பதிப்புகளில்

தொடர் தோல்வியை தாண்டி, லட்சங்களில் நாட்டுக்கோழி முட்டை உற்பத்தி: இந்தியா முழுதும் விற்பனை செய்யும் ‘ஹேப்பி ஹென்ஸ்’

1st Aug 2017
Add to
Shares
25.1k
Comments
Share This
Add to
Shares
25.1k
Comments
Share

கோழிப் பண்ணை என்றால் கூண்டுகளில் அடைக்கபட்ட வடிவம் தான் நம் கண்முன்னே வந்துபோகும்.

திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் 25 ஏக்கர் பரப்பளவில் 'ஹேப்பி ஹென்ஸ்' நாட்டுக்கோழிப் பண்ணை உள்ளது. இயற்கை சூழலில் வளரும் ஆரோக்கியமான நாட்டுக் கோழிகளை பார்க்கும் போதே பண்ணையின் வடிவமைப்பு பிரமிக்க வைக்கிறது. வெற்றிகரமாக இயங்கி வரும் ஹேப்பி ஹென்ஸ் உரிமையாளார், அசோக் கண்ணனிடம் பேசினோம்.

அஷோக் கண்ணன் உடன் மஞ்சுநாத்

அஷோக் கண்ணன் உடன் மஞ்சுநாத்


‘‘ஆரம்ப காலத்தில் ஹெர்பல் ட்ரேட் நிறுவனங்களுக்கு இயற்கை மூலப்பொருட்களை உற்பத்தி செய்து தந்தேன். ஒரு முறை யூ-டியூப்பில் நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றிய முழு வீடியோ தொகுப்பை பார்த்தேன். அதன் பிறகு தான் இந்த பயணம் துவங்கியது.’’ என்கிறார் அசோக் கண்ணன்.

இவர் பிறந்த ஊர் மதுரை. நாட்டுக்கோழி முட்டையை மதுரை மக்கள் விரும்பி சாப்பிடுவாங்க. இதை பெரிய அளவுல முயற்சி பண்ணலாம்னு நினைத்தேன், என்கிறார்.

‘‘சின்ன வயசுல இருந்தே விவசாயம் செய்யனும், இயற்கையோடு ஒன்றி வாழணும்னு ரொம்ப ஆசை, ஆனா ஒன்றரை வயசில் போலியோ பாதிப்பில் கால்கள் ஊனமாகிடிச்சு. நிலத்தில் இறங்கி வேலை செய்ய முடியாது. ரொம்பவே கவலைபட்டேன்.”

2011-ல் திருச்சி புதுக்கோட்டை சாலையில் 1000 கோழிகளை வாங்கி சின்னதா ஒரு பண்ணை துவங்கினார். ஆயிரங்கிறது பெரிய முதலீடு சின்னதுனு தவறா நினைச்சிட்டு இருந்தேன். அரசு மானிய உதவியோடு வியாபாரத்தை தொடர்ந்து நடத்தலாம்னு நினைச்சேன். ஆனால் அது முழுசா நடக்கல முதல் 30 நாளிலேயே 200 கோழிகள் இறந்துவிட்டனன, என்று தன் முதல் தோல்வி அனுபவத்தை பகிர்ந்தார்.

அன்றைக்குச் சரியாக கைடு பண்ண திருச்சி பகுதியில் யாரும் இல்லை. கால் நடை மருத்துவர்களால் கூட கோழிகளைத் தாக்கும் நோய்கள் பற்றி முழுசா சொல்ல முடியவில்லை.

அடுத்தடுத்து எல்லாக் கோழியும் இறக்க ஆரம்பித்தன, இருந்தும் மனம் தளராம மறுபடியும், கோழிகளை வாங்கி வளர்க்க ஆரம்பிச்சேன்.

அடுத்து சிக்கல் நாட்டுக்கோழி முட்டையை விற்பனை செய்வதில் ஏற்பட்டது. நாட்டுக்கோழினாலே முட்டை சின்ன சைஸ்ல தான் இருக்கும்னு நம்ம மக்கள் கிட்ட தப்பான தகவல் புகுத்தப் பட்டு இருக்கு. என் பண்ணையில் வளர்ந்த எல்லா முட்டைகளும் நார்மல் அளவை விட கொஞ்சம் பெருசா இருந்துச்சு. யாருமே வாங்க முன் வரவில்லை.

‘‘இது நாட்டுக்கோழி முட்டையே இல்லைனு‘ கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.’’ என்று வருத்தத்துடன் கூறினாலும் அவரின் தன்னம்பிக்கை வெளிப்பட்டது.

2000 முட்டைகளை திருச்சி, மதுரைனு இலவச சேம்பில் தந்தேன். ‘‘ நீங்க வாங்க வேண்டாம் சாப்பிட்டு பாத்துட்டு கருத்து மட்டும் சொல்லுங்கன்னு’’ கடைக்காரர்களிடம் கூறியுள்ளார். அதுல 90 சதவீதம் பேரு போன் பண்ணுனா எடுக்கலை. மீதம் 10 சதவீதம் பேர் ‘‘எதுக்கு சார் உங்களுக்கு இந்த வேலைன்னு’’ அறிவுரை தான் சொன்னார்கள். சிரிச்சுக்கிட்டே அவங்களை கடந்து போனேன்.

image


இடையில் ஷாம்பு நிறுவனத்தில் இருந்து சப்ளை செய்யச் சொல்லிக் கேட்டாங்க மக்களை நம்பி தான் இந்த வியாபாரத்தைத் துவங்கினேன். அவங்க தான் நம்ம வாடிக்கையாளர். கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. ஒரு நாள் மக்களிடம் ஹேப்பி ஹென்ஸ் பேசப்படும்னு தோனுச்சி.

முட்டையில் என்ன சிக்கலென்று ஆராய ஆரம்பிப்பித்தார். நாட்டுக் கோழிகளில் 20-க்கும் மேற்பட்ட இனவகைகள் இருக்கு. அதில் குறைவான கோழிகள் மட்டுமே சின்ன சைஸ் முட்டைகளை இடும். அதுவும் Cross breeding, கிராஸ் பிரீடிங்னா கோழி முட்டைகள் போலி மாதிரியே தெரியும். ஆனா அதுலையும் தரமான முட்டைகள் இருக்கு.

இந்த சிக்கலெல்லாம் இருந்ததால போட்ட மொத்த முதலும் லாஸ் தான். கோழி பற்றிய தகவலைச் சொல்லித்தர தமிழ்நாட்டில் சரியான ஆள் யாருமே அப்போ இல்லை.

பெங்களூரில் மஞ்சுநாத் என்பவரின் நாட்டுக்கோழி பண்ணை பற்றி கேள்விப்பட்டேன். சிரமப்பட்டு நம்பரைக் கண்டு பிடித்து தொடர்பு கொண்டேன். அவரு என்னை விட பெரிய அளவுல சிரமத்தை அனுபவிச்சிட்டு இருக்கார்னு அவர்கிட்ட பேசின பிறகு தான் தெரிந்தது. வியாபாரத்தில் இருக்கும் நுணுக்கங்களை, கத்துகிட்ட அனுபவங்களை போன்லையே விவாதிப்போம். அப்படியே நல்ல நண்பராவும் பார்ட்டனராவும் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டோம்.

நவீன மருந்துகள் இல்லாம இயற்கை முறையில ஒரு நாளைக்கு 2300 முட்டைகளை உற்பத்தி பண்ணுற அளவுக்கு ஹேப்பி ஹென்ஸ் பண்ணையை துவங்கினேன்.

தரமான நாட்டுக்கோழிகள் வருஷத்துக்கு 60 லிருந்து 70 முட்டை தான் இடும். தொடர்ந்து திருச்சியோட சீதோஷன நிலை, கோழிகள் வாழும் இயற்கையான சூழல். அதுகளோட உணவு முறை. வெயில், மழை காலத்தில் கோழிகள்கிட்ட என்ன மாற்றங்கள் நடக்கும், நோய்கள் எப்படி தாக்கும்னு எல்லாத்தையும் கத்துக்க ஆரம்பித்தேன்.

நாட்டுக்கோழி பற்றிய ஆராய்ச்சிகள் செய்ய அறிஞர்களை தேடினேன் யாருமே இல்லை.. எல்லோரும் வெளிநாட்டில் வேலைசெய்றாங்கனு தகவலும், புள்ளிவிவரமும் கிடைச்சுது, என்று வருத்ததுடன் பேசினார் அசோக் கண்ணன்.

திருச்சியோட தட்ப வெட்ப நிலைக்கு ஒன்பது வகை நாட்டுக்கோழிகளை வளர்க்கலாம்னு அனுபவத்தில் தான் கத்துக்கிட்டேன். கலிங்காபுரம், கைராலி, சுவர்ணதாரா போன்ற கோழிகள் ஓரளவு தட்பவெப்பத்தை தாங்கும். வருடத்திற்கு 200 முட்டைகள் வரை தரும். ஹேப்பி ஹென்ஸ் ஐந்து இடங்களில் பண்ணை அமைத்து இருக்கிறோம்.

image


இயற்கை சூழலில் கோழி வளர்க்க 1 ஏக்கர் நிலம் போதுமானது. 30 செண்ட நிலத்தில் கோழிக்கான இடமும் மீதமுள்ள இடத்தில் தீவனம், தண்ணீர் , பராமரிப்பு உபகரணம் என அனைத்தும் செய்யலாம்.

”சிறு குறு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் 300 கோழிகளை வைத்துக்கொண்டு எல்லாச் செலவுகளும் போக மாதம் 10 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். 30 சென்ட் அளவு நிலம் உள்ளவர்கள் கூட செய்யலாம்,” என்கிறார்.

அதே போல் ஐந்து ஏக்கர் நிலத்தில் 5000 கோழிகள் திறந்த வெளியில் வளர்க்க முடியும். 14 லிருந்து 17 லட்சம் வரை சம்பாதிக்கலாம். பண்ணை அமைப்புகள் எல்லாமே இப்போ கார்ப்ரேட் வடிவத்துக்கு மாறிடிச்சு. அதனால நவீன கோழிக்கான உணவுகள் சார்ந்த இயந்திரங்களைப் பயன்படுத்தி இன்னும் ஆட்கள் சக்தியை குறைக்கலாம். ஐந்தில் இருந்து பத்து பேரை கொண்டே இயற்கை பண்ணையை சிறப்பா பராமரிக்கலாம்.

விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் இருக்கும் சிக்கல் என்னன்னா, தரமான பொருளை தயாரித்து அதை எப்படி விற்பனைக்குக் கொண்டு போகனும்ங்றதுல தவற விட்டுறாங்க. யாருக்கு விற்பனை செய்யப்போறோம்ங்கிறதுல தெளிவா இருக்கணும். இறைச்சி விற்பனையாளர்கள் நேரடியாகவே பண்ணைக்கு வந்து வாங்கிச் செல்வார்கள். பண்ணையைச் சுற்றி இருக்கும் கடைகள். மக்கள் கூடும் விழாக்கள், விசேஷங்களுக்கு மொத்தமாகவும் வாங்குவார்கள். ஓட்டல்கள், உணவு விடுதிகளுக்கும் சூப்பர் மார்க்கெட் நேரடியாக ஆர்டர் எடுத்தும் சப்ளை செய்யலாம்.

சாதாரண சின்ன லெவலில் ஆரம்பிக்கப்பட்ட ஹேப்பி ஹென்ஸ் தான் இப்போது ஒரு நாளைக்கு 3000 முட்டைகளைத் தயாரித்து இந்தியா முழுவதும் அனுப்புகிறது.

”இழப்புகளை பார்த்து பயந்து ஒதுங்காமல் எங்க தவறவிட்டோம் என கவனித்து சரி செய்தால் நிச்சயம் வெற்றிதான்’’ என்கிறார் அசோக் கண்ணன்.

கட்டுரையாளர்- வெற்றிடம்

Add to
Shares
25.1k
Comments
Share This
Add to
Shares
25.1k
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக