பதிப்புகளில்

பள்ளியை பாதியில் விட்ட 25 வயது த்ரிஷ்நீத், ஃபோர்ப்ஸ் 30 அண்டர் 30 ஆசியா பட்டியலில் இடம்பெற்று சாதனை!

6th Apr 2018
Add to
Shares
168
Comments
Share This
Add to
Shares
168
Comments
Share

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையில் 30 அண்டர் 30 ஆசியா 2018 (30 under 30 Asia 2018 ) பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார் இணைய பாதுகாப்பு உலகில் பெரிதும் கவனிக்கப்படும் 25 வயது த்ரிஷ்நீத் அரோரா. சண்டிகரைச் சேர்ந்தவரான இவர், பள்ளிப்படிப்பை முடிக்காதவர். ஆனால், தற்போது, ஆசியாவை மாற்றிக் கொண்டிருக்கும் புதுமையாளர்களை கொண்டாடும் இந்த பட்டியலில் இவருடைய பெயரும் இடம் பெற்றிருக்கிறது.

டி.ஏ.சி செக்யூரிட்டியின் (TAC Security) நிறுவனரும் சி.இ.ஓ-வும் ஆன த்ரீநீத் இணைய பாதுகாப்பு நிபுணரும், எழுத்தாளரும் கூட. இவருடைய நிறுவனம் மொஹாலியில் அமைக்கப்பட்டிருக்கிறது. இணைய உலகில் இருக்கும் கார்ப்பரேட்டுகளின் பலவீனங்களை மதிப்பிட்டு, பெனெட்ரேஷன் சோதனைகளை செய்கிறது இந்த நிறுவனம். இதற்கு முன்னரே ஜி.க்யூ பத்திரிக்கையில் தாக்கத்தை உண்டாக்கும் ஐம்பது இளம் இந்தியர்கள் பட்டியலில் இவர் பெயரும் இடம் பெற்றிருந்தது.

image


ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் 30 அண்டர் 30 ஆசியா 2018 பட்டியலில் நிறுவன தொழில்நுட்பம் என்ற பிரிவின் கீழ் த்ரிஷ்நீத்தின் பெயர் இடம் பெற்றிருக்கிறது. டி.ஏ.சி, முதலீட்டாளர் விஜய் கேடியாவிடம் இருந்தும் ஐ.பி.எம் நிறுனத்தின் துணை முதல்வர் வில்லியம் மேயிடம் இருந்தும் நிதி உதவி பெற்றிருக்கிறது. இந்நிறுவனத்தின் வழியாக, இணைய குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல வழக்குகளை கையாள பஞ்சாப் மற்றும் குஜராத் காவல்துறையோடு இணைந்து வேலை செய்திருக்கிறார் த்ரிஷ்நீத். 

இந்நிறுவனத்தின் தற்போதைய வாடிக்கையாளர் பட்டியலில் இருக்கும் நிறுவனங்களில் ரிலையனஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், குஜராத் காவல்துறை, பஞ்சாப் காவல்துறை, சர்வதேச ட்ராக்டர்ஸ் லிமிடெட் (சொனாலிகா), அமுல், ஏவொன் சைக்கிள்ஸ், RALSON மற்றும் மத்திய புலனாய்வு துறையும் அடங்கும்.

மேலும், 50+UPI-வை அடிப்படையாக கொண்ட செயலிகளின் பாதுகாப்பு மதிப்பீட்டை கவனிக்கும் பொறுப்பும் இந்நிறுவனத்திடமே இருக்கிறது.

இளம் வயதிலிருந்தே த்ரிஷ்நீத்திற்கு கணினிகளை கையாளும் லாவகம் இருந்திருக்கிறது. அவருடைய பதினோரு வயதில் தந்தை வாங்கிய கணினி ஆர்வத்திற்கு தீனி போடுவதாக அமைந்திருக்கிறது. அந்த கணினி ஒரு முறை பழுதான போது அதை நிபுணர் சரி செய்வதை பல மணி நேரங்கள் தொடர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். இப்படித்தான் கம்ப்யூட்டரின் ஹார்ட்வேரில் தனக்கு ஆர்வம் இருப்பதை உணர்ந்தார். யூட்யூப் வழியே கணினிகளை பற்றி நிறைய கற்க தொடங்கிய அவர், ஒரு கட்டத்தில் தன்னுடைய கற்றல்களை யூ ட்யூப் வழியே பகிரவும் செய்திருக்கிறார்.

பஞ்சாப், குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவில் இருக்கும் IIT, GNAIMT நிறுவனங்களில் பயிற்சி வகுப்புகள் கற்பிக்கத் தொடங்கி, அதன் வழியே ஒரு தாக்கத்தை உண்டாக்கவல்ல பெரும் கூட்டத்தை கட்டமைத்ததுவே தன்னுடைய வெற்றிக்குக்ஃ காரணம் என்கிறார் த்ரீஷ்நீத். இந்த அனுபவங்களில் வழியே தகவல் தொழில்நுட்ப நிறுவங்களுக்கு சேவை செய்யத் தொடங்கிய த்ரீஷ்நீத், பல கார்ப்பரேட்களின் ஆதரவோடு தரவு பாதுகாப்பு சிக்கல்களை கையாளத் தொடங்கியிருக்கிறார். இது தான் அவருடைய ‘யுரேகா’ கணமாக இருந்ததாகவும், இதனால் தன் சண்டிகரில் டி.ஏ.சி செக்யூரிட்டி தொடங்கப்பட்டு அது துபாய் வரை விரிந்திருப்பதாகவும் அவர் சொல்கிறார்.

கட்டுரை: Think Change India

Add to
Shares
168
Comments
Share This
Add to
Shares
168
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக