பதிப்புகளில்

பொறியியல் மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் 11 வயது மாணவன்!

posted on 10th November 2018
Add to
Shares
226
Comments
Share This
Add to
Shares
226
Comments
Share

ஹைதராபாத்தைச் சேர்ந்த மொஹமத் ஹசன் அலி 11 வயதில் இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் மாணவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்கிறார். எனினும் ஏழாம் வகுப்பு படிக்கும் இந்த மாணவர் லாப நோக்கத்துடன் இதில் ஈடுபடவில்லை. தனது சேவைக்கு கட்டணமும் வசூலிப்பதில்லை. 

வெளிநாடுகளில் உள்ள திறமையான பொறியாளர்கள் சிலர் தங்களது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள சாதாரண வேலையில் இணைந்துகொள்கின்றனர். இத்தகைய நிலையைக் கண்டு மனம் வருந்தியதால் இந்த முயற்சியில் ஈடுபட்டார். 

image


ஏஎன்ஐ உடனான நேர்காணலில் மொஹமத் ஹசன் அலி குறிப்பிடுகையில்,

“இந்தியர்கள் நன்றாக படித்திருந்தும் வெளிநாடுகளில் சாதாரண சிறு வேலைகளில் ஈடுபட்டிருப்பது குறித்து இணையத்தில் ஒரு வீடியோவைக் கண்டேன். அப்போதுதான் பொறியாளர்களிடம் இல்லாத திறன் குறித்து சிந்தித்தேன். முக்கியமாக அவர்களிடம் தொழில்நுட்பத் திறனும் தொடர்புகொள்ளும் திறனும் இல்லாததை உணர்ந்தேன். எனக்கு வடிவமைப்பில் ஆர்வம் இருந்ததால் அதைக் கற்றுக்கொள்ளவும் கற்பிக்கவும் துவங்கினேன்,” என்றார்.

ஒரு புறம் பள்ளிப்படிப்பு மற்றொரு புறம் பயிற்சி மையத்தில் வகுப்பெடுத்தல் என இந்த பதினோரு வயது சிறுவன் திறம்பட இரண்டையும் சமன்படுத்துகிறார். 2020-ம் ஆண்டில் 1,000 மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க மொஹமத் ஹசன் அலி திட்டமிட்டுள்ளார்.

image


கடந்த ஆண்டு முதல் வகுப்பெடுத்து வருகிறார். அவரது வகுப்பு சரியாக மாலை ஆறு மணிக்கு துவங்குகிறது. எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் மற்றும் சிவில் பொறியியல் மாணவர்கள் இதில் கலந்துகொள்வதாக ’ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ்’ தெரிவிக்கிறது.

தற்சமயம் மொஹமத் ஹசன் அலி 30 சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் மாணவர்களுக்கு வடிவமைப்பு மற்றும் ட்ராஃப்டிங் கற்றுக்கொடுக்கிறார். அவர் கற்றுக்கொள்ளும் முறையில் இணையம் பெரும் பங்கு வகிக்கிறது.

மொஹமத் ஹசன் அலியின் கற்பிக்கும் திறனுக்கு அவரது மாணவர்களே சாட்சி. சிவில் பொறியியல் மாணவரான சுஷ்மா கூறுகையில்,

”நான் இந்த பயிற்சி மையத்திற்கு சிவில் மென்பொருள் கற்றுக்கொள்ள ஒன்றரை மாதங்களாக வந்துகொண்டிருக்கிறேன். இங்கிருக்கும் எல்லோரையும்விட வயதில் இளையவரான அலி நன்றாக வகுப்பெடுக்கிறார். அவர் திறமைசாலி. சிறப்பாக கற்றுக்கொடுக்கிறார். புரிந்துகொள்ளவும் எளிதாக உள்ளது,” என்றார்.

ஆசிரியராக புதிய அவதாரம் எடுத்துள்ள மொஹமத் ஹசன் அலி கூறுகையில், 

“நான் கடந்த ஆண்டு முதல் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். காலையில் பள்ளிக்குச் செல்வேன். மதியம் மூன்று மணிக்கு வீடு திரும்புவேன். சற்று நேரம் விளையாடுவேன். வீட்டுப்பாடங்களை முடிப்பேன். மாலை ஆறு மணிக்கு சிவில், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் பொறியாளர்களுக்கு பயிற்சி மையத்தில் வகுப்பெடுக்கிறேன்,” என்றார்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Add to
Shares
226
Comments
Share This
Add to
Shares
226
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக