பதிப்புகளில்

பெண் கல்விக்கு தன்னம்பிக்கை அளிக்கும் நடிகை கத்ரினா கைஃப்

மதுரையில் மவுண்ட் வ்யூ பள்ளியில், தன் அம்மாவுடன் இணைந்து பெண் கல்விக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப். 

31st Jul 2018
Add to
Shares
230
Comments
Share This
Add to
Shares
230
Comments
Share

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் கல்விக்காக பள்ளிக்கூடத்திற்கு போனது கிடையாது. அவருடைய அம்மா சூசன் டர்கோட் தான் ‘ஹோம்-ஸ்கூலிங்’ முறையில் கத்ரீனாவுக்கு பாடம் நடத்தினார். இப்படி, இளம் வயதிலேயே கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த கத்ரீனாவின் அம்மா சூசன் முன்னெடுத்த முயற்சிகள் தான் இன்று கத்ரீனா பெண் குழந்தைகளின் கல்வி குறித்து இயங்க முக்கியக் காரணமாக இருக்கிறது.

2003 ஆம் ஆண்டு ‘பூம்’ என்ற பாலிவுட் படத்தில் அறிமுகமான கத்ரீனா, இன்று பலரும் ரசிக்கும் ஒரு பிரம்மாண்ட நடிகை. என்னதான பரபரப்பாக பல படங்களில் வேலை செய்வதிலும், மாடலிங் செய்வதிலும் இயங்கிக் கொண்டிருந்தாலும், இதற்கு இடையே, ரிலீஃப் புரோஜெக்ட்ஸ் இண்டியா [Relief Projects India (RPI)] எனும் அரசு சாரா அமைப்பிற்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்தபடியே இருக்கிறார் கத்ரீனா. கூடவே, அவருடைய அம்மாவோடு இணைந்து, பெண் குழந்தைகளின் கல்விக்காக தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டும் இருக்கிறார்.

Image courtesy : deccanchronicle.com

Image courtesy : deccanchronicle.com


பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்கு கல்வியே முதல் படிக்கட்டாக இருக்கும் என்று நம்பும் கத்ரீனா, மதுரையில் இருக்கும் மவுண்ட் வ்யூ பள்ளியிலும் அதை சுற்றி இருக்கும் இடங்களிலும் இது குறித்து உரையாடல்களை துவக்கியிருக்கிறார். கத்ரீனாவும், அவருடைய அம்மா சூசனும் இணைந்து, மவுண்ட் வ்யூ பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சியை கண்காணித்தபடி இருக்கின்றனர்.

பெண் கல்வி குறித்த பிரச்சாரத்தையும் பரவலாக செய்து வருகின்றார்கள். திரைப்படங்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் இருந்து தனக்குக் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதியை இந்த பள்ளிக்கு நன்கொடையாக அளித்திருக்கிறார் கத்ரீனா கெய்ஃப்.

இதற்கெல்லாம் காரணமான தன்னுடைய அம்மாவை பற்றி பேசும் போது, 

“சமூக செயல்பாட்டை முன்னெடுத்த செல்ல எனக்கு ஒரு நல்ல முன்னுதாரணம் இருக்கிறது. என்னுடைய அம்மா, டீச்சராக இருப்பவர், எப்போதுமே பல சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டே தான் இருப்பார். உள்ளூரை சேர்ந்தவர்கள் ஆசிரியர்களாக இருக்கும் மவுண்ட் வ்யூ பள்ளியில் ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்து வேலை செய்து கொண்டிருக்கிறார். இதனால் தான் நான் - எஜுகேட் கேர்ள்ஸ் (Educate Girls) என்.ஜி.ஓவுடன் இணைந்து பணிகள் செய்து கொண்டிருக்கிறேன்,” என்று சொல்லியிருக்கிறார்.

பெண் கல்வியின் அவசியத்தை பற்றி பேசும் போது பலமுறை பலர் கதவை அடித்துச்சாத்திவிட்டு செல்வதும் உண்டு. இந்த மனநிலையை மாற்றுவது அவசியம். பெருநகரங்களில் இது பற்றி நிறைய கேட்கலாம் ஆனால் கிராமப்புறங்களில் எல்லாம் இது பற்றி பேசப்படுவதில்லை என்கிறார் கத்ரீனா. 

கல்வி பெண்ணுக்கு தன்னம்பிக்கை அளித்து, வாழ்க்கையில் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கும் என்பதையும் வலியுறுத்துகிறார்.
Image courtesy : desimartini.com

Image courtesy : desimartini.com


கத்ரீனாவிடம் இருந்து பெறப்பட்ட நன்கொடையை கொண்டு மவுண்ட் வ்யூ பள்ளியில் ஹீமோகுளோபின் சோதனை முகாம்கள் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. பின் தங்கிய குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதே இப்பள்ளியின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. கத்ரீனா தன் அம்மாவுடன் இணைந்து வேலை செய்வதை பெருமளவு ரசித்தாலுமே இது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு கவனம் ஈர்ப்பதை விரும்பவில்லை. 

Add to
Shares
230
Comments
Share This
Add to
Shares
230
Comments
Share
Report an issue
Authors

Related Tags