பதிப்புகளில்

இளம் சமூகத்தினரையும் கிராமப்புற அடிநிலை மக்களையும் பயணத் திட்டங்கள் மூலம் இணைக்கும் ’Empathy Connects’

18th Dec 2017
Add to
Shares
75
Comments
Share This
Add to
Shares
75
Comments
Share

பயணம் மேற்கொள்வதில் இருக்கும் மகிழ்ச்சியே அலாதிதான். பயணம் எல்லையை விரிவடையச் செய்யும். நமது எண்ணங்களுக்கு சவால்விடும். புதிய மனிதர்களை சந்திக்க வாய்ப்பளிக்கும்.

பயணத்தின் மீதான விருப்பம் சமூக நோக்கத்துடன் இணைந்தால் பயணமானது மெருகூட்டப்பட்டு பல அரிய அனுபவங்களை உருவாக்கும். அத்தகைய அனுபவத்தை வழங்க விரும்புகின்றனர் நித்தேஷ் சச்சன் மற்றும் நிதின் தகத். பொறியாளர்களான இவர்கள் இருவரும் சமூக தொழில்முனைவில் ஆர்வம் கொண்டவர்கள்.

image


இவர்கள் 2016-ம் ஆண்டு ’எம்பதி கனெக்ட்ஸ்’ (Empathy Connects) என்கிற நிறுவனத்தை துவங்கினர். இந்நிறுவனம் தனிநபர்களை இந்தியா முழுவதும் உள்ள சமூக வளர்ச்சி இயக்கங்களுடன் கலாச்சார நிகழ்வுகளுடனும் இணைக்கும் வகையில் அனுபவம் நிறைந்த பயண திட்டங்களை ஏற்பாடு செய்கிறது.

”அடிநிலை மக்களின் யதார்த்தமான வாழ்க்கையை அனைவரும் உணரவேண்டும் என்பதே எங்களது நோக்கம். பயணம், பயிற்சிகள், கலாச்சார நிகழ்வுகள் ஆகியவை வாயிலாக ஊக்கமுள்ள தனிநபர்கள் இந்த நிகழ்வுகளில் இணைக்கப்படுகின்றனர்,” என்றார் நிறுவனர் மற்றும் சிஇஓ நித்தேஷ்.

பேக்கேஜிற்கான வழக்கமான கட்டணம் 5000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையாகும். இது பங்கேற்பாளர்களுக்கு மூன்று பிரிவுகளைச் சார்ந்த பிரச்சனைகள் குறித்த நேரடி அனுபவத்தை மூன்று முதல் நான்கு நாட்கள் கால அவகாசத்தில் வழங்குகிறது. 

image


அந்த முக்கிய பகுதிகளாவது:

சமூக வெளிப்பாடு : இந்த திட்டமானது சமூக இயக்கங்களுடனும் உள்ளூர் தலைவர்களுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

கலாச்சார வெளிப்பாடு : கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்க்கை முறை குறித்த புரிதலை வழங்குகிறது. தங்குமிட வசதி, உள்ளூர் திருவிழாக்கள், பாரம்பரியம், நடனம், இசை, உணவு ஆகியவை இந்த பயணத் திட்டத்தில் அடங்கும்.

தனிநபர் வெளிப்பாடு : தனிமனிதரின் லட்சியம், பணி சார்ந்த இலக்குகள், சவால்கள், ஒருவரது ஆர்வத்தையும் பொறுப்புகளையும் சமன்படுத்தும் கலை உள்ளிட்ட பகுதிகளில் இளைய சமுதாயத்தினருக்கு எழும் கேள்விகளுக்கான விடையை ஆராயும் விதத்தில் குழு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

”சமூகத்தில் இருக்கும் பிரச்சனைகளையும் யதார்த்தங்களையும் அனைவரும் அறியவேண்டும். இதை அனுபவப்பூர்வமாக வழங்குவதற்கு பயணம்தான் சிறந்த வழி என்று நாங்கள் நினைத்தோம். எனவே ஊக்கமுள்ள இளைஞர்கள் அடிநிலை மக்களின் நிலை குறித்து தெரிந்துகொள்ளவதற்கான வாய்ப்பினை வழங்க விரும்புகிறோம்,” 

என்று இவர்களின் பயண திட்டம் குறித்து விவரித்தார் நித்தேஷ்.

image


உந்துதல்

நித்தேஷ் வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டம் பெற்றவர். குர்கானில் விப்ரோ நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றியபோது 2011-ம் ஆண்டு ஊழல் எதிர்ப்பு இயக்கம் குறித்து அறிந்தார். நாட்டின் வளர்ச்சிப் பிரிவில் பங்களிப்பதற்கான வாய்ப்புகளை ஆராய விரும்பி தனது பணியைத் துறந்தார். எஸ்பிஐ யூத் ஃபார் இந்தியா ஃபெலோஷிப்பின் முதல் பேட்ச்சிற்கு தேர்வானார்.

சிக்கல் நிறைந்த சமூகப் பிரச்சனைகள் குறித்த ஆழமான புரிதலுக்காகவும் திறன்களை மேம்படுத்துவதற்காகவும் மும்பையின் டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் கல்வி நிறுவனத்தில் சமூக தொழில்முனைவு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார். சொந்த நிறுவனத்தை துவங்குவதற்கு முன்பு கொல்கத்தாவைச் சேர்ந்த பரிவார் எடுகேஷனல் சொசைட்டியில் பணியாற்றினார்.

மின் பொறியாளரான நிதின் ராஜஸ்தானின் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். இங்கு இவரது குடும்பம் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளது. ஐஐடி ரூர்க்கியில் படிக்கையில் கிராமப்புறங்களின் அடிநிலை மக்களின் பிரச்சனைகளையும் வெவ்வேறு முயற்சிகளின் வளர்ச்சிக்கட்டங்களையும் குறித்து புரிந்துகொள்வதற்காக நிதின் கிராமப்புறங்களை அவ்வப்போது பார்வையிடுவார். கோடை இன்டர்ன்ஷிப்பின்போது மத்தியபிரதேசத்தின் ஜபுவா பகுதியிலுள்ள பழங்குடி கிராமங்களுக்கு பயணித்துள்ளார்.

நித்தேஷ், நிதின் இருவரும் பணிக்கான வாய்ப்பை தேடிக்கொண்டிருக்கும்போதுதான் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டனர். பல்வேறு சமூகங்கள் குறித்த மக்களின் கண்ணோட்டத்தை மாற்ற உதவும் ஒரு தளத்தை உருவாக்கும் எண்ணம் நித்தேஷ் அவர்களுக்கு தோன்றியது. நிதினிடமும் இதே யோசனை உருவானது. நிதின் பட்டப்படிப்பை முடித்ததும் காக்னிசன்ட் நிறுவனத்தில் டேட்டா அனாலிஸ்டாக பணி கிடைத்தது. எனினும் அவர் அங்கு பணியில் சேராமல் நித்தேஷுடன் ’எம்பதி கனெக்ட்ஸ்’ நிறுவனத்தில் இணைந்துகொண்டார்.

image


இடைவெளியை நிரப்புதல்

கிராமப்புற வாழ்க்கையையும் அதன் கலாச்சாரத்தையும் முழுமையாக விவரிக்கும் வகையில் கல்வி அமைப்பு இருந்தாலும் மாணவர்கள் அதை அனுபவ ரீதியாக தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு இல்லை.

”சமூக உணர்வுடன் காணப்படும் இளைய சமூகத்தினர் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றனர். கொள்கைகள் அமைப்பது, சிவில் சேவை, பொறியியல், வணிகங்கள், தயாரிப்புகளின் வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவர்கள் எடுக்கும் தீர்மானம் மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்தும். அவர்கள் மக்களின் நிலையை புரிந்துகொண்டு செயல்படுவது மிகவும் அவசியமானதாகும்,” என்றார் நிதின்.

மக்களிடையே குறிப்பாக இளம் சமூகத்தினரிடையே விழிப்புணர்வு மட்டுமல்லாது உணர்வு ரீதியான புரிதலை ஏற்படுத்தவேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவானதுதான் எம்பதி கனெக்ட்ஸ். 

“இன்று நான் அனைவரும் இயந்திரத்தனமான உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதில் அடுத்துவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் தன்மையே நம்மை மனிதனாக வேறுபடுத்திக்காட்டுகிறது,” என்றார் நித்தேஷ்.

image


கடந்து வந்த பாதை...

ஹல்மா யாத்ரா மற்றும் உத்தர் யாத்ரா என்கிற இரண்டு பயண திட்டங்களை இந்த வருடம் மார்ச் மற்றும் மே மாதம் ஏற்பாடு செய்தது எம்பதி கனெக்ட்ஸ். ஒவ்வொரு பயண திட்டத்திலும் 30 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். பில் பழங்குடியினர் ஒரு சமூகமாக ஒன்றிணைந்து ஒரு உறுப்பினர் தனது பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவும் பாரம்பரிய வழக்கம் ஹல்மா. இந்த கருத்தை புத்துணர்வூட்டியது ஜபுவா மாவட்டத்தின் பழங்குடி பகுதிகளின் முழுமையான வளர்ச்சிக்காக பத்தாண்டுகளாக பணிபுரியும் ’சிவ்கங்கா’ என்கிற நிறுவனம்.

ஹல்மா பாரம்பரியம் குறித்த புரிதலை வழங்க சிவகங்கா குழுவுடன் இணைந்துள்ளது எம்பதி கனெக்ட்ஸ். தனிநபர் மற்றும் கூட்டு முயற்சிகள் வாயிலாக நேரடியாக களங்களில் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் முறையாக வழங்கப்படுவதை பங்கேற்பாளர்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது.

பயண திட்டத்தின் ஒரு பகுதியாக பழங்குடி மக்கள் எவ்வாறு மழை நீர் சேகரிப்பு அமைப்பை நிறுவியுள்ளனர் என்பதையும் அவர்களது அன்றாட நடவடிக்கைகளை கவனிக்கவும், அவர்களது ஒழுக்கம், அர்ப்பணிப்பு நேர மேலாண்மை திறன் ஆகியவற்றை கூர்ந்து கவனிக்கவும் பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

”தனிநபரிடம் ஒற்றுமை உணர்வோடு கலாச்சாரத்தின் மீதான வலுவான நம்பிக்கை காணப்பட்டால் அது அதிசயத்தை ஏற்படுத்தக்கூடும். ஹல்மா இதற்கு ஒரு மிகச்சரியான உதாரணம்,” 

என்றார் இந்த திட்டத்தில் பங்கேற்ற ஐஐடி ரூர்க்கி பட்டதாரியான முகுல் கௌஷிக். உத்தர்காண்ட் வெள்ள பாதிப்பிற்குப் பிறகு அங்குள்ள சியாபா கிராமத்தில் மறுவாழ்வு முயற்சிகளை மேற்கொண்டது கூன்ஜ் (Goonj). எம்பதி கனெக்ட்ஸ் இவர்களுடன் இணைந்து செயல்பட்டது. ஒருவரோடொருவர் கருத்துக்களை பரிமாறும் அமர்வுகள் கிராமவாசிகள் மற்றும் விவாசயிகளிடையே ஏற்பாடு செய்யப்பட்டது. இது அவர்களது போராட்டங்களையும் சவால்களையும் புரிந்துகொள்வதற்கான அமர்வுகளாகும்.

”பிரச்சனைகளை தீர்த்துவைப்பவர்களாக செல்கிறோம் என்கிற எங்களது அடையாளம் முழுமையாக மாறியது. மக்களோட மக்களாக இணைந்தோம். ஒருவரோடொருவர் கற்றுக்கொள்ளவும் ஒருங்கிணையவும் முடிந்ததால் புதுமையான கண்ணோட்டத்தையும் அனுபவத்தையும் வழங்கியது,” என்றார் உத்தர் யாத்ராவில் பங்கேற்ற காக்னிசண்ட் நிறுவனத்தின் மென்பொருள் பொறியாளரான மோஹிதா ஜெய்ஸ்வால்.

சமூக பணியாளர்கள், தொழில்முனைவோர், மாணவர்கள், கார்ப்பரேட் ப்ரொஃபஷனல்ஸ், பங்கு வர்த்தகர்கள், பேராசிரியர்கள் என வெவ்வேறு பின்னணியிலிருந்து வரும் பங்கேற்பாளர்களை இந்த பயண திட்டத்தில் பார்க்கமுடிகிறது.

”எங்களுக்கான வசதிக்காக நாங்கள உருவாக்கிக்கொள்ளும் வட்டத்தை விட்டு வெளியே வரவும் சலிப்பூட்டம் அன்றாட வாழ்க்கையிலிருந்து வெளியேறவும் கடுமையாக உழைக்க உந்துதலளிக்கும் வகையிலும் இந்த பயண திட்டம் அமைக்கபட்டுள்ளது இதன் சிறப்பம்சம்,” என்று தனது பயண அனுபவம் குறித்து விவரித்தார் லித்தோஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ அன்கத் சிங்கி.

ஆங்கில கட்டுரையாளர் : க்விய்னீ மஹாஜன்

Add to
Shares
75
Comments
Share This
Add to
Shares
75
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக