தன் மருத்துவத் தொழிலை விட்டுவிட்டு ஒரு கிராமத்தை மேம்படுத்திய சென்னை மருத்துவர்!

  By YS TEAM TAMIL|9th Oct 2017
  Clap Icon0 claps
  • +0
   Clap Icon
  Share on
  close
  Clap Icon0 claps
  • +0
   Clap Icon
  Share on
  close
  Share on
  close

  கோவையில் இருக்கும் தென்னமணல்லூர் என்னும் ஒரு சிறிய கிராமம் முழுவதும் திருமணத்திற்காக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நாங்கள் அங்கு நடந்து செல்ல வழி சுத்தமாகவும், நிறைய மரங்களோடும் செழிப்பாக இருப்பதை கண்டு வியந்தோம்.

  எங்களை கிராமத்திற்குள் வழி நடத்திச் சென்ற டாக்டர் மீரா கிருஷ்ணாவை பார்த்தபொழுது அவ்வழியில் சென்ற அனைத்து கிராம மக்களும் நின்று அவருடன் பேசிவிட்டு சென்றனர். 2006-க்கு முன்பு, அதாவது டாக்டர் மீரா இக்கிராமத்திற்கு வரும் முன்பு இங்கு வெறும் 15 சதவிகித வீடுகளில் மட்டுமே கழிப்பறை இருந்தது. கழிவு சேகரிப்பு அமைப்பு, சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லாமல் இருந்தது இந்த கிராமம்.

  டாக்டர் மீரா கிருஷ்ணா

  டாக்டர் மீரா கிருஷ்ணா


  ஆனால் இன்று தென்னமணல்லூர் அடையாளம் தெரியாதவாறு தூய்மையாகவும் செழிப்பாகவும் காட்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி அனைத்து வீடுகளிலும் கழிப்பறை உள்ளது. சுத்தம் சுகாதாரத்தைத் தாண்டி மது அருந்துதலும் புகை பிடித்தலும் பெரும்பாலும் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது; பெண்களுக்கும் ஏற்ற வாழ்வாதரமும் அமைந்துள்ளது; பெண் கல்வி மற்றும் மாதவிடாய் சுத்தத்தின் விழிப்புணர்வும் இக்கிராமத்தில் செழிப்பாய் உள்ளது. 6000 மக்கள் தொகையை கொண்ட இந்த கிராமத்தில் சிறு தொழில்முனைவோர்களும், முதலீட்டாளர்களும் உள்ளனர்.

  இந்த மாற்றத்திற்கான காரணம் 60 சுய உதவி குழு, 11 விவசாயிகள் சங்கம் மற்றும் 42 மகளிர் மன்றம். 54 வயதான டாக்டர் மீரா கிருஷ்ணா, தன் பாதி வாழ்நாளை இக்கிராமத்தின் நலனுக்காக அர்பணித்துள்ளார்.

  தென்னமணல்லூர் வீதி

  தென்னமணல்லூர் வீதி


  சின்மயா கிராமப்புற மேம்பாட்டு அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மீரா. மார்ச் 2013-ல் பெண்கள் தேசிய ஆணையம் அவரது சுயநலம் அற்ற சேவைக்காக ’சிறந்த பெண்மணி’ என்கிற விருதை வழங்கியது. மேலும் 2008 ஆம் ஆண்டில் சமூக சேவைகளுக்கான பத்மஸ்ரீ விருது மற்றும் 2012-ல் கார்டியன் சர்வதேச மேம்பாட்டு சாதனையாளர் விருதை பெற்றார்.

  மகளிர் மன்றங்களை மேம்படுத்துதல்

  தன் மகள் படிப்பிற்காக சென்னையில் இருந்து கோவை வந்தபொழுதே இந்த கிராமத்திற்கு அறிமுகமானார் மீரா.

  “சிறுவானியில் உள்ள சின்மயா சர்வதேச பள்ளிக்கு என் மகளை விடும்போது எல்லாம் இந்த கிராமத்தை நான் பார்த்திருக்கிறேன். முதல் ஒரு வருடம் அவர்களுக்கு உதவி செய்ய முன்வந்தேன்,”

  என தன் வரவை ஞாபகம் படுத்துகிறார் மீரா. ஆனால் இப்பொழுது அவருடன் இணைந்து உதவி செய்ய சமூக வளர்ச்சி தொழிலாளர்கள் இணைந்துள்ளனர்.

  பொதுநலம் மற்றும் நன்மை செயல் என்பது தொண்டு அல்ல. அது ஒரு வளர்ச்சி சமந்தப்பட்டது; அதாவது வாழ்வாதாரத்திற்காக அவர்களுக்கு மீன் பிடித்து தராமல் மீன் பிடிக்கச் சொல்லிதர வேண்டும். 

  “நான் ஒரு பெண்மைப் பிணியியல் மருத்துவர், முன்பு எனக்கு மருத்துவம் மட்டும்தான் தெரியும் ஆனால் இப்பொழுது சுகாதாரம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் அரசுத் திட்டங்கள், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உழைத்துக்கொண்டு இருக்கிறேன்,” என அடுக்கிகொண்டே போகிறார் டாக்டர் மீரா.
  image


  டாக்டர் மீராவின் முதல் முயற்சி மகளிர் மன்றங்களை இயற்றுவது ஆகும் - இங்கு பெண்கள் தாங்கள் அன்றாடம் சந்தித்த சிக்கல்களை பற்றி பேசி தீர்வு காணலாம். மேலும் இந்த மகளிர் மன்றத்தில் சுய-நிலையான தொழில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தளின் மூலம் சுயதொழில் தொடங்க பெண்களை ஊக்கப்படுத்தியது.

  மகளிர் மன்றத்தின் ஒரு உறுப்பினரான நிதா,

  “முதலில் நான் ஒரு இல்லத்தரசி, இங்கு மகளிர் மன்றத்தில் இணைந்த பிறகே நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது, பெண்கள் என்னென்ன சவால்களை சந்திக்கின்றனர் என்பதை உணர்ந்தேன். இன்று மாதம் என்னால் முடிந்த வரை பணத்தை சேமிக்கிறேன். 1500 முதலீடு செய்தால் 1000 ரூபாய் வரை லாபம் சம்பாதிக்க முடிகிறது,” என்கிறார்.

  ஒவ்வொரு மகளிர் மன்றமும் 12 உறுபினர்களை கொண்டுள்ளது, அதில் அனைவரும் நிச்சயம் மாதம் 10 ரூபாய் மன்றத்திற்கு செலுத்தவேண்டும். இந்த பணம் மருத்துவ அவசரம், மரணம், அல்லது திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு பயன் படுத்தப்படுகிறது.

  வலி தைலம், ஊதுவர்த்தி, கைவினைப்பொருட்கள், காகிதம் கைத்தொழில்கள், சுருள் கூடைகள், மசாலா பொருட்கள், கரிம எண்ணெய், மற்றும் நாப்கின் ஆகியவற்றை தயாரிக்க சின்மயா கிராமப்புற மேம்பாட்டு அமைப்பு பயிற்சியளிக்கிறது. இந்த பொருட்களை பெண்கள் தாங்கள் வசிக்கும் இடத்திலே விற்கிறார்கள். சிலசமயங்களில் மளிகை கடையில் கொடுத்து விற்கிறார்கள்.

  image


  மருத்துவ மற்றும் உளவியல் ஆதரவு

  டாக்டர் மீரா; மருத்துவ ரீதியான ஆதரவை அக்கிராம மக்களுக்கு அளிக்கிறார். வழக்கமான இரத்த சோதனைகள், நீரிழிவு பராமரிப்பு மற்றும் குழந்தை பராமரிப்பு தன்னார்வலர்கள் ஆதரவுடன் உறுதி செய்யப்படுகிறது.

  டாக்டர் மீராவின் வற்புறுத்தலால் டாக்டர் உஷா, ஓய்வு பெற்ற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் HOD வாரம் ஒரு முறை இங்கு வருகிறார்.

  “ஐந்து வருடமாக இந்த கிராமத்திற்கு வருகிறேன். கிராமத்திற்கு வருவது பல வகையில் எனக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. மதுவால் ஏற்படும் சிரமங்களை கண்கூட என்னால் பார்க்க முடிகிறது. மேலும் இங்கு இருக்கும் பள்ளிக் குழந்தைகள் தங்கள் சிக்கல்களை எங்களுடன் பகிர்கின்றனர், உடல் முறைகேடு உட்பட,” என்கிறார் டாக்டர் உஷா.

  டாக்டர் மீரா மற்றும் உஷா ஆலோசகர்களாகவும் செயல்படுகின்றனர். மனதாலும் உடலாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதை கடந்து செல்ல தீர்வு காண்கின்றனர். மதுவே அந்த கிராமத்தின் பெரும் சிக்கலாய் இருந்தது, ஆண்கள் தங்கள் நேரத்தையும் பணத்தையும் அதிகமாக மதுவிற்கே செலவிட்டனர்.

   டாக்டர் உஷா, ஓய்வு பெற்ற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் HOD

   டாக்டர் உஷா, ஓய்வு பெற்ற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் HOD


  “கொடுக்கப்படும் மருந்துககளை எரிந்துவிட்டு குடிப்பதை தொடர்வார்கள். குடித்துவிட்டு மனைவியை அடிப்பது பொதுவான பிரச்சனையாக உள்ளது. அவர்கள் மனைவி உடல்நலம் குறித்து ஒரு அக்கறையும் இல்லாமல் இருப்பர்; அவர்களுக்கு நீரிழிவு அல்லது உயர் இரத்த அழுத்தம் இருப்பதை உணராத கணவர்கள் உள்ளனர்,” என்கிறார் உஷா.

  டாக்டர் மீரா மற்றும் உஷா ஆண்களை வாரம் ஒரு முறை சந்தித்து பேசினர். வீடுகளுக்குச் சென்று மதுவின் அபாயங்களை எடுத்துரைத்தனர். 50 வயதான வீரப்பன் தன் 20-களில் குடிக்கத் தொடங்கி டாக்டர் மீராவின் அறிவுறுத்தலைக் கேட்டு தற்பொழுது குடியை விட்டவர்.

  அவர், “எனக்கு குழந்தைகள் பிறந்த பிறகும் நான் குடிப்பதை நிறுத்தவில்லை. என்னை பார்த்து பயந்து என்னிடம் சேராமலே என் குழந்தைகள் வளர்ந்தனர். டாக்டர் மீரா தான் எண்ணியதில் இருந்து வெளி கொண்டு வந்து என் வாழ்க்கையை மாற்றினார். மதுவை விட்டு சில வருடங்கள் ஆகிறது. என் மகன்கள் என்னுடன் இருக்கிறார்கள், பட்டபடிப்பு முடித்து வேலைக்கு செல்கிறார்கள்” என்கிறார்.

  நிலையான கழிவு மேலாண்மை

  பொதுக் குழு மூலம் மக்களுக்கு மக்கும் மற்றும் மக்கா குப்பை பற்றியே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த தொடர் முயற்சியால் நிலையான கழிவு மேலாண்மை ஏற்படுத்தியுள்ளனர். இன்று ஒவ்வொரு குடும்பமும் ஒரு குழிக்குள் கழிவுப்பொருள் கழிவுகளை சேகரிக்கின்றனர், பின்னர் அதை உரமாக உபயோகிக்கப்படுத்துகின்றனர். மக்காத கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்காக கோயம்புத்தூர் (RAAC) குடியுரிமை விழிப்புணர்வு சங்கத்தால் எடுத்துச் செல்லப்படுகிறது.

  கௌஷிகா

  கௌஷிகா


  ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி கௌஷிகா தனது நிலையான கழிவு மேலாண்மை பற்றி கூறுகிறார்,

  “எல்லா வாரமும் டாக்டர் மீரா மற்றும் இதர தன்னார்வலர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் தனிப்பட்ட சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை எடுத்துரைக்கின்றனர். நானும் அவர்களுடன் இணைந்து சிறு குழந்தைகளுக்கு கழிவுகளை மறுசுழற்சி செய்வது பற்றி கூறுகிறேன்.”

  இந்த கிராமத்தில் முடிந்த வரை பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப் பைகளை பயன்படுத்துகின்றனர்.

  அதிகாரமளிப்பதற்கான பார்வை

  வளர்ச்சி எல்லா பிரிவை சென்று அடைய வேண்டும் அப்பொழுது தான் கிராம மக்கள் தங்கள் சாத்தியக்கூறுகளை அறிவார்கள் என்பதை நம்புகிறார் மீரா.

  “இது சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் வளர்ச்சி பற்றியது; சின்மயா கிராமப்புற மேம்பாட்டு அமைப்பின் நோக்கம் பெண்களை மேம்படுத்துதல் மூலம் கிராமப்புற ஏழைகளை வளரச்செய்வதாகும். ஒவ்வொரு வார்டிலும் நாங்கள் வேலை செய்கிறோம், ஏனென்றால் ஒரு வார்டு என்பது சுய ஆட்சிமுறையின் அடிப்படை அலகு ஆகும். பஞ்சாயத்துடன் நெருக்கமாக பணிபுரிகிறோம் அதன் மூலம் எல்லா வார்டுகளையும் அணுக முடியும்,” என்கிறார்.

  சென்னையில் தனது 16 வருட மருத்துவ வாழ்க்கையை விட்டுவிட்டு இந்த கிராமத்திற்காக பணிபுரிவதை பெருமையாக எண்ணுகிறார். 10 வருடம் ஆன போதிலும் இதை விட்டு செல்லும் எண்ணம் அவருக்கு வந்ததில்லை. 

  ஆங்கில கட்டுரையாளர்: ஷ்ருதி கேடியா | கிருத்திஹா ராஜம்