பதிப்புகளில்

ஒன்றரை ஆண்டில் தனது ராயல் என்பீல்டு பைக்கில் 46 நாடுகளை சுற்றிவரும் 21 வயது சென்னை இளைஞர்!

YS TEAM TAMIL
6th Mar 2016
Add to
Shares
36
Comments
Share This
Add to
Shares
36
Comments
Share

“எல்லோருடைய அலைச்சலும் ஓய்ந்துவிட்டது ”

ஜே. ஆர். ஆர். டோல்கின்

image


ரோஹித் சுப்ரமணியன், மலையில் அமர்ந்துகொண்டு சுவையான தேநீரை சுவைத்துக்கொண்டே எரிக் கிளாப்டனின் பாடலை கேட்டுக்கொண்டு சூர்ய உதயத்தை ரசித்துக்கொண்டிருந்தார். பரபரப்பான நேரங்களில் இருந்து அவர், தனக்கான நேரத்தை எடுத்துக்கொண்டிருந்தார். போக்குவரத்தில் பசுக்கள், ஆடுகளின் மந்தைகள் நிறைந்திருந்தன. இதுவே மிகச் சிறந்த போக்குவரத்து ஸ்தம்பித்தல் என்று அவர் தெரிந்து வைத்திருந்தார்.

பசுக்களின் மணிச் சத்தம் ஒரு பாடலாக இசைத்து, அந்த நாளின் ரிதமாக மாறியிருந்தது. அந்த ஆண் ஆட்டுக்கு தன் விரல்களை மெல்ல கடிக்கக்கொடுத்தது, இந்த உலகின் அனைத்தும் சிறப்பானவை என்பதற்கு சான்றாக இருந்தது.

பொறாமை... உண்மையில் ஹாயாக சென்றுகொண்டு சுத்தமான காற்றை உணருபவர்களை, மற்றொரு காட்சி தோன்றும்போது, பழைய காட்சியில் இருந்து நகர்ந்தாலும்கூட, ஒவ்வொரு தருணத்தையும் நெஞ்சார அனுபவிப்பவர்களைப் பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கும். நகர்ந்து செல்லுதல்தான் நிகழ்காலத்தில் வாழ்வதற்கான சிறந்த பாடம்.

விழிப்புணர்வின் நிலப்பரப்பு

21 வயதான ரோஹித், தன்னுடைய ராயல் என்பீல்டு வண்டியில் ஒன்றரை ஆண்டுகளில் ஒரு லட்சம் கிலோ மீட்டர்களை கடக்கும் 46 நாடுகளுக்குச் சென்றுவரும் சாலைப் பயணம் தொடங்கினார். இந்த மிக இளம்வயதுக்காரரின் மிகப்பெரிய இலக்கு இது. ஆனால் நேரில் பார்த்தால், ஹோஹித் வயதானவர் என்று நீங்கள் நினைக்கக்கூடும், அவருடைய நீண்ட தாடியால்...

image


அவர் சாலையில் ஒரு மாதத்தைக் கடந்தபோது, பல கிலோமீட்டர்களையும் கடந்துபோயிருந்தார். சாலையற்ற பயணத்தின்போது அவருக்கு நிறைய அனுபவமும் நட்புறவும் கிடைத்திருந்தது. ஹோஹித்தின் சொந்த ஊரான சென்னையில் இருந்து கடந்த மாதம் பெங்களூரு வழியாக ஹம்பி சென்றார்.

நம்மிடம் பேசிய ஹோஹித், இந்தப் பயணம் தன்னையொரு அமைதியான முறையில் கேட்பவராக உருவாக்கியிருக்கிறது என்கிறார்.

“என்னுடைய உணர்திறனை வளர்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். நான் அவ்வப்போது நிகழும் அனுபவங்களின் விவரங்களில் அதிகம் கவனம் செலுத்துகிறேன். எவ்வளவு திட்டமிட்டிருக்கிறோம் என்பதை உணர்கிறேன். சாலையில் எதிர்பாராத விஷயங்கள் நடைபெறும், பருவநிலை மாற்றம் அடையும், பைக் நின்றுபோகலாம்” என்று விவரிக்கிறார்.

கனவுகளுக்கு நிதியும் வேண்டும்

அதுவொரு கனவாக இருக்கும்போது, உலகம் கண்டுகொள்ளவில்லை என்றாலும் அது தொடங்கிவிடும். ஆனால் நிதி எங்கே? இதுதொடர்பாக ரோஹித் எடுத்த முடிவு, அந்த தருணத்தின் தூண்டுதலாக இருந்தது.

image


“இதுவெல்லாம் கடந்த ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. கூட்டுநிதிக்காக ஃபண்ட்மைட்ரீம் என்ற தொடக்கநிலை நிறுவனம் தொடங்கினேன். நாங்கள் (அவருடைய இணை நிறுவனர்) எங்களுடைய தளத்தின் மூலம் பயணத்துக்கான பிரச்சாரம் தொடங்கினோம்”

என்கிறார் ரோஹித்.

சிஇஓ பணியில் இருந்து ரோஹித் விலகினாலும், அவருடைய பங்கு தொடக்கநிலை நிறுவனத்தில் இருக்கிறது. இந்த சர்வதேச பயணத்திற்காக 6 லட்சம் ரூபாய் வரை நிதி திரட்டிவிட்டார்.

இந்தியாவில் பயணம் செய்ய அவருக்கு ஒரு சிறந்த வாய்ப்பு இருந்தது. அவர் பல்வேறுபட்ட பிராண்ட்கள் மற்றும் நிறுவனங்களை பயணத்திற்கு நிதியுதவி செய்ய அணுகினார். அவருக்கு ரேங்க்லர் உடைகளை வழங்கியது. விலைமதிப்புமிக்க பைக்குகளை வாடகைக்கு விடும் விக்டுரைடு என்ற நிறுவனம், பைக்கர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. அவர்களைப் பற்றி பைக் விரும்பிகளிடம் பேசினார். அதில் யாராவது ஒருவர் விரும்பலாம்.

ஜீயஸ் நிறுவனம் அவருக்கு சிறந்த பயணத்தை மேற்கொள்வதற்கான கியரை வழங்கியது. நீங்கள் நம்பமாட்டீர்கள், அவரது தாடிக்குக்கூட உதவி கிடைத்தது.

image


“உண்மையில், இது எப்படி நடந்தது என்பது சுவாரசியமானது. கடந்த ஆண்டு சாத்தியமிக்க உதவி செய்பவர்களை சந்திக்கும்போது, அவர்கள் என்னை முதலில் நம்பவில்லை. அவர்கள் எல்லோரும் என்னை கம்ப்யூட்டர் ஹேக்கர் என்று நினைத்தார்கள்” என்கிறார். அவர்களுக்கு ரோஹித், தன்னை நிரூபிக்க வேண்டியிருந்தது. அதனால் அவர் தாடி வளர்க்க முடிவுசெய்தார்.

ரோஹித்தின் உத்தி வேலை செய்யத் தொடங்கியது, முன்பே கூறப்பட்ட நிதி உதவியாளர்களை கவர்ந்திழுத்துக்கொண்டார். ”ஆண்களுக்கான அழகுப் பொருள்களை தயாரிக்கும் உஸ்தராவை அணுகினேன். அவர்கள் என் தாடிக்கு ஸ்பான்சர் செய்தார்கள்” என்று கூறுகிறார்.

வாய்லா! அதுவும் நடந்துவிட்டது. அந்த வெல்நஸ் நிறுவனமும் அவருடைய சர்வதேச நட்புறவைப் பரப்ப உதவியது.

மோட்டார்சைக்கிள் குறிப்பு

நாம் எழுதிக்கொண்டிருக்கும்போது ரோஹித், தென் மாநிலங்கள் அனைத்தையும் சுற்றிவந்திருப்பார். பின்னர் கோவாவுக்குப் போய் இந்தியா பைக் வாரத்தில் ஒருவராக பங்கெடுத்தார். அது பிப்ரவரி 19 ஆம் தேதியன்று தொடங்கி கொண்டாடப்பட்டது.

image


“கோஹர்னாவில் இருந்து கோவா வரையில் அற்புதமான பயணம். உண்மையில், என்னுடைய எல்லா பயணமும் நினைவுகூரத்தக்கவை. அதைவிட முக்கியமானது, இந்தப் பயணம் என்னை நானே கண்டுபிடிப்பதற்கு...”

என்னிடம் ஹோஹித் கோவாவில் இருந்து தொலைபேசியில் பேசினார். அவருடைய கால்கள் குளிர்ச்சியில் இருந்தன. ஒரு கூடையின் கீழ் அவர் இருந்தார்.

தன்னுடைய உடைகள் மற்றும் அத்தியாவசியமான பொருள்கள், அவரது மடிக்கணினி மற்றும் சார்ஜர்கள் எல்லாவற்றையும் ஒரு சிறிய கம்பளிப் பையில் அடைத்துக்கொண்டார் ரோஹித். அவர் தன்னுடைய ஹெல்மெட்டுடன் கோப்ரோ வீடியோ காமிராவை இணைத்துக்கொண்டார். அது பயணத்தின் ஒவ்வொரு கணத்தையும் பதிவு செய்துவிடும். 

“என்னுடைய பயணத்தில் நான், பல்வேறு பிரதேசங்களை அடைந்தேன். பல்வேறு மொழி பேசும் மக்களுடன் பேசி, சாப்பிட்டேன். அதில் நீங்கள் பழகிவிட்டால் அது வித்தியாசமானதாக இருக்கும்” என்று அனுபவம் பேசுகிறார்.

புதியவர்கள் அவரை வரவேற்று அவர்களது வீடுகளுக்கு அழைப்பார்கள். உணவு கொடுப்பார்கள். தங்குவதற்கு இடம் கொடுப்பார்கள். சில நேரங்களில் உள்ளூரில் தங்குவதற்கு இடமே கிடைக்காது. பேருந்து நிலையம் அல்லது காவல் நிலையத்தில் தங்க வேண்டியிருக்கும். “என்னுடைய பொருட்கள் ஒருவேளை திருடுபோயிருந்தால், புகார் செய்துவிட்டு இங்கு வந்திருக்கவேண்டும்” என்று எதார்த்தம் பேசுகிறார்.

உண்மையான இந்தியாவை தரிசித்த ரோஹித்துக்கு, சாலையோரங்களில் தேநீர் விற்பவருக்கும், விவசாயிகளுக்கு அவர்களுடைய கூடைகளை சுமந்து சென்றும் உதவி செய்திருக்கிறார்.

குழந்தைப்பருவம் முதலே அவருக்கு பேருந்து ஓட்டுநர், செருப்புத் தைப்பவர் போன்ற வேலைகளைச் செய்யும் ஆசை இருந்து வந்திருக்கிறது. இதுபோன்ற உதவிகள் அந்தக் கனவுகளை மெய்பட உதவும்.

சென்றடைவதைவிட பயணம் முக்கியம்

2014ம் ஆண்டு, ஒருங்கிணைந்த எம்பிஏ படித்துக்கொண்டிருக்கும்போது, நேர்முகப் பயிற்சிக்காக வந்தபோது, நண்பர் ஒருவருடன் சேர்ந்து ரோஹித் ஃபண்ட்மைட்ரீம் தொடக்கநிலை நிறுவனத்தைத் தொடங்கினார். “எனக்கு நேர்முகப் பயிற்சி போதுமானதாக இருந்தது. அந்த நிர்வாகக் கட்டடத்தை விட்டு வெளியே வந்தபோது, நண்பர் ஒருவரைப் பார்த்தேன். அவர் ஒரு திரைப்படம் தயாரிக்கவேண்டும் என்ற நோக்கத்தை வைத்திருந்தார். ஆனால் அவரால் நிதியுதவி செய்பவரை கண்டறியமுடிவில்லை. நான் அவருக்கு உதவி செய்ய முடிவு செய்தேன். என்னுடைய தொடர்பின் மூலம் நிதி பெற திட்டமிட்டோம்” என்கிறார் அவர்.

image


கடந்த ஆண்டு, 40 வயதான அமெரிக்கன் ஒருவர் இணையதளத்தில் எழுதிய கட்டுரை ஒன்றைப் படித்தார். அதில், இருபது வயதாக இருக்கும்போது தன்னுடைய உலகம் சுற்றும் கனவை அடையமுடியவில்லை என்று அவர் எழுதியிருந்தார். ”இது எனக்குள் நீண்ட சிந்தனையை ஏற்படுத்தியது. எப்போதுமே எனக்கு பைக் ஓட்டுவது பிடிக்கும். இந்தக் கட்டுரை என் கனவை நோக்கிப் போவதை உணரவைத்தது” என்றும் கூறுகிறார்.

இந்தப் பயணம் உலகத்தைப் பார்ப்பதைவிட, உள்ளுக்குள் ஒரு பயணமாக இருக்கும் என்று சுட்டிக்காட்டுகிறார் ரோஹித். அவருக்கு, மோட்டார் பைக் ஓட்டுவது தியானம் செய்வது மாதிரிதான். “அது புள்ளிகளை இணைப்பதுபோல” இதுவொரு ஸென் தத்துவம்.

“இந்த உலகத்தை முன்னேற்றுவதற்கு முதலில் நம்முடைய இதயம், தலை மற்றும் கரங்களில் இருந்து தொடங்கவேண்டும், பிறகு அங்கிருந்து இயங்கவேண்டும்.”

(புகைப்படங்கள் நன்றி: ரோஹித்)

ஆக்கம்: DIPTI NAIR தமிழில்: தருண் கார்த்தி 

Add to
Shares
36
Comments
Share This
Add to
Shares
36
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக