பதிப்புகளில்

GST- பொருட்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரி விகித பட்டியல் ஒரு தொகுப்பு!

YS TEAM TAMIL
13th Jun 2017
Add to
Shares
1.3k
Comments
Share This
Add to
Shares
1.3k
Comments
Share

வரும் ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து (01.07.2017) ஜி.எஸ்.டி.யை அதாவது சரக்கு மற்றும் சேவை வரி 1,211 பொருட்களுக்கு கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இவை வரி அடுக்குகளின் அடிப்படையில் வரி விதிக்கப்படும். இது 0 முதல் 28 சதவீதம் வரை இருக்கும். ஆடம்பர பொருட்களுக்கு கூடுதல் வரி வசூலிக்கப்படும். 

நீங்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கான வரிவிகிதம் பற்றிய ஒரு தொகுப்பு:

image


 வரி இல்லாத பொருட்கள் விவரம்:

* இறைச்சி, மீன்கள், சிக்கன், முட்டை, பால், தயிர், மோர், இயற்கை தேன், பழங்கள் மற்றும் காய்கறிகள்

* மாவு, பேசன், ப்ரெட், பிரசாதம், உப்பு, பொட்டு மற்றும் குங்குமம்

* ஸ்டாம்ப், சட்ட ஆவணங்கள், அச்சிடப்பட்ட புத்தகங்கள், செய்தித்தாள்கள், வளையல், கைத்தறி, ஹோட்டல் மற்றும் லாட்ஜ் (ரூ.1000 கட்டணத்துக்கு குறைவாக வசூலிக்கும்), சணல். 

0.25 சதவீத வரி :

* கரடுமுரடான வைரம் (Rough Diamonds)

3 சதவீத வரி

* தங்கம்

5 சதவீத வரி

* 1000 ரூபாய்க்கு குறைவான ஆடைகள்

* பேக் செய்யப்பட்ட உணவுவகைகள்

* 500 ரூபாய்க்கு குறைவான காலணிகள்

* கிரீம், கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர், ப்ராண்டட் பன்னீர், உறைந்த காய்கற்கள், காபி, டீ, மசாலா பொருட்கள், பிஸ்ஸா ப்ரெட், ரஸ்க், ஜெவ்வரிசி

* கெரோசின், நிலக்கரி, மருந்துகள், ஸ்டெண்ட், உயிர்காப்பு படகு, பயணச்சேவைகள் ( ரயில், விமான போக்குவரத்து) மற்றும் சிறு உணவகங்கள்

* ஆட்டுக்கறி

12 சதவீத வரி

* உறைந்த இறைச்சி வகைகள், வெண்ணெய், சீஸ், நெய், பேக் செய்யப்பட்ட உலர்ந்த பழங்கள் (dry fruits)

* மிருக கொழுப்பு, சாசேஜ், பழச்சாறுகள் மற்றும் நொறுக்குத்தீனிகள் 

* ஆயுர்வேத மருந்துகள்

* பல் பொடி, ஊதுவத்தி, வண்ணம் தீட்டும் புத்தகங்கள், படப்புத்தகங்கள் மற்றும் குடை

* தையல் மெஷின்

* செல் போன், ஏசி இல்லாத ஹோட்டல்கள், பிசினஸ் கிளாஸ் விமான டிக்கெட், உரங்கள், காண்ட்ராக்ட் பணி

* ரூ.1000 மேலான ஆடைகள்

18 சதவீத வரி

* ரூ.500 மேலான காலணிகள்

* பிடி இலை, பிஸ்கட், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, பாஸ்தா, கார்ன்ஃப்ளேக்ஸ், பேஸ்ட்ரீஸ் மற்றும் கேக் வகைகள்

* பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், ஜாம், சாஸ், சூப் மற்றும் ஐஸ் கிரீம்

* உடனடி உணவு மிக்ஸுகள், மினிரல் வாட்டர்

* டிஷ்ஷூ, கவர்கள், டாம்பூன், நோட்டு புத்தகங்கள்

* ஸ்டீல் பொருட்கள், ப்ரிண்டட் சர்க்யூட், கேமரா, ஸ்பீக்கர் மற்றும் மானிட்டர்கள்

* மதுபானம் வழங்கும் ஏசி ஹோட்டல்கள், தொலைதொடர்பு சேவைகள், ஐடி சேவைகள், ப்ராண்டட் ஆடைகள், மற்றும் நிதிச் சேவைகள்

 28 சதவீத வரி

* மதுபானம், பிடி, சிகரெட், சிகார் மற்றும் சூயிங்கம்

* வெல்லப்பாகு, கோகோ இல்லாத சாக்லெட் வகைகள்

* வாஃப்பல்ஸ் மற்றும் சாக்லெட் போட்ட வேஃபர்ஸ், பான் மசாலா, கேஸ் அடங்கிய குடிநீர் (aerated water), பெயிண்ட்

* டியோடரண்ட், ஷேவிங் கிரீம், ஷேவ் பிறகு பயன்படுத்தும் கிரீம், ஷாம்ப்பூ, டை, சன்ஸ்கிரீன் 

* வால்பேப்பர், செராமிக் டைல்ஸ்

* வாட்டர் ஹீட்டர், டிஷ் வாஷர், எடை மெஷின், வாஷிங் மெஷின்

* ஏடிஎம், வெண்டிங் மெஷின், வாக்யூம் க்ளீனர், ஷேவர், ஹேர் க்ளிப்பர்

* ஆட்டோமொபைல், மோட்டார் சைக்கிள், சொந்த பயன்பாட்டிற்கான விமானம்

* ஐந்து நட்சத்திர ஹோட்டலகள், ரேஸ் க்ளப் மற்றும் சினிமா


Add to
Shares
1.3k
Comments
Share This
Add to
Shares
1.3k
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக