பதிப்புகளில்

பெண்கள் மாதத்தின் ஒவ்வொரு நாளையும் சிறப்பாக அமைத்துக் கொள்வது எப்படி?

YS TEAM TAMIL
8th Mar 2016
Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share

நம்மில் பல பெண்கள் இன்று தொழில்முனைவில் ஈடுபட ஆரம்பித்துள்ளோம். நம்மைச் சுற்றியுள்ள பலரின் கிண்டல்கள் அதிகரித்துள்ளது. இனி இது ஆண்களை மையமாகக் கொண்ட உலகமல்ல. சகோதரிகளான நாம் நமக்கான உலகமாக இதை மாற்றி வருகிறோம்.

மிகவும் ஆர்வமாக மூன்று தொழில்களில் ஈடுபட்டிருக்கிறேன். என்னைப் போன்ற பெண்களுக்கு சக்தியூட்டுவதை நோக்கமாக கொண்டுள்ளேன். பெண்கள் தங்கள் உடலையும் மனதையும் ஒருங்கிணைத்து செயல்படவேண்டும். மாதத்தின் ஒவ்வொரு நாளும் பல ஏற்ற இறக்கங்களை நம்மில் பலர் சந்தித்திருப்போம். நானும் அதை அனுபவித்திருப்பதால் இது குறித்த என்னுடைய புரிதலை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

2010-ம் வருடம். எனக்கு கிட்டத்தட்ட சர்கஸில் நடக்கும் விஷயங்களை நம் தினசரி வாழ்க்கையுடன் ஒப்பிடத் தோன்றியது. ஒரு நாள் நாம் கயிற்றில் நடப்பது போல் தோன்றும். அடுத்த நாள் சிங்கத்திற்கு பயிற்சியளிப்பது போல் இருக்கும். அடுத்தநாள் கூட்டத்திற்கு நடுவே கோமாளியின் செய்கைகளை நாமும் செய்வது போல் இருக்கும். ஒரு பக்கம் நிறுவனத்தின் பொறுப்புகளை சுமப்பது, மனைவி, அம்மா, மகள், தோழி போன்ற பல வேடங்களை ஏற்பது. மற்றொரு பக்கம் என் மாதாந்திர பிரச்சனைகள் மற்றும் அதன் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள். பல முறை மகளிர் மருத்துவரை சந்தித்தாகிவிட்டது. ஒவ்வொரு முறையும் அதே பதில்தான் வரும். எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. வேறு வழியில்லை. நீங்கள் இத்துடன் வாழ்ந்தே ஆகவேண்டும்.

image


என்னுடைய இரண்டாவது தொழிலை தொடங்கிய நேரம் அது. பார்ட்னர்ஷிப்பில் தொழில் தொடங்கினோம். என் பார்ட்னர் ஒரு ஆண். அவர்முன் ஒரு பெண்ணாக என்னால் எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபிக்க முழுவீச்சுடன் செயல்பட்டேன். அதனால் என்னால் “அந்த” நாட்களில் வீட்டில் ஓய்வெடுக்க முடியவில்லை. எல்லாவற்றிற்கும் என் ஹார்மோனை குறை சொல்லமுடியாது. ஒரு ஆணாக மாறி என் சூழலை நான் எதிர்கொண்டேன்.

மூன்று வருடங்கள் என்னுடைய உடலை ஒரு ஆராய்ச்சிக்கூடமாக மாற்றி பல மணி நேரங்கள் ஆய்வுகள் மேற்கொண்டேன். அதன் விளைவாக உருவான ரெஸிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்களது தேவைக்கேற்ப ஆரோக்கியத்தை அதில் சேர்த்து மாதத்தின் ஒவ்வொரு நாளையும் சிறப்பானதாக அமைத்துக்கொள்ளலாம்.

ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சமயத்தின் ஹார்மோனின் ஏற்ற இறக்கங்களை நீங்கள் எதிர்கொள்ள இது உதவும்.

என்னைத் தடுக்கிறார்கள்!

முதல் வாரத்தில் ஈஸ்ட்ரஜென் ஹார்மோனின் அளவு அதிகரிக்கத் தொடங்கும். வேகம், கூர்ந்து கவனிக்கும் திறன் இரண்டும் அதிகரிக்கும். புதிய ப்ராஜெக்ட்களை துவங்க சரியான நேரம் இது. குழுவை அமைத்து பல சூடான விவாதங்கள் மேற்கொள்ளலாம். முக்கிய யோசனைகளை பகிர்ந்துகொண்டு தீர்வு காணலாம்.

உங்கள் கல்லூரி நாட்களைப் போல் ஜீன்ஸ் அணிய ஆசையாக இருக்கிறதா? உடற்பயிற்சியை தொடங்க உகந்த நேரம் இது. பசியெடுப்பது குறைந்திருக்கும். அடிக்கடி சாப்பிடத் தோன்றாது. மற்ற நேரத்தில் தயங்கினாலும் இப்போது மக்களுடன் ஒருங்கிணையத் தோன்றும். நிச்சயம் இதற்குக் காரணம் ஹார்மோன்தான்.

உங்களை நீங்களே ரசிப்பீர்கள்!

இரண்டாவது வாரம் ஈஸ்ட்ரஜென் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் உச்சத்தில் இருக்கும். ரொமான்ஸ் மற்றும் துணிச்சலின் கலவையில் காணப்படுவீர்கள். மனதளவில் கூர்மையாகவும் தன்னம்பிக்கையுடனும் இருப்பீர்கள். உடற்பயிற்சியில் ஈடுபட விருப்பம் தோன்றும். உங்கள் கால்களில் கவனம் செலுத்துங்கள். இது தொழில் சம்பந்தப்படாததுதான் இருப்பினும் எச்சரிக்கிறேன்.

இந்த நேரம்தான் வலிகளின் ஆரம்பக்கட்டம். ப்ரீ மென்ஸ்டுரல் சிண்ட்ரோம் (PMS ) தான் குற்றவாளி. அதன் தவறுகளை மூன்று அல்லது நாலாவது வாரங்களில் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று இப்போதே மனதளவில் சொல்லிவிடுங்கள். இதை கவனத்தில் கொண்டு அதற்கேற்றாற்போல பழகிக்கொள்வது நல்லது. மாதவிடாய்க்கு முந்தைய நாட்களில் நம்முடைய சில நடவடிக்கைகளை நினனத்துப்பார்த்தால் சில சமயம் நமக்கே சிரிப்பு வரும்.

ரசனை அதிகரிக்கும்

ப்ரொஜெஸ்டிரான் உச்சத்தில் இருப்பதால் உங்கள் ரசனை அதிகமாகும். கூட்டத்தை தவிர்த்து தனிமையில் சிறிது நேரம் உறங்கத்தோன்றும்.

மூன்றாவது வாரம் பொறுமையாக உங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்கத்தோன்றும். உங்கள் வேகத்தை சற்று குறைத்து நீங்களே உங்களை ஆராய்ந்து மதிப்பிட்டுக்கொள்ளும் நேரம் இது.

நான் சோதித்து கண்டறிந்தது என்னவென்றால் ஒரு நாளில் குறைந்தது அரை மணி நேரமாவது நமக்காக ஒதுக்கத் தோன்றும். தினத்தை விட பதினைந்து நிமிடங்கள் படுக்கையில் கூடுதலாக செலவிடத் தோன்றும். தூக்கம் வரவில்லை என்றாலும் படுத்திருக்கலாம் என்று தோன்றும். தினசரி உங்கள் செல்லப்பிராணியை வாக்கிங் அழைத்துப் போவீர்கள் அல்லவா? இன்று அதைச் செய்யவேண்டாம் என்று யோசிப்பீர்கள். பயணிக்கும் நேரத்தை உங்களுக்காக ஒதுக்கத் தோன்றும். மொபைல் போன் கிடையாது, ஃபேஸ்புக் கிடையாது. அதுமட்டுமல்ல நாம் ஏன் இன்று டாக்ஸியில் போகக்கூடாது என்றும் தோன்றும். வழக்கம்போல் சாலைகளில் கவனம் செலுத்தாமல் கொஞ்சம் வெளி உலகை ரசித்துக்கொண்டே செல்லலாமே என்று யோசிப்பீர்கள். கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே சுற்றிக்கொண்டிருப்பதால் பாத்ரூமில் கூட எனக்கான நேரத்தை செலவிட நினைப்பேன். ஏதேனும் புத்தகம் படிப்பது அல்லது பிடித்த இசையை கேட்பது. உங்களுக்கு எதுவும் சரிவரவில்லையா சிம்பிளாக ஒரு வாக்கிங் சென்று வருவதை முயற்சியுங்கள்.

மாதவிடாய்க்கு முந்தைய நாட்களில் ஏற்படும் பலவிதமான உணர்வுகளை கட்டுப்படுத்த நான்கு அல்லது ஐந்து முறை சிறிது சிறிதாக ஏதாவது கார்போஹைட்ரேட் உணவை சேர்த்துக்கொள்ளலாம். இனிப்பு, கசப்பு சுவையுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். மற்றும் வாழைப்பழம், மாதுளை, கேரட், பீட்ரூட், கீரை, காலிஃப்ளவர், லென்டில்ஸ் போன்ற உணவு வகைகளை சேர்த்துக்கொள்ளலாம். புளிப்பு மற்றும் உப்பு மிகுந்த உணவுகளை தவிர்க்கலாம். மேலும் காரமான உணவு வகையான மிளகு, வெங்காயம், இஞ்சி, பூண்டு, எலுமிச்சை மற்றும் நட்ஸ் வகைகளை தவிர்ப்பது நல்லது.

நிலவு தோன்றும்

மூன்றாவது மற்றும் பெரும்பாலான நான்காவது வாரங்களில் உங்கள் உடல் முப்பது சதவீத கொழுப்பை கரைக்கக்கூடும். மாதவிடாய்க்கு முந்தைய நாட்களில் தோன்றும் பல உபாதைகளால் இந்த உண்மை யாருக்கும் தெரிவதில்லை.

நான்காவது வாரத்தில் உங்கள் உணவுப்பழக்கத்தில் சில மாறுதல்கள் செய்வது நல்லது. இனிப்பு, புளிப்பு மற்றும் உப்பு நிறைந்த உணவை எடுத்துக்கொள்ளுங்கள். கசப்பு மற்றும் கார உணவுகளை வகைகளை தவிர்ப்பது நல்லது. கீரை, லென்டில், காலிஃப்ளவருக்கு பதிலாக உருளைக்கிழங்கு, கேரட் பீட்ரூட், எலுமிச்சை மற்றும் நட்ஸ் வகைகளை சேர்த்துக்கொள்ளலாம்.

என்னதான் ஆண்கள் நம் அனைவரையும் குழப்பவாதிகள் என்று ஒட்டுமொத்தமாக முத்திரைகுத்தினாலும், ஒவ்வொருவருக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதனால் மேலே குறிப்பிட்ட ஆலோசனைகளை உங்களுக்கேற்றவாறு அமைத்துக்கொள்ளுங்கள். எல்லாவிதமான உபாதைகளையும் ஏற்றுக்கொண்டு அதற்கேற்றவாறு உங்கள் உடல்நலம் அமைவதை நீங்கள் காணலாம். எல்லாம் கலந்துதான் எந்த ஒரு நாளும் அமையும் என்று நீங்கள் உணர்வீர்கள். உங்களால் எதையும் சமாளிக்கமுடியும்.

ஆக்கம் : அன்னலிஸ் பியர்ஸ் | தமிழில் : ஸ்ரீ வித்யா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

இந்தியப் பெண்களுக்கான கார்ப்பரேட் ஆடை முறை!

நேர்காணலுக்கு செல்லும்போது சிறப்பான உடையலங்காரம் அவசியம்

Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக