3 கோடி ரூபாய் வீட்டை வாங்கிய 6 வயது சிறுமி: எப்படி தெரியுமா?

கையில் என்ன தான் பணம் இருந்தாலும் சொந்த வீடு கனவும் மட்டும் நனவாகாமல் திண்டாடும் பலரையும் பார்த்திருப்போம். ஆனால் ஆஸ்திரேலியாவிலே 6 வயது சிறுமி ஒருவர் கோடிக்கணக்கான மதிப்புள்ள வீட்டை தன் பெயரில் வாங்கி உலகத்தையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
0 CLAPS
0

கையில் என்ன தான் பணம் இருந்தாலும் சொந்த வீடு கனவும் மட்டும் நனவாகாமல் திண்டாடும் பலரையும் பார்த்திருப்போம். ஆனால், ஆஸ்திரேலியாவிலே 6 வயது சிறுமி ஒருவர் கோடிக்கணக்கான மதிப்புள்ள வீட்டை தன் பெயரில் வாங்கி உலகத்தையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

குழந்தைகள் பெற்றோர்கள், வீட்டிற்கு வரும் உறவினர்கள் கொடுக்கும் பணத்தை உண்டியலில் சேமித்து வைப்பதை பார்த்திருப்போம். அப்படி சேமித்து வைத்த பணத்தில் இருந்து சைக்கிள், பாவாடை, சட்டை, பொம்மைகள் என தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்வார்கள்.

ஆனால், 6 வயது சிறுமி ஒருவர், தான் சேர்த்து வைத்த பணத்தில் 3 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை வாங்கிய உலகையே ஆச்சர்யத்துடன் திரும்பி பார்க்கவைத்துள்ளார்.

3 கோடி ரூபாய் வீட்டை சொந்தமாக்கிய சிறுமி:

‘எலி வலையானாலும் தனி வலை’ வேண்டும் என்ற பழமொழிக்கு ஏற்றார் போல், மக்கள் அனைவருமே தங்களுக்கு என சொந்தமாக ஒரு வீட்டை கட்டிக்கொள்ள வேண்டும் என ஆசைப்படுவது உண்டு. அதுக்காக தான் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தின் ஒரு பகுதியை சேமித்து வைக்கின்றனர்.

அப்படி சேமிக்கும் பணத்தை வைத்து எங்கு, எப்போது வீடு வாங்குவோம் என்பதை யாராலும் கணிக்கவே முடியாது. ஆனால், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது 6 வயதிலேயே 3 கோடியே 60 லட்சம் மதிப்பிலான வீட்டை தனது பெயரில் வாங்கி சொந்த வீட்டு கனவை அசல்டாக நிறைவேற்றியுள்ளார்.

மெல்போர்ன் நகரில் சொத்து முதலீடு ஆலோசகராக இருப்பவர் கேம் மெக்கலன், இவருக்கு ருமி, லூசி என்ற இரண்டு மகள்களும், டஸ் எனும் மகனும் உள்ளனர். மூத்த மகளான ருமி தனது தந்தையின் பணிக்கு உதவி செய்வது வழக்கம். அப்படி அவர் செய்யும் வேலைகளுக்கு தந்தை கொடுக்கும் பணத்தையும், அவளது செலவிற்காக கொடுக்கப்படும் பணத்தையும் சிறுக, சிறுக சேமித்து வைத்து வந்துள்ளார்.

அப்படி தான் சேமித்து வைத்திருந்த பணத்திலிருந்து 6 லட்சத்து 71ஆயிரம் டாலர் மதிப்பிலான வீட்டை விலை கொடுத்து வாங்கியுள்ளார். தென் கிழக்கு மெல்போர்னில் க்ளைட் என்ற புறநகர் பகுதியில் பாதி மட்டுமே கட்டி முடிக்கப்பட்ட வீடு மற்றும் நிலத்தை இந்திய மதிப்பில் 3 கோடியே 60 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார்.

அப்பாவுடன் சொத்து முதலீடு சம்பந்தமான பணிகளில் ஈடுபட்டு வந்ததால் ஆஸ்திரேலியாவில் அசுர வளர்ச்சி அடைந்து வரும் ரியல் எஸ்டேட் துறையை சரியாக கணித்துள்ள சிறுமி ருமி, தான் வாங்கியுள்ள வீட்டின் மதிப்பு இன்னும் 10 ஆண்டுகளில் இருமடங்காகும் என்றும் கணித்து, பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

தொகுப்பு: கனிமொழி

Latest

Updates from around the world