பதிப்புகளில்

HCL Technologies’ இன் தலைவர் மற்றும் சிஇஒ ஆக சி.விஜய்குமார் பொறுப்பு ஏற்றார்!

25th Oct 2016
Add to
Shares
32
Comments
Share This
Add to
Shares
32
Comments
Share

ஐடி துறையில் உலக அளவில் பிரசித்தி பெற்ற எச்.சி.எல் டெக்னாலஜீஸ், தனது புதிய தலைவர் மற்றும் சிஇஒ’ ஆக, சி.விஜய்குமார் என்பவரை அப்பதவிக்கு நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. விஜய்குமார் கோவையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

image


“எஸ்சிஎல் நிறுவனம் எப்பொழுதும் வளர்ந்து வரும் வாய்ப்புகளை உடனடியாக கைப்பற்றி சந்தையில் சிறந்த இடத்தை நிலைநாட்டி வருகிறது. தேவைக்கேற்ப மாற்றங்களை புகுத்தி, நிலையான வளர்ச்சியை கொண்டுள்ள நிறுவனம் ஆகும்,” 

என்று எச்சிஎல் டெக்னாலஜீஸ் இன் தலைவர் சிவ் நாடார் தெரிவித்துள்ளார். 

”விஜய் ஒரு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தலைவர். நிறுவனத்தை முன்நின்று நடத்தி செல்ல வல்லமை படைத்தவர். அவரது தொலைநோக்கு பார்வை மற்றும் செயல்பாடு இதுவரை அற்புதமாக இருந்துள்ளது. அவரை நான் வாழ்த்துகிறேன்” என்றும் கூறியுள்ளார். 

எச்சிஎல் நிறுவனத்தின் வரப்போகும் சேவைகளை, விஜய்குமார் தொடர்ந்து நடத்தி செயல்படுத்தி, மோட் 1-2-3 ஸ்ட்ராடஜி பயன்படுத்தி, நல்ல தொழில் வாய்ப்புகளையும், சேவைகளையும் அளிக்க உதவுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவரது அனுபவங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து, ஏற்கனவே தலைமை இடத்தில் உள்ள நிறுவனத்தின் சேவைகளை தொடர, சிறந்து செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது. 

சி.விஜய்குமார் தனக்கு அளிக்கப்பட்டுள்ள தலைவர் மற்றும் சிஇஒ பதவியை பற்றி பேசுகையில்,

“எச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தை தலைமை எடுத்து நடத்த எனக்கு தரப்பட்டுள்ள இந்த வாய்ப்பை பெருமையாக கருதி தன்னடக்கத்துடன் ஏற்கிறேன். நிறுவனத்தை இந்த புதுயுக போட்டிகளிடையே வெற்றி அடையச்செய்ய முன்நடத்தி செல்லுவேன். கடந்த 20 ஆண்டுகளாக, உலக பிரசித்தி பெற்ற குழுவுடன் பணிபுரிய எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் கூட்டாக நன்மதிப்புள்ள சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு, ஊழியர்களுக்கு, முதலீட்டாளர்களுக்கு மற்றும் சமூகத்துக்கு தரும் வகையில் பணிபுரிந்துள்ளோம். வருங்காலத்திலும் சிறந்த ஐடியாக்களுடன் இருக்கும் எச்சிஎல் ஊழியர் குழுக்களுடன் பணியாற்றி நிறுவனத்தை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்ல முயற்சிகள் எடுப்பேன்,” என்றார். 

விஜய் இப்பொறுப்பேற்பதற்கு முன், எச்சிஎல்’ இன் சிஓஓ ஆக இருந்தார், மேலும் HCL அமெரிக்கா இன்க் நிறுவனத்தின் இயக்குனர்கள் போர்ட்டிலும் இருந்தார். 1994 இல் எச்சிஎல் டெக்னாலஜீஸில் இணைந்த சி.விஜய்குமார், எச்சிஎல்’ இன் ஸ்டார்ட்-அப் குழுவான HCL Comnet நிறுவனர் குழுவில் பணிகளை தொடங்கினார். விஜய், பல தொழில்நுட்பம், பிசினஸ் மற்றும் செயல்பாடுகளை தலைமை வகிக்கும் உயர் பதவிகளில் இருந்துள்ளார். 

கடந்த சில ஆண்டுகளாக எச்சிஎல்’ இன் தொழில் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். சிறந்த தலைமைப்பண்புகளுடன், குழு உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடன் நல்ல ஒரு இணைப்பை கொண்டவர் விஜய்குமார். இவர் கோவை பிஎஸ்ஜி’யில் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங்கில் பட்டம் பெற்றவர், தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Add to
Shares
32
Comments
Share This
Add to
Shares
32
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக