வீட்டிலிருந்தே வேலை செய்பவர்கள் ஆரோக்கியத்தை இழக்காமல் இருக்க 14 ஆலோசனைகள்!

  By YS TEAM TAMIL
  November 25, 2015, Updated on : Thu Sep 05 2019 07:19:23 GMT+0000
  வீட்டிலிருந்தே வேலை செய்பவர்கள் ஆரோக்கியத்தை இழக்காமல் இருக்க 14 ஆலோசனைகள்!
  • +0
   Clap Icon
  Share on
  close
  • +0
   Clap Icon
  Share on
  close
  Share on
  close

  சமீபத்திய ஹெச்.பி லேப்டாப் விளம்பரத்தில் வருவது போல நடப்பது, பேசுவது என எப்போதும் காதுகளை மூடிக்கொள்ளும் ஜூக்பாக்ஸ் போன்ற ஹெட்செட்டுகளுடன் வலம் வருவது என தற்காலத்து ஸ்டார்ட் அப் தலைமுறை ஒரே மாதிரியாக அடையாளம் காணப்படுகிறார்கள். ஆனால் போட்டு உடைக்கவேண்டிய ஒன்று – வீட்டிலிருந்து பணியாற்றுவது என்பது வெறித்தனமாக வெற்றியை நோக்கிச் செல்வதுதான்.

  இது வரமா சாபமா இரண்டு பக்கமுமே சமமான கணம் இருக்கிறது என்பது தான் விவாதம், ஆனால் ஒரு விஷயம் மட்டும் தெளிவாகிறது- இது தவிர்க்கமுடியாதது, சுயமுதலீடு தொடக்க நிறுவனங்களுக்கு இது மிகவும் பிரபலமான விருப்பத்தேர்வு, அதாவது அவர்களின் செயல்பாடுகளை நவீனமயமாகவோ அல்லது டிஜிட்டல் முறையில் அதிகப்படுத்துவதற்கு உதவுகிறது.

  மாற்றத்திற்கான தொடக்கத்தை விரும்பும் பெண் தொழில்முனைவோரிடம் இது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான பெண்களுக்கு இரண்டு உலகிலும் சாதிப்பதற்கு இருக்கும் ஒரே ஆயுதம் இது என்று கூட சொல்லலாம்.

  வயிற்றிலும், மேஜையிலும் உருளைக்கிழங்கு வறுவல்களை வைத்துக்கொண்டு கண் இமையாமல் நீங்கள் 24 மணி நேரமும் பணியாற்றியும், அதே போன்று வாயில் குக்கீஸ்களோடு பால் அல்லது சோடாவை வைத்துக்கொண்டு, 10 அடி தூரத்திற்கு நெடிவீசும் உடலில் அடித்துக்கொள்ளும் வாசனை திரவியம் அடித்துக்கொண்டு மீசையை வருடியபடி பணியாற்ற வேண்டும் என்பதல்ல இதற்கு அர்த்தம். 

  இதற்காக தனி முயற்சி தேவையில்லை, உங்களுடைய விருப்ப நேரத்தில் உங்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்றலாம். இதை முயற்சித்துப் பாருங்கள்.

  image


  1. கடிகாரத்தில் இருக்கும் டிக் டாக்

  விருப்ப நேரம் என்பது ஒரு சாபம். அவை வானவில்லின் முடிவில் தோன்றும் கோட்டைப் போன்றது. முடிவில்லாத நிலம் எப்போதும் ஒருவருக்கு நன்மை செய்யாது. தாமதம் செய்தல் கொஞ்சம் கொஞ்சமாக உங்களது சமூக வாழ்க்கை, உங்கள் ஓய்வு நேரம், உங்களுக்கான நேரம், உங்கள் உடலின் நேரம், அதேபோன்று உங்கள் ஆரோக்கியம் என இந்த விஷயத்தில் நீங்கள் தான் இழப்பை சந்திக்கப் போகிறீர்கள். நேரத்தை சரியாக நிர்ணயிங்கள். அதற்கு ஏற்றவாறு பணிகளை அமைத்துக் கொள்ளுங்கள். அது எப்படி என்று தொடர்ந்து படியுங்கள்.

  2. சாட்டையை நீங்கள் பிடியுங்கள் ஒழுக்கம் தன்னால் வரும்

  உங்களது தலைமையிடத்தில் சலுகையில்லா வேலை நேரத்தை கேளுங்கள். வேலை நேரம் முடிவதை உங்கள் கைகடிகாரம் காட்டியவுடன், உங்கள் லேப்டாப்பை மூடிவிட்டு, உங்கள் டையின் நூலை இருக்கி மூடுங்கள், வேலை செய்யும் இடத்திலிருந்து வெடிக்கப்போகும் வெடிகுண்டு போல கிளம்புங்கள். நம்புங்கள், இது சாத்தியமாகும். ஆனால் டெட்லைனுக்கு பின்னால் இருக்கிறீர்கள் என்றால் விடியலுக்கு முன்பு எழுந்து வேலையை முடியுங்கள். உங்களுக்கு நீங்களே மனிதாபிமானம் உள்ளவராக நடந்துகொள்வதை பலர் கடுமையாக விமர்சிக்கலாம். ஆனால், இது யாரையும் காயப்படுத்தாது, உங்களைத்தவிர.

  3. நண்பர்கள், குடும்பத்தாரிடம் உங்களை கண்காணிக்கச் சொல்லுங்கள்

  யாராவது சுயகட்டுப்பாடு தொடர்பாக கிண்டல் செய்தால், ராணுவ வீரர், நிஞ்சா, பேட்மேன் போன்ற கதாப்பாத்திரங்களை உருவகப்படுத்திக் கொள்ளுங்கள். குழந்தைப் பருவத்தில் நடைபயிலும் காலத்திலிருந்து உங்களை நீங்கள் முழுவதும் நம்புவதாக உணருங்கள். இந்த இரண்டும் எளிதானவை எனவே இதை முன்னெடுங்கள். இது தொடர்பான உங்கள் சுமையை நண்பர்கள் மீது இறக்கிவையுங்கள். உங்களை சரியான பாதைக்கு இழுத்துவரும் உரிமையை அவர்களுக்கு கொடுங்கள். ’நான்கடவுள்’ என்று அவர்கள் நடந்துகொள்ளும் வகையில் அவர்களுக்கு உரிமை கொடுங்கள். எப்போதெல்லாம் உங்கள் டெட்லைனுக்கு பின்னே இருக்கிறீர்களோ அப்போது அவர்களுக்கு உங்களை விமர்சிக்க இன்னும் அதிக அதிகாரத்தைக் கொடுங்கள்.

  4. சும்மா இருந்தால்.. வெள்ளிக்கிழமை விரட்டும்

  மற்றவர்களை புண்படுத்தும் முறை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், இவை எதுவும் சரிப்பட்டுவராது. எல்லா வேலையையும் தேங்கிவைத்துக்கொண்டு, வாரவிடுமுறை நாட்களிலும் வேலை செய்யாதவராக இருந்தால் யாராலும் உங்களை காப்பாற்ற முடியாது. இப்படி இருந்தால், வெள்ளிக்கிழமையன்று டெட்லைன் கடவுள் உங்களைச் சும்மா விடமாட்டார். உங்கள் நண்பர்கள் விடுமுறை கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் போது, நீங்கள் உங்களை ரீசார்ஜ் செய்துகொள்ளும் வரை சனிக்கிழமை முழுவதும் தூங்கவேண்டியதுதான். பிறகு ஞாயிறு அன்று மதியம் விழித்தால், திங்களுக்கு இன்னும் 12 மணி நேரம்தான் உள்ளது என்பது உங்களை நரகத்திற்கு தள்ளும்.

  5. கோட்டையைக் கட்டுங்கள்

  உங்களுக்கு வசதியாக அருமையான அலுவலகத்தை வடிவமைக்க உறுதிகொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தை வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றுங்கள். தொடக்க நிலையில் இருப்பவர்கள் ஒரு சாக்பீஸைக்கொண்டு உங்களை உற்சாகப்படுத்தும் காட்சிகளை வரைந்துகொள்ளலாம். அல்லது வர்ணம் கொண்டும் தீட்டி பரவசப்படலாம். சிறப்பான வேலை நடக்க வீட்டிலேயே நல்லபணிச்சூழலை உண்டாக்குங்கள். ஒரு மேஜை, ஒரு சவுகர்யமான நாற்காலி மற்றும் ஒரு அழகான செடி, நீங்கள் அதைப் பார்க்கும் போதெல்லாம் வாழ்க்கை ஒரு புல்வெளி போன்றது என்பதை நினைவுபடுத்தும். நீங்கள் என்னைப் போல் ஒரு பத்திரிக்கையாளராக இருந்தால், அனைத்து கோணங்களிலும், மேஜை மற்றும் செடியை சுற்றி வடிவமைக்கலாம். பெரியளவில் யோசித்து உட்கட்டமைப்பைச் செய்வதைவிட, உங்களுக்கு சவுகரியமான உயரத்தில் லேப்டாப் வைக்க தேவையான நாற்காலியை வாங்கலாம். உங்களது முதுகை தாங்கி பிடிக்கும்வகையில் இருக்கைகளும், உணவு அருந்த தேவைப்படும் சிறியவகை இரும்பாலான இருக்கைகளும் வைத்துக்கொள்ளலாம். உங்களை கிண்டல் செய்கிறேனா என்ன?

  6. டி.வி இருக்கும் அறை வேண்டாம்

  அது வெரும் தொலைகாட்சி மட்டுமல்ல, அறையில் யானையை அடைத்துவைத்திருப்பதற்குச் சமம். உங்களது பணியறையில் தொலைக்காட்சி இருந்தால் இன்செப்சன் போன்ற திரைப்படங்களை உங்களை திசைமாற்றி யோசிக்கவைக்கும். தொலைக்காட்சி பெட்டியும், அலுவலக மேஜையும் ஒன்றுக்கொன்று எதிராக செயல்படும் சக்திகொண்டவை. எந்த சக்திக்கு கட்டுப்படுவது என்ற குழப்பம் உங்களுக்கு வரக்கூடும். இந்தப் போட்டியில் எது வென்றாலும், குழப்பம் உங்களுக்குத்தான்.

  7. நன்கு உடை அணியுங்கள்

  குளியல் எனக்காக அல்ல (நான் இந்த விவாதத்தை ஏதோ சாத்தான் பக்கம் திசை திருப்புவதாக நினைக்காதீர்கள், அப்படியானால் நான் உங்களை சமாதானம் செய்வேன் ஏனெனில் சென் போல நானும் வெளிப்புற தூய்மை தேவை என நினைப்பவன்) ஆனால் இந்த உலகம் தினமும் ஒரு வேளை குளிப்பது கட்டாயம் என நினைப்பதை நான் கண்டறிந்தேன். நீங்கள் வெளியே செல்லும் போது குளிப்பது உங்களது அன்றாட நிகழ்வில் இருந்தால், வீட்டில் இருந்து பணியாற்றும் போதும் அதையே பின்பற்றுங்கள். அது உங்களது தேவையை உணர்த்தும் மனநிலையை ஏற்படுத்திக் கொடுக்கும்.

  8. விழிகளுக்கு பயிற்சி கொடுங்கள்

  ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றும் வாழ்க்கை முறையால் உடலுக்கு ஏற்படும் விளைவுகளை தவிர்க்க சில விஷயங்களை இனி பார்ப்போம். நீங்கள் வீட்டிலிருந்தபடிவேளை செய்வது என்பது சாத்தியப்படுத்தியிருப்பது உங்களது பணியாளர்களை உங்களுடன் இணைக்கும் நவீன தொழிட்நுட்பம்தான். கணினி அல்லது மொபைல் திரைகளை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் நிலைதான் வேலையின் முக்கியமான ஒன்றாக இருக்கும். இந்த நிலையில், ஒரு 15 நிமிடங்களுக்கு ஒரு முறை ஜன்னல் வழியாக குறைந்தபட்சம் 500 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பொருளை உற்றுநோக்குங்கள். 

  image


  இது உங்களை அலெக்ஸாண்டர் போன்ற பார்வையுடையவராக வைத்திருக்கும். அதேபோல், தொடர்ந்து 15-20 முறை கண்களை சிமிட்டுவதன் மூலமும் படமெடுக்கும் கண்விழிப்படலம் காய்ந்து போகாமல் பாதுகாக்கலாம். உங்கள் குடும்பத்தினர் அல்லது அறை நண்பர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை சற்று கவனித்தாலும் உங்கள் கண்ணுக்கு ஓய்வாக இருக்கும்.

  9. முகத்தைக் கழுவுங்கள்

  குட்டித்தூக்கம் ஒரு குற்றம் என்றால், ஆம் நான் ஒரு தொடர் குற்றவாளி. ஆனால் வாழ்க்கை நீங்கள் மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பைத் தருகிறது. முகத்தைக் கழுவும் போது அதிலும் குறிப்பாக கண்ணில் தண்ணீரை அடித்துக் கழுவும் போது எதிர் வினையை அதே நேரம் உணர்வீர்கள். அது தொடர்ந்து திரையை பார்ப்பதனால் ஏற்படும் கண்ணைக் கூசும் வெளிச்சத்தில் இருந்து உங்கள் கண்களை மென்மைபடுத்தும், ஆனால் தூக்கத்தை உங்களிடம் இருந்து விரட்டுவது பேய் ஓட்டுவதைப் போன்றது.

  10. நடந்து கொண்டே பேசுங்கள்

  என்னைபார்ப்பவர்கள் நான் தொலைபேசியோடு அணிவகுப்பு செய்கிறேன் என்று சொல்வார்கள். 21 ஆம் நூற்றாண்டின் அதிசயமாக ஒயருடன் கூடிய தொலைப்பேசியை எனது குடும்பம் பார்த்தாலும், வீடுமுழுவதும் அளாவிக்கொண்டே பேசும் வகையில் ஒயர்லெஸ் தொலைப்பேசியை விரும்புகிறேன். இந்த வசதி வேலை பார்க்கும் நிலையில் நிஞ்சாவைப் போன்ற தீராத சக்தியைக் கொடுக்கும் என்று உணர்கிறேன். அதிகளவில் தொலைபேசி உரையாடல் என்பதை தவிர்க்கமுடியாத பணிச்சூழலில் காலார நடப்பதை விரும்புகிறேன். நடந்துகொண்டு பேசுவதன் மூலம் எனது மூட்டுகள் வலுவடைகின்றன.

  11. கீழே செல்லுங்கள்

  ஜோக் அடித்து மகிழுங்கள், ஆனால் மகிழ்ச்சி உங்களுடையதாக இருக்கட்டும். உங்கள் இல்ல அலுவலத்தில் பணியாற்றும்போது, ஈகோ அல்லது சுயநலம் அதிகம் உடைய பணியாளர்கள், தலைமை, வாடிக்கையாளர்களை தவிர்ப்பது நலம். அப்போதுதான் நிம்மதி குடிகொண்டிருக்கும். கண்டதையும் இணையத்தில் தேடிக்கொண்டிருக்காமல், விளையாட்டுக்கான ஷூக்களைப் போட்டுக்கொண்டு ஒரு நடைவிடுங்கள். இது உங்களின் மனநிலையை மென்மையாக்க உதவும். நடைபாதையுடன் கூடிய வீட்டுத்தோட்டம் எனது வளாகத்தில் உள்ளது. அதில் எதாவது செய்துகொண்டு எனது ரோல்மாடலைத்தேடி எனக்குள் பேசிக்கொண்டிருப்பேன். ஆனால் பூங்காவில் நடப்பது போன்ற ஒரு உணர்வு கிடைக்கும். (நான் என்ன செய்தேனென்று பாருங்கள்)

  12. மனிதர்களை நேரில் சந்தியுங்கள்

  நீங்கள் ஒரு சந்திப்புக்கான முறையை தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைத்தால், ஸ்கைப் அல்லது இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளாமல் எப்போதும் நேரிலேயே சந்தித்து பேசுங்கள் என்றே நான் சிபாரிசு செய்வேன். இதுதான் உங்களின் வேலையை சரியான பாதையில் எடுத்துச் செல்லும்.

  13. கேட்ஜெட்களுக்கு விடைகொடுங்கள்

  உங்களது லேப்டாப், மொபைல், டேப், தொலைக்காட்சி என அனைத்தையும் சோகம் வழியும் முகத்தோடு பார்த்துக்கொண்டிருப்பதை கைவிடுங்கள். அப்படி போர் அடிக்கும்பட்சத்தில் பிளே ஸ்டேஷனின் முன்பு ஆர்வத்துடன் அமர்ந்து விளையாடுங்கள். உங்களின் சுயமரியாதையை பரிசோதிக்கும் அவற்றை விட்டொழியுங்கள். அவைகளைவிட நீங்கள் மேம்பட்டவர். 8 மணி நேரமாக வெறுமனே கணினித்திரையை நேராக வெறித்து பார்த்துக்கொண்டிருப்பது வேண்டாம். மனிதனின் கருவிழிப்படலத்தை அகற்றிவிட்டு செயற்கை விழிப்படலத்தை மாற்றுவதை தவிர்ப்பதே முக்கியமான அறிவுரை.

  image


  14. அறிவுரைகளை பின்பற்றுங்கள்

  எனது தாத்தாவுடன் தினமும் மதிய உணவு சாப்பிடவே வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இது போன்ற அற்புதமான விஷயங்களை ஒருவர் ஏன் அனுபவிக்காமல் இருக்கவேண்டும்?

  ஆக்கம்: பிஞ்சால் ஷா | தமிழில்: கஜலட்சுமி மகாலிங்கம்