பதிப்புகளில்

குழந்தைகளிடம் நேரம் செலவிட்டு; அலுவலக பணியிலும் முன்னேறுவது எப்படி?

26th Aug 2017
Add to
Shares
399
Comments
Share This
Add to
Shares
399
Comments
Share

வேலைக்குப் போகும் அனைத்து பெண்களுக்கும் இருக்கும் ஒரே கவலை வீட்டுக்கும் அலுவலகதுக்கும் சமமான நேரம் ஒதுக்குவதே ஆகும். அதாவது வேலைக்கு செல்லும் பெண்மணிகளுக்கு குழந்தை பராமரிப்பு, முதிர்ந்த பெற்றோர்களை பார்த்துகொள்ளுதல், சமைத்தல் பரிமாறுதல் போன்ற வீட்டின் மற்ற இதர வேலைகளை செய்வது கடினமாகவே இருக்கிறது. இந்த வேலைகள் யாவும் ஆண் பெண் என இருவருக்கும் சமமாக இருந்தாலே அலுவலகம் மற்றும் வீட்டை சரியாக பார்க்க முடியும்.

இந்த கட்டுரை ஆண் பெண் என்ற வேறுபாடின்றி பெற்றோர்களுக்காக எழுதப்பட்ட ஒன்று. அதாவது தங்கள் அலுவலக வேலையை எந்த இடத்திலும் சமரசம் செய்யாமல் குடும்பம் மற்றும் சிறந்த குழந்தை வளர்ப்பில் ஈடுபடுவதாகும். நீங்கள் ஒரு பெற்றோர் ஆகவும் தொழிலிலும் ஜெயிக்க விரும்பினால்; நீங்கள் செய்ய வேண்டியது இதுவே.

image


முறையான திட்டம்

நீங்கள் உங்கள் வாரத்தை முறையாக திட்டமிட்டால் நீங்கள் எதிர்கொள்ளும் பாதி அழுத்தம் குறையும். முதலில் வேலை நாட்காட்டியை பராமரிக்க தொடங்குகள். உங்களது ஸ்மார்ட்போனிலோ அல்லது பழையமுறை போல் நாட்காட்டியை வைத்துக்கொள்ளுங்கள். எல்லா திங்களும் உங்கள் வாரத்தை திட்டமிட ஒரு மணி நேரம் ஒதுக்குங்கள். இரவு பகல் என கண் விழித்து உழைத்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பது ஒரு கட்டுக்கதை தான். ஆனால் உண்மையில், நீங்கள் வேலையை நேரத்தில் முடித்து தினமும் உங்கள் குழந்தையுடன் நேரத்தை செலவிட முடிந்தால், அடுத்த நாளே புதிய வீரியத்துடன் வேலை செய்யலாம்.

யதார்த்தமாக இருங்கள்

உயர்ந்த இலக்கை அடையும் நோக்கம் உள்ளது சிறந்ததே ஆனால் அது யதார்த்தமாக நடைமுறைப் படுத்தக்கூடியதாய் இருக்க வேண்டும். ஒரே வேலை நாளில் 10 கடினமான பணிகளை முடிக்க நினைத்தால் அது உங்கள் நாளை மேலும் சீர்குலைக்கும். சீரான நாளிலிருந்து உங்கள தடம் மாற்றும்.

உங்கள் குழந்தையிடம் பேசுங்கள்

ஒரு மூத்த ஊடகவியலாளராக பணிபுரியும் ஒருவர்:

“உங்கள் குழந்தைக்கு புரியும் வயதில் உங்கள் வேலையைப் பற்றி பேசி புரிய வையுங்கள். முடிந்தால் உங்கள் குழந்தையை நீங்கள் வேலை செய்யும் இடத்திற்கு என்றாவது கூட்டிச் செல்லுங்கள். 

இப்படி செய்தால் உங்களுக்கு இரு நன்மைகள் நடக்கும்; ஒன்று உங்கள் குழந்தைக்கு உங்கள் வேலையின் முக்கியத்துவம் புலப்படும் இரண்டாவது உங்களுடன் பணிபுரிபவர்களுக்கு உங்கள் குடும்பச் சூழல் புரியும், அதனால் மாலையில் உங்களுக்கு அதிக வேலை சுமை கொடுப்பத்தையும், வார இறுதியில் வேலைக்கு வரச் சொல்வதையும் பெரும்பாலும் தவிர்ப்பர்.”

தெளிவாக வகுத்திடுங்கள்

வேலை நேரம் மற்றும் குடும்ப நேரம் ஆகியவற்றின் இடையே ஒரு தெளிவான கோட்டை போடுங்கள். இவ்விரண்டிற்கும் இடையே மேலோட்டமாகப் போக நினைத்தால் உங்கள் மன அமைதியை நிலைநாட்ட கடினமாக இருக்கும். அதாவது உங்கள் குழந்தை பள்ளியில் நடந்ததை உங்களுடன் பகிர்ந்து கொண்டு இருக்கும் பொழுது அலுவலக அழைப்பை ஏற்காமல் இருத்தல். ஈமெயில் அனுப்புவது போன்று அலுவலக வேலையை செய்யாமல் உங்கள் குழந்தைக்கு முழு கவனம் கொடுக்க வேண்டும். இதன் விளைவாக நீங்க வீட்டிலிருந்து உங்க அலுவலக வேலை செய்யும்போது குழந்தைகள் நம்மை தொந்தரவு செய்யாமல் இருக்கும்.

துண்டித்து இருங்கள்

குறைந்தபட்சம் 20 நிமிடங்களாவது மின்னணு சாதனங்களிலிருந்து துண்டித்து இருங்கள்; தொலைபேசி, மடிக்கணினி, இல்லாமல் இருக்க வேண்டும். இந்த நேரம் உங்கள் குழந்தைகளுடன் நேரம் செலுத்த பயன்படும் அதாவது அவர்களுடன் இணைந்து விளையாடுவது, படிப்பது, அவர்களுக்கு முக்கியமான செய்தியை பற்றி பேசுவது போன்று காரியங்களை செய்யலாம்.

உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்

ஒரு நம்பகமான ஆதரவு அமைப்பு இல்லாமல் பெற்றோரால் வேலை மற்றும் குடும்பத்திற்கு சீரான நேரத்தை கொடுக்க முடியாது. வேலையில் ஒரு சில நாளில் இரவு வேலை நீடிக்கும் அது உங்களால் தடுக்க முடியாத சூழலில் உங்கள் நெருங்கியவர்களிடம் குழந்தையை ஒப்படியுங்கள். அவர்கள் தரும் உதவியை ஏற்றுக் கொள்ளுங்கள்.

வேலையில் முன்னேற...

அலுவலகத்தில் நல்ல இடத்தை அடைய பெற்றோர்கள் சில தியாகம் செய்ய வேண்டும் என்றாலும் முதலில் உங்கள் மேலாளர் பெரும்பாலும் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள் என தெரிந்து கொள்ளுங்கள். வேலை செய்யும் பெற்றோர்கள் கீழ் வரும் மூன்று குணங்களை கற்றுக் கொள்ள வேண்டும்:

முயற்சி

மேலாளர்கள் தங்கள் சிறந்த பணியாளர்கள் தங்கள் வழக்கமான பணியினைத் தாண்டி வேலை செய்தல் மற்றும் முன்முயற்சியை மேற்கொள்வதை எதிர்பார்க்கின்றனர். அதற்காக எல்லா புதிய பொறுப்பையும் அல்லது உங்களுடைய வழியில் வரும் எல்லாப் பொறுப்புகளையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அர்த்தமில்லை. ஆனால் உங்கள் வழக்கமான பணிக்கு அப்பால் செல்லும் கூடுதல் பணிக்கு நீங்கள் நீதி செய்ய முடிகிறது என்று நினைத்தால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். அது நிச்சயம் உங்களுக்கு பாராட்டை சேர்க்கும்.

வலையமைப்பு

சிறந்த வேலையாட்களே ஒரு நல்ல குழுவினர். திணைக்களம் மற்றும் வரிசைமுறை ஆகியவற்றைத் தவிர உங்கள் சக ஊழியர்களுடன் நெட்வொர்க்கிங் தேவை, அதேபோல சப்ளையர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடனான ஒரு நல்ல உறவை பராமரிப்பது நல்லது. இது உங்கள் நேரத்தை அதிகம் நேரம் எடுத்துக்கொள்ளாது. மற்றவர்களுக்காக தொலைபேசியை எடுத்தல், சக ஊழியர்களை பாராட்டுதல் அவ்வப்போது குழுவுடன் வெளியில் சென்று உணவு உண்ணுதல் போன்ற காரியங்கள் உங்கள் வலையமைப்பை அதிகரிக்கும்.

தயையுள்ளம்

பெரிய இடத்தில் இருக்கும் உழியர்கள் கணிசமாக நடந்து கொள்ளுவது பழைய பாணி நாகரிகமாக கருத்தப்படுகிறது. இருப்பினும் உங்கள் மேல் மக்கள் ஏறி நடக்கும் அளவிற்கு அல்லாமல் ஓரளவு பணிவாக இருப்பது சிறந்ததே. உங்களிடம் மரியாதை மற்றும் மற்றவரை சற்று கவனிக்கும் பண்பு இருந்தால் உங்களைத் தேடி வெற்றி நிச்சயம் வரும். 

ஆங்கில கட்டுரையாளர்: சரிகா நாயர்

Add to
Shares
399
Comments
Share This
Add to
Shares
399
Comments
Share
Report an issue
Authors

Related Tags