பதிப்புகளில்

காய்கறிகள் விற்கும் ஐஐஎம் பட்டதாரி- 5 கோடி ரூபாய் விற்றுமுதல் பெற்று விவசாயிகள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்துகிறார்

YS TEAM TAMIL
23rd Aug 2017
Add to
Shares
103
Comments
Share This
Add to
Shares
103
Comments
Share

ஐஐஎம்-ல் இருந்து எம்பிஏ முடித்துவிட்டு, அதிக சம்பளத்தில் பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு செல்வதயே எவரும் விரும்புவர். ஆனால் ஒரு சிலர் வருமானத்தைக் காட்டிலும் தங்களுக்கு பிடித்த விஷயத்தில் பாதை அமைத்து தங்கள் வெற்றியை நிர்ணயித்தும் உள்ளனர். 

கெளஷ்லேந்திர குமார் என்ற ஐஐஎம் அகமதாபாத் பட்டதாரி, இதுபோன்ற ஒரு முடிவைத்தான் எடுத்தார். தன் சொந்த ஊரான பிஹாருக்கு சென்று விவசாயத்தொழிலை கவனிக்கத் தொடங்கினார். இப்போது அந்த தொழிலில் அவருக்கு விற்றுமுதலாக ரூ.5 கோடி கிடைக்கிறது, மேலும் 20 ஆயிரம் விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பும் அளித்துள்ளார். 

பட உதவி: Social Media

பட உதவி: Social Media


நலந்தா மாவட்டம் முகமத்பூர் கிராமத்தை சேர்ந்த கெளஷலேந்தர், குடும்பத்தில் இளையவர். அவரது பெற்றோர்கள் இருவரும் கிராமப்பள்ளி ஆசிரியர்கள். 5-ம் வகுப்புக்கு பின் வீட்டில் இருந்து 50 கிமி தூரம் உள்ள ஜவஹர் நவோத்யா வித்யாலயாவில் படித்தார் அவர். அந்த பள்ளியில் சேர மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே முடியும், ஏனெனில் அங்கு பள்ளிக் கட்டணம் இலவசம் மற்றும் உணவு, உடைகளும் கொடுக்கப்படும். 

கெளஷலேந்தர்; குஜராத் இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலில் விவசாயத்துறையில் பொறியியல் முடித்தவர். பட்டம் பெற்றபின் இஸ்ரேலில் ஒரு விவசாயத்துறை நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் ஆந்திர மாநிலத்து விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் குறித்து விளக்கிவந்தார். 

அவர் பணியில் இருந்து கொண்டே CAT தேர்வுக்கு தயாரானார். நல்ல மதிப்பெண்களுடன் ஐஐஎம் அகமதாபாத்தில் சேர்ந்தார். தங்க பதக்கம் பெற்று சிறந்த மாணவராக எம்பிஏ முடித்தார். நல்ல வேலை கிடைத்தும் அதை ஏற்காமல் பிஹாரில் ஏழை விவசாயிகள் நலனுக்காக பணிபுரிய அங்கே சென்றார். 

பாட்னாவில் தன் சகோதரருடன் ‘கெளஷல்யா பவுண்டேஷன்’ என்ற நிறுவனத்தை 2008-ல் தொடங்கினார் கெளஷல். பிஹார் விவசாயிகளின் நிலையை உயர்த்த காய்கறிகளை கொள்முதல் செய்து விற்கும் நிறுவனம் மூலம் அதை செய்தார். 

இதன் மூலம் சுமார் 20 ஆயிரம் விவசாயிகளுடன் கைக்கோர்த்து அவர்களுக்கு லாபகரமான விலையில் விற்பனை செய்து கொடுத்து வருகிறார். 

பாட்னாவில் ஒரு சிறிய இடத்தில் நிறுவனத்தை தொடங்கியபோது நாளுக்கு 22 ரூபாய் சம்பாதித்த கெளஷல் தற்போது விற்றுமுதலாக 5 கோடி ரூபாய் ஈட்டும் அளவிற்கு நிறுவனத்தை பெருக்கியுள்ளார். வருமானத்தை தாண்டி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளார். 

கட்டுரை: Think Change India

Add to
Shares
103
Comments
Share This
Add to
Shares
103
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக