பதிப்புகளில்

கலவரங்களுக்கு மத்தியில் சபரிமலை சென்று செய்திகள் அளித்த பெண் ஊடகவியலாளர்கள்!

posted on 23rd October 2018
Add to
Shares
54
Comments
Share This
Add to
Shares
54
Comments
Share

கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி, 10 முதல் 50 வயதில் இருக்கும் பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதுவரை ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட இந்த கோவிலில், மாதவிடாய் ஏற்படும் வயதில் இருக்கும் பெண்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது.

தீர்ப்பு ஒருபக்கம் வழங்கப்பட்டிருந்தாலுமே, களநிலவரம் முற்றிலும் வேறுபட்டதாகவே இருக்கிறது. அச்சுறுத்தப்பட்ட பல்லாயிரம் ஆண்கள், போராட்டம் செய்யத் தொடங்கி, கோவிலுக்குள் நுழைய முயன்ற பெண்களை முறைகேடாக பேசவும், தாக்கவும் செய்தார்கள். தங்கள் கடமையை செய்ய முயன்ற ஊடகவியலாளர்கள் உட்பட அத்தனை பேரும் தாக்கப்பட்டார்கள். 

இத்தனை கலவரங்களுக்கு மத்தியிலும், களத்தில் துணிச்சலாக நின்று செய்திகளை வழங்கிய பெண் ஊடகவியலாளர்களுக்கு, இதோ ஒரு வெற்றிக் கூச்சல்!

நிருபர் சரிதா பாலன் (Photo Courtesy : Saritha Balan) 

நிருபர் சரிதா பாலன் (Photo Courtesy : Saritha Balan) 


1) ந்யூஸ் மினிட் தளத்தின் சரிதா பாலன்

கேரள மாநில பேருந்து ஒன்றில், சபரிமலை கோவிலுக்கு சென்று கொண்டிருந்த சரிதா பாலனை, கலவரம் செய்து கொண்டிருந்தவர்கள் பேருந்தில் இருந்து வெளியே இழுத்து தாக்கினார்கள். ந்யூஸ் மினிட்டின் ஆசிரியர் தன்யா ராஜேந்திரன், ட்விட்டரில் சரிதா பாலன் குறித்தும், ரிபப்ளிக் டிவியின் பூஜா பிரசன்னா குறித்தும் எழுதியிருந்தார்.

தன்யா ராஜேந்திரன் ட்விட்டர் கருத்து : 

என் டைம்லைனில் வெறியோடு இருக்கும் அத்தனை பேருக்கும் சொல்லிக் கொள்கிறேன் - பூஜாவிற்கோ சரிதாவிற்கோ கோவிலுக்குள் நுழையும் திட்டங்கள் எதுவும் இருந்திருக்கவில்லை. அவர்கள் பம்பாவில் இருந்து பல கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்தார்கள். தாங்கள் பக்தைகள் அல்ல என்பதை மக்களுக்கு காட்டவே வண்ண ஆடைகளை உடுத்தியிருந்தார்கள். ஆனால், என்னவாக இருந்தாலும் கலவரம் செய்பவர்களுக்கு யாரையும் தாக்க உரிமை இல்லை - அது பக்தராக இருந்தாலும் சரி, ஊடகவியலாளராக இருந்தாலும் சரி!

2) ரிபப்ளிக் டிவியின் தென்னிந்திய நிருபர் பூஜா பிரசன்னா

சபரிமலை கோவிலுக்கு செல்லும் வழியில் இருக்கும் நிலக்கல் எனும் இடத்தில், நூறு பேர் கொண்ட கூட்டம் ஒன்று பூஜா பிரசன்னாவை தாக்கியதாக ரிபப்ளிக் தொலைக்காட்சி தெரிவித்திருக்கிறது.

image


தாக்குதல் நடந்த பிறகு, போராட்டத்தை நடத்திய ஐயப்ப தர்ம சேனாவின் தலைவரும் செயற்பாட்டாளருமான ராகுல் ஈஸ்வரை பூஜா சந்தித்தார். சபரிமலை கோவிலின் முன்னாள் பூசாரியின் பேரன் தான் ராகுல்.

ரிபப்ளிக் சேனல் வெளியிட்டிருந்த டிவிட்டர் கருத்து :

என்னையும், பிற ஊடகவியலாளர்களையும் தாக்கியதால் நான் அவர்களை பக்தர்கள் என்று சொல்ல மாட்டேன். அவர்கள் என் குழுவை தாக்கினார்கள். எங்களை காரில் இருந்து இறக்கி, எங்களிடம் இருந்து காரை திருடிக் கொண்டு போனார்கள். அது எல்லாமே திட்டமிட்டு செய்யப்பட்டது, எதுவும் அந்த நொடியில் நடந்த காரியம் அல்ல - பூஜா பிரசன்னா.

3. சி.என்.என் ந்யூஸ் 18 நிருபர் ராதிகா ராமாசுவாமி

ராதிகா ராமசுவாமியும் நிலக்கல்லில் வைத்து தாக்கப்பட்டார். ராதிகாவின் குழுவின் வாகனத்தை தாக்கி அதை சேதம் செய்தார்கள் கலவரம் செய்து கொண்டிருந்தவர்கள்.

ராதிகா ராமசுவாமி ட்விட்டரில் தன்னுடைய குழு தாக்கப்படுவதை பதிவு செய்திருந்தார். ராதிகா தாக்கப்படும் காட்சி : 

(Photo Courtesy : Radhika Ramaswamy)

(Photo Courtesy : Radhika Ramaswamy)


4) இண்டியா டுடேவின் மௌஷ்மி சிங்

டெய்லிஓ தளத்தின் கட்டுரையின்படி, மௌஷ்மி தன்னுடைய குழுவோடு ஒரு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, கலவரம் செய்து கொண்டிருந்தவர்களில் ஒருவர் கேமரமேனை அறைந்திருக்கிறார். ஒன்னொருவர் மௌஷ்மியின் அணிந்திருந்த துப்பட்டாவை பிடித்து இழுத்திருக்கிறார்; முடியை பிடித்து இழுத்திருக்கிறார். மௌஷ்மி தன்னுடைய கட்டுரையில், 

“இப்போது நான் இங்கே ஐயப்பன் கோவில் வாசலில் இருக்கிறேன், அவ்வளவு நடந்த பிறகும் கூட, இங்கிருப்பதை குறித்தோ, என் வேலையை செய்வதை குறித்தோ எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. இதை மேலும் ஒரு முறை செய்யவும் நான் தயங்க மாட்டேன்,” என்று தெரிவித்திருக்கிறார்.

5) என்.டி.டி.வியின் கேரள நிருபர் ஸ்னேஹா மேரி கோஷி

ஸ்னேஹா மேரி கோஷியும் அவருடைய குழுவும் பம்பாவில் இருக்கும் முகாமில் வைத்து தாக்கப்பட்டனர். என்.டி.டி.வியின் ப்ளாக் தளத்தில் எழுதியிருக்கும் அவர், 

“இதைப் போன்ற சூழலில், இங்கு என்ன நடக்கிறது என்பதை தெரிவிப்பதில் எனக்கும் மற்ற பெண் ஊடகவியலாளர்களுக்கும் பெருமையாக இருக்கிறது. இது எங்களுடைய வேலை. இதில் பாலினத்தை குறித்த கேள்வியே இல்லை,” என்று தெரிவித்திருக்கிறார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பளிக்காத கலவரக்காரர்களுக்கும், கலவரங்களுக்கு மத்தியில், வெவ்வேறு நிறுவனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒரு உருவமாக நின்று களத்தில் செயல்பட்ட இந்த ஊடகவியலாளர்களின் செயல்பாடு பெருமையளிக்கிறது. 

ஆங்கில கட்டுரையாளர்: தேவிகா சித்னிஸ் | தமிழில்: ஸ்னேஹா

Add to
Shares
54
Comments
Share This
Add to
Shares
54
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக