பதிப்புகளில்

நாட்டின் சுகாதாரத்தை கட்டமைக்கும் ஒரு பாகிஸ்தானிய வங்கியாளர்

YS TEAM TAMIL
20th Dec 2015
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

இ-காமர்ஸ் மோகம் இன்னும் உயிருடன் இருக்கிறது. அதன் வெற்றி என்பது இந்தியாவில் மட்டுமல்ல, பாகிஸ்தானிலும் தொடர்கிறது. 'தவாய்' (dawaai), என்ற ஆன்லைன் மருந்தகத்தை முதலீட்டு வங்கியாளரான பர்ஹான் கித்வாய் தொடங்கினார். அது மற்ற ஆன்லைன் சில்லறைக் கடைகளைப் போலத்தான். பிரச்சினைகள் நிறைந்த பாகிஸ்தானில் இ-காமர்ஸில் ஒரு மேஜிக்கை நிகழ்த்தியது.

பெரும்பாலான ஆசிய நாடுகளைப் போலவே பாகிஸ்தானிலும் நடுத்தர வர்க்கம் வளர்ந்து கொண்டிருக்கிறது. இங்கு சுகாதார அமைப்பு அதிக செலவுமிக்க தனியார் நிறுவனங்கள் மற்றும் குறைவான அரசு சுகாதார மையங்கள் என இரண்டாக பிரிந்திருக்கிறது.

வால்ஸ்ட்ரீட் ஜேர்னலின் அறிக்கையின்படி நாட்டின் சுகாதாரத்திற்கான அடிப்படை வசதிகளுக்கு (பொது சுகாதாரத்திற்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியில்) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.8 சதவிகிதமே நிதி ஒதுக்கப்படுகிறது. ஒப்பீட்டு அளவில் இந்தியா 1.2 சதவிகிதம் நிதி ஒதுக்கீடு செய்கிறது.

image


மீண்டும் வேர்களுக்கு

பாகிஸ்தானில் உள்ள பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளை சமாளிப்பதற்காக, நிறைய இளம் தொழில்முனைவோர் ஆன்லைன் பார்மஸிகள் மற்றும் ஹெல்த் தொழில்நுட்ப அமைப்புகளையும் நடத்துகிறார்கள். இவற்றில் ஒன்றுதான் கராச்சியை தலைமை இடமாகக் கொண்ட தவாய்.

இதன் நிறுவனர் மற்றும் சிஇஓவான பர்ஹான், பாகிஸ்தானுக்குத் திரும்பி தவாய் தொடங்குவதற்கு முன்பு லண்டன் மற்றும் நியூயார்க் நகரில் ஏழு ஆண்டுகளாக முதலீட்டு வங்கியாளராக இருந்தவர். பாகிஸ்தான் போன்ற மக்கள் அதிகம் உள்ள நாட்டில் புதிய வாடிக்கையாளர்களைக் கொண்ட வணிகத்தை உருவாக்கமுடியும்.

வளர்ந்துவரும் மத்தியதர வர்க்கம் பணத்தை செலவு செய்வார்களா? இந்த 200 மில்லியன் மக்கள் நல்ல தரமான வாழ்க்கையை வாழ்வதற்கு பணத்தை செலவு செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள். இந்த எண்ணம் மனத்தில் வந்தவுடன், பர்ஹான் ஏதாவது பயனுள்ள பொருளாக கிடைக்கவேண்டும் என்று நினைத்தார்.

தொழிலும் அதன் இலக்குகளும்

பார்மாசூட்டிக்கல் தொழில்துறை யாரால் தொடப்படாமல் இடையூறின்றி இருந்தது. முதலில் பூட்ஸ் அல்லது சிவிஎஸ் போன்ற நிறுவனங்கள் பாகிஸ்தானுக்குள் மருந்துகளை கொண்டுவந்தன. இருந்தாலும், குறைந்த லாபத்தில், வரையறுக்கப்பட்ட விலையில், பெருமளவில் கட்டுப்படுத்தப்பட் சந்தை ஆகிய காரணங்களுடன் பர்ஹான் தொழிலுக்குள் வந்தார்.

வசதியும் தரமும் உள்ள ஒருங்கிணைந்த பார்மஸி சேவையை அளிக்கவேண்டும் என்பதே இலக்கு. சில்லறை மருந்து விற்பனையில் தவாய் புதிய விஷயத்தைக் கண்டுபிடித்தது. நம்பிக்கையான மருந்துகளை நோயாளிகளின் வீடுகளுக்கு மிக விரைவாக கொண்டு சேர்த்தது. இந்த யோசனை, ஏற்கெனவே உள்ள பார்மா சட்டங்களை கடைபிடித்துக்கொண்டே பாகிஸ்தானில் பார்மஸி தொழிலை வடிவமைத்தது.

“கொள்முதல், சேமிப்பு மற்றும் விநியோகம் உள்ளிட்ட எங்களுடைய மருந்து தயாரிப்புகளை தரமான பார்மஸிஸ்ட்டுகள் மட்டுமே கையாண்டார்கள். அவர்கள் எல்லாம் காலை 9.30 – இரவு 9.00 (திங்கள் முதல் சனிக்கிழமை வரை) மட்டுமே சர்வீஸ் செய்தார்கள். ஒரு போன் செய்தால் எங்களுடைய மதிப்பு மிகுந்த வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் மருந்துகளை வழங்கினோம்” என்கிறார் பர்ஹான்.

ஆன்லைன் ஸ்டோராக இருப்பதில், மிகப்பெரிய சாவலை தவாய். பிகே (dawaai.pk) எதிர்கொண்டது. அதன் பிரிஸ்கிரிப்ஷன், நுகர்வோரின் சுகாதாரம் மற்றும் ஓடிசி (ஓவர் த கவுண்டர்) தயாரிப்புகளுக்காக இரண்டு தனித்தனியாக போல்டர்களை (well.pk) வைத்திருந்தது. இ சில்லறை ஸ்டோர்களில் பிரிஸ்கிரிப்ஷன் மருந்துகளை விற்பதில் உள்ள வரம்புகளால் இது முதன்மையாக உந்தித்தள்ளப்பட்டது.

தொழில்நுட்பம் திறமையாக இல்லையென்றால் ஆன்லைன் ஸ்டோர் போட்டியிடமுடியாது என்று கூறுகிறார் பர்ஹான். எனவே அவரது குழுவினர் அமைப்பை அப்டேட் செய்துகொண்டிருக்கிறார்கள். போர்டலுக்கு வரும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் மென்மையான பரிவர்த்தனை மற்றும் அனைத்து நேரங்களிலும் சிறந்த சேவையைப் பெறுவதை உறுதிப்படுத்துகிறோம் என்கிறார் அவர்.

சந்தையும் குழுவினரும்

“எதிர்பாராதவிதமாக, பாகிஸ்தானில் இணையத்தை வைத்துள்ள பெரும்பாலான இ-சில்லறை வணிகர்கள் அது ஆர்டர்கள் பிடிப்பதற்கான ஒரு வசதி என்றே கருதுகிறார்கள். சில புதிய தொழில்நுட்பங்களில் நாங்கள் பணியாற்றுகிறோம். அவை சர்வதேச இ-வணிக வெளியில் பெரும் திருப்புமுனையாக இருக்கும். எங்களுடன் நுகர்வோர்கள் வைத்திருக்கும் தொடர்பை மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தையம் ஷாப்பிங் அனுபவத்தையும் ஏற்படுத்தும்” என்கிறார் பர்ஹான்.

தவாயின் மாதாந்திர வருவாய் வளர்ச்சி கடந்த ஆண்டில் 23 சதவிகிதமாக இருந்தது. சந்தை நுண்ணறிவை சார்ந்து இந்தக் குழு வருவாயை கணக்கிடுகிறது. அவர்கள்தான் பாகிஸ்தானில் மிகப்பெரிய ஆன்லைன் சுகாதார ஸ்டோராகவும் நாட்டிலேயே மாபெரும் இ-வணிக தொடக்க நிறுவனமாகவும் இருக்கிறார்கள்.

இந்தக் குழுவில் உள்ள பட்டதாரிகள், அவர்களுடைய வேலையின் முதல்கட்ட அனுபவம் தொழிலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இங்கு வெளிப்படையான வேலைச் சூழல் இருக்கிறது. இங்கு அதிகாரம் இல்லை. யார் வேண்டுமானாலும் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். எல்லாவற்றையும் தாண்டி சிந்திக்கலாம் என்றும் கூறுகிறார் பர்ஹான். வேலையில் பல வருட அனுபவம் உள்ளவர்களுக்குப் பதிலாக, சுயமாக உற்சாகத்துடன் பணியாற்றும் குழுவினர் முன்னணிக்கு வருவதற்கான வாய்ப்பை பர்ஹான் ஏற்படுத்தி இருக்கிறார்.

இந்த நிறுவனம் அதிகாரப் படிநிலை அற்ற வடிவத்தைக் கொண்டிருக்கிறது. இங்குள்ள ஒவ்வொரு துறையும் தனியான இலக்குகளுடனும் ஒரேமாதிரியான தரத்துடன் செயல்படுகின்றன.

மேலாளர்கள் தொடங்கி பார்மஸிஸ்ட்டுகள் வரையில் அவர்கள் கருத்துக் கூற எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. ஒவ்வொரு நாள் பிரச்சினைகளும்கூட ஆலோசிக்கப்பட்டு நிறுவனம் வளர உதவுகின்றன. அதனால் தினசரி நடைமுறைகள் எளிதாக்கப்படுவதோடு, நுகர்வோர்களுக்கு நல்ல முறையில் சேவை செய்யமுடிகிறது.

பாகிஸ்தானில் தொடக்கநிலை நிறுவனங்கள்

பாகிஸ்தானில் தொடக்கநிலை நிறுவனங்கள் பற்றி பேசுகிறபோது, அது குழந்தைப் பருவத்திலேயே இருக்கிறது என்று சொல்கிறார் பர்ஹான். அதிகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் விற்கும் நிறுவனங்களில் தரமான பட்டதாரிகளை சேர்ப்பது இதனால் சிரமமாக இருக்கிறது.

தனிப்பட்ட முறையிலான விற்பனையும் தொழிலுக்கு சாதகமாக உள்ளது. இதுவரை அவர்களிடம் உள்ள ஸ்டார் குழுவினரால் தாக்கத்திற்கு ஆளாகும் தங்களுடைய உறுப்பினர்கள் அடுத்தகட்டமாக ஹெல்த் அமேசானை பாகிஸ்தானில் உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“அமெரிக்காவின் வீஸி, தென்னாப்பிரிக்காவின் சூப்பர் ஏஞ்சல், இங்கிலாந்தின் மெக்கன்ஸி போன்ற நிறுவனங்கள் எங்களிடம் முதலீடு செய்துள்ளார்கள். இப்போது நாங்கள் நிதி திரட்டலுக்கான நெருக்கமான கலந்துரையாடல்களை நடத்திவருகிறோம்” என்று உற்சாகமாகப் பேசுகிறார் பர்ஹான்.

லாகூரில் செயல்படும் ஆன்லைன் சலூன் டிஸ்கவரி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான தளமான பியூட்டிஹூக்டு (BeautyHooked) நிறுவனரான சாஹர், யுவர் ஸ்டோரியிடம் பேசும்போது, பாகிஸ்தானில் இ-வணிக சந்தையின் மதிப்பு 2017ம் ஆண்டு 600 மில்லியனை எட்டும். தற்போது ஆண்டுக்கு 30 மில்லியன் அளவுக்கு ஆன்லைன் கொள்முதல் நடந்துவருவதாக குறிப்பிடுகிறார்.

கராச்சி பங்குச்சந்தை குறியீட்டு எண் கடந்த ஆண்டுகளில் 40 சதவிகித வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இந்தியாவில் செய்திருந்தால் என்ன வெற்றி அடைந்திருக்குமோ அதையே பாகிஸ்தானிலும் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு அதிக வலிமை இருக்கிறது.

ஆக்கம்: SINDHU KASHYAP | தமிழில்: தருண் கார்த்தி

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக