பதிப்புகளில்

புதிய முயற்சிகளை தொடர்ந்தால் தொழிலில் வெற்றி நிச்சயம்!

13th Aug 2015
Add to
Shares
91
Comments
Share This
Add to
Shares
91
Comments
Share

''எந்த ஒரு விஷயத்தையும் சரியாக வேலை செய்யவைப்பதில் எனக்கு ஒரு தனி விருப்பம் எப்போதுமே இருந்தது. இஞ்சினியரிங்கில் நான் படித்து கற்றுக்கொண்ட விஷயங்கள் எல்லாமே எனக்கு ஒரு புது ஆர்வத்தை தான் தந்தது.'' என்று உற்சாகமாக பேசினார் ஸ்ரீவித்யா ஸ்ரீனிவாசன். கோவையில் பிறந்து வளர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த ஸ்ரீவித்யா ஸ்ரீனிவாசன் இன்று அமாகி (Amagi) நிறுவனத்தின் இணை நிறுவனராக ஒரு அசாதாரண வளர்ச்சியை அடைந்திருக்கிறார் என்றே சொல்லலாம். கோயம்புத்தூர் அருகில் சிறிய கிராமம் ஒன்றில், ஆரம்பக்கல்வியை தமிழ் வழியிலும், நடுநிலை வகுப்புலிருந்து ஆங்கில வழியிலும் பள்ளி படிப்பை முடித்த ஸ்ரீவித்யாவின் பெற்றோர்கள் கோவையின் அருகே இருக்கும் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ''ஆரம்பத்தில், ஆங்கிலத்தில் பாடங்களை படிப்பது கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தாலும், 11, 12ம் வகுப்பில் சரளமாக ஆங்கிலத்தில் பாடங்களை படிக்க கற்றுக்கொண்டேன்.'' என்கிறார் ஸ்ரீவித்யா.

கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் பி.டெக் படித்த ஸ்ரீவித்யாவிற்கு தன்னுடைய கல்லூரி பாடங்களை, அதிக மதிப்பெண்கள் பெறும் நோக்கில் மட்டும் கற்கவில்லை. ''கல்லூரி பாடங்களை சுயமாக கற்று கொள்வதில் தான் எனக்கு விருப்பம். சாஃப்ட்வேர் ப்ரோக்ராம், ஒரு குறிப்பிட்ட தகவலை சேகரித்து காட்டும் டேட்டா ஸ்ட்ரக்சர் போன்ற விஷயங்களை படிக்கும் போது அவ்வளவு ஆனந்தமாக இருக்கும். அதனால் அதிக ஈடுபாட்டுடன் கல்லூரி பாடங்களை கற்றேன்.'' என்கிறார் ஸ்ரீவித்யா. பிடெக் முடித்த ஸ்ரீவித்யா "டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ்" என்ற நிறுவனத்தில் முதன்முதலில் பணியில் சேர்ந்தார். தன்னுடைய வேலை எப்படிபட்டது, எந்த தொழில்நுட்பத்தில் செய்ய வேண்டும் என்று மேலாளர் அளித்த விவரங்கள் ஸ்ரீவித்யாவை முழுவதுமாக கவர்ந்தது. ''1996ம் ஆண்டில் என்னுடைய முதல் சம்பளம் 6000 ரூபாய் க்கான காசோலை வாங்கினேன். அது தான் எனக்கு மிகவும் பெருமையாக இருந்த தருணம். தவிர, இவ்வளவு பணமா என்ற ஆச்சரியத்தையும் சேர்த்து எனக்கு தந்தது." என்று தன் உணர்ச்சியை பகிர்கிறார். ஸ்ரீவித்யா.

ஸ்ரீவித்யா ஸ்ரீனிவாசன்

ஸ்ரீவித்யா ஸ்ரீனிவாசன்


சாஃப்ட்வேர் ப்ரோகாமரிலிருந்து நிறுவன முதலாளி ஆன கதை

டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட் ஸில் எலக்ட்ரானிக் டிஸைன் தளத்தில் சாஃப்ட்வேர் கருவிகளை வடிவமைத்த ஸ்ரீவித்யா, நண்பர்களுடன் சேர்ந்து தன்னுடைய 24ம் வயதில் இம்பல்ஸாஃப்ட் (Impulsesoft) என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்தியாவில் அப்போது அதிகப்படியான சாஃப்ட்வேர் கருவிகள் வடிவமைக்கும் மார்கெட் இல்லாததால், இந்த நிறுவனத்தை தொடங்கினார்கள்.

''பல சாஃப்ட்வேர் கருவிகளை வடிவமைத்த அனுபவம் இருந்ததால், புதிதாக ப்ளூடூத் ப்ரோட்டோகால் அடுக்கை வடிவமைக்க நாங்கள் திட்டமிட்டுருந்தோம். ப்ளூடூத் பற்றிய முழு விவரங்களை தெரிந்துக்கொள்ள ஒரு இரவில் மட்டுமே கிட்டத்தட்ட 1000 பக்கங்களை படித்தேன்.'' என்று நினைவுகூர்ந்த ஸ்ரீவித்யா 1998ம் ஆண்டில் இம்பல்ஸாஃப்ட் நிறுவனத்தை தொடங்கினார்.

திறமையான ஆட்களை வேலைக்கு அமர்த்துவது, பிஸினஸை சரியாக வளர்க்க தேவையான சின்ன சின்ன விஷயங்களை தெரிந்துகொள்வது என்று இம்பல்ஸாஃப்ட் தனக்கு ஒரு அழகிய பயணமாகவே இருந்தது என்று பகிர்ந்துகொள்கிறார். தவிர, மோட்டோரோலா, சீமென்ஸ், சோனி எரிக்ஸன், டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் போன்ற நிறுவனங்களுடன் வர்த்தக தொடர்பு அதிகமாக ஏற்பட்டு நல்ல வளர்ச்சியையும் இம்பல்ஸாஃப்ட் நிறுவனம் கண்டது என்பது குறிப்பிடத்தக்கது. பல முதிலீட்டாளர்கள் சேர்ந்து நடத்தப்பட்டு வந்து இந்த நிறுவனம் 2006ம் ஆண்டில் நாஸ்டாக் (NASDAQ) வர்த்தகத்தில் இருக்கும் சிர்ஃப் (SIRF) என்ற நிறுவனம் இம்பல்ஸாஃப்ட் நிறுவனத்தை வாங்கியது.

ஒரு முழுமையான பிஸினஸ் மாடலை உருவாக்குவது, அதை சரியாக மார்கெட்டில் கொண்டு சேர்ப்பது, என்ற பல விஷயங்களை இம்பல்ஸாஃப்ட் ஸ்ரீவித்யாவிற்கு கற்றுத்தந்தது. இன்ஜினியரிங் மூலம் சில விஷயங்களுக்கு வித்தியாச தீர்வுகளை என்னால் தரமுடிந்தது." என்று பெருமையோடு ஸ்ரீவித்யா கூறுகிறார்.

இம்பல்ஸாஃப்ட் அமாகியாக (Amagi) மாறிய கதை

இம்பல்ஸாஃப்ட்டை, சிர்ஃப் நிறுவனம் வாங்கிய பின், ஸ்ரீவித்யாவின் டெக் டீம் மீண்டும் ஒரு நிறுவனத்தை தொடங்கினார்கள். மூன்று அடிப்படை கொள்கைகளை வைத்து கொண்டு அமாகி என்ற நிறுவனத்தை அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டனர். .

1. இந்தியாவில் இருக்கும் நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப தீர்வுகளை வழங்க வேண்டும். இம்பல்ஸாஃப்ட்டின் மூலம் பல சர்வதேச நிறுவனங்களுக்கு கருவிகளை தந்தாலும், அதே கருவிகள் இந்தியாவில் எவ்வாறு சாத்தியம் என்பது சவால்.

2. தொழில்நுட்ப துறையில் ஒரு பெரிய பிஸினஸை நிறுவ வேண்டும்.

3. இந்தியாவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் ஒரு பில்லியன் டாலர் நிறுவனமாக மாற்ற வேண்டும்.

''மீடியா துறையில் ஒரு புது நிறுவனமாக மாறும் போது, சில விஷயங்களுக்கு தீர்வுகளை சரியான வகையில் அமைப்பது இங்கு ஒரு சவால்.'' என்று விளக்குகிறார் ஸ்ரீவித்யா. ''மீடியா ஒளிபரப்பை பிரதான பிஸினஸாக வைத்திருப்பதால், அமாகியின் படைப்புகள் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான நேயர்களை சேருவதால், நூறு சதவிகிதம் சரியானதாக இருக்க வேண்டும். இதற்காக 24 மணிநேரமும் தொடர்ந்து உழைப்பதால், ஒரு புது வித அனுபவமும் கிடைக்கிறது." என்று சிலாகித்துக்கொள்கிறார் ஸ்ரீவித்யா.

image


பெண் தொழில்முனைவோர்கள் சாதரணமாக சந்திக்ககூடிய சவால்கள்

ஒரு லாபகரமான நிறுவனத்தை நடத்தும்போது, வரும் பாராட்டுகளுக்கு இணையாக சவால்களும் இருப்பதுண்டு. ஒரு ஓட்டப்பந்தய வீரருக்கு, களத்தை பார்த்ததும் இருக்கும் உச்சகட்ட துடிப்பு தான் ஸ்ரீவித்யாவிற்கு தன்னுடைய வேலையிலும் இருக்கிறது. கடினமான விஷயங்களுக்கு ஒரு புது விதமான தீர்வை தருவதில் அதிக ஆர்வம் கொண்டதால், ஸ்ரீவித்யாவிற்கு தன்னுடைய பணிகளை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்யமுடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், தன்னுடைய இந்த துறையில் நிறைய சிக்கல்கள் மற்றும் சவால்களை சந்தித்திருப்பதாக பகிரும் போது, ''பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் போதும், நேரத்தை சரியாக பிரித்து வேலைபார்ப்பதிலும் எனக்கு பிரச்னை இருந்தது. தவிர, அமாகியில் வேலை பார்ப்பதிற்கும், என்னுடைய குழந்தைகளுடன் நேரம் செல்விடுவதிலும் என்னால் சரியாக கவனம் செலுத்தமுடியாமல் இருந்தது. தொழில் என்று வரும் போது மற்றவர்களுக்கு என்னுடைய பங்கு எங்கு இருக்கிறது என்றே தெரியாமல் போய்விடும். இதெல்லாம் சரியாக கவனித்து செயல்பட்டால் போதும், பின் எல்லாம் சுலபமாக இருக்கும்.'' என்கிறார் ஸ்ரீவித்யா.

இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் இருக்கும் பெண்கள், தங்களுடைய ஆர்வத்தை இன்னும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீவித்யா அறிவுறுத்துகிறார். வேலையை ராஜினாமா செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. குடும்பம், வேலை என்று இருபக்கத்து பிரச்னைகளையும் சேர்த்து சந்திக்க முடியாமல் இருக்கும் போது இத்தகைய முடிவுகளை பெண்கள் எடுப்பதுண்டு என்று ஸ்ரீவித்யா கூறுகிறார். ''பொறுமையோடு வேலைகளை சிரத்தையாக செய்தால், இந்த பிரச்னைகளை சுலபமாக கடந்துவிடலாம்." என்றும் தெரிவிக்கிறார்.

உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள்

எல்லா பெண்களையும் தங்களை சில கேள்விகளை கேட்டுக்கொள்வது நல்லது. என்ன செய்கிறோம், செய்யும் வேலை தனக்கு பிடித்தமானதாக இருக்கிறதா, சரியான இடத்தில் அந்த வேலையை செய்கிறோமா என்று ஒரு சின்ன சுய பரிசோதனை செய்துகொள்வது அவர்களுடைய தன்னம்பிக்கையை வளர்க்கும். ''பிடித்த வேலையை செய்யும் போது, அது வெறும் வேலையாக மட்டும் இல்லாமல், வாழ்க்கையாகவும் மாறிவிடும்.'' என்று ஸ்ரீவித்யா கூறும் வார்த்தைகள், தொழிலில் ஆர்வம் இருப்பவர்களுக்கு ஒரு புது நம்பிக்கையை நிச்சயமாக தரும்.

Add to
Shares
91
Comments
Share This
Add to
Shares
91
Comments
Share
Report an issue
Authors

Related Tags