பதிப்புகளில்

‘சுயசக்தி விருதுகள்’: 800 ஹோம்ப்ரூனர்கள் தேர்வு செய்யப்பட்டு, 150 பெண்கள் நேர்காணலுக்கு அழைப்பு!

YS TEAM TAMIL
22nd Jul 2017
Add to
Shares
9
Comments
Share This
Add to
Shares
9
Comments
Share

வீட்டில் இருந்து கொண்டு அமைதியாக சாதனை படைத்துக் கொண்டிருக்கும் பெண்களை பாராட்டி, அவர்களுக்கு மேலும் ஊக்கத்தை தரும் வகையிலும், ‘ப்ராண்ட் அவதார்’ எனும் நிறுவனம் ’சுயசக்தி விருதுகள்’ என்ற மிகப்பெரிய சமூக நிகழ்வை ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. ’ஹோம்ப்ரூனர்’-களாக பல துறைகளில் இருக்கும் பெண்களை கவுரிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படும். ப்ராண்ட் அவதாருடன் ‘நேடிவ்லீட் பவுண்டேஷன்’ என்ற இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் உள்ள தொழில்முனைவோருக்கு வழிகாட்டியாக இருக்கும் அமைப்பும் இந்நிகழ்வில் கைக்கோர்த்துள்ளது. 

image


நிகழ்வின் முதல் கட்டமாக வீட்டிலிருந்து தொழில் புரியும் பெண்களிடம் இருந்து விருத்துக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. பல்வேறு துறைகளில் தொழில் புரியும் ஆயிரக்கணக்கான ஹோம்ப்ரூனர்கள் இதற்கு தமிழகமெங்கிலும் இருந்து விண்ணப்பித்திருந்தனர். இதில் இருந்து ஆறு முக்கிய அம்சங்களின் அடிப்படையில் அடுத்தக் கட்டத்திற்கு ஹோம்ப்ரூனர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

புதிய தொழில் ஐடியா, சமூக தாக்கம், தொழிலில் கண்ட சவால்கள், வளர்ச்சி வாய்ப்புகள், குடும்பத்தில் தாக்கம், வருவாய் மற்றும் லாபம் ஆகிய விஷயங்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்காணலுக்கு பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். 

12 பிரிவுகளில் 800 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதிலிருந்து 150 பெண்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இது வரும் 25-ம் தேதி சென்னை ஜி.ஆர்.டி ஹோட்டலில் சிறப்பு நடுவர் குழு முன்பு நடைப்பெறும். நேர்காணலில் கலந்து கொள்ளும் ஹோம்ப்ரூனர்களில் இருந்து சிறந்த 50 பெண்கள் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் இவர்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவ முதலீடு வாய்ப்புகளும், வழிகாட்ட வல்லுனர்களும் இணைய உள்ளனர். 

நடுவர் குழு :

விருதுக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் விவரித்தை பரிசீலித்து, தொழிலில் அவர்களின் நிலை மற்றும் வருமானம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒன்பது பேர் அடங்கிய சிறப்பு நடுவர் குழு விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்தார்கள்.

டாக்டர் மரியஜீனா ஜான்சன்- துணை வேந்தர், சத்யபாமா பல்கலைக்கழகம், வீணா குமாரவேல் - இணை நிறுவனர், நேச்சுரல்ஸ் சலூன், பூர்ணிமா ராமசாமி- தேசிய விருது பெற்ற வடிவமைப்பாளர், தொழிலதிபர் ரோஹிணி மணியன் - குளோபல் அட்ஜெஸ்ட்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடட், திவ்யதர்ஷினி - நிகழ்ச்சி தொகுப்பாளர், அருணா சுப்ரமணியம்- அறங்காவலர், பூமிகா ட்ரஸ்ட், டாக்டர் சவுந்தர்யா ராஜேஷ் - நிறுவனர்,தலைவர் அவதார் கரியர் கிரியேட்டர்ஸ், ஹேமா ருக்மணி - தலைமை நிர்வாக அதிகாரி , தேனாண்டாள் எண்டர்டெயிண்மெண்ட் மற்றும் நளினா ராமலஷ்மி- பேரண்ட் சர்கிள் நிறுவனர் ஆகியோர் தேர்வுக் குழுவில் இருக்கின்றனர். 

image


இந்த விருது விழா, மிகப் பிரம்மாண்ட வெற்றி விழாவாக பங்குதாரர்களின் முழுமையான ஆதரவோடும், விருது பற்றிய பல வகையான ஊடக, வாய்மொழி மூலமாகவும், பல சாதனைகளை வீட்டிலிருந்து சுயதொழில் செய்து வரலாறு படைக்கும் பெண் சக்திகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் என்று திடமாக நம்புகிறது.

சுயசக்தி விருதுகள் நிகழ்ச்சியின் முதல் வெற்றிக்கான சாட்சியாய், பல ஸ்பான்சர்கள் இந்த நிகழ்ச்சியை முன்னெடுக்க முன் வந்துள்ளனர். நேச்சுரல்ஸ் சலூன் & ஸ்பா, சுயசக்தி விருதுகளின் டைட்டில் ஸ்பான்சராக சேர்ந்துள்ளனர். கோ-ஸ்பான்சராக சத்யபாமா பல்கலைகழகம் மற்றும் ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் நிறுவனமும், அசோசியேட் ஸ்பான்சராக சக்தி மசாலா, லஷ்மி விலாஸ் வங்கி மற்றும் தைரோகேர் நிறுவனம் இணைந்துள்ளது. இந்நிகழ்ச்சியின் டிஜிட்டல் பார்ட்னராக யுவர்ஸ்டோரி தமிழ் இணைந்துள்ளது. 

Add to
Shares
9
Comments
Share This
Add to
Shares
9
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக