பதிப்புகளில்

உலக சுகாதார அமைப்பின் முதல் இந்திய துணை இயக்குனரான டாக்டர் சௌமியா சுவாமிநாதன்

YS TEAM TAMIL
6th Oct 2017
Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share

புகழ்பெற்ற மருத்துவ ஆராய்ச்சியாளர் மற்றும் சுகாதார கொள்கை நிபுணருமான டாக்டர்.சௌமியா சுவாமிநாதன், உலக சுகாதார அமைப்பின் (WHO) துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எச்.ஐ.வி மற்றும் காசநோய் பிரிவின் முன்னணி ஆய்வாளர் சௌமியா, இவர் தற்பொழுது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் சுகாதார அமைச்சகத்தின் சுகாதார ஆராய்ச்சி பிரிவில் செயலாளராய் உள்ளார்.

image


Firstpost-ன் செய்தியின் படி, உலக சுகாதார அமைப்பின் வெளியீடு;

“காசநோய் மற்றும் எச்.ஐ.வி நோயின் உலகளாவிய அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சியாளர் சௌமியா, மருத்துவத் துறையில் 30 வருட அனுபவத்தை கொண்டு வருகிறார்,” என குறிப்பிட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதனோம் செவ்வாய்கிழமை அன்று டாக்டர் சௌமியாவின் நியமனத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தனது மருத்துவ படிப்பை புனேவில் உள்ள Armed Force மருத்துவ கல்லூரியில் முடித்தார். அதனை தொடர்ந்து தனது மேல் படிப்பை AIIMS கல்லூரியில் முடித்தார் செளமியா.

குழந்தை நல மருத்துவாரான இவர் 250 மேற்பட்ட வல்லுனர்கள் மதிப்பாய்வு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். டாக்டர் சௌமிய UNICEF, UNDP மற்றும் உலக வங்கியில் ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்துள்ளார். அதுமட்டுமின்றி இதுவரை மருத்துவ துறையில் அவரது பங்களிப்புக்காக 9 விருதுகள் பெற்றுள்ளார்.

இந்திய பசுமை புரட்சியின் தந்தை என கருதப்படும் எம்.எஸ் சுவாமிநாதனின் மகள் இவர். தற்பொழுது அவருக்கு நியமிக்கப்பட்டு இருக்கும் பதவி உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது மிக உயர்ந்த நிலையாகும். இந்த உயர்ந்த நிலையை பிடிக்கும் முதல் இந்தியர் என்ற பெருமை இவரைச் சேரும்.

லைவ்மின்டின் செய்தியில், டாக்டர் டெட்ரோஸ் உலக சுகாதார அமைப்பின் மற்ற உறுபினர்களை நியமித்த பிறகு கூறியது, 

“இந்த குழு 14 நாடுகளை பிரதிநிதித்துவம் செய்கிறது, இதில் உலக சுகாதார அமைப்புடன் பிராந்தியாங்கள் அடங்கும். மேலும் இதில் 60 சதவீதம் பெண்களே உள்ளனர், இதன் மூலம் சமத்துவமும் உலக பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்,” என்றார்.

கட்டுரை: Think Change India

Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share
Report an issue
Authors

Related Tags