார்கள். இது எங்கள் மீதான நம்பக்கத்தன்மை அதிகரித்திருப்பதையே காட்டுகிறது” என்கிறார்.

தனிப்பட்ட தகவல்களை திரட்டுவது போலவே தவறான தகவல்களை தருகிறவர்கள், பொய் சொல்பவர்கள் போன்றவர்கள் பற்றிய தகவல்களை தனியே எடுத்து வைத்துவிடுகிறோம். "அடிக்கடி கேள்விபட்டிருப்போம், திடீரென ஒரு நாள் சந்திக்கும்போது அவர்களின் போட்டோ எட்டு ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கும், வழுக்கை தலையோடு குட்டையாக இருப்பார்” என்கிறார்.

image


இவற்றையெல்லாம் சேகரித்த பிறகு என்ன செய்கிறார்கள்?

சேகரிக்கும் தகவல்களெல்லாம் ஒருவரோடு பொருந்தும்போது அவர்களை ஒரு பட்டியலில் சேர்த்து விடுகிறது VFE குழு. ஒருவரின் முழு தகவல்களை VFE குழுவை தவிர வேறு யாரும் பார்க்க முடியாது என்பது முக்கியமான ஒன்றாகும்.

"தங்களின் தனிப்பட்ட தகவல்கள் காட்சிப்படுத்தப்படுவதை யாரும் விரும்புவதில்லை. இது மிகவும் தனிப்பட்ட விஷயமாகும். நம்பகத்தன்மை வாய்ந்த சேவையையே நாங்கள் வழங்குகிறோம்” என்கிறார்.

இறுதி சுற்று

ஒவ்வொரு கணக்கும் ஆராயப்படுகிறது. இருவரின் கணக்கு சரியாக பொருந்திவரும்போது அவர்கள் இருவருக்கும் அது பற்றிய தகவல் தெரிவிக்கப்படுகிறது. முதலில் பெண்களுக்கே தெரிவிக்கிறார்கள்.

“எல்லோருக்கும் முதலில் கிடைப்பதே சிறப்பான ஒன்றாக அமைந்துவிடுகிறது. ஒருவர் திருமணத்திற்கு பிறகு குழந்தை வேண்டும் என்பவராக இருப்பார், இன்னொருவரோ வேண்டாம் என்ற மனநிலையில் இருப்பார். இது போன்ற தகவல்களை முதல் சந்திப்பிலேயே பெற முடியாது. எங்களுக்கு ஏற்கனவே இது போன்ற சவால்களை சந்தித்த அனுபவம் உண்டு” என்கிறார்.

மிகக்கச்சிதமாக பொருந்தக்கூடிய ஒன்று அல்லது இரண்டு பேரின் தகவல்களை மாதம் தோறும் அனுப்பிவைக்கிறோம். ஆனால் குறைந்தபட்சமாக அல்லது அதிகபட்சமாக இவ்வளவு தான் அனுப்புவோம் என்று எந்த நிபந்தனையும் இல்லை என்கிறார். "எங்களின் நோக்கமெல்லாம் தரம் மற்றும் தனிப்பட்டவர்களின் திருப்தி சார்ந்தது. எண்ணிக்கையை சார்ந்து இயங்கினால் இந்த இலக்கை அடைய முடியாது” என்கிறார்.

அடிப்படை தகவல்கள்

இப்போதைக்கு 1200 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இது 2500 அல்லது 3000ஐ தாண்டி சென்றுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். "நான் என் உறுப்பினர்களோடு நெருக்கமாக பணியாற்றவே விரும்புகிறேன். குறிப்பாக ப்ரீமியம் உறுப்பினர்களோடு, அவர்கள் 200 பேர் வரை இருக்கிறார்கள்.”

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அமெரிக்காவில் துவங்கினார். VFEயிடம் மிகப்பெரிய உறுப்பினர் அடித்தளம் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் அது அதிகரித்திருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் 300 சதவீத வளர்ச்சியை எட்டியிருக்கிறோம். இப்போது இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், ஐக்கிய ஐரோப்பா மற்றும் கனடா போன்ற நாடுகளில் எங்கள் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

35 சதவீத வெற்றியை அடைந்திருக்கிறார்கள். இது வரை 400 திருமணங்களை நடத்தியிருக்கிறார்கள். குறிப்பான சேவையை வழங்குவதால் மிகப்பெரிய விளம்பரங்களை செய்ய முடிவதில்லை. முழுக்க முழுக்க சமூக வலைதளங்களையே சார்ந்திருக்கிறார்கள். பரிந்துரைகள் மற்றும் வாய்வழி தகவல்கள் தான் முக்கியப்பங்காற்றுகிறது. நாங்கள் இணையதளத்தில் இயங்கவில்லை. எனவே இது போல தான் இயங்கமுடியும் என்கிறார்.

இன்றைய ஆணும் பெண்ணும் திருமணத்தை தாண்டி எதிர்பார்ப்பது என்ன?

கடந்த நான்கு வருடமாக ஒவ்வொருவரோடும் பல மணிநேரங்கள் செலவிட்டதிலிருந்து சில சுவாரசியமான அம்சங்கள் இருப்பதாக தெரிவிக்கிறார் அனு. உதாரணமாக வெளிநாடுகளில் வாழும் இரண்டாம் தலைமுறையினர் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் ஆர்வமாக இருக்கிறார்கள். எனவே எங்களின் வெற்றி சதவீதம் அதிகரிக்கிறது.

“உண்மையில் மக்கள் திருமணத்தை தள்ளிபோட்டுக்கொண்டே இருக்கிறார்கள். நாளாக நாளாக, குறிப்பிட்ட சிலவற்றை எதிர்பார்க்கிறார்கள். செட்டில் ஆன பிறகு தான் திருமணம் என்பதில் கறாராக இருக்கிறார்கள்” என்கிறார்.

இன்னொரு பக்கம் பெண்களின் மேம்பாடு இதில் முக்கியமான பிரச்சினை, இது ஆண்களை பல சமயங்களில் குழப்பமுறச்செய்கிறது என்கிறார். பெண்கள் சார்ந்த சிலவற்றை ஆண்கள் மெதுவாக தான் புரிந்து கொள்ளத் துவங்குகிறார்கள். "டேட்டிங்க் செல்லும்போது என்ன செய்வதென தெரியாமல் விழிக்கிறார்கள். பில் தாங்கள் செல்லுத்த வேண்டுமா இல்லை சும்மாவே இருப்பதா, கதவை பிடித்துக்கொண்டு நிற்பதா, நாற்காலியை இழுப்பதா கூடாதா” என்பது போல பல குழப்பத்தில் இருப்பதாக தெரிவிக்கிறார்.

அனுவும் பெண்ணாக இருப்பதால் இவை பற்றி ஆண்களுக்கு பயிற்சியளிக்கிறார்.

“அது போன்ற சமயங்களில் நான் உதவுகிறேன். வரன் தேடும் இரு தரப்பினருக்குமே காயப்படுத்தாத வகையில் புரியவைக்கிறேன். எல்லோரையும் சமமாக பாவிப்பதென்பது மேல்மட்ட சிந்தனை தான். அது இருவரின் வாழ்க்கையையுமே அடிப்படையில் பாதிக்கக்கூடியது”என்கிறார்.

முன்பு கடினமாக வேலை பார்க்க வேண்டி இருந்தது

கலிபோர்னியாவை சேர்ந்த இருவர் திரும்பவும் சந்திக்க விரும்பவில்லை என தெரிவித்தார்கள். இது இவரை மிகவும் யோசிக்க வைத்தது. சிக்கல் எங்கே என புரிந்துகொள்ள தூண்டியது.

“அவர் மோசமான வண்ணத்தில் சாக்ஸ் அணிந்திருக்கிறார் மற்றும் நீங்கள் ஹிந்தியில் பேச முடியுமா? என என்னை கேட்கிறார்” என அவள் சொன்னாள். அந்த பையனுக்கும் இதில் என்ன தவறு இருக்கிறது என்றே தோன்றியது. நான் அந்த பெண்ணை பேசி சமாதானம் செய்தேன். யதார்த்தத்தை புரிந்துகொள்ள தூண்டினேன். மீண்டும் இருவரையும் சந்தித்து பேச சொன்னேன். எனக்கு அந்த பையனை நன்றாகவே தெரியும், என் ஆழ்மனது அவர்கள் நிச்சயம் சேர்வார்கள் என்றே சொன்னது. நான் செய்ததெல்லாம் அந்த பெண்ணை இரண்டாவது முறை சந்திக்க வைத்தது மட்டும் தான்”

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக அனு தீர்மானமாக நம்புகிறார். ஆம் ஆறு மாதங்கள் கழித்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கிறார்.

ஆங்கிலத்தில் : Binjal Shah | தமிழில் : Swara Vaithee

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக