பதிப்புகளில்

சென்னையில் மைக்ரோசாஃப்ட் இந்தியாவின் மேகக்கணினி சேவையை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்!

Induja Raghunathan
30th Sep 2015
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

மைக்ரோசாஃப்ட் (இந்தியா) நிறுவனம் சென்னையில் அமைத்துள்ள உயர் அளவிளான தரவு மையங்கள் (Hyper Scale Data Center) வாயிலாக மேகக் கணினிய (Cloud Computing) சேவைகளை தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமை செயலகத்தில், துவக்கி வைத்தார்.

தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திடும் நிறுவனங்களை தமது கணினிசார் தேவைகளுக்கான உட்கட்டமைப்பினை ஏற்படுத்திட பெருமளவு நிதி செலவிட வேண்டியுள்ளது. மேலும், அவர்தம் தரவுகளை சேமிக்கவும், பாதுகாத்திடவும் வெளிநாட்டில் அமைந்துள்ள சில தரவு மையங்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலையும் உள்ளது. நம் நாட்டில் செயல்படும் நிறுவனங்களில் தரவுகள் நம் நாட்டிலேயே சேமித்து பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோட்பாடு நடைமுறையில் உள்ளது. என்வே, நிறுவனங்கள் அதிக செலவின்றி, தேவைக்கேற்ப மெருகேற்றி அளித்திடும் வகையில் நம் நாட்டிலேயே அமைந்த ஒரு முறையான தரவு மையத்தில் பாதுகாத்திட மேகக் கணினியம் பெரிதும் உதவுகிறது. இம்முறையில் பயனீட்டாளர்கள் அவர்தம் பயன்பாட்டிற்கேற்ப கட்டணத்தை செலுத்தி மேகக் கணினிய வசதியைப் பயன்படுத்திக் கொள்ள இயலும். இதன் மூலம் இந்நிறுவனங்கள் கணினிசார் கட்டமைப்புக்கென செலவிடும் நிதி பெருமளவில் குறைந்து, அவர்தம் செயல்திறனை உயர்திட வழிவகுக்கும்.

image


இந்நிலையை கருத்தில் கொண்டு, மைக்ரோசாஃப்ட் (இந்தியா) நிறுவனம், இந்தியாவிலேயே முதன்முறையாக மூன்று தரவு மையங்களை அமைக்கவும், அவற்றின் மூலமாக மேகக் கணினிய சேவைகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவில் அமைந்துள்ள மூன்று தரவு மையங்களில் ஒன்றான சென்னை தரவு மையத்தில் மேகக் கணினிய சேவைகளை வழங்கத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை இந்நிறுவனம் சென்னையில் ஏற்படுத்தியுள்ளது.

இப்புதிய மேகக் கணினிய தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் மாணவர்களுக்கான மேகக் கணினிய திட்டத்தை விரைவாக செயல்படுத்திடவும், மாநிலத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கும் பெரிதும் உதவும்.

இளைஞர்களின் தொழில்முனையும் திறனை மேம்படுத்தும் வகையிலும், அவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையிலும், மாணவர்கள் மற்றும் இளம் தொழில்முனைவருக்கான மேகக் கணினி சார்ந்த சேவைகள் (Cloud Computing Services) மற்றும் இணைய பதிவேற்ற சேவைகள் (Web-hosting services) ஆகியவை குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் என்று கடந்த மாதம் தமிழக முதல்வர் சட்டமன்றப் பேரவையில் அறிவித்திருந்தார்.

மேற்கண்ட அறிவிப்பின் தொடர்ச்சியாக, இம்மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் (Global Investors Meet 2015) மைக்ரோசாஃப்ட் (இந்தியா) நிறுவனம், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்த்ததில் (MoU) கையெழுத்திட்டது. இந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையிலும், மைக்ரோசாஃப்ட் (இந்தியா) நிறுவனத்துடன் ஏற்படுத்தியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவும், மைக்ரோசாஃப்ட் (இந்தியா) நிறுவனம் முதற்கட்டமாக தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 தொழில்முனைவோர்களுக்கு அந்நிறுவத்தின் மென்பொருள் உருவாக்கத் தளத்தை (Software Development Platform) மூன்று மாத காலத்திற்கு கட்டணம் ஏதுமின்றி வழங்குவதோடு, மேகக் கணினியம் மற்றும் நகர்தன்மை (Cloud Computing and Mobility) தொழில்நுட்பம் குறித்த பயிற்சியை தொழில்முனைவருக்கு அளிக்கவுள்ளது.

இந்த நிகழ்சிசியின் போது, தமிழக முதல்வர் கூறுகையில், "நாங்கள் உங்கள் சிறப்பான இந்த பணியைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். உங்களை எங்கள் மாநிலத்துக்கு வரவேற்கிறோம், மேலும் தமிழக அரசு தனது முழு ஒத்துழைப்பும் உங்களுக்கு அளிக்கும் என உறுதி அளிக்கிறேன்" என்று மைக்ரோசாஃப்ட் (இந்தியா) நிறுவன மேலாண்மை இயக்குனரிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தமிழக தொழில்நுட்பவியல் துறை அமைச்சர், தலைமை செயலாளர், தமிழ்நாடு அரசு ஆலோசகர் மற்றும் மைக்ரோசாஃப்ட் (இந்தியா) நிறுவன மேலாண்மை இயக்குனர் திரு.கரண் பஜ்வா கலந்து கொண்டனர் என தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக