பதிப்புகளில்

வாழ்வாதார வாய்ப்புகளை வழங்கும் ஷாலினி தத்தாவின் ‘ஆஃப்டர் டேஸ்ட்’

18th Nov 2015
Add to
Shares
138
Comments
Share This
Add to
Shares
138
Comments
Share

மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஷாலினி தத்தாவின் ஆசையால் பிறந்தது தான் "ஆஃப்டர் டேஸ்ட்" (After taste).

“நாட்டில் எது சரியாக இல்லை என்பதைப் பற்றி விமர்சிப்பதை மட்டும் செய்யாமல், ஒரு மாற்றத்தை உருவாக்கும்படி படித்தவர்கள் நாட்டிற்காக என்ன செய்ய முடியும் ?” என்ற கேள்வி தான் ஷாலினியை துரத்திக் கொண்டே இருந்தது.
ஷாலினி தத்தா

ஷாலினி தத்தா


பல வருடங்கள் கழித்து, இந்தக் கேள்விக்கான பதில்,‘ஆஃப்டர் டேஸ்ட்’ ல் வந்து நின்றது. நகர்ப்புறங்களில் குறைவான வருமானத்தில் இருக்கும் பெண்களுக்கு கலை மற்றும் கைவினைப் பொருட்கள் செய்ய பயிற்சியளித்து, வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை உருவாக்குவது தான் ‘ஆஃப்டர் டேஸ்ட்’.

கல்வியின் நன்மையால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறையை அமைத்திருக்கும் மக்கள்தொகையின் அந்த விழுக்காட்டின் ஒரு பகுதியில் நான் இருந்தேன். அதே சமயம், எண்ணிலடங்கா குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல், வாழ்வதற்காக மட்டுமே, சாலையில் கையேந்திக் கொண்டும், டீக்கடையிலும், உணவகங்களில் வேலை செய்வதையும் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தக் குழந்தைகளுக்கு இதைப் போன்ற வாய்ப்புகள் கிடைக்கப்போவதே இல்லை. இப்படி இருக்கும் பாகுபாடுகளின் உதாரணம், நாளுக்கு நாள் ஏற்றுக் கொள்ள முடியாததாய் ஆனது.

முதல் பாதை

பொறியியல் படித்து முடித்த பிறகு, ஒரு மென்பொருள் நிறுவனத்தில் தன் பணி வாழ்க்கையைத் தொடங்கினார் ஷாலினி. ஆறு வருடங்கள் வேலை செய்த பிறகு, அது அர்த்தமில்லாததாய் தோன்றியது. அதனால் அவர் வேறொரு பணி வாழ்க்கையை தேர்வு செய்தார். முதலில் சமூக சேவைகள் செய்தார், இரண்டு வருடங்கள் பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு வகுப்புகள் எடுத்தார். இது ஒரு பெரும் தாக்கத்திற்காக மேலும் உழைக்க உந்தியது. “சிறப்பான வருமானம் இருக்கும் ஒரு வேலை, படிப்படியாக ஒரு தடையாக உருவாகிகொண்டிருந்தது, அதனால், அதை விட்டு விலக முடிவு செய்தேன்.”

ஒரு சிக்கலின் வேரிலேயே வேலை செய்ய வேண்டும் எனும் அவருடைய ஆசை, மும்பை, மலாடு மேற்கில் உள்ள , மால்வானி பகுதியில் இருக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த, எண்பது குழந்தைகள் இருந்த இரண்டாம் வகுப்பில், கொண்டு நிறுத்தியது.

image


ஒவ்வொரு தினத்தையும் ஒரு காரணத்திற்காக வாழ்வதும், மாற்றம் சாத்தியம் தான் என உணர்வதும், என்னுடைய எண்ணங்களுக்கு வலுவூட்டுவதாய் இருந்தது. வழக்கமாக பள்ளிக்கு வராத குழந்தை ஒன்று வந்த போதும், சமூகத்தின் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தை இங்கு பாதுகாப்பாய் உணர்வதால் பள்ளிக்கு வந்த போதும், ஒவ்வொரு குழந்தையும் முயன்று, கல்வி கற்று, பகிர்ந்துக் கொண்ட போதும் நாங்கள் சரியான பாதையில் இருப்பதை அறிந்தேன் என நிம்மதியுடன் தெளிவான குரலில் சொல்கிறார்.

இளமையிலேயே விதைக்கப்பட்ட உயர்குணங்கள்

மாற்றத்தை உருவாக்க வேண்டும் எனும் ஷாலினியின் ஆசை, இளமையிலேயே அவருக்குள் விதைக்கப்பட்ட கருணை, சேவை மற்றும் எளிமையான காரியங்களைக் கொண்டு மகிழ்வது போன்றவையின் வெளிப்பாடு தான்.

திரிபுராவின் தலைநகரம் அகர்தாலாவில் பிறந்த ஷாலினி, தொடக்க காலத்தில், அகர்தாலாவிலும், ஜார்க்கண்டிலுள்ள தன்பாத் என்ற சிறுநகரிலும் இருந்தார். சிறுநகரங்கள் அவரை இயற்கைக்கு அருகிலேயே வைத்திருந்தது; அவர் எளிமையானவைகளால் இன்பத்தை அனுபவித்தார். 

“அடுத்தவர்க்கு மகிழ்ச்சி அளிப்பது முக்கியம் என கருதிய ஒரு வீட்டில் தான் நான் வளர்ந்தேன். மாலை வேளையானால், நடந்து சென்று மரங்கள், செடிகளை அடையாளம் கண்டு அவற்றின் பெயர்களை கண்டுப் பிடிப்போம். பல நேரங்கள் மின்வெட்டுகள் இருக்கும், அல்லது லோடு ஷெட்டிங் இருக்கும், நாங்கள் புல்தரையில் அமர்ந்துக் கொண்டு, நட்சத்திரங்கள் சிதறி இருக்கும் இரவு வானத்தைப் பார்த்துக் கொண்டு இருப்போம், அப்பா எங்களுக்கு விண்மீன்களைக் காட்டிக் கொண்டிருப்பார்.”

ஷாலினியின் தந்தை ஒரு அரசு மருத்துவமனையின் எலும்பியல் துறையின் தலைவராக இருந்தார். வெளியூரிலிருந்தும் அடிக்கடி சிகிச்சைகளுக்காக மக்கள் வருவதுண்டு.

“என் பெற்றோர்கள், மனதையும், வீட்டையும் திறந்து வைத்திருந்தது நினைவிருக்கிறது.” 

அவருடைய தந்தை சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது, வெளியில் தங்க வசதி இல்லாத நோயாளிகளின் குடும்பம் தங்கியிருப்பதற்கு அவருடைய அம்மா வீட்டில் இடம் கொடுப்பாராம். “ நான் வீட்டில் கண்ட கரிசனமும், சேவையும், கருணையும் தான் நான் இன்று செய்திருக்கும் தேர்வுகளின் முக்கிய காரணமாக இருப்பதாய் உணர்கி்றேன்.”

கண்காட்சியில்

கண்காட்சியில்


கல்வி - மாற்றத்தின் முன்னோடி

ஒரு குழந்தையின் மீது அதீத கவனம் செலுத்துவது தாயாக இருப்பதனால், ஒரு குழந்தையின் நலன் நேரடியாக தாயின் நலனோடு தொடர்பானதாய் இருக்கிறது என்பது ஆசிரியராய் இருந்த அனுபவம் ஷாலினிக்கு உணர்த்தியது.

குழந்தைகள் மற்றும் அவர்களின் கல்வியைப் பற்றி, குழந்தைகளின் தாய்களோடான கலந்துரையாடல்களின் போது, பெரும்பான்மையானவர்கள், “கல்வி, சிறப்பான வாய்ப்புகளை கொடுக்கும், தங்களுடைய குழந்தைகள் சிறப்பாக கல்விக் கற்று, அவர்களுடையதை விட ஒரு சிறப்பான வாழ்வை அமைக்க வேண்டும் என விரும்பினர். இந்தப் பெண்கள் அடிப்படைத் தேவைகளுக்காக போராடினார்கள், தொடர்ந்து போராடினார்கள், பயங்கரமான வலிக்கு ஆளானார்கள். அவர்கள் தைரியமாகவும், நம்பிக்கையுடனும் இருந்தாலுமே, ஒரு மாற்றத்தை உருவாக்க தேவையான திறன் இல்லாததாய் உணர்ந்தார்கள். அப்படிப்பட்ட இரண்டு பெண்களுடன் சேர்ந்து தான் ஆஃப்டர் டேஸ்டை தொடங்கினேன்.”

ஷாலினி ஒரு நிபுணரோ, பயிற்சி பெற்றக் கலைஞரோ கிடையாது, ஆனால், ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆசை, அவரை வழிநடத்திக் கொண்டே இருந்தது. கலை மற்றும் கைவினையைத் தேர்வு செய்தது, மிக சுலபமானதாக இருந்தது. இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு தயாரிப்புகளுடன், புதிய தயாரிப்புகளுக்கான வடிவமைப்பதுப் பற்றி யோசித்தார்.

“எஞ்சினியராய் இருப்பதனால், சிக்கலுக்காக ஒரு குறிப்பிட்ட அணுகுமுறையை உருவாக்க முடிந்தது. ஒரு தயாரிப்பைப் பார்த்து, அதன் வடிவமைப்பு முறையை புரிந்துக் கொள்ள வைத்தது, மேலும், இரண்டு வருட ஆசிரியர் அனுபவத்தினால், எளிமையான முறையில் பெண்களுக்கு சொல்லித் தரவும் முடிந்தது.” என்கிறார்.

தயாரிப்பில் இருக்கும் பெண்கள்

தயாரிப்பில் இருக்கும் பெண்கள்


ஃபாத்திமா, நான்கு குழந்தைகளின் தாய், சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து, அத்தையால் வளர்க்கப்பட்டவர். பண நெருக்கடியின் காரணமாக, ஐந்தாம் வகுப்புக்கு மேல் பள்ளி செல்ல முடியாமல் போனது. “அவர் வேலைக்கு செல்வதில் விருப்பம் காட்டாத கணவரிடம் இருந்து தற்பொழுது ஆதரவு கிடைத்துள்ளது” எனப் பகிர்கிறார் ஷாலினி.

உத்தரப் பிரதேசத்தில், பிறந்து வளர்ந்த கம்ருனிசா கற்க ஆர்வமும், கல்வியின் அறிவின் மிது நம்பிக்கை இருந்தும் கூட பள்ளிக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை. “திருமணம் முடிந்த பிறகு மும்பைக்கு வந்தார். பல சவால்கள் நிறைந்த ஒரு அடைக்கப்பட்ட சமூகத்தில் வாழ்ந்தார். ஆனால், அவர் தைரியமாக இருந்தார், அவருடைய இருப்பு நிலையை கேள்விக் கேட்கும் அளவிற்கு துணிந்திருந்தார். மூன்று ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையின் தாயான அவர், தன் மகனுக்கு கல்வி கற்க இருக்கும் அதே அளவு உரிமை தன் மகள்களுக்கும் இருக்கிறது என நம்புகிறார். தன் குடும்பத்தினரின் எதிர்ப்புகளுக்கு எதிராக போராடி, தனது மூத்த மகள் தொடக்கப் பள்ளி முடித்த பிறகு பள்ளியை விட்டு நிறுத்தப்படாமல் பார்த்துக் கொண்டார்.

சவால்கள்

பெண்கள் ஒருமித்து வந்து, ஒருவருக்கொருவர் நம்பிக்கையோடு வேலை செய்ய, ஒரு வாய்ப்பை உருவாக்குவது தான் சவாலாக இருந்திருக்கிறது.

“இருப்பினும், ஒருவருக்கொருவர் தங்கள் கதைகளை பகிர்ந்துக் கொள்ளவும், ஆதரவளிக்கவும் ஒரு வாய்ப்பை உருவாக்குவது தான் எங்கள் வலிமை.”

முதலில் சேர்ந்த இரண்டு பெண்கள், நம்பிக்கைக் கொண்டு, படைப்பாற்றலின் மகிழ்ச்சியையும், அவர்கள் கலைஞர்கள் என புகழப்பட்ட கண்காட்சிகளில் ஏற்பட்ட வெளிப்படுதலையும் அனுபவித்தனர். அவர்களுடைய பொருளாதார சுதந்திரமும், அவர்களை பெருமையும் சந்தோஷமும் படுத்தியது. மெதுவாக பல பெண்கள் இணைந்து, நிலைத்திருந்தனர்.

அவர்கள் கையால் வரையப்பட்ட ஓவியங்களுடனான காகித தயாரிப்புகள் செய்கின்றனர். சுயமாக நீடித்திருக்கும் நிலையில், நிறுவனத்தை நடத்துவதும், பல சலுகைகள் இருக்கும் சந்தையில் கைவினைப் பொருட்களை வியாபாரத்திற்கு வைத்திருப்பதற்கும், சவாலாகத் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது.

ஊக்கத்தோடு இருத்தல்

உண்மையையை சொல்ல வேண்டுமென்றால், பல சமயம் நான் என்னையே சந்தேகப்பட்டிருக்கிறேன். ஆனால், ஒவ்வொரு முறை இப்படிப்பட்ட எண்ணங்கள் வரும் போதும், நான் வாழ்க்கைகளை மாற்றுவதைப் பார்த்து துணிவையும், வலிமையையும் வரவழைத்துக் கொண்டு, அது பயனுள்ளது தான் என உணர்வேன். ஒரு மகளாக, மனைவியாக, தாயாக அவர்களின் பயணம், பொருளாதார சுதந்திரத்தோடு தொடர்வது, மிகப் பெரிய ஊக்கமாய் இருக்கும். ஆனால், என் குடும்பம், நெருங்கிய நண்பர்கள் மற்றும் வழிகாட்டிகளிடமிருந்து அளவுகடந்த ஆதரவைப் பெறும் வகையில் நான் அதிர்ஷ்டசாலி. அவர்கள் என்னை உந்தியிருக்கிறார்கள், சாத்தியப்படும் என நான் நினைப்பவற்றை நிறைவேற்ற வைத்திருக்கிறார்கள், மேலும் என்னை நம்பியிருக்கிறார்கள்.

விலைமதிப்பற்ற கணம்

“கடந்த ஒரு வருடத்தில், குஜராத்தின் கிராமப்புறங்களில் இருக்கும் 80 பெண்களுக்கு, எங்கள் குழுப் பெண்கள் பயிற்சி அளித்திருக்கிறார்கள். அந்த கிராமத்தில் இருந்து திரும்பி வரும்போது நடந்த உரையாடலின் போது ஒரு அற்புதமான நிகழ்வு நடந்தது. எங்கள் குழுவில் ஒரு பெண், பள்ளிக்கே செல்லாத தன்னைப் போன்ற ஒரு பெண் இதைப் போன்றவைகளை செய்வதாக கற்பனை செய்து பார்த்தது கூட இல்லை என்று சொன்னார். ஆனால் இன்று, பலப் பெண்களுக்கு வலிமை அளித்து, தடைகளை உடைத்தெறிய ஊக்கமளிக்க திறமை இருப்பதனால் துணிவாகவும், பெருமையாகவும் உணர்கிறார். அவர் தன் குழந்தைகளை உயர்ந்த நிலை வரைக் கல்விக் கற்க நிர்பந்திப்பார்.”

ஷாலினி ஆஃப்டர் டேஸ்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். ஷாலினியின் வேலையை மதிக்கும் அவருடைய கணவர், அவருக்கு பலமான ஆதரவாய் இருக்கிறார்.

“எப்பொழுது உங்களுடைய ஆர்வம் பணியாக மாறுகிறதோ, உங்கள் வாழ்க்கை மற்றும் பணி வாழ்க்கைக்கு இடையிலான கோடு கலைந்துவிடும். உண்மையில் சமன் செய்ய முடிவதில்லை, சில சமயம் இந்தப் பக்கம் சாய்வீர்கள், சில சமயம் அந்தப் பக்கம் சாய்வீர்கள்.”

ஆக்கம் : Tanvi Dubey

தமிழில் : Sneha

Add to
Shares
138
Comments
Share This
Add to
Shares
138
Comments
Share
Report an issue
Authors

Related Tags