பதிப்புகளில்

99 வயதாகியும் தனது சமுகப் பணியை தொடர்ந்து மேற்கொள்ளும் சுதந்திரப் போராட்ட வீரர்!

22nd Aug 2017
Add to
Shares
160
Comments
Share This
Add to
Shares
160
Comments
Share

எச் எஸ் தோரேஸ்வாமி, 70 ஆண்டுகளாக இந்தியாவின் சுதந்திரக் காற்றை சுவாசித்து வருகிறார். 1947 முதல் இந்தியா சந்தித்து வரும் ஏற்றத்தையும் இறக்கத்தையும் கண்காணித்து வருகிறார். கிட்டத்தட்ட நூறு வயதை எட்டியபோதும் இவர் தொடர்ந்து பல்வேறு சமூகக் காரணங்களுக்காக போராடி வருகிறார்.

image


ஒரு நாள் மதிய நேரத்தில் ஜெயநகரில் உள்ள அவரது எளிமையான வீட்டில் சந்தித்தேன். வீடு மஞ்சள் நிறத்தில் பளிச்சிட்டது. குறைவான சாமான்களே இருந்தது. விருதுகள், காந்தி போன்றோரின் புகைக்கபடங்கள் ஆகியவை சுவற்றையும் ஷோகேஸையும் அலங்கரித்தது. இந்த மூத்த சுதந்திரப் போராட்ட வீரர் என்னை உபசரித்து வரவேற்றார். மதிய உணவை முடித்துவிட்டு வருவதாகத் தெரிவித்தார்.

ஒரு மர நாற்காலியில் அமர்ந்தவாறே அவரை கவனித்தேன். நடுங்கும் கைகளால் சிறிதளவு சாதத்தையும் சாம்பாரையும் எடுத்து தட்டில் போட்டுக்கொண்டார். உணவை முடித்து திரும்பினார். அவர் அமர்ந்து பேசுவதற்கும் ஓய்வெடுப்பதற்கும் ஒரு பழங்கால கட்டில் ஒன்று ஒரு அறையில் காணப்பட்டது. அந்த அறைக்கு முன்பாக அமர்ந்து என்னுடன் பேசத் தயாரானார்.

எங்கள் உரையாடல் துவங்குவதற்கு முன்பாகவே ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் அழைப்பிற்கு பதில் கூறுகையில் அவரது ஆங்கிலப் புலமை வெளிப்பட்டது. சுருக்கங்கள் நிறைந்த அவரது முகத்தை முதல் முறையாக அருகிலிருந்து உற்றுப்பார்த்தேன். அவரது கண்களில் பளிச்சிடும் தோழமை மற்றும் துணிச்சல் அடங்கிய பார்வையை யாரும் கவனிக்கத் தவறமாட்டார்கள்.

மைசூருவிற்கு அருகிலுள்ள ஹரோஹல்லியைச் சேர்ந்தவர். இவருக்கு ஐந்து வயதிருக்கும் போது இவரது தந்தை இறந்துவிட்டார். இவரது தாத்தா பாட்டி இவரை வளர்த்து படிக்கவைத்தனர். இவரது தாத்தா கிராம க்ளார்காக இருந்ததால் எண்ணற்ற காங்கிரஸ்காரர்கள் அவரை சந்திக்க அடிக்கடி கிராமத்திற்கு வந்தனர். இதனால் தோரேஸ்வாமி அவர்களை சந்தித்துள்ளார்.

"சுதந்திரப் போராட்ட நாட்களில் காங்கிரஸ் தலைவர்களின் பேச்சுகள் எங்களது குடும்பத்தை ஊக்கப்படுத்தியது. அப்போது நாடு முழுவதும் ஆவேசமான சூழல் நிலவியது," என்று நினைவுகூர்ந்தார் தோரேஸ்வாமி.

உயர்நிலைப் பள்ளி சமயத்தில் காந்தியின் நாட்களைப் பதிவு செய்திருந்த புத்தகமான My Early Life புத்தகத்தை படித்தார். ”அதில் ஒரு பகுதியில் ‘சமூகப் பணிகளில் ஈடுபடுபவர் வறுமையைத் தழுவியே இருக்கவேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த எண்ணம் எனக்குள் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் தாக்கத்தை நான் அப்போது உணரவில்லை. அதன் பிறகு இந்த தத்துவமே வாழ்வில் பல்வேறு மதிப்புகளைப் பெற உதவியது.” என்றார்.

சுதந்திரப் போராட்ட நாட்கள்

image


பட்டப்படிப்பிற்காக பெங்களூரு வந்த பிறகு புரட்சிகரமான சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க விரும்பினார். ‘அவரது அண்ணனான எச் எஸ் சீதாராமன் உள்ளிட்டோருடன் இணைந்து மூத்த பிரிட்டிஷ் அதிகாரிகளின் போஸ்ட் பாக்ஸ்களில் டைம் பாம்களை வீசினர்.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை அகற்ற முக்கிய அரசாங்க ஆவணங்களை சேதப்படுவதை எங்களது முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டோம்.

”விமானத்திற்குள் லைனிங்கிற்கு பயன்படும் ஒரு குறிப்பிட்ட துணி வகையான பாராசூட் துணிகளை பெங்களூரு முழுவதும் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் தங்களது மில்களை மூடிவிட ஊழியர்களையும் தலைவர்களையும் சம்மதிக்க வைக்கும் பணியிலும் நான் ஈடுபட்டேன். பிரிட்டிஷிற்கு உதவும் எந்தவித தொழில்துறை செயல்பாடுகளையும் தடுக்க விரும்பினோம். எனவே அப்போது வலுவான கம்யூனிஸ்ட் தலைவராகவும் மில் உரிமையாளராகவும் இருந்த என் டி ஷங்கர் அவர்களை கட்சியிலிருந்து தற்காலிகமாக விலகி சுதந்திர இயக்கத்தில் கலந்துகொண்டு அவரது ஊழியர்களும் உற்பத்தியை நிறுத்திக்கொள்ள அவர் மூலமாக வலுயுறுத்தச் செய்தோம்.”

”இந்த வெகுஜன விழிப்புணர்வில் வெற்றியடைந்தோம். இதன் காரணமாக பின்னி மில்ஸ், ராஜா மில்ஸ் மற்றும் மினர்வா மில்ஸ் ஆகியவை பிரிட்டிஷ்க்கு எதிரான போராட்டத்திற்காக இரண்டு வாரங்கள் மில்லை மூடி வைத்தனர். இந்தச் செயல் மைசூர் ப்ரெசிடென்ஸியின் கீழ் செயல்பட்ட மற்ற மில்களும் காலவறையற்ற நிலையில் மூட ஊக்கமளித்தது,” என்று தோரேஸ்வாமி நினைவுகூர்ந்தார்.

சிறை எனக்கு ஒரு பல்கலைக்கழகமாகவே காணப்பட்டது

1944-ம் ஆண்டு போலீஸ் பிடியிலிருந்த இவரது நண்பர் குண்டு வீச்சில் தோரேஸ்வாமி தனது பார்ட்னர் என்று தெரிவித்ததால் இவர் சிறையிலடைக்கப்பட்டார்.

வெளிப்படையாகச் சொல்வதானால் பெங்களூரு மத்திய சிறையிலிருந்த 14 மாத சிறைவாசத்தை நான் ரசித்தேன். அங்கே சிறைவைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட 500 சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இது பெருமையான விஷயமாகவே இருந்தது. ஓய்வு நேரத்தில் நாடகத்தில் நடித்தேன். புதிய மொழிகளைக் கற்றேன். கைப்பந்து விளையாடினேன். இதனால் சிறைச்சாலை எனக்கு ஒரு பல்கலைக்கழகமாகவே மாறியது. 
image


”உணவு நிர்வாகப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டேன். சிறையின் கடையில் மளிகைப் பொருட்களை வாங்கி அவற்றை சுத்தப்படுத்துதல், வகைப்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக உடனிருந்த கைதிகளை ஒன்றிணைத்தேன்,” என்றார்.

சிறையிலிருந்து விடுதலையான பிறகு சாஹித்ய மந்திரா என்கிற வெளியீட்டு நிறுவனத்தை சில ஆண்டுகள் நடத்தி வந்தார். எனினும் மைசூரு செல்லவேண்டியிருந்ததால் அதை மூடிவிட்டார். மைசூருவில் அவரது நண்பர் நடத்தி வந்த பௌரவானி என்கிற செய்தித்தாளை தொடர்ந்து நடத்துமாறு அவரது நண்பர் கேட்டுக்கொண்டார். விடுதலைப் போராட்டத்திற்கு பங்களிக்கும் இந்த செய்தித்தாளை ஏற்று நடத்தி தனது நண்பரின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காகவே மைசூருவிற்கு விரைந்தார்.

”நான் முதலில் வாராந்திர காங்கிரஸ் செய்தித்தாளை தினசரியாக மாற்றினேன். அப்போது அதன் விலை மூன்று பைசா. 1947-ல் உடையார் மஹாராஜாக்கள் மைசூருவை இந்தியாவுடன் இணைக்கவேண்டும் என்று மைசூர் சலோ இயக்கம் வற்புறுத்தியது. அந்த சமயத்தில் மஹாராஜாக்கள் குறித்து வருத்தம் தெரிவித்தும் பொறுப்பான அரசாங்கத்தின் தேவையை உணர்த்தும் வகையிலும் வலுவான கருத்துக்களை 10 பத்திகளாக எழுதித்தருமாறு டிடி ஷர்மாவிடம் கேட்டேன். எட்டாவது பத்தி வெளியிடுகையில் அனைத்து கட்டுரைகளையும் வெளியிடுவதற்கு முன்பு அரசாங்க குழுவிடம் பரிசீலனைக்குக் அனுப்பிட்டு அதன் பின் வெளியிடுமாறு தலைமைச் செயலாளரிடம் இருந்து ஒரு அறிவிப்பு வந்தது. அவர்களது எச்சரிக்கையை மீறி கடைசி இரண்டு பத்தியை ஒரு பிரத்யேக பாக்ஸில் வெளியிட்டேன். அதில் இந்த நடவடிக்கை பேச்சுச் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று வெளிப்படையாக கண்டனம் தெரிவித்தேன்.” என்று பெருமையாக பகிர்ந்துகொண்டார்.

ஒவ்வொரு இந்தியனுக்கும் சுதந்திரம் அறிவிக்கப்பட்ட 1947-ம் ஆண்டு, ஆக்ஸ்ட் 15-ம் தேதி நள்ளிரவை நினைவு கூர்ந்தார்.

”இரவு முழுவதும் கொண்டாட்டம் முடிவுக்கு வரவில்லை. அனைவரும் திருவிழாவை கொண்டாடும் மனநிலையில் இருந்தனர். வீட்டை விளக்குகளாலும் மூவர்ணக் கொடியாலும் அலங்கரித்தனர்,” என்றார்.

அவரது கனவு இந்தியா

அவர் கனவு கண்ட இந்தியாவில்தான் தற்போது வாழ்கிறாரா என்று நான் கேள்வி எழுப்பியவுடன் அவரது உற்சாகம் குறைந்தது. அனைவருக்குமான வளர்ச்சி என்பதில் நம்பிக்கைக் கொண்ட ஒருவருக்கு ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள், சுயநலவாதிகள், போலியான சமூகப் பணியாளர்கள் நிறைந்த இந்தியா ஏமாற்றத்தையே அளிக்கக்கூடும்.

ஏழ்மையை அகற்றவும், அதிகாரத்தை மாற்றியமைத்து மக்களின் அரசாங்கத்தை நிறுவுவதற்குமே சுதந்திர இந்தியாவைக் கோரி போராட்டம் நடத்தினோம். ஆனால் இன்று நம்மை ஆளும் அரசாங்கம் நேர்மையான முறையில் மதிப்பை உணர்ந்து செயல்படுவதில்லை. கார்ப்பரேட் கலாச்சாரத்தை ஊக்குவித்து பணக்காரர்கள் அதிக பணக்காரர்களாக உருவாகவே அரசாங்கம் உதவுகிறது. பண பலமும் சாதியும் மட்டுமே தேர்தலுக்கான உந்து சக்தியாக உள்ளது. ஒவ்வொரு வேட்பாளரும் பாஜக, காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்டைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். ஆனால் மக்கள் தலைவர் எங்கே?” என்று மனம் தளர்ந்து குறிப்பிட்டார்.

எவ்வளவோ இழப்புகளைத் தாங்கி பெறப்பட்ட சுதந்திரத்தின் உண்மையான மதிப்பை தற்போதைய தலைமுறையினர் உணர்ந்துள்ளார்களா எனக் கேட்டதற்கு,

வெறும் 10 சதவீத இந்தியா மட்டுமே உண்மையில் சுதந்திரமாக உள்ளது. மீதமிருக்கும் 90 சதவீதத்திற்கு சுதந்திரம் இல்லை, என்கிறார்.

அவரது அண்ணன் பெங்களூருவின் மேயராக இருந்தார். இருந்தும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் அவருக்குத் தோன்றவில்லை. ”அவசர நிலை நாட்கள் மற்றும் இந்திராவின் காங்கிரஸ் ஆகியவை அவரது அரசியல் கருத்தியல்களைப் பொருத்தவரை அதிருப்தி அளிப்பதாகவே இருந்தது. முழுமையான வளர்ச்சி என்பதில் எனக்கு நம்பிக்கை இருப்பதால் இந்திரா காந்தியின் சர்வாதிகார முறையில் எனக்கு உடன்பாடில்லை,” என்றார். 1975 அவசர நிலை பிறப்பிக்கப்பட்ட நேரத்தில் அவ்வாறு நடந்துகொள்ள வேண்டாம் என்று வலியுறுத்தி இந்திரா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பல்வேறு சமூக பிரச்சனைகளுக்காக போராடி குரலெழுப்பிய முன்னோடி

அடுத்த ஏப்ரல் மாதம் நூறு வயதை எட்ட உள்ள இவருக்கு வயது ஒரு எண்ணிக்கை மட்டுமே. நிலமற்றவர்கள் மற்றும் இடம்பெயர்ந்த சமூகத்தினரின் உரிமைக்காகவும் போராடுவது அவரது ரத்ததிலேயே கலந்துள்ளது. அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாலும் உடல்நிலை சீராக இல்லாததாலும் அவரது சமூகப்பணிகளில் எப்போதாவது தடங்கல் ஏற்படலாம். ஆனால் அவரது வேகம் குறைய அது எப்போதும் காரணமாக இருந்ததில்லை.

கடந்த மூன்றாண்டுகளில் இவர் மூன்று சமூகப் பிரச்சனைகளை மிகுந்த அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருகிறார். முதலில் பெங்களூருவின் கழிவுகளை மண்டூர் நிலப்பரப்பில் கொட்டுவதற்கு எதிராக போராட ஒரு குழுவை அமைத்தார். 

“கடந்த ஏழாண்டுகளாக ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 30,000 டன் கழிவுகள் இங்கே கொட்டப்படுகிறது. சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்களை நினைத்து அக்கறையில்லாமல் இருக்கிறோம் என்கிற குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது. எனவே இதிலிருந்து மீண்டு இதற்கு ஒரு தீர்வு காண்பது அவசியம் என்பதை உணர்ந்தேன்.”

இரண்டாவதாக பெங்களூருவைச் சுற்றிலும் 40,000 ஏக்கர் நிலம் சட்ட விரோதமான முறையில் அபகரிக்கப்படுவதை எதிர்த்து 39 நாட்கள் போராட்டத்தை நடத்தினார். போலியான நில உரிமை ஆவணங்களை வழங்கிய குற்றவாளிகளுக்கு சிறை தண்டனையை பரிந்துரைத்தது ஏடி ராமசாமி குழு. இவர் இதில் ஈடுபட்டவுடன் சட்ட நடவடிக்கைகளுக்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது.

கடைசியாக வேதனையில் வாடும் விவசாயிகளுக்கு நிலங்கள் சமமாக விநியோகிக்கப்படவேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தார் பெங்களூரு மக்கள் விரும்பும் இந்த சுதந்திரப் போராட்ட வீரர்.

70 ஆண்டுகளாக வறுமையில் வாழ்ந்துள்ளோம். விவசாயி தற்கொலை அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு உணவளிக்க மட்டும் பொறுப்பேற்றுக்கொண்டால் போதாது. நீண்ட கால அடிப்படையில் அவர்கள் ஒரு நிலையான சிறந்த பொருளாதார சூழலை எட்ட அரசாங்கம் வழியமைத்துத் தரவேண்டும். இந்த விஷயத்திற்காக ஏழ்மை குறித்து விவாதிக்கப்படவில்லை எனில் பெல்காமில் நடக்கும் குளிர்கால கூட்டுத்தொடரை முடக்கிவிடுவதாக அச்சுறுத்தினேன். இதற்கு அவர்கள் இணங்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள்.” என்றார்.

முன்மாதிரி சமூகப் பணியாளருக்கான விளக்கம்

முன்மாதிரியான சமூகப் பணியாற்றுபவர் யார் என்கிற கேள்விக்கு, “பொருள் சார்ந்தவர்களாக, அதிகார வேட்கை, பயம், சார்ந்திருத்தல், பழிவாங்குதல் ஆகிய குணங்கள் இல்லாதவரே முன்மாதிரி சமூகப் பணியாளர். இன்றைய சமூகப் பணியாளர்கள் திடநம்பிக்கையின்றியே சமூகப் பிரச்சனைகளை அணுகுகிறார்கள். அவர்களது ஒரு நாள் போராட்டங்கள் விளம்பரத்திற்காகவே மேற்கொள்ளப்படுகிறது. எந்தவித சமூக அக்கறையும் இதில் இல்லை. இது நிறுத்தப்படவேண்டும். சில போர்க்களங்களில் தனியாக போராடி வெல்ல முடியாது.” என்றார் இறுதியாக.

ஆங்கில கட்டுரையாளர் : அமூல்யா ராஜப்பா

Add to
Shares
160
Comments
Share This
Add to
Shares
160
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக