பதிப்புகளில்

பொருளாதார நெருக்கடியில் வேலை இழந்தவர் எப்படி கோடீஸ்வரராக வெளிவந்தார்?

YS TEAM TAMIL
17th Feb 2016
Add to
Shares
66
Comments
Share This
Add to
Shares
66
Comments
Share

திரைப்படத்தை மிஞ்சும் காட்சிகளைப் போல சௌமியா குப்தாவின் வாழ்வில் அந்த நாட்கள் நகர்ந்தன. அவர் கண் முன் தெரிந்த உறவினர்கள், நண்பர்கள், பாசத்திற்குரியவர்களின் முகங்கள் மற்றும் மற்றவர்களை விமர்சிப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கும் சமூகம் இவை அனைத்தும் தன்னைச் சுற்றி சுற்றி வந்து “நீ தோல்வியின் அடையாளம்!”, “நீ எதற்கும் ப்ரயோஜனம் இல்லை”, “நீ வாழ்வில் எதையும் சாதிக்க போவதில்லை” என்று கூறுவதாகவே இருந்தது. ஆனால் இவற்றை புறந்தள்ளி, அவர் எடுத்த ஒரு நிலைப்பாடு சௌமியாவின் தலைஎழுத்தையே மாற்றியது.

image


மும்பைவாசியான அவர் நகரவாசிக்கே சொந்தமான சிறப்பம்சங்களோடு இருந்தார் – சௌமியாவிடம் பயமில்லை, குறிக்கோளில் உறுதியாக இருந்தார், வியாபாரத்தில் கண்ணாக இருந்தார், அதே சமயம் ஸ்டைலான ஆளாகவும் விளங்கினார். தொழில்முனைவை பின்னணியாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த சௌமியா தன்னுடைய பள்ளிப்படிப்பை மும்பையில் முடித்தார். ஆனால் அதைத் தொடர்ந்து மேற்படிப்பு குறித்து அவர் ஒரு தைரியமான முடிவை எடுத்தார். அவர் அமெரிக்கா சென்று ஃப்ளையிங் பள்ளியில் சேர்ந்து படிக்க முடிவு செய்தார். “அந்த காலகட்டத்தில் பெண்கள் தேர்ந்தெடுக்கும் துறையாக ஃப்ளையிங் இல்லை, இது அவர் வாழ்வின் தொடக்கத்தில் எடுத்து வைத்த மிகப்பெரிய அடி.”

தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருந்த சௌமியா, அலைகளுக்கு எதிராக நீச்சல் அடிக்கத் தொடங்கினார். அனைத்தும் சரியான முறையில் சென்று கொண்டிருந்த சமயத்தில் துரதிஷ்டம் அவரை பின் தொடர்ந்தது. சௌமியா படிப்பை முடிக்கும் சமயமும் 2008ம் ஆண்டு நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொள்ளவும் சரியாக இருந்தது. இதில் பைலட் சமூகம் மிகவும் பாதிக்கப்பட்டது, அவர் நாடு திரும்பிய சமயத்தில் அவரிடம் முறையாக ஒரு பட்டம் இல்லை, வேலையும் இல்லை, படிப்பிற்காக ஏறத்தாழ ரூ.50 லட்சத்தை செலவிட்டிருந்தார்.

“நான் வீட்டில் இருந்து கொண்டே பல்வேறு ஏர்லைன் நிறுவனங்களுக்கு விண்ணப்பித்தேன் ஆனால் எங்கிருந்தும் பதில் கிடைக்கவில்லை, 2008 பொருளாதார நெருக்கடிக்கு நன்றி. நான் மிகுந்த மனஅழுத்தத்திற்கு ஆளானேன், சமுதாயம் என்னைப் பற்றி பல கற்பனைகளைப் புணைந்தது நான் படிப்பில் தோல்யுற்றிருப்பேன் என்றும் நான் ஏன் விமானியாகவில்லை என்றும் பலர் நினைத்தனர். நான் மனச்சிதைவுக்கு ஆளானதோடு பெரிய இழப்பு ஏற்பட்டுவிட்டதாக நினைத்தேன்.”

கடைசியில் சௌமியாவின் பெற்றோரும் மவுனம் கலைத்தனர். அவர்கள் சௌமியாவை பணிக்குச் சென்று பணம் சம்பாதிக்குமாறு கூறினர், ஏனெனில் இனிமேல் பாக்கெட் மணி கொடுக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால் வேறொரு வேலை கிடைப்பதும் அத்தனை சுலபமல்ல. “பைலட் என்பது ஒரு தொழில், ஆனால் சான்றிதழ்படி பார்த்தால் அறிவியல் பின்னணி கொண்ட நாங்கள் 10+2 மாணவர்கள் மட்டுமே. பனிரெண்டாவது முடித்த ஒருவருக்கு யாருமே நல்ல வேலையை கொடுக்க மாட்டார்கள். எனக்கு நல்ல சம்பளம் தேவை. 20 வயது நெருங்கிவிட்டது, என் செலவுகளை நானே சமாளிக்க வேண்டிய இக்கட்டான சூழலில் இருந்தேன்.” இறுதியில் அவர் ஒரு கால்சென்டரில் பணிக்குச் சேர்ந்தார் அதன் மூலம் மாதத்திற்கு ஏறத்தாழ ரூ.20 ஆயிரம் சம்பாதித்தார்.

முதல் நாளில் இருந்தே எனக்கு இது கடைசி பணிஅல்ல என்பதில் நான் உறுதியாக இருந்தேன். நான் ஆசைப்பட்டது இதுவல்ல என்று எனக்குத் தோன்றியது. நான் எட்டு மாதங்கள் அந்த கால் சென்டரில் பணியாற்றி பணத்தை சேமிக்கத் தொடங்கினேன், சேமிப்பு இருந்தால் மட்டுமே அடுத்தகட்டத்தை நோக்கி பயணிக்க முடியும் என்று கருதினேன்.

ஆனால் அந்த நாள் விரைவிலேயே வந்தது. ஒரு நாள் வேலை முடிந்து வீடு திரும்பிய போது முழுவதும் உடைந்து போன ஒரு உணர்வு ஏற்பட்டது. தூக்கம் கண்களை கட்டி இழுப்பதை நினைத்து அழுதார் சௌமியா, கிட்டதட்ட ஒரு மெக்கானிக் வாழ்க்கை முறையில் மாட்டிக்கொண்ட மனநிலையில் சோர்ந்து போயிருந்தார் அவர். அப்போது என் அம்மா வந்து எனக்கு பிடித்த நல்ல விஷயத்தை செய்யுமாறு கூறினார். அந்த சமயம் எனக்கு உடனடியாகத் தோன்றியது ஆடை விற்பனை, நான் என் தாயாரிடம் எனக்கு விற்பனைக்காக சில துணி ரகங்கள் தேவை என்றும் அவற்றை வீட்டில் கண்காட்சிக்கு வைக்கலாம் என்றும் கூறினேன். என் அம்மா எனக்கு எப்போதும் உறுதணையாக இருப்பார், அவர் அடுத்த கனமே ‘சரி உன் விருப்பப்படியே செய்!”’ என்று கூறினார்.

image


___________________________________________________________________________________________________________  தொடர்பு கட்டுரை:

ஆடை வடிவமைப்பில் சிகரம் தொட்ட ஜ்யோதி சச்தேவ் ஐயர்!

___________________________________________________________________________________________________________

“அதிர்ஷ்டவசமாக என்னுடைய துறையை மாற்றும் முடிவை எடுத்த அன்றைய தினம், தெரிந்தே 50 லட்ச ரூபாய் திறமையை ஜன்னல் வழியாக தூக்கி எரிந்ததைப் போல இருந்தது. என் பெற்றோர் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர், நான் நெடுந்தூரம் பயணிக்க வேண்டி இருப்பதாகவும், வாழ்க்கைப் பாதையை மாற்றினாலும் அவர்கள் நான் மகிழ்ச்சியாக இருப்பதை காண விரும்பினர். அதே சமயம் என்னுடைய வர்த்தகத்திற்கு ஆதரவு கொடுத்தாலும் அவர்களிடம் இதற்கு முதலீடு செய்யும் அளவு நிதி இல்லை என்பதை புரியவைத்தனர். அதனால் நான் என்னுடைய வியாபாரத்தில் சிறிய இலக்கை வைத்துக் கொண்டேன் ரசீதுகளுக்கு பணம் செலுத்தி அந்த பணத்தை சுழற்சி முறையில் பயன்படுத்தினேன்.”

உயர்ரக ஃபேஷன் பிராண்டுகளான ரொபெர்டோ கேவெல்லி மற்றும நீனு பால் காடியர் போன்ற ஏற்றுமதி ரக ஆடைகளை வீட்டில் அளவில்லாமல் குவித்து வைத்திருக்கும் ஆடை ஏற்றுமதியாளர் ஒருவரை நாங்கள் அணுகினோம். “என்னால் 30 ஆடைகளை மட்டுமே வாங்க முடிந்தது. மும்பையில் இருந்த நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் வீட்டில் சிறிய ஆடை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறுந்தகவல் அனுப்பினேன். பிராண்ட் பெயர்களை கேட்டதும் அவர்கள் ஒரு நாள் முன்னதாகவே வந்து அவர்களுக்கு பிடித்த அனைத்தையும் அள்ளிச் சென்று விட்டனர். கண்காட்சிக்கு திட்டமிட்ட 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே ஆடைகள் விற்றுத் தீர்ந்து விட்டன!”

ஒரு மாதத்திற்கு பிறகு சௌமியா இரவு நேரங்களில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விருப்ப ஆடைகளை கேட்டு அவற்றை பகல் நேரங்களில் விற்பனை செய்து வந்தார். இரண்டாவது முறையும் ராக்கில் அடுக்கி வைத்திருந்த 45 ஆடைகளும் எதிர்பார்த்தது போலவே மின்னல் வேகத்தில் விற்றுத் தீர்ந்தன.

விரைவிலேயே 45 ஆடைகள் 60 ஆனது பின்னர் 80 வரை விற்பனை சென்றது. தொடர் வெற்றிகள் சௌமியாவின் குறுகிய கால இலக்கை நீண்ட கால லட்சியமாக மாற்றியது.

நான் ஏதோ ஒன்றை நோக்கி சென்று கொண்டிருப்பதாக நினைத்தேன். நான் என்னுடைய நிதி நிலைமையை இந்த நேரத்தில் சரி செய்து கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தேன். என்னுடைய அளவீடுகளை தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்களோடு நிறுத்திக் கொள்வதை தவிர்க்க விரும்பினேன். பிரிவினர் மற்றும் கூட்டத்தினருக்குமான வித்தியாசத்தை நான் கற்றுக் கொண்டேன். ஃபேஷன் & யூ மாதிரியான தளங்கள் தேவை என்று நான் நினைத்தேன் ஏனெனில் அவை என்னுடைய திறமையை மற்றவர்களுக்கு உணர்த்தி என் நிலையை உயர்த்தும். ஆனால் என்னுடைய ஆடைகளை படம் பிடிக்க என்னிடம் நல்ல கேமிரா இல்லை; நான் நிதி கட்டுப்பாட்டில் தடுமாறி நின்றேன். நான் மிகுந்த பண நெருக்கடியில் இருந்தேன். ஒவ்வொரு காசாக சேர்ப்பதற்காக நான் நண்பர்களிடம் சகஜமாக பேசுவது மற்றும் ஜாலியாக ஊர் சுற்றுவதைக் கூட தவிர்த்தேன்.”

அந்த நேரத்தில் அவர் கொள்கை ரீதியாக எடுத்த முடிவு சௌமியாவிற்கு கை கொடுத்தது. “சௌமியா போர்ட்ஃபோலியோ தயாரிக்க விரும்பும் தன்னுடைய புகைப்படக்கார நண்பரை அணுகி தன்னிடம் உள்ள ஆடைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டினார். ஸ்டுடியோவிற்கான கட்டணத்தை பகிர்ந்து கொள்ளத் தயாராக இருந்தார். ஆனால் மாடலுக்கு செலவு செய்ய இருவரிடமும் பணம் இல்லை. அந்த சமயத்தில் சௌமியா தன்னுடைய தங்கையின் பழங்கால ஸ்நேகிதி பாஸ்கியை (ஆஃப் ஸ்பிட்ஸ் புகழ்) தொடர்பு கொண்டார். அந்தப் பெண் பெரிய மனதோடு எங்களுக்கு இலவசமாக படப்பிடிப்பு செய்து தர ஒப்புக் கொண்டார். மேக் அப்பிற்கு கூட பாஸ்கி தன்னுடைய உபகரணங்களையே பயன்படுத்தினார், ஏனெனில் மேக்அப்பிற்கு தனியாக செலவு செய்யவும் அவர்கள் வசம் நிதி இல்லை.”

தன்னால் இயன்றதை செய்த சௌமியா ஃபேஷன் & யூ விற்கு அந்த புகைப்படங்களை அனுப்பினார், அவர்களுக்கு அந்த ஆடைகள் பிடித்துப் போய் சௌமியாவின் கலெக்ஷன்களுக்கு ஒப்புக் கொண்டனர். ஆனால் ஆடைகள் பற்றிய முழுநேரப் பணியை மேற்கொள்ளும் போது வேறு மாதிரியான சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. 

“அவர்கள் எங்களிடம் முறையான போட்டோ ஷூட் நடத்தக் கூறியிருந்தனர், அதற்கு கூடுதல் நிதி தேவை. மீண்டும் பணம் ஒரு தடைக்கல்லாக எங்கள் முன் நின்றது. என்னிடம் ஒரு திட்டம் இருந்தது ஆனால் அதற்காக என்னிடம் இருந்த கடைசி கட்ட நிதியையும் செலவு செய்து இந்த தளத்தை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாங்கள் கல்லூரி மாணவிகளை மாடல்களாக பயன்படுத்த முடிவு செய்தோம். நானும் என்னுடைய அம்மாவும் மித்திபாய் கல்லூரி முன்பு நின்று கொண்டு எங்களுடைய படப்பிடிப்பு பற்றி பெண்களிடம் எடுத்துக் கூறினோம். சிலர் எங்களை வித்தியாசமாக பார்த்தனர் சிலர் இதற்கு இசைவு தெரிவித்து ஃபேஸ்புக்கில் புகைப்படங்களை பரிமாறினர். அந்தப் பெண்களுக்கு நாங்கள் இரண்டு ஆடைகளை கொடுத்தோம், அவர்களை ஊக்கப்படுத்துவதற்கான டோக்கன் அது.

“எங்களது சிறிய முயற்சி போதுமானதாக இல்லை எனவே நிதி திரட்ட மூன்று மாத காலங்கள் தேவைப்பட்டது. நாங்கள் பணத்தை சுழற்சி செய்தோம், நீண்டகாலமாக எதையோ இழந்தவர்கள் போலவே வாழ்ந்தோம், வியாபாரத்தை வளர்த்தெடுக்க ஒவ்வொரு காசாக சேமித்தோம். 23 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு மட்டுமே வங்கிகள் கடன் வழங்கும் ஆனால் எனக்கோ வயது 21! கடன் வழங்குமாறு HDFC வங்கியை மன்றாடினேன், நிறைய நேரம் வீணடிக்கப்பட்டது, ஏதாவது ஒரு வடிவத்தில் பணத்தை சேமிப்பதற்காக காத்திருந்தேன். பல விஷயங்களை தியாகம் செய்தது மற்றும் பொறுமையாக காத்திருந்ததன் பலனாக வளமான எதிர்காலம் உண்டானது.”

image


கடைசியில் மாணவர்களை மாடல்களாக வைத்து ஃபேஷன் & யூவில் எங்களின் பிராண்ட் டென் ஆன் டென் படம்பிடிக்கப்பட்டது. விற்பனையைத் தவிர்த்து ஃபேஷன் & யூ இன்னும் அதிகமாக எங்களிடம் எதிர்பார்க்கத் தொடங்கியது. 

“அதன் பிறகு இறங்குமுகமே இல்லை. 60 ஆடைகளில் இருந்து இப்போது நாங்கள் ரூ. 6 லட்சம் வரை வியாபாரத்தை பெருக்கி ஆண்டுக்கு 150% வளர்ச்சி காண்கிறோம். ஐஎஸ்ஓ தரச்சான்றிதழும் எங்கள் நிறுவனத்திற்கு கிடைத்துவிட்டது, ஆயிரம் சதுர அடியில் இயங்கிக் கொண்டிருந்த அலுவலகம் தற்போது பார்க்கிங் வசதியுடன் மும்பையின் பிரதான கார்ப்பரேட் மண்டலத்தில் ஐந்தாயிரம் சதுர அடியில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

நாங்கள் மாதத்திற்கு தோராயமாக ரூ.1 – 1.25 கோடி பரிவர்த்தைனை செய்கிறோம், ஆண்டுதோறும் ரூ.10 -15 கோடியில் வர்த்தகக்தை முடிக்கிறோம்.”

கடந்த ஆண்டு இவர் சிறந்த முன் உதாரணத்திற்கான விருதை பெற்றார், குணால் பால் இவருடைய வெற்றிக் கதைக்காக 2015ம் ஆண்டின் பெண் தொழில்முனைவர் விருதை கொடுத்து கவுரவித்தது.

சௌமியா வியாபாரத்தில் தன்னுடைய வெற்றியை கட்டிடங்களை நம்பி நடத்த வில்லை- தைரியம், நம்பிக்கை, விருப்பம் மற்றும் கொள்கைகள் மூலம் சாத்தியமாக்கியுள்ளார்.

பெரிய எண்ணங்கள் மட்டும் உங்கள் வாழ்க்கையை மாற்ற உதவாது, அதை நீங்கள் செயல்படுத்த வேண்டும். அதைத் தான் நானும் செய்தேன். என்னுடைய பிராண்ட் நிலைத்திருக்கும் என்று நான் நம்பினேன், டென் ஆன் டென் குறி வைக்கும் வாடிக்கையாளர்கள் யார் என்பதை அறிந்து அவர்களுக்கு நான் விளக்கினேன். தொடக்கம் முதலே ஒரு விஷயத்தில் நான் தெளிவாக இருந்தேன், என்னுடைய பிராண்டின் தரமே அனைத்திற்கும் பதில் சொல்லும் என நினைத்தேன். நான் அணிய விரும்பாத ஆடைகளை எப்போதும் விற்பனைக்கு வைக்க மாட்டேன்.

கடின உழைப்பின் மூலம் கிடைத்த வெற்றியின் நிழலில் இளைப்பாறினாலும் கடந்த காலங்களில் தன் வாழ்வில் நடந்த மோசமான நிமிடங்களை சௌமியா இப்போதும் நினைவில் வைத்திருக்கிறார். 

“உலக வாழ்க்கைப் பாதையை மாற்றிக் கொண்ட முகத்தோடு எதிர்கொண்டேன்! மக்கள் உங்களது தோல்விகளை சுட்டிகாட்டி உங்களை அதலபாதாளத்திற்கு இழுத்துச் செல்வர். என்னுடைய திட்டம் Aவை நிறைவேற்ற முடியவில்லை, அது மிகப்பெரிய டீல்! அதனால் முதலில் என்னுடைய தொடக்கத்தை என்னால் எட்ட முடியவில்லை. இத்தனை ஆண்டுகள் கடந்தாலும் எனக்குள் அந்த கேள்வி இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது. 

நான் இப்போது கற்றுக் கொண்ட ஒரு விஷயம் ‘மற்றவர்கள் கூறுவதை பொருட்படுத்தாதீர்கள், உங்கள் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள், உங்கள் சந்தோஷம் தான் பிரதானம்.’ ஆடைகள் மற்றும் ஃபேஷன் என்னுடைய விருப்பம், பணியாற்றுவது எனக்கு பிடிக்கும், அதைவிட சவால்கள் மிகவும் பிடிக்கும், நான் என்னுடைய பணியில் ஒவ்வொரு நாளையும் மகிழ்வோடு செய்கிறேன். இந்த உலகம் உங்களை பின்நோக்கி இழுக்கும் வீழ்ந்து விடாதீர்கள். அவர்கள் உங்களது முயற்சிகளை பார்க்கமாட்டார்கள், தவறுகளை மட்டுமே சுட்டிகாட்டுவார்கள். உங்களுக்கு ஒரு கனவு இருந்தால், அதை நோக்கியே பயணியுங்கள் அதற்காக பயணியுங்கள்.”

கட்டுரை: பின்ஜால் ஷா | தமிழில்: கஜலட்சுமி மகாலிங்கம்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

இது போன்ற ஊக்கமளிக்ககூடிய பெண் தொழில்முனைவோர் கட்டுரைகள்:

'சட்டத்தில் குறுக்கு வழி இல்லை': பவானி ரெட்டி

நவீன உலகில் மாற்றாக உலவும் ஷிவிகா சின்ஹா


Add to
Shares
66
Comments
Share This
Add to
Shares
66
Comments
Share
Report an issue
Authors

Related Tags