பதிப்புகளில்

'நானும் உங்களைப் போன்றவளே'- இந்தியாவின் எட்டாவது பணக்கார பெண்மணி அனு அகா

7th Apr 2016
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

முதலாளித்துவ சமூகத்தில் நடிகர், பாடகர், தொழிலதிபர் மற்றும் உலக தலைவர்கள் என எத்தனையோ பேரை வியந்து கவனிக்கின்றோம். அந்த சிறப்பு மிக்கவர்களைப் போல நாமும் மாறும் முயற்சியில், நம்முடைய இருபதுகளில் இறங்கத் தொடங்குகின்றோம். முயற்சிகள் பொய்க்கும் வேளையில் முப்பதைத் தொட்டு கிடைப்பதை ஏற்றுக்கொள்ளத் தயராகின்றோம்.

அனு அகா, தெர்மேக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர், இந்தியாவின் எட்டாவது மாபெரும் கோடீஸ்வரப் பெண் தொழிலதிபர். இவர் நாம் வியந்து கவனிக்கும் சிறப்பானவர்களின் முன்னேற்றத்தைப் பற்றிய உண்மை முகத்தை காண்பிக்கின்றார். பிறப்பால் யாருமே சிறப்பானவர்கள் ஆவதில்லை. நாம் விரும்பும் சிறப்பான உயரத்தை எட்ட நமது முடிவுகள் சரியாக இருக்க வேண்டியது அவசியம். நம்முடைய எளிமையும், பணிவும்தான் எந்த உயரத்துக்கும் இட்டுச் செல்லும். உங்களை எவ்வித தடையுமின்றி உலகின் சவால்களைச் சந்திக்கத் அது துணை நிற்கும். கோபமும், பயங்களை எதிர்கொள்ள உதவலாம். விரக்தியும் வெற்றிப்பாதையை அமைக்க உதவலாம். தனது வாழ்க்கைப் பயணத்தின் உண்மைநிலையை நமக்கு ஒளிவு மறைவின்றி எடுத்துரைக்கின்றார் அனு.

image


எளிமை

உங்களையும், என்னையும் போல ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்தவர்தான் அனு அகா. மும்பையின் மையப்பகுதியான மாதுங்காவில் தனது இரு மூத்த சகோதரர்களுடன் வளர்ந்தார். செய்ண்ட்.ஸேவியர்ஸ் கல்லூரியில் பொருளாதாரம் பயின்றார். அனுவிற்கு கல்வி உதவித்தொகையுடன் மேற்படிப்பு பயில அமெரிக்க பல்கலைக்கழகத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஆயினும், திருமண உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மூத்த சகோதரனின் நண்பனான ரோஹிண்டன் அகாவை மணந்தார். கேம்பிரிட்ஜ் மாணவரான ரோஹிண்டன் பல நாட்டினருடன் பணிசெய்த அனுபவம் பெற்றிருந்தார். எனினும், அந்தப் பணியில் முழு திருப்தி அவருக்குக் கிடைக்கவில்லை. ஆகவே, அனுவின் சகோதரன் தமது குடும்ப நிறுவனமான தெர்மேக்ஸ் எனர்ஜி மற்றும் என்விரான்மெண்டல் செக்டரின் இன்ஜீனியரிங் சொல்யூஷன்ஸ் ப்ரொவைடரில் பணியாற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார். அந்த காலத்தில் தெர்மேக்ஸ் நிறுவனம் பிரபலமடையவில்லை. இதனால், ரோஹிண்டன் ஏற்கனவே பெற்றுவந்த சம்பளத்தை வழங்கும் நிலையில்கூட அந்நிறுவனம் இல்லை. இன்று தெமேக்ஸ் நான்காயிரத்து தொல்லாயிரத்து முப்பத்தைந்து கோடி பெறுமானம் கொண்ட நிறுவனமாக உயர்ந்துள்ளது.

தெர்மேக்ஸ் நிறுவத்தின் தலைவராக ரோஹிண்டன் பொறுப்பேற்றதும் அதனை விரிவுபடுத்துவதற்காக தம்பதியாக அனுவுடன் புனேவுக்கு குடிபெயர்ந்தார். அனு குழந்தைகள் வழிகாட்டல் மையத்தில் அங்கு பணியாற்றத்தொடங்கினார்.

கோபம்

ரோஹிண்டனுக்கு நாற்பதுகளின் இறுதியில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு அவர்களது குடும்பத்தையே நிலைகுலையச் செய்தது. ‘பொதுவாக நோயிலிருந்து குணமடைய முயல்வோர் பலரும் மன அழுத்தத்துக்கு உள்ளாவர். ஆனால் எனது கணவர் உலகின் மீது கோபப்பட்டார். கோபமான தனது குணத்தையும், குணமடையும் முயற்சியின்போது ஆக்கப்பூர்வமாக்கி புத்தகம் ஒன்றை எழுதி இயல்பு நிலைக்கு வந்தார்.

பயம்

இந்த சூழலில் அவரது குடும்பத்தார் நிர்வாக பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி அனுவுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆகவே, தெர்மேக்ஸின் மனிதவளத் துறையில் அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். ‘நான் பணியாற்றத் தொடங்கியபோது நிறுவனத்தின் பெயரைக் காப்பற்றுவது மட்டுமின்றி, மேன்மேலும் புதிய முதலீடுகள் மூலம் வளர்ச்சிப் பாதைக்கு அதனை கொண்டுசெல்ல வேண்டிய கட்டாயமும் இருந்தது. இவற்றுக்கு இடையே பணியாளர்களின் மனதை மகிழ்விக்க வேண்டியதும் கடமையானது. இதில் எனக்கு சவாலாக இருந்தது, இந்த நிர்வாகத்தை குடும்ப சொத்தாக பாவிக்காமல் பணியாற்றுவது’ என்றார் அனு.

விரக்தி

கெமிக்கல் இன்ஜீனியரிங் பயின்ற அனுவின் மகள் லண்டனில் தனது முதல் பிராசவத்துக்குத் தயாரானாள். அவளை கவனித்துக்கொள்ள வருவதாக அனு வாக்களித்திருந்தார். ஆறு மாதங்களுக்கு மகளுடன் இருந்து திரும்பிய அனுவை அழைத்துவர ரோஹிண்டன் புனே விமான நிலையத்துக்குப் புறப்பட்டார். ‘ஆனால், அதற்குள்ளாக ஏற்பட்ட இரண்டாவது தீவிரமான மாரடைப்பால் அப்போதே உயிரிழந்தார்.

தனது உற்ற நண்பனை அனு இழந்தார். நிர்வாகம் தமது சிறந்த தலைவரை இழந்தது. இந்த துக்கத்திலிருந்து வெளிவருவதற்குள் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். ‘ரோஹிண்டன் மீதுள்ள மதிப்பால்தான் எனக்கு இந்தப் பதவி கிடைப்பதாக வருந்தினேன். இத்தகைய பொறுப்பினை ஏற்பதற்கு நான் தயாராகவில்லை. ஆனாலும், அவரது பதவியை வேறுவழியின்றி ஏற்றுக்கொண்டேன்.’

இந்த விரக்தியான சூழலிலிருந்து வெளிவருவதற்காக புத்த தியானம் ‘விபாசனா’-வை நாடினேன். ‘பத்து நாட்களுக்கு மெளனமாக தியானிக்கத் தொடங்கி என் சோகமான சூழலிலிருந்து வெளியேற தயாரானேன். என்னை எனது கணவருடன் ஒப்பிட்டுப் பார்ப்பதை நிறுத்த வேண்டும் என உணர்ந்தேன். எனது அதிசிறந்த உழைப்பை கொடுக்க தயாரானேன்.’

விபாசனாவின் உதவியால் நிலைமை சீரடையத் தொடங்கியது. நான்கே மாதங்களில் தனது இருபத்தைந்து வயது மகனை கார் விபத்தில் இழந்தார். தனது வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிய இந்தச் சூழலில் இருந்தும் மீள வழியைத் தேடினார். ‘சூரியன் மறைவதையும், மீண்டும் விடியலில் தோன்றுவதையும் போல இறப்பும் ஒரு நிகழ்வு என தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டார். வலியையும் தவிர்க்க இயலாது. அதற்குள் உழன்று போவதும், வெளியேறுவதும் அவரவர் கையில் உள்ளது’ என தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்ட அனு தெரிவித்தார்.

மறுமலர்ச்சி

குடும்பத்தில் ஏற்பட்ட துக்கங்களிலிருந்து மீண்டெழுந்த கையோடு நிர்வாகத்தையும் பாதுகாக்க ஆவனம் செய்தார் அனு. ‘வியாபாரத்தை நான் வெகுசிறப்பாக அறிந்திருக்கவில்லை. கணக்குவழக்கை கவனிப்பதிலும் தனித்திறன் பெற்றிருக்கவில்லை. எனது அறியாமையைப் பற்றி மற்ற நிர்வாகிகளுடம் பகிர அனு தயங்கவில்லை. அது ஒரு சிறப்பான மாற்றத்தை கொண்டுவந்தது.

ரோஹிண்டன் உயிரிழந்த ஒரு ஆண்டுக்கு முன்பிருந்தே இந்தியாவின் பொருளாதாரமும் வீழ்ச்சியை சந்தித்தது. நானூறு ரூபாய்க்கு விற்பனையான அவரது நிறுவனத்தின் பங்குகள் முப்பத்து ஆறு ரூபாய்க்கு விற்பனையானது.

நிலைமை மோசமடையாமல் இருப்பதற்காக ‘பாஸ்டன் கன்ஸல்டண்ட் குழுமத்தை பணியமர்த்த முடிவு செய்தார் அனு. ஆனால், அவருக்கு கீழிருந்த பணியாளர்கள் பொருளாதாரம் சீரடையும் வரை காத்திருக்கலாம் என எண்ணினர்.

இந்தப் பொருளாதார வீழ்ச்சியால் தானும், தனது குடும்பமும் மோசமாக பாதிக்கப்பட்டதாக உணர்ந்த அனு, பெயரிடப்படாத பங்குதாரரின் கடிதத்தைக் கண்டு தூக்கமிழந்தார். அதில் அனுவின் நிறுவனத்தை நம்பி ஏமார்ந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் பாஸ்டன் கன்ஸல்டண்ட் குழுவின் அறிவுறையை ஏற்று தமக்கு கொஞ்சமும் பழக்கம் இல்லாத தண்ணீர் பாட்டில் தயாரிக்கும் தொழிலில் இறங்கினார்.

நிறுவனம் லாபத்தை ஈட்டினாலும் தமது குறிக்கோளை இழக்கத்தொடங்கியது. பல முக்கிய முடிவுகளை எடுத்து நிறுவனத்தின் நிலையை மாற்ற முயன்றார். மனித வளத் துறையில் பணியாற்றியதால் அனுவுக்கு பணியாளர்களுடன் இணக்கமான சூழல் இருந்தது. நிறுவனத்தின் முன்னேற்றத்தைப் அடைய சிறப்பாக ஒத்துழைக்க அவர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில் லண்டனில் வசித்துவந்த அவரது மகளும், மருமகனும் நிர்வாகப் பொறுப்பை ஏற்றனர். அங்கே சிறப்பாக செயலாற்றாத ஒரு பிளாண்டை புதுப்பித்தனர். பயிற்சி இன்ஜீனியர்களாக பணியைத் தொடங்கிய அவர்கள் இருவரும் இரண்டே ஆண்டுகளில் சிறப்பான உயரத்தை எட்டினர்.

கெமிக்கல் இன்ஜீனியரிங் மட்டுமின்றி கணக்குவழக்கையும் சரிவர கவனிக்கும் மகள் மெஹரிடம் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு பணி ஓய்வு பெற்றார் அனு.

வெற்றி

பணி ஓய்வுக்குப் பின் நேரத்தையும் பணத்தையும் செலவிட அனுவுக்கு தகுந்த இடமாக அரசு சாரா அமைபான அகான்ஷாவின் அறிமுகம் கிடைத்தது. ’புனேவில் தெர்மேக்ஸ் வளாகத்துக்குள்ளேயே இதற்கென அலுவலகம் அமைக்க உதவினேன்.’ கல்வி மேம்பாட்டுக்காகப் பாடுபடும் அகான்ஷா மற்றும் ‘டீச் ஃபார் இந்தியா’ அமைப்புகளின் ஆலோசகர் குழுவில் அனு இடம்பெற்றுள்ளார்.

உலக டிஜிட்டல் மயமாகிப் போனது டீச் ஃபார் இந்தியாவின் ‘ஃபிர்க்கி‘ போன்ற திறந்தவழி ஆசிரியர் பயிற்சி பாடத்திட்டம் உருவாகக் காரணமாகியுள்ளது.

‘மக்கள் நம்மைப் பின்பற்ற நமது கதைகளை அவர்களுக்கு சொல்லவேண்டியது அவசியம். மக்களிடம் அதிகப் பிரபலமல்லாத இந்தத் துறைக்கு ‘மாரிகோவின் புதுமையான விருது நிகழ்ச்சிகள்’ நிறுவனர்களின் சிறப்பான செயல்பாடுகளைப் பற்றி தெரிவிக்க உதவுகின்றது.

இதன் கீழ் உலகலாவிய கல்லூரியில் மேற்படிப்பு பயில நான்கு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டமும், ஐந்து பேருக்கு அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் பயிவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. அனு 2010-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதினை தனது சமூகப் பணிகளுக்காக வென்றுள்ளார்.

இத்தனைக்குப் பிறகும் ‘நான் ஒன்றும் சாதித்துவிடவில்லை, நானும் சாதாரணமானவள்தான்’ என்கிறார் அனு அகா.

ஆக்கம்: பின்ஜால் ஷா | தமிழில்: மூகாம்பிகை தேவி

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

கனவை அடைவதில் உறுதியாக இருந்த ‘தி ஃப்ளோர் வொர்க்ஸ்’-ன் மீட்டா மஹசே

நகை வடிவமைப்பில் சிறகடிக்கும் சுச்சி பாண்டியா!

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags