பதிப்புகளில்

தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வுகண்டு விவசாயிகளை சிறு தொழில்முனைவோர் ஆக்கும் நிறுவனம்!

YS TEAM TAMIL
12th May 2018
Add to
Shares
14
Comments
Share This
Add to
Shares
14
Comments
Share

நவீன தொழில்நுட்பத்தை அனைவரும் சமமாக அணுகமுடியாத நிலை, சிறிய நிலம் வைத்திருத்தல், தொழிலாளர்கள் கிடைக்காத நிலை அல்லது தொழிலாளர்கள் கூலி அதிகரித்தல், குறைவான லாபம் போன்றவையே இந்தியாவில் விவசாய உற்பத்தி குறைவதற்கான முக்கியக் காரணங்களாகும்.

விவசாயத் துறையில் நிலவும் தொழிலாளர் தட்டுப்பாடு பிரச்சனைக்கு மிகப்பெரிய அளவில் இயந்திரமயமாக்குவதன் மூலம் தீர்வு காணும் நோக்கத்துடன் ’ஆக்சென் ஃபார்ம் சொல்யூஷன்ஸ்’ (Oxen Farm Solutions) நிறுவினார் விஷ்வஜீத் சின்ஹா. 

இந்த ஸ்டார்ட் அப் புதுமைகளையும் நவீன தொழில்நுட்பத்தையும் விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கிறது. ஓலா மற்றும் ஊபர் சேவைகளைப் போன்று ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் வகையில் Farming as a service (FaaS) மாதிரியாக செயல்படுகிறது.

image


விவசாயிகள், விவசாய இயந்திர உற்பத்தியாளர்கள், அரசாங்க கொள்கைகள் என விவசாயத்தின் அனைத்து பங்குதாரர்களையும் ஒரே தளத்தில் கொண்டு சேர்க்கிறது ஆக்சென்.

மொபைல் சார்ந்த செயலி வடிவில் இருக்கும் எளிதாக பயன்படுத்தக்கூடிய அதன் இடைமுகம் வாயிலாக ஆக்சென் விவசாயிகளுக்கு உதவுகிறது. விவசாயிகள் தங்களது பயிர் சாகுபடிக்கான தேவைகளை முன்வைக்கலாம். இயந்திர உரிமையாளர் இந்தத் தகவலைப் பெற்று தங்களது சேவையை மலிவான வெளிப்படையான விலையில் விவசாயிக்கு வாடகைக்கு வழங்குவார்.

துவக்கம்

2015-ம் ஆண்டு மேமாதம் விஷ்வஜீத் அரசு நிதியுதவி பெற்று இயங்கி வரும் ஐரோப்பிய-ஜெர்மானிய ப்ராஜெக்ட் ஒன்றில் பணியாற்றினார். விவசாயத்தில் மதிப்பு கூட்டுவதற்கான தொடர் நடவடிக்கைகளில் புதுமை படைப்பது குறித்து (agriculture value chain innovation) புரிந்துகொள்ளவே இதில் பணியாற்றினார். காஷ்மீர், கர்நாடகா என எட்டு மாநிலங்களில் இந்த ப்ராஜெக்ட் மேற்கொள்ளப்பட்டது.

”தொழிலாளர்கள் கிடைப்பதே அனைத்து பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் மிகப்பெரிய சவாலாக இருந்தது. இது குறித்து மேலும் ஆய்வு செய்கையில் கடந்த பத்தாண்டுகளில் வேலையாட்களுக்கான கூலி மும்மடங்காக அதிகரித்திருப்பதை உணர்ந்தார். இதனால் விவசாயிகளுக்கு செலவு பன்மடங்கு அதிகரித்தது. ஆனால் விவசாயம் வாயிலாக ஈட்டப்படும் வருவாய் அதற்கேற்ப அதிகரிக்கவில்லை,” என்று விஷ்வஜீத் நினைவுகூர்ந்தார்.
image


இதற்கான தீர்வு இயந்திரமயமாக்கல். ஆனால் அது எளிதாக இருப்பது போல் தோன்றினாலும் நடைமுறைப்படுத்துவது கடினமானது என்கிறார்.

அவர் பணிபுரிந்த பல மில்லியன் டாலர் மதிப்புள்ள ஐரோப்பிய ப்ராஜெக்டில் உலகின் மிகப்பெரிய விவசாய இயந்திர உற்பத்தியாளர்கள் சிலருடன் ஒருங்கிணையும் வாய்ப்பு கிடைத்தது. இவர்களிடம் இருக்கும் இயந்திரங்கள் இந்தச் சிக்கலைத் தீர்ப்பதுடன் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவும்.

எனினும் சிறியளவில் செயல்படும் விவசாயிகளுக்கு விவசாய இயந்திரங்களை வாங்குவதும் இயக்குவதும் சாத்தியப்படாது என்பதை விஷ்வஜீத் உணர்ந்தார். இதற்கு முக்கியக் காரணம் அதிக விலை மட்டுமல்ல. விவசாய உபகரணங்கள் அறுவடை சமயத்தில் மட்டுமே, அதாவது வருடத்தில் ஒரு சில வாரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும்.
image


”அப்போதுதான் FaaS மாதிரி தோன்றியது. ஆக்சென் உருவானது,” என்றார்.

அவரது குடும்பத்தை சம்மதிக்க வைப்பதும் மாத வருமானம் இல்லாத நிலையை ஏற்றுக்கொள்ள வைப்பதும் ஆரம்பகட்ட சவால்களாக இருந்தது.

விஷ்வஜீத்திற்கு டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அதிக உத்வேகம் அளித்துள்ளார். இளைஞர்கள் நகரத்திற்கு குடிபெயரும் நிலை இருக்கக்கூடாது. மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாராம், ஆர்வம் அனைத்துமே அவர்களது கிராமத்திலேயே இருக்கவேண்டும். இப்படிப்பட்ட ஒரு பாரதத்தை உருவாக்குவதில் பங்களிக்க வேண்டும் என்பதே விஷ்வஜீத்தின் கனவு.

ஆக்சென் மாதிரி

நவீன தொழில்நுட்பத்தை அணுக வாய்ப்பளித்து இயந்திரமயமாக்கி விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்துவதே ஆக்சனின் நோக்கமாகும். இதில் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் கட்டணம் செலுத்தும் மாதிரி பின்பற்றப்படுகிறது. பயிர் எச்சம் மேலாண்மை, நிலத்தை தயார்படுத்துதல், நடுதல், பயிர் மேலாண்மை, அறுவடை, அறுவடைக்கு பிறகான செயல்முறைகள் என பல்வேறு சேவைகளுக்காக உபகரணங்களை வழங்குகின்றனர்.

image


”விவசாயிகள் பலனடையும் வகையில் தொழிலாளர்களுக்கான செலவை 50 சதவீதம் வரை குறைக்கிறோம். விவசாயிகள் எங்களை விரும்புகின்றனர். இதனால் விற்பனைக்கோ மார்கெட்டிங்கிற்கோ நாங்கள் அதிக முயற்சி எடுக்கவேண்டிய அவசியம் இல்லாமல் போனது,” என்றார்.

இவர்களது சேவைகளைப் பெற்று பலனடைந்த சத்தீஸ்கரைச் சேர்ந்த பழங்ககுடி சமூகத்தினர் இவர்களது மிகவும் திருப்திகரமான வாடிக்கையாளர்கள் என்கிறார். 

”முதல் விவசாயியிடம் விற்பனை செய்ய மட்டுமே நாங்கள் முயற்சி எடுக்கவேண்டியிருந்தது. மற்றவர்கள் எங்களது சேவையை வரவேற்று ஏற்றுக்கொண்டனர்,” என்றார்.

மேலும் அவர்கள் அறுவடைக்கான சேவையளித்து விவசாய சமூகத்தினருக்கு உதவுவதால் அவர்கள் எங்கு சென்றாலும் மகிழ்ச்சியான விவசாயியையே பார்க்கமுடிந்ததாக தெரிவித்தார். விவசாயிகள் தங்களது கடின உழைப்பிற்கான பலனை பெறுவதால் கிராமப்புறங்களில் அறுவடைக் காலமே பண்டிகைக் காலமாகும்.

image


இயந்திரத்தில் உள்ள உணர்கருவிகளில் இருந்து தகவல்களை சேகரிக்கவும் இயந்திரத்தின் செயல்திறன் குறித்த தரவுகளை உருவாக்கவும் ஆக்சென் IoT-ஐ பயன்படுத்துகிறது. பயிர் ஆரோக்கியம், பயிர் வளர்ச்சி, அறுவடை நிலை ஆகியவற்றை ஆய்வு செய்ய செயற்கைக்கோள் படங்களையும் பிக் டேட்டா பகுப்பாய்வையும் பயன்படுத்துகிறது. இறுதியாக குறிப்பிட்ட நிலத்திற்கு ஏற்ற சரியான பயிரை அறுவடை செய்ய விவசாயிகளுக்கு உதவுவதற்காக பயிர் குறித்த தரவுகளை சேகரிக்க மொபைல் வாயிலான தீர்வுகளைப் பயன்படுத்துகிறது.

தற்போது பஞ்சாப், மத்தியபிரதேசம், உத்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய ஐந்து மாநிலங்களில் செயல்படுகிறது.

சவால்களை எதிர்கொள்ளுதல்

எளிதாக பாதிப்படையக்கூடிய விவசாயத்தின் நிலை குறித்து விஷ்வஜீத் நன்கறிவார்.

“இந்தியாவில் இன்று விவசாயத்தில் இருக்கும் மிகப்பெரிய ஆபத்து பருவநிலை மாற்றம். தீவிரமான பருவநிலை விவசாயத் தொழிலை எவ்வாறு பாதிக்கும் என்பதற்கு மத்தியப்பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவில் ஏற்பட்ட சமீபத்திய மழை மற்றும் ஆலங்கட்டி மழை ஒரு உதாரணமாகும். கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட வறட்சி இதுவரை இல்லாத அளவிற்கு விவசாயிகளை பாதித்துள்ளது,” என்றார்.
image


தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு அதிகாரமளித்து அவர்கள் வானிலை மற்றும் நிலத்தில் உள்ள மண்ணின் இயற்கையான பாங்கு போன்றவற்றிற்கு ஏற்ப அறுவடை செய்ய உதவும் என அவர் நம்புகிறார்.

இந்நிறுவனம் தரவுகளில் கவனம் செலுத்தி தொழில்நுட்பம் சார்ந்து செயல்படும் Faas நிறுவனமாகும். இதன் மூலம் காலநிலை தொடர்பான ஆய்வு உள்ளிட்ட விவசாயிகள் தீர்மானிப்பதற்கு உதவும் ஆதரவான அமைப்பை வழங்குகின்றனர். பொருட்கள் அல்லது சேவைகளை வாடகை முறையில் பகிர்ந்தளிக்கும் இத்தகைய வணிக மாதிரியானது (sharing-economy model) அறுவடைக்கான செலவை பாதியாகக் குறைக்கிறது. தொழிலாளர்களைக் கொண்டு செய்யப்படும் அறுவடைக்கான செலவு சுமார் 4,200 ரூபாயாகும். ஆனால் இதில் ஒரு ஏக்கருக்கு 1,800 ரூபாய் மட்டுமே செலவாகும்.

விவசாய நடவடிக்கைகளை இயந்திரமயமாக்குவதன் மூலம் ஆக்சென் விளை நிலத்தில் இருந்து ஸ்டோர்களுக்கோ அல்லது சந்தைகளுக்கு கொண்டு சேர்க்கப்படும் நேரத்தைக் குறைக்கிறது. ஏனெனில் தொழிலாளர்களைக் கொண்டு மேற்கொள்ளும்போது 60 மணி நேரம் எடுக்கும் பணிகள் இயந்திரங்களால் ஒரு மணி நேரத்தில் செய்து முடிக்கப்படும். இந்த ஸ்டார்ட் அப் உள்ளூர் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் திறன் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் முழுமையாக திறன் தேவைப்படாத நடவடிக்கைகளில் பயிற்சிகள் எடுத்து அவர்கள் சிறு தொழில்முனைவு முயற்சியில் ஈடுபடவும் ஊக்குவிக்கிறது.

ஆக்சென் ’கம்பைன்’ (Kombine) என்கிற அதன் முதல் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இயந்திரங்களின் உரிமையாளரும் விவசாயியும் விவசாயப் பரப்பளவை துல்லியமாக அளவிட உதவும். உயர் தெளிவு செயற்கைக்கோள் படங்களின் டெராபைட்களை ஆராய GIS சார்ந்த இயந்திர கற்றலை பயன்படுத்துவது குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர்.

image


”நாங்கள் 8,000 ஏக்கருக்கும் அதிகமான பகுதிக்கு சேவையளித்துள்ளதால் பல்வேறு மாநிலங்கள், பல்வேறு பயிர்கள் மற்றும் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்றவாறான பயிர் வகைகள் போன்றவை குறித்த மிகவும் துல்லியமான தரவுகள் எங்களிடம் உள்ளது. நாங்கள் அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்ச்சியடைந்த தரவுகள் அதிகரிக்கத் துவங்கின,” என்றார்.

பெப்சிகோ, யெஸ்வங்கி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் ஆக்செனின் வாடிக்கையாளர் தொகுப்பில் அடங்கும்.

விவசாயத்தில் மதிப்பு கூட்டுவதற்கான தொடர் நடவடிக்கைகளை ஆக்சென் மேற்கொண்டது குறித்து குறிப்பிட்டு விஷ்வஜீத் விவரிக்கையில், “உருளைக்கிழங்கு விவசாயத்திற்கு உதவும் இயந்திர உற்பத்தியாளரான Grimme என்கிற ஜெர்மானிய நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டபோதும் பெப்சிகோ உருளைக்கிழங்கு விவசாயத்தை இயந்திரமயமாக்குவதில் சவால்களைச் சந்தித்தது. இந்த நிலங்களுக்குச் சென்று இயந்திரங்களைக் கொண்டு சிறப்பாக செயல்படும் தொழில்முறை சேவையளிக்கும் நிறுவனத்திற்காக தேவை நிலவியது. ஆக்சென் இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டது. அவர்களுடன் செயல்படத் துவங்கிய ஓராண்டிலேயே விதைப்பது முதல் அறுவடை வரையில் அனைத்து பணிகளையும் இரண்டு மாநிலங்கள் முழுவதும் மேற்கொண்டு வருகிறோம்.”

நிலையான வணிகம்

ஆக்சென் ஐஐடி கான்பூரால் இன்குபேட் செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம் நிதி உயர்த்தியுள்ளது. பின்னர் பிரனாப் முகர்ஜி ஃபவுண்டேஷனுடன் இணைந்தது. தொழில்நுட்பத்திலும் விவசாயத் தொழிலிலும் அனுபவமிக்க நபர்கள் ஆக்சென் குழுவில் உள்ளனர்.

image


“நாங்கள் கடினமாக உழைக்கத் தயாராக உள்ளோம். அத்துடன் இயந்திர உரிமையாளர்கள் போன்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக உள்ளோம். வளர்ச்சிக்காக நிதி உயர்த்துகையில் வணிகத்தின் FaaS சேவையை விரிவுபடுத்துவோம். இதற்காக நாங்கள் செயல்படும் இடங்களையும், சேவைகளையும், இயந்திரங்களையும் அதிகப்படுத்தி விரிவாக்கப் பணியை மேற்கொள்வோம்.

இன்று இந்நிறுவனம் 8,000 ஏக்கர் நிலங்களில் ஐந்திற்கும் அதிகமான பயிர்களை அறுவடை செய்துள்ளது. 5,000 விவசாய குடும்பங்களுடன் இணைந்து மூன்று மாநிலங்களில் செயல்பட்டுள்ளது.

”எங்களது போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் நாங்கள் தொழில்நுட்பத்தை அடிப்படை அளவில் இருந்து துவங்கி எங்களது இயந்திர செயல்பாடுகள் வாயிலாக அதிகபட்ச திறனை பயன்படுத்தியுள்ளோம். ஆறு மாதங்களுக்குள்ளாகவே எங்களது முதலீட்டாளர்களுக்கு உறுதியளித்த மைல்கல்லை எட்டியுள்ளோம். தொழில்நுட்பம் மற்றும் சந்தையைப் பொருத்தவரை தற்போது அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறோம்,” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார் விஷ்வஜீத்.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி கெடியா | தமிழில் : ஸ்ரீவித்யா

Add to
Shares
14
Comments
Share This
Add to
Shares
14
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக