பதிப்புகளில்

அடுத்த மாபெரும் புரட்சி? கல்வியை இலவசமாக்க, கான் அகாடமியுடன் கைகோர்க்கும் ரத்தன் டாடா

10th Dec 2015
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

இணையம் வழி கல்வி வழங்குவதில் முன்னோடியான லாபநோக்கில்லாத நிறுவனமாக விளங்கும் 'கான் அகாடமி', இந்தியாவுக்காக என்று பிரத்யேகமான இணைய பாடங்களை உருவாக்குவதற்காக, முன்னோடி அமைப்பான டாடா டிரஸ்ட்ஸ் -உடன் இணைந்துள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் இந்திய ஆசிரியர்களை நியமிப்பதுடன், இந்திய மொழிகளில் பாடங்களையும் உருவாக்கும். இவை பிரதானமாக என்.சி.இ.ஆர்.டி பாடங்கள் அடிப்படையில அமைந்திருக்கும்.

தரமான கல்வி பெற முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு, பள்ளிகளுக்கு, பாடங்களை உருவாக்குபவர்களுக்கு, மற்றும் இந்தியா முழுவதும் உள்ள கல்வி ஸ்டார்ட் அப்களுக்கு என, கல்வித்துறையில் இந்த ஒப்பந்தம், பெரும் புரட்சியை ஏற்படுத்தக்கூடியது என யுவர் ஸ்டோரி கருதுகிறது. மேலும் பல நூறு கோடி டாலர் மதிப்பு கொண்ட இந்திய கல்வித்துறையில் வெளிப்படையான தன்மை மற்றும் அணுகுதல் வாய்ப்பை உண்டாக்ககூடியதாகவும் இருக்கும். 

எந்த இடத்திலும் உலகத்தரமான கல்வியை இலவசமாக வழங்கும் தமது அமைப்பின் நோக்கத்தை நிறைவேற்ற இந்தியாவில் கல்வி ஸ்டார்ட் அப்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக கான் அகாடமி நிறுவனர் சல்மான் கான் கூறியுள்ளார்.

ரத்தன் டாடா,சல்மான் கான்

ரத்தன் டாடா,சல்மான் கான்


இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால் இந்த பாடங்கள் குறைந்த விலையிலான சாதனங்கள் வழியே இணையம் மூலமாக பிற வழிகளிலும் அணுக கூடியதாக இருக்கும். கான் அகாடமி ஏற்கனவே பல பள்ளிகளில் முன்மாதிரி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இது ஆசிரியர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ளவும் உதவும். லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கல்வி பயிற்றுவிக்க தொழில்முறையிலான நபர்களையும் கொண்டு வர உள்ளது. இந்தியாவில் தரமான கல்வி பெறுவது , ஏன்? கல்வி பெறுவதே சிக்கலாக இருக்கிறது. கான் அகாடமியின் பாடங்கள் ஆசிரியர்களுக்கு பதிலாக அமைவது அல்ல, மாறாக அவர்கள் மாணவர்கள் மீது அதிக கவனம் செலுத்தும் வகையில் சுதந்திரம் அளிப்பது.

சல்மான் கான் மற்றும் அவரது அணுகுமுறை புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் மாறுபட்டது என்று ரத்தன் டாடா தெரிவித்துள்ளார். அவரது அணுகுமுறை உலகை கல்லாமையில் இருந்து கல்வி அறிவு மிக்கதாக ஆக்குவதோடு, எங்கும் எப்போதும் எந்த நேரத்திலும் அறிவை போதிப்பதாக இருக்கிறது. இந்த அணுகுமுறை 109 பில்லியன் டாலர் மதிப்பிலான டாடா டிரஸ்ட்டின் வீச்சை இன்னும் அதிகமாக்கும்.

"ஒரு இந்தியனாகவும், உலகின் பிரஜையாகவும், இந்த கூட்டை துவக்குவதை பெருமையாக கருதுகிறேன். வருங்கால தலைமுறையினருக்கு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக இதை கருதுகிறேன்” என்றும் டாடா கூறினார்.

சல்மான் கான் பற்றி அறியாதவர்களுக்கு, எம்.ஐ.டி மற்றும் ஹார்வர்டில் பட்டம் பெற்ற இந்த முன்னால் ஹெட்ஜ் ஃப்ண்ட் அதிகாரி, வீடியோ மூலம் தனது உறவினர் பெண்ணுக்கு பாடம் நடத்த துவங்கியதும், அவருக்கான மாணவர்களின் எண்ணிக்கை பெருகியதால் மேலும் பல வீடியோக்கள் உருவாக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றப்பட்டு அதன் விளைவாக கான் அகாடமியை உருவாக்கினார். இது பற்றி வாய்மொழி வார்த்தைகள் பரவி, அவரது பாடங்கள் அல்ஜீப்ரா பாடத்தில் தேர்ச்சி பெற அல்லது கல்லூரி அனுமதி பெற அல்லது தங்கள் பிள்ளைகளுக்கு உதவியாக இருந்தது என பலவிதமாக நன்றி தெரிவிக்கும் கடித்தங்கள் அமெரிக்காவில் இருந்து மட்டும் அல்லாமல் உலகம் முழுவதிலும் இருந்து வரத்துவங்கின. “உலகின் இது போன்ற பாடங்களுக்கான தேவை பரவலாக இருப்பதை இது உணர்த்தியது” என்கிறார் கான். “தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ள உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் எந்த அளவு வேட்கை இருக்கிறது என்பதையும் இது உணர்த்தியது” என்கிறார் அவர் மேலும்.

கான் அகாடமியில் இப்போது 2,700 இலவச வீடியோக்கள் உள்ளன. 10 நிமிடங்கள் அளவிலான இந்த பாடங்கள் கணிதம், அறிவியல், கம்ப்யூட்டர் அறிவியல் மற்றும் தேர்வுக்கான தயாரிப்புகள் உள்ளிட்ட பிரிவுகளில் அமைந்துள்ளன. இந்த அகாடமி முதலில் ஆங்கிலம் வழி பாடத்தில் கவனம் செலுத்தியது. “எனினும் அதிக மக்கள் தொகை கொண்ட அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் அதிக தேவை உள்ள பகுதிகளை தேடிய போது இந்தியா தான் முதலில் நினைவுக்கு வந்தது. எனது குடும்பத்தின் வேர்களும் இங்கே இருக்கிறது என்பதால் இது என் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கிறது” என்கிறார் சில நாட்களுக்கு முன் துவக்கப்பட்ட கான் அகாடமியின் இந்திய மொழி இணையதளம் பற்றி குறிப்பிடும் சல்மான் கான். “இது ஒரு சிறிய துவக்கம் தான். அடுத்த 4-5 ஆண்டுகளில் மற்றும் வரும் பத்தாண்டுகளில் நாங்கள் இந்திய நிறுவனமாக விளங்க விரும்புகிறோம்” என்கிறார்.

முதல் கட்டமாக, இந்த கூட்டு முயற்சியானது நகர்புறங்களில் உள்ள நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு உதவும் கல்வி பாடங்களை உருவாக்கும். அடுத்த கட்டத்தில் பல இந்திய மொழிகளில் பாடங்கள் உருவாக்கப்படும். டாடா டிரஸ்ட்டுடனான ஒப்பந்தம் மூலம் முதலில் இந்திய மாணவர்களுக்கான பாடங்களை துணை விளக்கங்களுடன் உருவாக்கி பின்னர் மற்ற மொழிகளில் மூலப் பாடங்கள் உருவாக்கப்பட உள்ளன. இதன் மூலம் இந்திய சல்மான் கான்களும் அடையாளம் காணப்படலாம்.

இந்தியாவில் கல்வி பயில விரும்பும் ஒவ்வொருவரும் தனக்கு முக்கியத்துவம் மிக்க பாடத்தில் தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ளவும், அதிலும் தங்கள் மொழியில் பொருத்தமான பின்னணியில் பயிலவும் உதவ வேண்டும் என்பதே சல்மான் கானிம் விருப்பமாக இருக்கிறது. பாடங்களை கம்ப்யூட்டர் மற்றும் குறைந்த விலை போன்கள் மூலம் அணுக முடிய வேண்டும் என அவர் விரும்புகிறார்.

"உலகில் எந்த இடத்தில் இருப்பவருக்கும் உலகத்தரம் வாய்ந்த கல்வியை இலவசமாக வழங்குவது என்று எனது கொள்கை அறிக்கையை எழுதிய போது, இது சாத்தியம் இல்லாதது போல தோன்றியது. ஆனால் இப்போது 30 மில்லியன் பயனாளிகளை பெற்றுள்ள நிலையில் இந்த சந்தேகம் குறைந்து, சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளது. டாடா டிரஸ்ட்ஸை விட சிறந்த பங்குதாரர் கிடைத்திருக்க முடியாது” என்றும் சல்மான் கான் மேலும் கூறியுள்ளார்.

சல்மான் மற்றும் டாடா பரஸ்பர நண்பர்கள் மூலம் சந்தித்து மக்களுக்கு இலவச பாடங்களை அளிக்கும் பிரச்சனை பற்றி விவாதித்து அதன் விளைவாக இந்த கூட்டு முயற்சியை வந்தடைந்தனர்.

யுவர்ஸ்டோரி பார்வை

உலகம் முழுவதும் கான் அகாடமி ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பார்க்கும் போதும், அது எந்த அளவு அறியப்பட்டதாக ஆகியிருக்கிறது என பார்க்கும் போதும், இதுவரை நிரூபிக்கப்படாத மாதிரிகள், லாப நோக்கில்லாத வழிகளே தொழில்நுட்பம் சார்ந்த புத்தாயிரமாண்டு வழிகளை பயன்படுத்து ஆழமாகவும் அகலமாகவும் தாக்கத்தை ஏற்படுத்த சிறந்த வழி எனத்தோன்றுகிறது.

லாப எண்ணிக்கையைவிட தாக்கத்தின் அளவே முக்கியம். இந்த தாக்கம் உறுதியானவுடன் பலரும் நிதி அளிக்க முன்வருகின்றனர். வென்ச்சர் கேபிடல் முறை வருவாய் மற்றும் லாபத்தில் கவனம் செலுத்தும் போது ( இதில் எந்த தவறும் இல்லை) நோக்கம் மாறுபட்ட எதிர்பார்ப்புகளின் தாக்கத்துக்கு இலக்காகி, நோக்கம் நீர்த்துப்போகும் அபாயம் இருக்கிறது.

( குறிப்பு: ரத்தன் டாடா யுவர் ஸ்டோரியின் ஒரு முதலீட்டாளர்).

ஆக்கம் ஷரத்தா சர்மா | தமிழில் சைபர்சிம்மன்

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக