பதிப்புகளில்

வெற்றி தலைக்கு ஏறக்கூடாது: நவீன் திவாரி

YS TEAM TAMIL
9th Feb 2016
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

பிப்ரவரி 5 -ம் தேதி 'கே ஸ்டார்ட்' (kstart) எனப்படும் கர்நாடகா முதலீடு நிகழ்ச்சி துவங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஒட்டி கலாரி கேபிட்டல் நிறுவனம் ஒரு ட்விட்டர் போட்டியை நடத்தியது. அதில் கலந்துகொள்பவர்கள் தங்கள் கேள்வியை ட்விட்டர் வழியாக, ரத்தன் டாடா, நவீன் திவாரி, இன்மொபி நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் முகேஷ் பன்சால், மிந்த்ராவின் இணை நிறுவனர் மற்றும் ஃப்ளிப்கார்ட்டின் வர்த்தக தலைவர் ஆகியோரிடம் கேட்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நவீன் திவாரியிடம் பல்வேறு இளம் தொழில்முனைவோர் கேள்வி கேட்டனர். அவரும் சளைக்காமல் பதிலளித்தார். அவற்றின் ஒரு தொகுப்பு இங்கே சுருக்கித் தருகிறோம்.

image


வெற்றி, உருமாற்றம் மற்றும் கையாளல்

இந்த வெற்றியை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் என்று நவீனிடம் கேட்டார்கள்? 

“பெரும்பாலான தொழில்முனைவோர், தங்கள் நிறுவனத்தின் முதல் ஆறுமாத காலத்தை யோசித்துக்கொள்ள வேண்டும். அபார்ட்மெண்ட் ஒன்றை பகிர்ந்துகொண்டு, தரையில் படுத்துத் தூங்கி இருப்பீர்கள். எங்களின் முதல் அலுவலகம் ஷட்டர் வைத்த ஒரு கடையாக துவங்கப்பட்டது. அதையெல்லாம் நினைவில் வைத்துக்கொண்டாலே போதும். வெற்றி தலைக்கு ஏறாமல் பார்த்துக்கொள்வது முக்கியம்.” என்றார்.

எம்கோஜ் என்ற நிறுவனம் இன்மொபி ஆனதை பற்றிய அனுபவத்தை பகிர்ந்தார். “எப்பொழுதும் பெரிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயலுங்கள். பிரச்சினை பெரிதோ, சிறிதோ, அதை சரிசெய்ய ஒரே வகையான உழைப்பே தேவைப்படும். ஒருவேளை பிசினஸ் ஐடியா மாறினால் அதற்காக கவலைப்படாதீங்கள். முதல் ஆறிலிருந்து பனிரெண்டு மாதம் வரை அது மாறிக்கொண்டே தான் இருக்கும். அப்படி நடப்பதும் நல்லதற்கு தான்” என்றார்.

வளர்ச்சி அதற்கே உரிய பிரச்சினைகளை கொண்டு வரும். “எப்படி செல்லப்போகிறோம் என்பதே உங்கள் முன் இருக்கும் மிகப்பெரிய சவால். நம்மால் இதை செய்ய முடியும் என்று தீர்மானமாக நம்பி, நாம் சிலவற்றை வலுக்கட்டாயமாக பிடித்து வைத்திருப்போம். உண்மையிலேயே உங்கள் நிறுவனம் பெரிதாக வளர வேண்டுமானால், மனிதர்களுக்கு ஒரு முன்னுரிமை என்றும் பொருட்களுக்கு ஒரு விதமான முன்னுரிமை என்று ஒதுக்கிக்கொள்ளுங்கள்” என்றார்.

________________________________________________________________________

  தொடர்பு கட்டுரை:

'நண்பர்கள் திடீரென தொடர்பு எல்லைக்கு அப்பால் போனார்கள்': 'இந்தியா பிளாஸா' வைத்தீஸ்வரன் உருக்கம்!

________________________________________________________________________

பின்னடைவு

இன்மொபியின் பாதையில் சந்தித்த பின்னடைவுகள் என்னென்ன என்று கேட்கப்பட்டது, அதை மூன்று பகுதிகளாக பிரித்து விளக்கினார். 

“வாழ்க்கையில் முதல்முதலாக “நோ” என்ற வார்த்தையை கேட்பது கஷ்டமாக இருக்கும். வாடிக்கையாளர்களிடமும் முதலீட்டாளர்களிடம் இந்த வார்த்தையை அடிக்கடி கேட்க வேண்டி இருக்கும். அது காயப்படுத்தும். ஆனால் இதற்குப் பிறகு உங்கள் அகங்காரம் உங்களை விட்டு வெளியேறும். இதை பின்னாளில் புரிந்துகொள்வீர்கள். ஆரம்பகால துன்பங்களெல்லாம் உங்களை வடிவமைக்கவே உதவும்”

இரண்டாவது கட்டம், கையிலிருக்கிற பணமெல்லாம் தீர்ந்துவிட்டால் நிறுவனத்தை இழுத்து மூடுவது தான் தீர்வு. 

மூன்றாவது கட்டம், ஒருவர் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்போம்., அவர்கள் அதை பொய்யாக்கும்போது உண்டாகும் வலி. உதாரணமாக பணம் கையாடல் செய்வது, நிறுவனத்தின் உரிமையை கைப்பற்றுவது போன்றவை. 

“நான் மனிதர்களை நம்புகிறேன்.அந்த நம்பிக்கை பொய்யாகும் பொழுது அது உங்களை காயப்படுத்தும். அதிலிருந்து மீள ஆறு மாதங்கள் ஆகும்” என்று தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

எனினும் மனிதர்களை நம்புவதை கைவிடப்போவதில்லை என்றார் அவர். “நம்பிக்கை என்பது கொள்கை. எல்லாக் கொள்கைகளும் ஒரு சதவீத தோல்விக்குட்பட்டவை தான். எல்லோருமே அதை மீறுவார்கள் என்று அதற்கு அர்த்தமல்ல. நான் எப்பொழுதுமே நம்பிக்கையின் பக்கம் தான்” என்றார்.

வேலைக்கலாச்சாரம் குறித்த கேள்விக்கு அவர் விரிவாக பதிலளித்தார். “இன்மொபியில் யாரும் விடுமுறைக் கேட்டு விண்ணப்பிக்க தேவையில்லை. நாங்கள் எல்லோரையும் முழுமையாக நம்புகிறோம். முழு சம்பளம் அளிக்கிறோம். அன்றாடம் செய்ய வேண்டிய வேலையை அவரவர் வழக்கம் போல செய்கிறார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். 

அதுமட்டுமல்லாமல் எங்கள் மக்களை நாங்கள் அக்கறையோடு பார்த்துக்கொள்கிறோம். நல்ல உணவளிக்கிறோம். நல்ல பணிச்சூழலை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறோம். வளர்ச்சிக்கான வாய்ப்பையும், வேலைகளை கையாளவும் உதவுகிறோம். இது அடுத்த கட்டத்திற்கு நகர உதவும்” என்றார்.

சரியான வழிகாட்டியை தேர்ந்தெடுத்தல்

வழிகாட்டியை தேர்ந்தெடுப்பதற்கும், பிரபலமான வழிகாட்டியை தேர்ந்தெடுப்பதற்கும் உண்டான வித்தியாசத்தை சுட்டிகாட்டினார். 

“உங்கள் வளர்ச்சியின் மீது உண்மையான அக்கறை கொண்ட ஒருவர் தான் உங்களுக்குத் தேவை. அவரிடம் தான் நீங்கள் வெளிப்படையாகவும், தயக்கமில்லாமலும் பேச முடியும். பிரபலமான ஒருவரால் உங்களுக்கு நேரம் ஒதுக்க முடியாது. உங்களுக்கு உதவும் யார் வேண்டுமாலும் வழிகாட்டியாக இருக்க முடியும். சரியான முடிவுகளை எடுக்க தூண்டி சரியான பாதைக்கு அழைத்து செல்லும் வழிகாட்டியே உங்களுக்கு தேவை” என்றார்.

படிப்பு பின்னணிக்கும் நிறுவன வெற்றிக்கும் தொடர்பிருக்கிறதா?

“இல்லை. உங்களிடம் நல்ல ஐடியா இருந்து, பெரிய படிப்பு பின்னணி இல்லையென்றாலும் உங்களுக்கு முதலீடு செய்ய ஆள் கிடைப்பார்கள். ஆனால் நல்ல படிப்பு இருந்து, சிறந்த ஐடியா இல்லையென்றால் கஷ்டம்” என்றார்.

ஆனால் முதலீட்டாளர்கள் சிலசமயம் அதை ஒரு அளவுகோலாக பார்ப்பதாக தெரிவித்தார். “கல்வியும் வேண்டும் என்கிறார்கள். காரணம் அது ஒரு தெளிவைக் கொடுக்கும். நான் என்ன செய்ய வேண்டும் என்று அது எனக்கு காட்டும். நல்ல கல்வி உங்களுக்கு சில கதவை திறந்துவிடும். நீங்கள் படிப்பதற்கு ஒரு மதிப்பு இருக்கிறது. நான் நிறைய படிக்கிறேன். அதை அன்றாடம் பயன்படுத்துகிறேன். சூழல் எப்படி மாறினாலும் கல்வி உங்களுக்குக் கை கொடுக்கும். அது தான் முக்கியம்” என்றார்.

விளம்பரத்தை விரும்ப வைத்தல்

இன்மொபி எப்படி யூசர்-ஃப்ரெண்ட்லியாக இருக்கிறது என்று கேட்கப்பட்ட போது, அதை விவரித்தார்.

“வாடிக்கையாளர்களை கவரும் விதத்திலான விளம்பரத்தை அளிக்கிறோம். நாங்கள் கொடுக்கும் விளம்பரத்தை வாடிக்கையாளர் விரும்ப வேண்டும். அதில் மட்டும் நாங்கள் ஜெயித்துவிட்டால் இந்தத் துறையின் இயக்கவியலே மாறிவிடும்” என்றார்.

இன்மொபிக்கு வரவில்லை என்றால் செய்ய செய்திருப்பீர்கள்?

“தெருவில் இருந்திருப்பேன். ஆனால் இந்தியாவில் இது ஒரு நல்ல தொழில். எனினும் என்னிடம் அவ்வளவு முதலீடு இல்லை. எனவே கல்வித்துறைக்கு சென்றிருப்பேன். அதற்கு மிகப்பெரிய சந்தை இருக்கிறது. இந்தியா கல்விக்காக நிறைய செலவு செய்கிறது. அது உங்களுக்கான சுதந்திரமான வெளி, வெற்றி, பாதுகாப்பும் கூட. அது எப்பொழுதுமே நிலைத்து நிற்கும் ஒன்று.” என்றார்.

தமிழில் : Swara Vaithee

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இது போன்ற தொழிலிமுனைவு ஆலோசனை தொடர்பு கட்டுரைகள்:

'தொழில் முனைவர்கள் பெரிதாக சிந்திக்க வேண்டும்': இக்விட்டாஸ் நிர்வாக இயக்குனர் வாசுதேவன்

வாடிக்கையாளர் திருப்தி அடைந்தால் முதலீடு குவியும்: நிகேஷ் அரோரா

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக