பதிப்புகளில்

மாணவர்களுக்கு கணக்கு பாடத்தை எளிய வழிகளில் கற்றுத்தர உதவும் MathBuddy, Menterra இடம் இருந்து முதலீடு பெற்றது!

’MathBuddy’ சென்னையைச் சேர்ந்த கண்ணன் மற்றும் பாரதி பரத்வாஜ் ஜோடி வடோடராவில் தொடங்கியுள்ள தொடக்கக் கல்வி நிறுவனமாகும்!

30th Nov 2016
Add to
Shares
71
Comments
Share This
Add to
Shares
71
Comments
Share

வில்க்ரோ’வின் ஒரு அங்கமான ’மென்டெர்ரா’ Menterra, சமீபத்தில் கல்வித்துறையில் இயங்கும் நிறுவனமான ’MathBuddy’ இல் தங்களது முதலீட்டை செய்திருப்பது குறித்து அறிவித்துள்ளது. ’மேத் பட்டி’ MathBuddy' – வடோடராவைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் ஆகும். கணித பாடத்தை மாணவர்கள் நன்கு ஆராய்ந்து புரிந்து கொண்டு கற்றுக்கொள்ள உதவும் தயாரிப்புகளை கொண்டு செயல்படும் நிறுவனம் இது. 

image


1500 செயல்முறைத்திட்டங்கள் (Acitivities), 800 இன்டராக்டிவ் வொர்க்‌ஷீட்ஸ் மற்றும் மதிப்பீடுகள், ஆன்லைன் ஒலிம்பியாட் போன்றவற்றுடன் ’மேத் பட்டி’ தற்போது 19 மாநிலங்களில் 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் உள்ளது. மென்டெர்ராவின் பங்கு நிதி, இவர்கள் மேலும் பல பள்ளிகளுக்கு விரிவுபடுத்த உதவும். இது, ஆசிரியர்களின் ஈடுபாட்டை வலுப்படுத்தி, மாணவர்களை அதிகம் தெரிந்துகொள்ளச்செய்யும் வகையில் கற்பிப்பதை மையமாகக்கொண்ட பயிற்சியை அளிக்கவும் உதவும். மூத்த ஆலோசகர்கள் இந்நிறுவனத்தை ஆதரவளித்து வழிகாட்ட உள்ளார்கள். 

”ஆரம்ப நாட்களில் கணக்கை சரிவர புரிந்துகொள்ளாததால் பல குழந்தைகளுக்கு, குறிப்பாக மூன்று முதல் ஏழாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கணிதத்தின் மேல் பயம் இருக்கும். நாங்கள் இதை மாற்ற விரும்பினோம். குழந்தைகள் கணக்கு பாடத்தை விரும்பிப் படிக்க உதவவேண்டுமானால் அவர்கள் கணிதத்தை புரிந்து படிக்க உதவவேண்டும் என்று முடிவு செய்தோம்,” 

என்கிறார் ’மேத் பட்டி’யின் இணை நிறுவனர் கண்ணன் பரத்வாஜ். உலகின் பல்வேறு பகுதிகளிலுள்ளவர்கள் எப்படி கணிதத்தின் கோட்பாடுகளை கற்பிக்கிறார்கள் என்கிற விரிவான ஆராய்ச்சியின் அடிப்படையில் மேத் பட்டியின் தயாரிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மெய்நிகர் இன்டராக்டிவ் மென்பொருளுடன் இணைந்த தாங்களாகவே செய்யக்கூடிய பல ஆக்டிவிட்டீஸ் இதில் உள்ளது. உடலியக்கம் சார்ந்த (கினஸ்தெடிட்), காட்சி மற்றும் ஒலி போன்றவற்றை உள்ளடக்கி வகுப்பறையிலுள்ள அனைத்து வகையான மாணவர்களும் சிறப்பாக கணிதத்தை புரிந்துகொள்ள இது உதவுகிறது.

உள் படம்: நிறுவனர்கள்- கண்ணன் மற்றும் பாரதி பரத்வாஜ்

உள் படம்: நிறுவனர்கள்- கண்ணன் மற்றும் பாரதி பரத்வாஜ்


”21-ம் நூற்றாண்டில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் எனப்படும் STEM திறன் கொண்டவர்களைச் சார்ந்ததுதான் பல வேலைவாய்ப்புகள் உள்ளது. சிறந்த பணியில் நுழைவதற்கு மட்டுமல்லாமல் மாணவர்களின் பகுப்பாய்ந்து சிந்திக்கும் திறனையும் சிக்கல்களைத் தீர்க்கும் திறனையும் அதிகரித்துக்கொள்ளவேண்டும். கணிதத்தை சரியாக புரிந்துகொள்ளக்கூடிய திறனுடம் STEM திறனையும் மாணவர்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும். இதுவரை இல்லாத அளவு இதன் முக்கியத்துவத்தை தற்போது பல பள்ளிகள் இளம் வயது முதலே வலியுறுத்தி வருகிறது,” என்கிறார் மென்டெர்ரா வென்சர்ஆலோசகர்களின் முதலீட்டுத் தலைவரான (கல்வி) சுதான்சு மலனி. 

பாரம்பரியமாக தொழிலுக்கும் தொழில்முனைவோருக்கும் பிரசித்தி பெற்ற மாநிலமான குஜராத்தில் ஸ்டார்ட் அப் கலாச்சாரம் அதிகரிப்பதை உணர்த்தும் வகையில் மென்டெர்ரா வடோடராவில் முதலீடு செய்தது. வடோடராவில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் முதலீடு செய்த முதல் முதலீட்டாளார்கள் மென்டெர்ரா.

“பல நாட்களாக நிதியுதவியும் ஆதரவும் பெரிய நகரங்களுக்கு மட்டுமே கிடைத்து வருகிறது. இந்த பெருநகரங்கள் மட்டுமே ஸ்டார்ட்-அப் மையமாக இருந்து வருகிறது. ஆனால் இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களிலும் திறமையுள்ள தொழில்முனைவோரும், நிறுவனங்களும் பல இருக்கின்றன. ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் நிலையான தொழில் புரியக்கூடிய உலகெங்கிலுமுள்ள தொழில்முனைவோரை நாங்கள் தேடி வருகிறோம்,” 

என்றார் மென்டெர்ரா வென்சர் ஆலோசகர்களின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் ஷர்மா. இந்தியா முழுவதுமுள்ள குறைந்த வருவாய் ஈட்டும் பள்ளிகளில் தங்கள் சேவையை விரிவடையச் செய்ய உள்ளது மேத் பட்டி.

image


“மாணவர்கள் படிக்கும் பள்ளி எதுவாக இருந்தாலும் அவர்கள் கணிதம் கற்கும் முறையில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். தாய்மொழியில் கற்பிப்பதைக் குறித்தும் உள்ளூர் பாடத்திட்டத்தில் இணைவது குறித்தும் நாங்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். இதனால் இந்தியாவின் மூலை முடுக்குகளிலுள்ள பள்ளிகளெல்லாம் எங்கள் தயாரிப்பை பயன்படுத்த முடியும்,” 

என்கிறார் இணை நிறுவனர் பாரதி பாரத்வாஜ். தற்போது 200க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இணைந்துள்ள இவர்கள், அடுத்த மூன்று வருடங்களில் 2000 பள்ளிகளுக்கு சேவையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர். குறைந்த வருவாயுள்ள பள்ளிகளை சென்றடையும் வழிமுறைகளைக் குறித்து மென்டெர்ரா குழுவினர் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். மேலும் தங்களுக்கு அனுபவமில்லாத பகுதிகளில் அனுபவம் பெற்ற வழிகாட்டிகளை தங்களுடன் இணைத்துக் கொள்ள உள்ளதாக கண்ணன் கூறினார். 

ஜனவரி மாதம் 2016-ல் தொடங்கப்பட்ட ’மென்டெர்ரா’ சோஷியல் இம்பேக்ட் ஃபண்ட் கல்வி, ஆரோக்கியம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளின் ஆரம்ப கட்ட சமூக நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறது. குறைவான நிதி வசதி கொண்டவர்களுக்கு தொழிலின் இக்கட்டான ஆரம்ப கட்டத்திற்கு ஸ்டார்ட் அப் நிதியுதவியாக 1 கோடி ரூபாய் முதல் 4 கோடி ரூபாய் வரை வழங்குகிறது. மென்டெர்ரா, சமூக நிறுவனங்களை காப்பவர்களான வில்க்ரோ உடன் இணைந்து இந்தியாவில் இயங்கி வரும் லாப நோக்கத்துடன் கூடிய சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களுக்கு நிதியுதவியும் ஆதரவும் அளித்துவருகிறது.

Add to
Shares
71
Comments
Share This
Add to
Shares
71
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக