பதிப்புகளில்

ஆசிய வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதினை வென்றுள்ள 10 வயது சிறுவன்!

posted on 27th October 2018
Add to
Shares
197
Comments
Share This
Add to
Shares
197
Comments
Share

ஜலந்தரைச் சேர்ந்த பத்து வயது அர்ஷ்தீப் சிங் பத்து வயதுக்குட்பட்டோர் பிரிவில் இளையோர் ஆசிய வனவிலங்கு புகைப்படக்கலைஞர் விருதினை வென்றுள்ளார். கழிவுகள் குழாய் ஒன்றில் இருந்து எட்டிப்பார்க்கும் ஆந்தைக் குஞ்சுகளின் தெளிவான புகைப்படமே இந்த விருதினை அவருக்கு பெற்றுத்தந்துள்ளது.

லண்டனில் ’நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம்’-ல் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இந்த புகைப்படம் குறித்து அனைவரும் அவரை வெகுவாகப் பாராட்டினர்.

image


ஜலந்தரைச் சேர்ந்த அர்ஷ்தீப் தனது அப்பாவுடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது இந்த காட்சியைக் கண்டுள்ளார். பஞ்சாபின் கபுர்தலா நகருக்கு வெளியே இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவிக்கிறது.

அர்ஷ்தீப் கூறுகையில்,

இயற்கை புகைப்படங்களுக்காக நான் அடிக்கடி அப்பாவுடன் கபுர்தலா செல்வேன். அப்படிச் செல்லும்போது ஒரு முறை ஆந்தை ஒன்று குழாயினுள் செல்வதைக் கவனித்தேன். என் அப்பாவிடம் காரை நிறுத்தச் சொன்னேன். அவர் என்னை நம்பவில்லை. அந்த ஆந்தை வெளியே வரும் வரை நாங்கள் அங்கேயே காத்திருந்தோம். ஒரு விநாடிகூட வீணாக்காமல் அது வெளியே வந்ததும் உடனே புகைப்படம் எடுத்தேன். என் அப்பா மிகவும் ஆச்சரியப்பட்டார். அந்த ஆந்தைகள் என் கண்களை நேராக பார்த்தவாறு இருந்துது.

’நான் உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்’ என இரண்டு ஆந்தைகளுடம் என்னிடம் சொல்வது போல் உணர்ந்தேன்,” என்றார்.

image


அவர் புகைப்படம் எடுக்க மையப்படுத்தும் பகுதியானது அதன் பின்னணியில் இருந்து வேறுபட்டுத் தனியாக காட்சிப்படுத்தும் விதத்தில் புகைப்படம் எடுக்கிறார் என்றும் நகர்ப்புற வாழ்க்கைக்கு ஏற்ற விதத்தில் அவற்றை உருவாக்கிறார் என்றும் தி டெலிகிராஃப் குறிப்பிடுகிறது.

போட்டோகிராஃபரின் மகன் என்பதால் அர்ஷ்தீப் மிகவும் இளம் வயதான ஆறு வயதிலேயே புகைப்படம் எடுக்கும் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார்.

பல்வேறு சர்வதேச ஊடகங்கள் அவரது ஆர்வத்தை அங்கீகரித்தது. உதாரணத்திற்கு அவரது படைப்புகள் ஜெர்மனி மற்றும் இந்தியாவில் உள்ள Lonely Planet UK மற்றும் BBC Wildlife UK ஆகியவற்றில் வெளியிடப்பட்டதாக தி இண்டியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

இளம் வெற்றியாளர்கள் பத்து வயது மற்றும் பத்துவயதுக்குட்பட்டோர் பிரிவு, 11-14 வயதுடையோர் பிரிவு, 15-17 வயதுடையோர் பிரிவு என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Add to
Shares
197
Comments
Share This
Add to
Shares
197
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக