பதிப்புகளில்

நம் நாட்டை திறன்மிகு தலைநகரமாக்க முற்படும் ’திறன் இந்தியா திட்டம்’- ராஜீவ் பிரதாப் ரூடி

ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கானோர் வேலைச் சந்தையில் நுழைகின்றனர். இந்நிலையில் வேலை வாய்ப்புகளற்ற நிலைக்கு திறன் இந்தியா திட்டம் பதிலாகுமா?

YS TEAM TAMIL
22nd Jul 2017
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

யுவர்ஸ்டோரி உடனான பிரத்யேக நேர்காணலில் மத்திய அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி திறன் இந்தியா திட்டத்தின் தேவை குறித்து பகிர்ந்துகொண்டார். ஒட்டுமொத்த நாட்டின் தேவையை எவ்வாறு இத்திட்டம் எதிர்கொள்ள உள்ளது என்றும் ஆட்டோமேஷன் காரணமாக ஏற்படும் சவால்களை எப்படி எதிர்கொள்ள உள்ளது என்றும் பகிர்ந்துகொள்கிறார்.

திறன் இந்தியா திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?

உலகமயமாதல், அறிவு, போட்டி ஆகியவை அதிகரித்து வரும் நிலையில் வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் அதிக திறன் கொண்ட தொழிலாளர்களின் தேவை நிலவுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, திறன் இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தினார். உலகிலேயே இந்தியாதான் திறனின் தலைநகராகத் திகழவேண்டும் என்பதும் நாட்டிலுள்ள இளைஞர்களுக்கு சிறப்பான வாழ்வாதாரத்தை வழங்கவேண்டும் என்பதுமே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

image


திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம் 2015-ம் ஆண்டு தேசிய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. பல்வேறு துறைகளில் காணப்படும் திறன் குறைபாடுகளால் நாடு சந்திக்கும் சவால்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. அடுத்த ஏழாண்டுகளில் (2022-ல்) 104.62 மில்லியன் தொழிலாளர்கள் புதிதாக இணையப்போவதாகவும் அவர்களுக்கு திறன் பயிற்சியளிக்கவேண்டும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது பண்ணை மற்றும் பண்ணை அல்லாத துறைகளிலிருக்கும் 298.25 மில்லியன் தொழிலாளர்களுக்கும் மறுபடியும் திறன் பயிற்சியளிக்கவேண்டியது அவசியமாகிறது.

திறன் இந்தியா திட்டம் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியா முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களது திறமைகளை மேம்படுத்திக்கொள்ள உதவும். இதைச் சாத்தியப்படுத்த ஒரே நோக்கத்திற்காக செயல்படும் அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைக்கப்படுகிறது.

தொழில் புரிவதற்குத் தேவையான திறன்களை அளிப்பதும் தொழில்முனைவிற்கான வாய்ப்புகளை அளிப்பதுமே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். சமீபத்திய தொழில்நுட்ப பயன்பாடுகள் குறித்து தரமான பயிற்சியளிப்பதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. இதை நிறைவேற்ற பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

வேலை தேடிக்கொண்டிருப்பவர்களில் மில்லியன் கணக்கானோர் ஒவ்வொரு வருடமும் சந்தையில் நுழைகின்றனர். இதனால் திறன் மேம்பாடு என்பது முக்கியத் தேவையாக மாறிவிட்டது. இதைச் சமாளிக்க அமைச்சகம் எவ்வாறு திட்டமிட்டுள்ளது?

நம் நாடு மிகப்பெரியது. மக்கள்தொகை, நிலவியல், பல்வேறு தொழில்கள் என பல விதங்களில் வேறுபட்டுள்ளது. இதை நாங்கள் நினைவில் கொண்டுள்ளோம். எந்தவிதமான நாடு தழுவிய திட்டமானாலும் அந்தந்த மாநிலங்கள் அல்லது குறிப்பிட்ட பகுதியின் சூழலையும் கருத்தில் கொண்டு அத்திட்டங்கள் அமைக்கப்படவேண்டும்.

image


பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா (PMKVY) போன்ற எங்களது திட்டங்கள் வாழ்வாதாரம், வேலை போன்ற பிரச்சனைகளை சமாளித்து எதிர்கொள்ள உதவுகிறது. திறன் அளிப்பதில் இருக்கும் தரம் சமரசம் செய்யப்படுவதை அனுமதிக்கக்கூடாது. ஏனெனில் அவ்வாறு செய்தால் இத்தகைய திட்டங்களின் நோக்கமே நீர்த்துப்போய்விடும்.

KPMG-யால் திறன் இடைவெளி ஆய்வுகள் நடத்தப்பட்டது. துறைகள் ரீதியாகவும் மாநிலங்கள் அளவிலும் திறனாளிகளுக்கான தேவையை கண்டறிவது அவசியமாகிறது. இந்தியா முழுவதும் அனைத்து துறைகளுக்குமான பயிற்சி மையங்கள் அமைக்கப்படவேண்டும். அப்போதுதான் பரவலாக அனைத்து இடங்களிலும் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கமுடியும். பல்வேறு இடங்களிலும் துறைகளிலும் பயிற்சியை முறையாக விநியோகிக்கவேண்டும். அவ்வாறு முறையாக மேற்கொள்ளப்பட்டால் பயிற்சிபெற்ற தொழிலாளர்களுக்கு வேலையின்மை பிரச்சனை இருக்காது. இதற்காக தேவை சார்ந்த மாடலை உருவாக்கும் திட்டமும் உள்ளது.

தொடர் கண்காணிப்பு முறையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இகோசிஸ்டத்தில் தரம் பராமரிக்கப்படும். டிஜிட்டல் முறையில் ஆன்லைன் ஆய்வு முறையை மேற்கொள்வதற்கும் முயற்சி எடுக்கப்படுகிறது. ஐடிஐ-க்களின் செயல்திறனை தரப்படுத்தும் முறையை நடைமுறைப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும் குறுகிய கால திறனளிக்கும் எங்களது பயிற்சி மையங்கள் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (NSDC) தலைமையில் இயங்குகிறது. துறைகளின் தற்போதைய தேவைக்கு ஏற்றவாறு பாடதிட்டம் மீண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வலிமையை கட்டமைத்து திறன் இந்தியா திட்டத்தின் வாயிலாக முழுப்பலனையும் பெறவேண்டும் என்பதே நோக்கமாகும்.

புதிதாக வேலை தேடுவோருக்காக எங்களது ஒருங்கிணைக்கும் திறனை பல்வேறு இடங்களில் விரிவுபடுத்தியுள்ளோம். துறைசார்ந்த இணைப்பையும் ஏற்படுத்துகிறோம்.

28 மாநிலங்களில் 200 PMKK மையங்கள் செயல்பட்டு திறன் சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை 514 மாவட்டங்களில் 556 மையங்களாக அதிகரிக்க உள்ளது. இன்று 13,000-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் ஐஐடி-க்கள் நவீனப்படுத்தப்பட்டு தொழில்நுட்ப உதவியுடன் சிறந்த தரத்திற்கு உயர்த்தப்பட்டு வருகிறது.

100 மையங்களில் யோகா வகுப்புகளும் 100 மையங்களில் ஜிஎஸ்டி பயிற்சி வகுப்புகளும் நடைபெறும். இந்தப் பயிற்சிகள் நாட்டின் சமீபத்திய சீர்திருத்தங்களை மனதில் கொண்டு திறன் இந்தியா திட்டங்களின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் தொழில்முனைவை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ப்ராஜெக்ட் இன்ஸ்டிட்யூட், பள்ளிகள், ஐடிஐ மற்றும் தொழில்முனைவு மேம்பாட்டு மையங்கள் போன்றவை திறன் இந்தியாவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களையும் (DTI) இந்திய தேசிய மையங்களையும் (IISCs) திறக்க MSDE திட்டமிட்டுள்ளது. நாட்டிலுள்ள ஓட்டுநர்களின் தேவையை எதிர்கொள்ளும் விதத்தில் DTI செயல்படும். அதேசமயம் இத்துறையில் தேசிய அளவில் வாய்ப்புகளை பெறும் விதத்தில் IISC செயல்படும்.

ஆகவே மக்கள் தங்களது திறனை மேம்படுத்திக்கொள்ள பயிற்சிபெறவும் வேலைக்காகவும் தங்களது சொந்த இடத்தை விட்டு வேறு பகுதிகளுக்கு இடம்பெயர வேண்டிய சூழல் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் விதத்தில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்பட்டது? நடைமுறைப்படுத்தப்பட்ட விகிதம் குறித்து பகிர்ந்துகொள்ளவும்.

சுதந்திரம் கிடைத்து எழுபதாண்டுகளுக்குப் பிறகு தற்போது திறன் இந்தியா திட்டத்தின் கீழ் திறன்கள் முறையாக அங்கீகரிக்கப்படுகிறது. இதனால் பிரதமர் நரேந்திர மோடியின் இலக்கை எட்டுவதற்கான சரியான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறோம். மத்திய அரசாங்கம் 12,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனாவிற்காக (PMKVY) ஒதுக்கியுள்ளது. பயிற்சிக்கு கட்டணம் செலுத்த இயலாத இளைஞர்களுக்கு திறன் பயிற்சியளிக்க இந்தத் தொகை பயன்படுத்தப்படும். குறிப்பிட்ட துறை தொடர்பான திறனைப் பெற உதவும்.

திறன் இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களின் வாயிலாக இதுவரை 1.17 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
image


PMKVY திட்டத்தின் கீழ் 28 லட்சத்திற்கும் மேலானோருக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. மேலும் 38 லட்சம் பேருக்கு ஐடிஐ இகோசிஸ்டத்தின் வாயிலாக பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பயிற்சி பெற்றோருக்கு அங்கீகாரம் வழங்குதல் (RPL) திட்டத்தின் கீழ் 4.62 லட்சம் பேருக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. இதில் பல ஆண்டுகளாக துறையில் நடைமுறையில் பெற்ற திறன்களுக்கோ அல்லது குடும்ப மரபு சார்ந்து பெறப்பட்ட திறன்களுக்கோ அங்கீகாரம் அளிக்கப்படும். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய தொழிற்பயிற்சி வளர்ச்சி திட்டத்தின் (NAPS) கீழ் ஆறு லட்சத்திற்கும் அதிகமானோர் துறையில் இணைந்துள்ளனர்.

திறன் அளிக்கவேண்டும் என்கிற எங்களது நோக்கத்தைத் தாண்டி வேலையில் இணைவதை உறுதிசெய்வதற்கு வேலைவாய்ப்பிற்கான கண்காட்சி அல்லது தொழிற்சாலைகளில் பயிற்சி போன்ற பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளோம். குறைந்தபட்சம் 70 சதவீதம் பணியிலமர்த்தப்படவேண்டும் என்பதை உறுதிசெய்வதற்காக தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (NSDC) மூலம் குறுகிய கால பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நடைமுறைப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் உங்களது குழு எப்படிப்பட்ட தடங்கல்களை சந்தித்தது?

திறன் இந்தியா திட்டம் துவங்கப்பட்டதால் திறன்கள் முறையாக அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதுமுள்ள திறன் வளர்ச்சிக்கான அனைத்து முயற்சிகளும் ஒன்றிணைக்கப்படுகிறது. விளைவு சார்ந்த திறன் படிப்புகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும். இப்படிப்பட்ட படிப்புகளை உள்ளடக்கிய ஒரு வலுவான இகோசிஸ்டத்தை உறுதிசெய்வதற்காக முதல் முறையாக ஒரு அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது.

நாங்கள் ஒவ்வொருவரிடமும் திறனுக்காக ஆர்வத்தை ஏற்படுத்த முயற்சித்துவருகிறோம். இதனால் திறன் சார்ந்த பயிற்சியானது வெறும் கூடுதல் படிப்பாக பார்க்கப்படாது. ஒருவர் செய்யும் பணியில்தான் மதிப்பு உள்ளதே தவிர அவர் கற்ற கல்வியில் அல்ல என்பதை மக்கள் உணரவேண்டும்.

சிறுவயதிலிருந்தே கடற்கரையில் மண்கோட்டை கட்டுவதானாலும் பில்டிங் ப்ளாக்குகள் கொண்டு வீடு உருவாக்குவதானாலும் கைகளால் இவற்றை செய்யவே நாம் கற்பிக்கப்பட்டோம். ஆனால் சற்று பெரியவர்களானதும் நமது சுற்றுச்சூழலாலும் நாம் பெறும் கல்வியினாலும் கட்டுப்படுத்தப்படுகிறோம். பயன்பாட்டு அறிவுதான் முக்கியமானது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஒருவரது திறனுக்கு எப்போதும் உரிய மரியாதை அளிக்கப்படும். திறன் வளர்ச்சி தங்களது குழந்தைகளின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றத்தை பெற்றோர்கள் கண்கூடாகப் பார்க்கலாம்.

பொதுவான நெறிகளை நடைமுறைப்படுத்த திறன்களை பொதுவான கட்டமைப்பிற்குக் கீழ் கொண்டுவருவது அவசியமாகும். பல்வேறு அமைச்சகங்கள் பல்வேறு திட்டங்களை பின்பற்றி வந்தன. பிறகு 2015-ல் MSDE அமைக்கப்பட்டது. திறனளிப்பதை ஒரு குடையின்கீழ் கொண்டுவரவும் பல்வேறு ஏஜென்சிக்களின் தலையீட்டை குறைக்கவும் முயன்றோம். உதாரணத்திற்கு தொழிலாளர் அமைச்சகம் DGT-ஐ எங்களிடம் மாற்றியது.

ரோபோட் மற்றும் இயந்திரங்கள் பணிகளைச் செய்யும் நிலையில் வருங்காலத்தில் ஆட்டோமேஷன் மிகப்பெரிய பிரச்சனையாக மாற வாய்ப்புள்ளது. இதை அமைச்சகம் எவ்வாறு சமாளிக்க திட்டமிட்டுள்ளது?

இன்றைய நிச்சயமற்ற பணிச்சூழலில் ஒருவர் தொடர்ந்து திறன் பெறுவதும், தன்னுடைய திறனை மேம்படுத்திக்கொள்வதும் வளர்த்துக்கொள்வதும் அவசியமாகிறது. அவ்வாறு செய்தால்தான் செய்துகொண்டிருக்கும் பணியை தக்கவைத்துக்கொள்ள முடியும். தற்போது துறையின் தேவை மற்றும் இளைஞர்களிடையே காணப்படும் திறன் ஆகியவற்றிற்கிடையே மிகப்பெரிய இடைவெளி காணப்படுகிறது. துறையின் சவால்களை சமாளிக்கவும் ஆட்டோமேஷனை எதிர்கொள்ளவும் உலகளவில் போட்டியிடும் அளவிற்குத் திறமையான தொழிலாளர்களை உருவாக்கவேண்டும். அதற்கு ஒரு நிலையான திறனளிக்கும் இகோசிஸ்டம் அவசியமாகிறது.

இந்தத் தொடர் மாற்றத்தை சமாளிப்பதற்காக எங்களிடம் பயிற்சிபெறுபவர்கள் பணிச் சந்தையில் நிலைத்திருப்பதற்குத் தேவையான பல்வேறு திறன்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். பன்முகத் திறன் கொண்டவர்களாக இருப்பதற்கான தேவை உள்ளது. இன்று நிறுவனத்தின் செக்யூரிட்டி, ரிசப்ஷனிஸ்ட் பணியையும் செய்யவேண்டிய சூழல் உள்ளது. அத்துடன் ஒருவர் தன்னை சிறப்பாக நிலைநிறுத்திக்கொள்ள அடிப்படிடையான தொழில்முனைவுத் திறனும் அவசியமாகிறது. இதனால் எங்களது ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தொழில்முனைவு சார்ந்த விஷயங்கள் அடங்கியிருப்பதை உறுதிசெய்கிறோம்.


ஆங்கில கட்டுரையாளர் : ஸ்நேஹ் சிங்

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக