‘சின்கன்காரி’ கலைஞர்களுக்கு லாபத்தை 'Threadcraft' உறுதி செய்தது எப்படி?
‘சிக்கன்காரி’ (Chikankari) என்பது எம்ப்ராய்டரி வேலைப்பாடு. மொகலாய சாம்ராஜ்யத்தின் மாமன்னர் ஜஹாங்கீரின் மனைவி் நூர்ஜஹான் அறிமுகம் செய்ததாக நம்பப்படுகிறது. இதுவொரு சிக்கலான எம்ப்ராய்டரி வகையாக இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கிறது.
ஆனால் மற்ற நாட்டுப்புற கைவினைக் கலைஞர்களைப் போலவே சிக்கன்காரி எம்ப்ராய்டரி கலைஞர்களும் சிரமமான வாழ்க்கையையே மேற்கொண்டார்கள். அவர்களின் உழைப்பின் பயனை தரகர்கள் சாப்பிட்டு வந்தார்கள்.
இங்குதான் மோகித் வர்மாவின் "த்ரேட்கிராஃப்ட்" (Threadcraft) இந்தியா அறிமுகமானது. இந்த நிறுவனம்தான் கைவினைக் கலைஞர்களுடன் நேரடியாக தொடர்புகொண்டு அவர்களுக்கான லாபத்தைப் பெற்றுத்தந்தது. மேலும் பழைமையான சிக்கன்காரி பாரம்பரியக் கலையையும் பாதுகாத்தது.
ஆரம்பகால வாழ்க்கை அனுபவம்
நவாப்களின் நகரமான லக்னோவில் பிஸினஸ் பின்னணி கொண்ட நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார் மோகித். சிறு வயது முதலே மோகித், வணிக கலாச்சாரத்தில் ஊறிய அனுபவமுள்ளவர். அவருடைய தாத்தா, ஒரு பொற்கொல்லர். அதே துறையில் டிப்ளமோ பெற்ற மோகித், என்ன செய்கிறோம் என்பதைப் பற்றி பெரிதாக பேசிக்கொண்டதில்லை. இதேபோல, அவருடைய அத்தைகள் மற்றும் பக்கத்து வீட்டுப் பெண்களும் சிக்கன்காரி கலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். ஆனால் அதைப் பற்றிய குறைவான பெருமையையே வைத்திருந்தார்கள்.
இந்தப் பெண்கள் மற்றும் மோகித்தின் தாத்தாவும் செய்த வேலைகளுக்கு குறைந்தபட்ச வருமானம்கூட கிடைக்கவில்லை. அது சமூகத்தில் மதிப்பையும் மரியாதையையும் பெற்றுதரவில்லை. இந்த சிந்தனை மோகித்தை இடையூறு செய்துகொண்டிருந்தது. அந்தக் கலைஞர்களின் நல்வாழ்க்கைக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று முடிவெடுத்தார். அது அவர்களுக்கு மரியாதையையும் தரவேண்டும் என்று நினைத்தார்.
மோகித்தின் குழந்தைப் பருவம் முழுவதும் முயற்சிகளும் தோல்விகளும் நிறைந்தது. பள்ளியில் சேரும்போது குத்துச்சண்டை மற்றும் ஜூடோ கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருந்தார். ஜூடோவில் அவர் மாநில அளவில் கோல்டுமெடல் பெற்றவரும்கூட. ஆனால் அவருக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்தது. ஆனால் அவருக்கு ராணுவத்தில் சேரவும், விளையாட்டிலும் விருப்பம். மேல்நிலைப்பள்ளி படிப்பை முடித்ததும் மோகித் நேஷனல் டிபன்ஸ் அகாடெமியில் சேர்ந்தார். ஓர் ஆண்டுக்கு முன்பே அந்த தேர்வுக்குத் தயாரானார். எனினும், ராணுவக் கனவு நிறைவேறவில்லை. சிஏ படிப்பது சாத்தியமானது. ஆனாலும் மோகித் மனம் தளரவில்லை. சமூகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக இருந்தது.
வணிக பட்டப்படிப்பிற்குப் பிறகு ஐபிஎம்மில் அவருக்கு வேலை கிடைத்தது. இந்த வேலையின் மூலம் அதிக ஊதியம் கிடைத்தாலும், தனக்கென சொந்தமாக ஏதாவது செய்யவேண்டும் என்பதுதான் மோகித் மனதில் இருந்தது. ”ஏதாவது சொந்தமாக ஆரம்பித்து நிறைய பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணம் என் மனதில் ஒரு ஆழ்ந்த விருப்பம் இருந்தது. அதுவும் நிச்சயமாக அறவழியில் இருக்கவேண்டும்” என்று கூறுகிறார் மோகித். காசியாபாத் ஐஎம்டியில் எம்பிஏ .சேர்வதற்கு முன் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மிகச்சிறந்த வேலையில் இருந்து விலகினார்.
மோகித்தின் சமூக தொழில்முனைதல்
காசியாபாத் எம்ஐடியில் எம்பிஏ படித்துக்கொண்டிருக்கும்போது டாடா இன்ஸ்ட்டியூட் ஆப் சோஷியல் சயின்சஸில்(TISS) சமூக தொழில்முனைதல் பற்றிய பயிற்சிப் படிப்பு இருப்பதை மோகித் அறிந்தார். மக்கள் முன்னேற்றத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்து மோகித். டாடா இன்ஸ்ட்டியூட்டில் சமூக தொழில்முனைதல் பற்றிய படிப்பில் சேர்ந்தார்.
டாடா இன்ஸ்ட்டியூட்டின் பிளாட்டினம் ஜூப்ளி ஆண்டில் த்ரெட்கிராஃப்ட் இந்தியா (Threadcraft India) முதன்முதலாக சோதனை செய்யப்பட்டது. இன்ஸ்ட்டியூட்டின் ஒப்புதலுடன் அங்கே சிக்கன்காரி பொருட்களை ஸ்டால் அமைத்து விற்கத் தொடங்கினார் மோகித். அவரால் தயாரிக்கப்படாத அந்தப் பொருட்களுக்கு நன்றாக விற்பனையாகி நியாயமான லாபம் கிடைத்தது. அதில் கிடைத்த உத்வேகத்தில் சொந்தமாக உற்பத்திக்கான யூனிட் ஒன்றை 'த்ரெட்கிராஃப்ட்' இந்தியா என்ற பெயரில் தொடங்கினார்.
லக்னோவில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் 25 பெண்கள் எம்பிராய்டிங் பணியிலும் அவர்களை மேற்பார்வை செய்ய ஒரு டீம் லீடரும் இருந்தார். த்ரெட்கிராஃப்ட் மையம் அல்லது வீட்டில் இருந்தும் கைவினைக் கலைஞர்கள் எம்ப்ராய்டு செய்பவர்களும் பணியாற்றலாம் என்கிற வாய்ப்புகள் இருந்தன.
நுகர்வோருக்கும் கைவினைக் கலைஞர்களுக்கும் இடையிலான பாலமாக த்ரெட்கிராஃப்ட் செயல்பட்டது. ஆர்டர்களின் அடிப்படையில் துணி வாங்கப்பட்டது. பிறகு அது சாயம் ஏற்றப்பட்டு, இம்ப்ரிண்ட் செய்யப்பட்டு எம்பிராய்டர்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது. எம்ப்ராய்டிங் செய்யப்பட்ட துணிகள் பிறகு சலவைக்கு அனுப்பப்பட்டன. இறுதியாக, தயாரான துணி நுகர்வோர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. எம்பராய்டிங் செய்பவர்களுக்கு வழக்கமாக நிலையான ஊதியம் வழங்கப்பட்டது. ஐந்தே மாதங்களில் அவர்களுடைய வருமானம் இரண்டு மடங்கானது.
வேலையின் சிக்கலான நிலைமையில், கைவினைக் கலைஞர்களுக்கான இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன. தேவையெனில், அவர்களுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. இந்தப் பயணத்தில் த்ரெட்கிராஃப்ட் நிறுவனத்திற்கு டிபிஎஸ் வங்கி (DBS BANK) நிலைத்த ஆதரவை வழங்கியது.
கடந்த மூன்று ஆண்டுகளில் சமூகத்திற்குப் பங்களிக்கும் த்ரெட்கிராஃப்ட் போன்ற 30 புதிய தொழில் முயற்சிகளுக்கு டிபிஎஸ் வங்கி ஆதரவளித்துள்ளது. கார்பரேட் சமூகப் பொறுப்புக்கான டிபிஎஸ் வங்கியின் முயற்சியில் ஆசியா முழுவதும் சமூகத்திற்கு உதவியாக உள்ள தொழில்களுக்கு ஆதரவு அளித்துவருகிறது.
இந்தியாவில் டாடா இன்ஸ்ட்டியூட்டுடன் டிபிஎஸ் வங்கியும் இணைந்து சமூக தொழில்முனைதல் பயிற்சிகளை நடத்துகிறது. நிதி உதவி செய்வதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், டாடா இன்ஸ்ட்டியூட்டில் இருந்து வரும் புதுமையான தொழில் முயற்சிகளுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறது. தொடக்ககால நிறுவனங்களுக்கு முதலீடு திரட்டுதல் என்பது சவாலாக இருந்தாலும், டிபிஎஸ் வங்கி உதவியால் நிதி நெருக்கடியில் இருந்து அவை மீள்கின்றன.
தற்போது த்ரெட்கிராஃப்ட் இந்தியா வாடிக்கையாளர்களை இரு பிரிவுகளாக வைத்திருக்கிறது, பொட்டிக்ஸ் மற்றும் ஏற்றுமதியாளர்கள். மும்பையில் உள்ள சில பொட்டிக்குகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுடன் இணைந்து கூட்டாக செயல்படுகின்றன. பொட்டிக்குகள் தரும் ஆர்டர்களை த்ரெட்கிராஃப்ட் மையத்தில் வைத்து எம்ப்ராய்டர்கள் முடித்து தருகிறார்கள். ஏற்றுமதியாளர்களின் ஆர்டர்கள் பெறப்பட்டு கைவினைஞர்கள் முடித்து தந்ததும் நம்பிக்கையான முகவர்களிடம் வழங்கப்படுகின்றன. எந்தவித சுரண்டலும் அங்கே கிடையாது.
டிபிஎஸ் வங்கி தொடர்ந்து நிதியாகவும், வழிகாட்டியாக இருந்தும் த்ரெட்கிராஃப்டுக்கு உதவி வருகிறது. மேலும், அது வழக்கமாக கூட்டங்களை நடத்தி தொழிலில் சந்திக்கும் பிரச்சினைகளை அடையாளம் காண்கிறது.
சவால்களும் எதிர்காலத் திட்டங்களும்
த்ரெட்கிராஃப்ட் இந்தியா நிறுவனம் முக்கியமான துறையில் இருந்தாலும், அது பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. நிதி என்பது முக்கியமான அக்கறை, செலவுகள் அதிகமாக இருந்தபோதிலும், அவர்களுடைய வருவாய், பொட்டிக்குகள் மற்றும் ஏற்றுமதியாளர்களை நம்பியிருந்தது. நல்ல கைவினைக் கலைஞர்களை கண்டறிவதும் முக்கியமானது.
“இந்த தொழில்துறை நிறைவுற்றதாக இருக்கிறது. பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கமுடியாது. மெல்ல மாற்றங்கள் நிகழும்” என்கிறார் மோகித்.
சவால்களை வாழ்க்கையின் ஒரு பகுதியாக நினைக்கும் மோகித், இந்த தொழிலை சுயஉதவிக் குழுக்களிடம் கொண்டுசேர்க்க திட்டமிட்டுவருகிறார். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் ஏற்கெனவே கூட்டு இருக்கிறது. அவர்கள் சுயஉதவிக் குழுக்களுடன் சேர்ந்து செயல்படுகிறார்கள்.
இறுதிக்கட்டமாக, த்ரெட்கிராஃப்ட் இந்தியாவின் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து, கிடைக்கும் லாபத்தை கைவினைக்கலைஞர்களுடன் பகிர்ந்துகொள்ளும் கனவோடு இருக்கிறார்.