பதிப்புகளில்

கண் நோய்களை ஆரம்பக்கட்டத்தில் கண்டுபிடிக்கும் கருவியை உருவாக்கியுள்ள 16 வயது மாணவி!

21st Aug 2017
Add to
Shares
580
Comments
Share This
Add to
Shares
580
Comments
Share

16 வயது காவ்யா கொப்புரப்பு கோடை விடுமுறை முடிந்து 2016-ம் ஆம் ஆண்டு பள்ளிக்கு திரும்பினார். விடுமுறையில் கற்ற கம்யூட்டர் சயின்ஸ் பாடங்களை நடைமுறைப்படுத்த விரும்பினார் அவர். காவ்யாவின் தாத்தா டயாபடிக் ரெடினோபதி என்ற சர்க்கரை நோய் கண் பாதிப்பால் அவதிப்பட்டார். இந்த நோய் முற்றினால் கண் பார்வை போகும் நிலையும் ஏற்படும் என்பதால் இதற்கு தன் அறிவைக் கொண்டு தீர்வு காண சிந்தித்தார் காவ்யா.

அப்படி உருவானதே Eyeagnosis, என்கிற ஸ்மார்ட்போன் ஆப் மற்றும் 3 டி ப்ரிண்டட் லென்ஸ் கருவி, நோயை கண்டுபிடிப்பதை சுலபமாக்குகிறது. இரண்டு மணி நேரத்தில் ரெடினாவின் புகைப்படத்தைக் கொண்டு நோயின் தன்மையை கண்டறிய உதவுகிறது இந்த ஆப் மற்றும் லென்ஸ் என்று IEEE வலைத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. 

image


காவ்யாவின் குழுவில் அவரது 15 வயது சகோதரர் நீயந்த் மற்றும் வகுப்பு தோழர் ஜஸ்டின் ஜான்க் உள்ளிட்டோர் உள்ளனர். இவர்கள் செயற்கைமுறை நுண்ணறிவைக் கொண்டு கண்களில் உள்ள டயாபெடிக் ரெடினோபதியை புகைப்படம் மூலம் ஆரம்பக்கட்டத்தில் கண்டறியும் வகையில் செயலியை வடிவமைத்துள்ளனர். இதை ஒரு ப்ராஜக்டாக செய்து O’Reilly Artificial Intelligence கருத்தரங்கில் கடந்த மாதம் நியூ யார்கில் வெளியிட்டனர். 

காவ்யாவின் தாத்தாவின் கண் நோய் ஆரம்பக்கட்டதிலே கண்டுபிடிக்கப்பட்டதாலே குணப்படுத்தப்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அப்போது தான் நோயை ஆரம்பத்தில் கண்டறிவதன் முக்கியத்துவத்தை உணர்ந்தார் காவ்யா. அவர் கூறுகையில்,

”இந்தியாவில் நோய் கண்டுபிடிப்பு என்பதில் சவால் இருக்கிறது. குறிப்பாக கிராமங்களில், சாலையோரங்களில் வசிப்போர் மருத்துவர்களிடம் செல்லுவதில்லை அதனால் பலருக்கு இந்த கண் பாதிப்பு ஏற்பட்டு பார்வை போகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு மலிவான, சுலபமான வழியை இதற்கு உருவாக்கவே இந்த கருவியை உருவாக்கினோம்,” என்கிறார். 

J. Fielding Hejtmancik என்ற கண் பார்வை நோய் வல்லுனர் இந்த கண்டுபிடிப்பு குறித்து பகிர்கையில்,

“இந்த கருவி, கோளாரைக் கண்டுபிடிக்க சிறந்தது, பலருக்கும் உதவியாக இருக்கும். இந்த இளம் மாணவர்கள் இதை அற்புதமாக வடிவமைத்து, மலிவான, ஈசியான வகையில் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது பாராட்டத்தக்கது,” என்றார். 

அமெரிக்காவில், வெர்ஜினியாவில் படிக்கும் காவ்யா, பள்ளி ப்ராஜக்டாக இதை தொடங்கி தற்போது உலகெங்கும் பயன்படுத்தக்கூடிய வகையில் செய்துள்ளார். கண் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் துறை வல்லுனர்களுக்கு தன் கண்டுபிடிப்பு பற்றி எழுதியுள்ளார் காவ்யா.

”நான் வீட்டில் இருந்தே ஜாவா, எச்டிஎம்எல், பைதன், சி ஆகியவற்றை கற்றேன். பலமுறை நான் சாப்பிடக்கூட மறந்து கணினியில் பணிபுரிவதை கண்டு கோபித்துக்கொண்டுள்ளார் என் அம்மா,” என்றார் காவ்யா.

Eyeagnosis என்ற இந்த முயற்சி இன்னும் பல கட்டங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, நம்பகத்தன்மையை ஊர்ஜிதப்படுத்தவேண்டும். கண் மருத்துவமனைகள் மற்றும் சிறிய ஊர்களில் இதை அறிமுகப்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும் என்றும் வல்லுனர் ஹெட்ஜ்மான்சிக் கூறியுள்ளார். ஆனால் இதன் விலை மலிவு என்பதால் பெரிய நிறுவனங்கள் அதை பயன்படுத்த யோசிக்கலாம், இருப்பினும் விலை மலிவே இதன் தனித்துவமாகும் அதுவே மருத்துவ உலகில் தற்போது தேவையும் ஆகும் என்றார் அவர். 

Add to
Shares
580
Comments
Share This
Add to
Shares
580
Comments
Share
Report an issue
Authors

Related Tags