56 ஆண்டுகளில் 55,000 ஆடைகளை காதல் மனைவிக்கு வாங்கிக் கொடுத்த கணவர்!

87வயதான அன்பு கணவர் பால் ப்ரோக்மேன் தினமும் அவர் மனைவி அணிவதற்காக புது ஆடையை வாங்கி வைக்கிறார். அப்படி ஒரு காதல் அவருக்கு ஏன் தெரியுமா?

19th Nov 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

அலமாரி நிரம்ப நிரம்ப ரகரகமாய் கலர்கலரா ஆடைகள் அடுக்கி இருந்தாலும், எங்கேனும் வெளியில் செல்லலாம் என்று கிளம்பும் முன் மட்டும் முக்கால்வாசி பெண்மணிகள் முதலில் உதிர்க்கும் வார்த்தைகள் ‘போட்டுக்க, டிரசே இல்ல’ என்பதே.


ஆனா டிரஸ்மேனியாளர்களுக்கு இருக்கும் இந்த கவலை மார்கோ ப்ரோக்மேன்-க்கு இல்லை. ஏனெனில், 87வயதான அவரது அன்பு கணவர் பால் ப்ரோக்மேன் தினமும் அவர் அணிவதற்காக புது ஆடையை வாங்கி வைக்கிறார். அதுவும், 56 ஆண்டுகளாய்! இப்போது மார்கோவிடமுள்ள மொத்த ஆடைகள் எவ்வளவு தெரியுமா? 55 ஆயிரம்ம்ம்...


ஜெர்மனியைச் சேர்ந்த பால் ப்ரோக்மேன் ஒரு கட்டிட கான்ட்ரக்டர் கம் பால்ரூம் நடன விரும்பி. 13 வயதிலிருந்து பால்ரூம் நடனத்தை மேற்கொண்டு வரும் அவர், பெண் நடனக் கலைஞர்கள் அணியும் ஆடைகளாலும் ஈர்க்கப்பட்டார். மார்கோவையும் பால்ரூம் டான்சிங்கில் தான் பார்த்துள்ளார். கொஞ்சம் டான்சிங், கொஞ்சம் காதல் என நாட்கள் சென்று கொண்டிருக்கையில் பால் ப்ரோக்மேன் பெண்ணின் பெற்றோரிடம் திருமணத்திற்கு சம்மதம் கேட்டுள்ளார். அவர்களும் உடனே ஒப்புக் கொள்ள, டும் டும் டும்ல் முடிந்தது காதல்.

மனைவி

பால் ப்ரோக்மேன் தன் மனைவி மார்கோ ப்ரோக்மேன் (இடது), பால் மனைவிக்கு வாங்கி வைத்துள்ள ட்ரெஸ் (வலது)

பால் ப்ரோக்மேனின் சேகரிப்பில் உள்ள ஆயிரக்கணக்கான ஆடைகளில் அவர் சேகரித்த முதல் 10 ஆடைகள் இலவசமாகவே கிடைத்துள்ளது. ஜெர்மனியில் உள்ள ஒரு துறைமுகத்தில் பணிபுரிந்தார் பால் ப்ரோக்மேன். அங்கு வியாபாரச் சரக்கு பெட்டிகள் திறக்கப்படும் போது தொழிலாளர்கள் விரும்பும் பொருள்கள் எதையும் எடுத்துக் கொள்ள முடியும். அப்போது அவர் ஆடைகளை தேர்ந்தெடுத்து அவரது காதலியான மார்கோவிற்குக் கொடுத்துள்ளார்.


திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஜெர்மனியிலிருந்து அமெரிக்கா சென்று குடியேறியுள்ளனர். அங்கு பால் ப்ரோக்மேன் கட்டுமானப் பணியில் சேர்ந்துள்ளார். கடின உழைப்பு பால் ப்ரோக்மேன்னுக்கு அந்நியன் இல்லை என்பதால், விரைவில் ஒரு கட்டுமான நிறுவனத்தையும் தொடங்கினார்.

நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட இருவரும் ஒவ்வொரு வாரமும் பால்ரூம் நடனமாடச் சென்றனர். ஒவ்வொரு முறையும் நடனமாட செல்கையில் மனைவிக்கு வித்தியாசமான உடை வேண்டும் என்று விரும்பினார். அதனால் அவருக்கு விதவிதமான ஆடைகளை வாங்கிக் கொண்டே இருந்தார். 1988ம் ஆண்டில் அவர்கள் லாஸ் ஏஞ்சல்சில் குடியேறிபோது, ​​மார்கோ ப்ரோக்மேனின் அலமாரியை அலங்கரித்திருந்தன 25,000 முதல் 26,000 ஆடைகள்...
55,000dresses 1

ஆனால், மார்கோ ஒருபோதும் ஷாப்பிங்கை விரும்பவில்லை. அதனால், பால் ப்ரோக்மேன் அவரது மனைவிக்கான ஆடைகளை அவரே தேர்ந்தெடுத்துள்ளார்.

பால் ப்ரோக்மேனின் ஷாப்பிங்கிற்கு நேரம் காலமே கிடையாது. அவர் வேலைக்குச் செல்லும் முன்பும், வேலைக்குப் பின்னரும், வேலையின் போதும் கூட ஆடைகளை வாங்குவாராம்.


சில சமயங்களில் சீசன் விற்பனையின் போது ஒரே நாளில் 30 வெவ்வேறு ஆடைகளை ஒட்டுமொத்தமாக அள்ளிக்கொண்டு வந்துவிடுவாராம்.

“அவளது நடனத்தை பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும். அவளுக்காகவே அழகிய ஆடைகளை சேகரிக்கத் தொடங்கினேன். ஒவ்வொரு வாரமும் பால்ரூம் டான்ஸ் ஆடுவோம். ஒவ்வொரு முறையும் என் மனைவி வித்தியாசமான உடைகளை அணிய வேண்டும் என்று விரும்பினேன்.

எனக்கு ஒரு ஆடை பிடித்திருந்தால், அந்த ஆடையில் என் மனைவி எப்படியிருப்பாள் என்று கற்பனை செய்து பார்ப்பேன். என் மனதுக்குள் எழும் அப்பிம்பம் அழகாக இருந்தால், அந்த ஆடை வேறு சைஸாக இருந்தாலும்கூட அதை உடனே வாங்கிவிடுவேன். அது ஒரு பைத்தியகாரத்தனம் என எனக்கே தெரியும்.

”ஒரு வேளை அந்த ஆடைக்கு ஏற்றவாறு பிற்காலத்தில் என் மனைவி குண்டாகவோ, ஒல்லியாகவோ ஆகலாம் என நினைத்துக் கொண்டு வாங்கிவிடுவேன். 50-களின் ஆடையான பெட்டிகோட்டுடன் கூடிய பாவடைகளே என்னோட ஃபேவரைட். அப்படியொரு ஆடையை 22,000 ரூபாயுக்கு வாங்கியுள்ளேன்,” என்றார் ரொமான்டிக் கணவன் பால் ப்ரோக்மேன்.

அவரது மனைவி ஆடைகளை வாங்குவதை நிறுத்திக் கொள்ளுமாறு கூறியும், பால் ப்ரோக்மேன் நிறுத்துவதாயில்லை. விளைவு, மார்கோவிற்கு தெரியாமல் ஆடைகளை வாங்கத் தொடங்கியுள்ளார். இருப்பினும் அவர்களின் கேரேஜ், நிரம்பி வருவதை மார்கோ கவனித்தார். விரைவில், அறை நிரம்பியதால் ப்ரோக்மேன் 6 கண்டெய்னர்களை வாடகைக்கு எடுத்தார்.

ட்ரெஸ்

அங்கு அவர் ஆடைகளை ரகசியமாக சேமித்து வைத்துள்ளார். அவர் ஆடைகளை வாங்குவதையும் சேகரிப்பதையும் சொந்தபந்தங்களும், அக்கம் பக்கத்தினரும் அறிந்து கொள்வதை அவர் விரும்பவில்லை. பால் ப்ரோக்மேன் ஆடைகளை கேரேஜில் வைத்திருப்பதை அவருடைய மகள் லூயிசிற்கே தெரியாது.


கடந்தாண்டு தான், லூயிஸ் அதை கண்டறிந்துள்ளார். 55,000 ஆடைகளையும் என்ன செய்ய திட்டமிட்டுள்ளீர்கள் என்று லூயிஸ் கேட்டபோது, ​​பால் ப்ரோக்மேன்

“நான் அவற்றை உங்களிடம் விட்டுவிடப் போகிறேன்,” என்றுள்ளார். ஆனால், அவர் அவற்றை விற்க முடிவு செய்துள்ளார். மேலும் அவை இன்னும் நல்ல நிலையில் இருப்பதை உறுதிசெய்ய முழு சேகரிப்பையும் பார்க்கும்படி கேட்டுள்ளார்.

“அப்பா ஆடைகளை பராமரித்த விதத்தை பார்க்கையில், இப்போது யாரோ ஒருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஆடைகள் மறைத்து வைத்திருந்தது போல இருந்தது,” என்று கூறினார் லூயிஸ்.

லூயிஸ் ஒரு மாதம் முழுவதும் பேஷன் வல்லுநர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களைச் சந்தித்து ஆடைகளை விற்கத் திட்டமிட்டார். அதற்காக பால் ப்ரோக்மேன் டிரஸ்ஸிங் அறைகளை கட்டி உள்ளார்.

மனதிற்கு பிடித்த சில ஆடைகளை பொக்கிஷங்களாக்கிக் கொண்டு மற்ற ஆடைகளை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த அரை நூற்றாண்டில் பால் ப்ரோக்மேன் வாங்கிய 55,000 ஆடைகளின் மொத்த மதிப்பு 107 கோடி ரூபாய்...


நீங்கள் ஒரு விண்டேஜ் பால்ரூம் ஆடையை வாங்க விரும்பினால், https://evolution-vintage.com இணையத்தளத்தைப் பாருங்கள்!


தகவல் உதவி: https://www.dailymail.co.uk & https://www.odditycentral.com

பட உதவி : https://www.facebook.com/55ThousandDresses/

How has the coronavirus outbreak disrupted your life? And how are you dealing with it? Write to us or send us a video with subject line 'Coronavirus Disruption' to editorial@yourstory.com

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India