பதிப்புகளில்

’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு

பெல்ஜிய கால்பந்தாட்ட வீரர் ரொமெலு லுகாகு, தன்னுடைய கசப்பான இளம்பருவம், கொடுமையான வறுமை மற்றும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வுகளை நினைவுகூர்கிறார்.

14th Jul 2018
Add to
Shares
59
Comments
Share This
Add to
Shares
59
Comments
Share

ஒடுக்கப்பட்டு, வஞ்சகத்திற்கு ஆளாகும் ஒரு இனத்தை சேர்ந்த யாரோ ஒருவர் தடைகளை தாண்டி வெல்லும் போதெல்லாம் அந்த வெற்றி நமக்குமானது என்று தோன்றிக் கொண்டே இருக்கும். நம்மில் பெரும்பாலானோர் ஏதோ வகையில் ஒடுக்கப்படுவதே அதற்குக் காரணம். மற்ற சூப்பர் ஹீரோ படங்களை விட பிளாக் பாந்தர் புது வகையில் வரவேற்கப்பட்டதும் கொண்டாடப்பட்டதும் நினைவிருக்கிறதில்லையா?

ரொமேலு லுகாகு எனும் பெயர் தற்போது உலகம் முழுதும் பிரபலம். காரணம் ரொமெலுவிற்கு தேவைப்பட்டது தினசரியை கடத்துவதற்கான, பசியை போக்குவதற்கான வழிமுறை மட்டுமே அல்ல -ரொமெலுவிற்கு ஒரு மாபெரும் வெற்றி தேவைப்பட்டது; அதை கைபற்றவும் செய்தார். ரொமெலு தன் வார்த்தைகளால் அவர் வாழ்ந்த வாழ்க்கையையும், அடைந்த வெற்றியையும் விவரிப்பதை படிக்கும் ஒவ்வொரு முறையும் மனம் நெகிழும்.

image


பொதுவாகவே குழந்தைகளுக்கு வீட்டின் பொருளாதாரம் பற்றிய ஒரு அறிவும் இருக்காது, ஆனால் ஏதோ ஒரு நொடி வீட்டின் ஏழ்மையை காட்டி கொடுத்துவிடும். அந்த நொடியே வாழ்க்கை பாதையை மாற்றி அமைப்பதாகவும் இருக்கும். அப்படி தன் வீடு வறுமையில் இருப்பதை உணர்ந்த நொடியிலிருந்து தன் கதையை சொல்லத் தொடங்குகிறார்.

“எனக்கு ஆறு வயது, மதிய உணவு இடைவேளைக்காக வீட்டிற்கு வந்தேன். வீட்டில் எல்லா நாளுமே ஒரு உணவு தான்: ரொட்டியும், பாலும். அம்மா சாதாரணமாக கிச்சனில் ஃப்ரிட்ஜ் அருகே பால் டப்பாவோடு நின்று கொண்டிருந்தார். ஆனால், இம்முறை அவர் எதையோ பாலில் கலந்து கொண்டிருந்தார். எனக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. என்னிடம் உணவை கொண்டு வந்த போது தான் எனக்கு புரிந்தது. பாலில் தண்ணீர் கலந்து கொண்டிருந்தார். எங்கள் வீட்டில் மொத்த வாரத்திற்கும் செலவிடும் அளவு பால் இல்லை.”

ரொமெலுவின் தந்தையும் கால்பந்து வீரராக இருந்த போதிலும், அவர் தன்னுடைய பணி வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருந்ததால் வீட்டில் வறுமை. சில சமயம் இரண்டு மூன்று வாரங்களுக்கு கூட வீட்டில் மின்சாரம் தடைபட்ட காலம் இருந்திருக்கிறது. சில சமயம் ரொமெலுவின் அம்மா ரொட்டி கடன் வாங்கியிருக்கிறார். இதெல்லாம் பழக்கப்பட்டது தான் என்றாலுமே, பாலில் தண்ணீர் கலப்பதை பார்த்ததும் தான், தன்னுடைய வாழ்க்கை என்னவாக இருக்கிறது என்பதை ரொமெலு உணர்ந்திருக்கிறார்.

“கால்பந்தாட்ட வீரர்கள் எல்லாம் மனவலிமையை பற்றி நிறைய பேசுவார்கள். நீங்கள் சந்திக்கப் போவதிலேயே அதிக மனவலிமை கொண்ட ஆள் நான் தான்,” என்கிறார் ரொமெலு. 

தன் அம்மாவோடும் சகோதரனோடும் இருட்டில் இருந்து ஜெபம் செய்த போது தனக்குள் ஒரு சத்தியத்தை செய்து கொண்டிருக்கிறார். ஒரு சில நாட்கள் அம்மா அழுவதை பார்க்கும் போது தான் ஃபுட்பால் விளையாடப் போவதாக உறுதியளித்திருக்கிறார் - வெறும் ஆறே வயதில். அப்பாவிடம் எந்த வயதில் புரொஃபஷனலாக ஃபுட்பால் விளையாட முடியும் எனக் கேட்க அவர் ‘பதினாறு’ என்று பதில் சொல்லியிருக்கிறார். அப்போதே தன்னுடைய பதினாறு வயதில் புரொஃபஷனலாக கால்பந்து விளையாடப் போவது, ரொமெலுவிற்கு உறுதியாக தெரிந்து விட்டது.

பனிரண்டு வயதில் 34 விளையாட்டில் எழுபத்து ஆறு கோல்கள் அடித்திருக்கிறார் ரொமெலு. அதில் பெரும்பாலும், அவருடைய அப்பாவின் ஷூக்களை அணிந்து அடித்தது. ரொமெலு கொஞ்சம் வளரத் தொடங்கியதும், ரொமெலுவின் அப்பாவும் அவரும் ஷூக்களை பகிர்ந்து கொள்வார்களாம். ஒருபுறம் வறுமை என்றால் மறுபுறம் இனவெறியும் ரொமெலுவை தாக்கியிருக்கிறது.

ரொமெலு உயரமாக இருப்பதால், அவர் விளையாட மைதானத்திற்குள் இறங்கும் போது மற்ற குழந்தைகளின் பெற்றோரும், ஆசிரியர்களும் ரொமெலுவை பார்த்து ‘உனக்கு எவ்வளவு வயது? நீ எங்கிருந்து வருகிறாய்? எந்த வருடம் பிறந்தாய்?’ என்பது போன்ற கேள்விகளை கேட்பார்களாம். ரொமெலுவின் அப்பாவிடம் கார் இல்லாத காரணத்தால், ரொமெலு எப்போதுமே தனியாக தான் மேட்ச்களுக்கு சென்றிருக்கிறார். இவ்வாறான கேள்விகள் கேட்கும் போது, கோபம் தலைக்கேறும் என்றாலும், பையில் இருந்து தன்னுடைய ஐ.டியை பொறுமையாக எடுத்து காண்பிப்பாராம்.

Image Source : goal.com

Image Source : goal.com


“ஓ.. உங்களுடைய பிள்ளை முடிந்தான். ஏற்கனவே நான் கொலைவெறியோடு தான் இருந்தேன், இப்போது அது அதிகமாகியிருக்கிறது. உங்கள் பையன் அழ அழ காரில் கூட்டிப் போக போகிறீர்கள்...” என்று நினைத்துக்கொண்டே கால்பந்தை மிதிப்பாராம் ரொமெலு.

ரொமெலுவின் தாத்தா, அம்மாவின் அப்பா, தன்னுடைய மரணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் ரொமெலுவிடம் ‘என்னுடைய மகளை பார்த்துக் கொள்வேன் என்று சத்தியம் செய்’ என்றதை ரொமெலு வாழ்நாளுக்கும் மறக்கப்போவதில்லை. தாத்தா உயிரோடு இருந்து , பதினாறு வயதில் தான் ஆடிய முதல் ஆட்டத்தை பார்த்திருக்க வேண்டும் என நெகிழ்கிறார். வாழ்வின் மற்ற பாகங்களை போலவே, பதினாறு வயதில் ஆண்டர்லெக்டுக்காக ஆடிய முதல் ஆட்டமும் தடையில்லாமல் கிடைக்கவில்லை.

தன்னுடைய பதினாறாம் வயதை நெருங்கும் போது,ஆண்டர்லெக்டின் பத்தொன்பது வயதிற்கு உட்பட்டவர்களின் குழுவில் கூட அவர் இருந்திருக்கவில்லை. ஆண்டர்லெக்டின் கோச், ரொமெலுவை பெஞ்சில் இருக்க வைத்திருக்கிறார். இதனால் கோச்சோடு ஒரு வேடிக்கையான ஒப்பந்தத்திற்கு வந்திருக்கிறார் ரொமெலு. அதாவது ரொமெலுவை விளையாட அனுமதித்தால், டிசம்பர் மாதத்திற்குள் இருபத்தைந்து கோல்களை அடித்துக் காட்டுவேன் -அப்படி அடிக்கவில்லையென்றால் பழையபடி பெஞ்சுக்கே போய்விடத் தயார். கோச்சும் இதற்கு சம்மதித்திருக்கிறார்.

“கூடவே, நீங்கள் தினமும் எங்களுக்கு பேன்கேக் செய்து தர வேண்டும்...” என்றும் சொன்னேன் என்கிறார்.

ஆச்சரியமேயில்லை. அந்த பெட்டில் வெற்றி பெற்றது ரொமெலு தான். நவம்பர் மாதத்திற்குள்ளேயே 25 கோல்கள் அடித்திருக்கிறார் அவர். தன்னுடைய பதினாறாவது பிறந்த நாளில் தொழில்முறை கால்பந்தாட்டக்காரராக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார். 

முதல் மேட்ச்சிற்கு அழுக்கான ஜெர்சியை அணிந்த போது அத்தனை கேமராக்களும் அவர் மேல் குவிந்தது, டிரெஸ்ஸிங் ரூமில் தனக்கென 36 ஆம் நம்பர் ஜெர்சியை வாங்கிக் கொண்டது, டிவியில் வந்த மூன்றே நிமிடங்களில் தனக்கு இருபத்தைந்து மெசேஜ்கள் வந்தது என அதன் பிறகு வெற்றிப் பாதையில் நடந்திருக்கிறார். ஆனாலும் அப்பட்டமான இனவெறி பின் தொடர்ந்திருக்கிறது.
Image Source : dailystar.co.uk

Image Source : dailystar.co.uk


“எல்லாம் நன்றாக போய் கொண்டிருக்கும் போது, என்னை ரொமெலு லுககு, பெல்ஜிய ஆட்டக்காரன் என்றார்கள். எல்லாம் நன்றாக போகாத போது, என்னை காங்கோ வம்சாவளியை சேர்ந்த பெல்ஜிய ஆட்டக் காரன் என்றார்கள்”.

என்ன ஆனாலும் நானொரு பெல்ஜியன் எனும் நிலைப்பாட்டில் இருந்து மட்டும் அவர் விலகவிரும்பவில்லை. 

“நானொரு வாக்கியத்தை ஃபிரெஞ்சில் தொடங்கி டச்சில் முடிப்பேன், இடையில் ஸ்பானிஷோ, போர்ச்சுகோ லிங்காலாவோ வரும். நானொரு பெல்ஜியன். ஆனால், இந்த நாட்டில் சிலர் ஏன் நான் தோற்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று புரியவில்லை,” என்கிறார். யார் என்ன சொன்னாலும் அதைப்பற்றி தான் கவலைப்பட போவதில்லை இந்த உலகக்கோப்பை கால்பந்தை தான் ரசித்து விளையாடப் போவதாக சொல்லியிருக்கிறார்.

இருந்தாலும் தன்னுடைய தாத்தாவிடம் “உங்கள் மகள் நன்றாக இருக்கிறாள். யாரும் என்னுடைய ஐ.டியை பரிசோதிப்பதில்லை. இன்று, எல்லாருக்கும் என் பெயர் தெரியும்,” என்று சொல்ல வேண்டும் எனும் ஆசை மட்டும் அழியவில்லை ரொமெலுவிற்கு. 

Add to
Shares
59
Comments
Share This
Add to
Shares
59
Comments
Share
Report an issue
Authors

Related Tags