பதிப்புகளில்

துல்லியமான அறுவை சிகிச்சை: சிமுலேஷன் முறையில் டாக்டர்களுக்கு உதவும் தளம்!

4th Jun 2018
Add to
Shares
29
Comments
Share This
Add to
Shares
29
Comments
Share

மிமிக் (Mimyk) என்கிற ஸ்டார்ட் அப் சாந்தனு சக்கரவர்த்தி, பாலாஜி கோபால், நிதின் சிவசங்கர், ரகு மேனன் ஆகிய நிறுவனர்களால் 2016-ம் ஆண்டு நிறுவப்பட்டது. பெங்களூருவைச் சேர்ந்த இந்நிறுவனம் மருத்துவ தொழில்நுட்பப் பிரிவில் செயல்படுகிறது. எண்டோஸ்கோபி சிமுலேஷன் தளத்தில் சிறப்பு கவனம் செலுத்தும் நவீன சிமுலேஷன் தளங்களை உருவாக்குகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, கர்நாடகா அரசாங்கம் ஆகியவற்றிடமிருந்து ஒரு கோடி ரூபாய் நிதி உயர்த்தியுள்ளது.

மருத்துவப் பராமரிப்பைப் பொருத்தவரை பெரும்பாலான நோயாளிகள் மூத்த மருத்துவரிடம் ஆலோசனை பெறவே விரும்புவார்கள். நோயாளிகளின் கண்ணோட்டத்தில் இது சரியே என்றபோதும் ஜூனியர் மருத்துவர் ஒருவரின் கண்ணோட்டத்தில் இது முரண்பட்டதாகும். ஏனெனில் பயிற்சியே ஒருவரை திறமையானவராக மாற்றும். ஆனால் ஜூனியர் மருத்துவர்கள் பயிற்சி பெற நோயாளிகள் அனுமதிப்பதில்லை.

பெங்களூருவின் மல்லேஸ்வரத்தில் உள்ள SID-IISc-ஆல் இன்குபேட் செய்யப்பட்ட மிமிக் (Mimyk) என்கிற மருத்துவ தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் இத்தகைய கடினமான சூழலை எளிதாக்குகிறது. 

அறுவை சிகிச்சைகளுக்கான சிமுலேட்டர்களை உருவாக்கியுள்ளது. இதன் வாயிலாக நோயாளிகளுக்கு நேரடியாக அறுவை சிகிச்சை செய்யாமல் இந்த சிமுலேட்டர்களைக் கொண்டு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செயல்முறைகளைப் புரிந்துகொள்ளலாம். இந்நிறுவனம் மேம்பட்ட சிமுலேஷன் தளங்களை உருவாக்க ஹேப்டிக்ஸ், டிசைன், மெய்நிகர் உண்மை ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது.

அறுவை சிகிச்சைகள் திறம்பட துல்லியமாக மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்வதே இந்த ஸ்டார்ட் அப்பின் நோக்கமாகும். சாந்தனு சக்கரவர்த்தி, பாலாஜி கோபால், நிதின் சிவசங்கர், ரகு மேனன் ஆகியோர் வழக்கமான ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் அல்ல. இவர்கள் முதலில் விஞ்ஞானிகள். அதற்குப் பின்னரே மார்கெட்டிங் நிபுணர்கள். இவர்கள் IISc உடன் பத்தாண்டுகளுக்கும் மேலாக இணைந்துள்ளனர். ஒரு ப்ராஜெக்டில் இணைந்து பணியாற்றும்போது சந்தித்துக் கொண்டனர். 2015-ம் ஆண்டு சாந்தனு துளையிட்டு செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கான (invasive) சிமுலேஷன் தளம் ஒன்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அங்குதான் அவர்களது தொழில்முனைவுப் பயணம் துவங்கியது.

image


நிறுவனர்கள் பொறியியல் தொடர்பான திறனும் ஹார்டுவேர் மற்றும் சாஃப்டுவேர் திறன்களும் பெற்றுள்ளனர்.

சாந்தனு மெக்கானிக்கல் பொறியாளர். பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் பிஎச்டி முடித்துள்ளார். பிஎச்டி படிப்பிற்காக ஹேப்டிக்ஸ் குறித்தும் எண்டோஸ்கோபி சிமுலேடரை உருவாக்குவதில் உள்ள சிமுலேஷன் சார்ந்த பிரச்சனைகள் குறித்தும் படித்தார். மிமிக்கின் முதல் தயாரிப்பு அவரது ஆய்வின்போது உருவாக்கிய எண்டோஸ்கோபி சிமுலேட்டரை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும்.

பாலாஜி கோபால் இன்சுலின் டெலிவரி பயன்பாடுகளுக்கான மைக்ரோ பம்ப், குழாய் ஆய்வு செய்வதற்கான ரோபோ, MEMS உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு சாதனங்கள் சார்ந்து பணியாற்றியுள்ளார். நிதின் சிவசங்கர் IISc-ல் கணிணி அறிவியல் மற்றும் ஆட்டோமேஷன் துறையில் பிஎச்டி பெற்றுள்ளார். இவர் கம்ப்யூடேஷனல் டோபோலஜி மற்றும் அறிவியல்பூர்வமாக காட்சிப்படுத்துதல் (scientific visualization) பகுதிகளில் நிபுணர் ஆவார். ரகு மேனன் யூகேவில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ப்ராடக்ட் வடிவமைப்பு படித்துள்ளார். இவர் பயிற்சி பெற்ற பொறியாளர் மற்றும் ப்ராடக்ட் வடிவமைப்பாளர் ஆவார். இவர் பெங்களூரு CPDM, IISc-ல் பட்டம் பெற்றுள்ளார்.

”மருத்துவர்கள்; துளையிட்டு செய்யப்படும் அறுவை சிகிச்சைகளை சிமுலேஷன் வாயிலாக கற்றுக்கொள்ள உதவும் தயாரிப்பை உருவாக்க விரும்பினோம்,” என்றார் ரகு.

தயாரிப்பு எவ்வாறு செயல்படும்?

நிறுவனர்கள் முதலில் இரைப்பை, குடல் பிரிவில் தயாரிப்பை உருவாக்கத் தீர்மானித்தனர். இதற்கு சாந்தனுவின் ப்ராஜெக்டே முக்கியக் காரணம். அவர் தனது ஆய்விற்காக துளையிடும் அறுவை சிகிச்சைகளுக்கான காட்சிப்படுத்தும் தளத்தை உருவாக்க நிதினை சந்தித்தார். அப்போதுதான் பயிற்சிக்காக சிமுலேஷன் தளத்தை உருவாக்கலாம் என்பதை உணர்ந்தனர். 2015-ம் ஆண்டின் இறுதியில் தயாரிப்பின் வடிவமைப்பிற்காக ரகுவையும் பாலாஜியையும் இணைத்துக்கொண்டனர்.

தளம் வாயிலாக கணிணியில் போலியான உடல் அமைப்பு காட்சிப்படுத்தப்படும். இந்தத் தளம்தான் இவர்களது ப்ராடக்ட். அறுவை சிகிச்சைக்கான மேஜையில் உடல் அமைப்பு போன்ற ஒன்று காட்சிப்படுத்தப்படும். அத்துடன் ஒரு எண்டோஸ்கோப் இருக்கும். இதைக் கொண்டு மருத்துவர்கள் சிமுலேடட் உடலில் துளையிடலாம். இந்தத் தளம் குறித்த கூடுதல் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஹேப்டிக் சென்சார்கள் : மனிதர்கள் மற்றும் இயந்திரத்திற்கிடையேயான தொடர்பிற்கு உதவும் இடைமுகமாக ஹேப்டிக் அமைப்பு செயல்படும். ஒரு ஹேப்டிக் இடைமுகத்தில் ஒரு ஹேப்டிக் சாதனம் (சென்சார்கள் மற்றும் ஆக்சுவேட்டர்களுடன் கூடிய இயந்திர கட்டுப்படுத்தும் சாதனம்) மற்றும் மெய்நிகர் உலகின் தொடர்புகளை நிர்வகிக்கும் கட்டுப்பாட்டு அமைப்பைக் கொண்ட கணிணி ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

இம்மெர்சிவ் சிமுலேஷன் : இம்மெர்சிவ் மருத்துவ சிமுலேஷன் என்பது மெய்நிகர் உறுப்புகளுடனான ஹேப்டிக் தொடர்புகளுக்கான நெறிமுறைகள் மற்றும் மென்பொருளைக் கொண்டதாகும். அறுவை சிகிச்சைக்கான சிமுலேஷனைப் பொருத்தவரை கருவி மற்றும் திசு தொடர்புக்கான மாதிரியை உருவாக்கும் ஆராய்ச்சியில் கவனம் செலுத்தப்படுகிறது. எனினும் ஹேப்டிக் சிமுலேஷன் என்பது பயனரையும் உள்ளடக்கியது. ஆகவே தொடர்பில் நிலைத்தன்மையற்று காணப்பட்டால் ரேண்டம் ஆசிலேஷன் வாயிலாக பயனர் அதை நேரடியாக தெரிந்துகொள்ளலாம்.

ஒருங்கிணைக்கப்பட்ட வடிவமைப்பு : மருத்துவர்கள் நிஜ உலக சூழல்களில் பயன்படுத்தும் வகையில் ஆசிலோஸ்கோப் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைக்கப்பட்ட வடிவமைப்பு அணுகுமுறைக்காக பயனரின் கண்ணோட்டம் உள்ளிட்ட பல்வேறு டொமைனைச் சேர்ந்த வடிவமைப்பு நிபுணர்களையும் இக்குழு ஒருங்கிணைக்கிறது. 

image


வணிகம்

“ப்ராடக்டை உருவாக்க எங்களுக்கு மூன்றாண்டுகள் ஆனது,” என்றார் சாந்தனு.

”இந்த சிமுலேஷன்களை காட்சிப்படுத்த இயற்பியலும் நெறிமுறைகளையும் இணைத்து நிஜ உலகைப் போன்றே உருவாக்கவேண்டியிருந்தது. சிமுலேடட் ரன்வேயில் விமானஓட்டிக்கு பயிற்சியளிப்பது போன்றே இருந்தது. ஆனால் அதைக்காட்டிலும் இந்த முயற்சி சிக்கலானது. ஏனெனில் இது மனித உடல் சம்பந்தப்பட்டது,”

என்றார் இந்த ப்ராஜெட்டின் மென்பொருள் தொடர்பான முக்கிய நபரான நிதின். இந்த ப்ராடக்ட் ஹைதராபாத்தில் உள்ள ஏசியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கேஸ்ட்ரோஎண்ட்ராலஜியில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த மையம் ஆசியாவிலேயே எண்டோஸ்கோபி சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படும் மிகப்பெரிய மையமாகும்.

இந்தியா முழுவதும் உள்ள சுமார் 350 மருத்துவ கல்லூரிகளுக்கு இந்தத் தளத்தைக் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதே இந்தக் குழுவினரின் வணிக ரீதியான திட்டமாகும். எண்டோஸ்கோபி இயந்திரம் சில கோடி ரூபாய் மதிப்புள்ளதாகும். ஆனால் இந்த பயிற்சி-சிமுலேஷன் மாட்யூலுக்கு அந்தத் தொகையில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே செலவிட்டால் போதும். 

“இதனால் மருத்துவர்களின் திறன் மேம்பட்டு அதன் காரணமாக மருத்துவ பராமரிப்பும் சிறப்பிக்கும்,” என்றார் SID-IISc தொழில்முனைவு பிரிவின் தலைவர் சி எஸ் முரளி.

இந்தியாவில் மருத்துவ சாதனங்கள் துறை இந்திய அரசாங்கத்தால் 5.2 பில்லியன் டாலராக மதிப்பிடப்படுகிறது. இது 96.7 பில்லியன் மதிப்பு கொண்ட இந்திய ஹெல்த்கேர் துறையில் 4-5 சதவீதம் பங்களிக்கிறது. தற்போது இந்தியாவில் சுமார் 750-800 மருத்துவ சாதனங்கள் உற்பத்தியாளர்கள் உள்ளனர். சராசரி முதலீடு 17 கோடி ரூபாய் முதல் 20 கோடி ரூபாய் வரையாகும். சராசரி விற்றுமுதல் 45 முதல் 50 கோடி ரூபாயாகும்.

2025-ம் ஆண்டில் இந்திய மருத்துவ சாதனங்கள் சந்தை 50 பில்லியன் டாலராக வளர்ச்சியடையலாம் என இந்தத் துறையால் மதிப்பிடப்படுகிறது. தற்போது உலகளவிலான முன்னணி 20 மருத்துவ சாதனங்கள் சந்தையில் இந்தியா இடம்பெற்றுள்ளது. மேலும் ஜப்பான், சீனா, தென் கொரியா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவ சாதனங்கள் சந்தையில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

”பொறியியல் துறையில் செயல்படும் ஸ்டார்ட் அப்கள் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகிறது. ஆனால் தயாரிப்புகளைக் கொண்டு பணம் ஈட்டுவது குறித்து ஆய்வு செய்யவேண்டும்,” 

என்றார் ஐடியாஸ்பிரிங் கேப்பிடல் நிறுவனத்தின் நிறுவனர் நாகானந்த் துரைசாமி. இந்தியாவில் ஆராய்ச்சி சிறப்பித்து பிரபலமாகி வருகிறது. மிமிக் வருவாய் ஈட்டுவதற்கு முந்தைய நிலையில் உள்ளது. நிதியாண்டு 2019-ல் இந்த தயாரிப்பு சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்.

ஆங்கில கட்டுரையாளர் : விஷால் கிருஷ்ணா | தமிழில் : ஸ்ரீவித்யா

Add to
Shares
29
Comments
Share This
Add to
Shares
29
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக