பதிப்புகளில்

உங்கள் ஸ்டார்ட் அப் கதையின் தலைப்புச்செய்தியை எழுதப்போவது யார்?

27th Apr 2016
Add to
Shares
123
Comments
Share This
Add to
Shares
123
Comments
Share

2008-ல் என்னுடைய தொடக்க நிறுவனத்தை துவங்கியது போது பெரும்பாலான ஸ்டார்ட் அப்பை போலவே நானும் உலகளாவிய பெயரும் புகழும் சம்பாதிக்க முயற்சித்தேன். ஊடகங்கள் என்னைப் பற்றி எழுதுவதைத் தவிர வேறு ஏதாவது சிறந்த வழி இருக்குமா என்று யோசித்தேன். “இதோ! நான் இங்கே இருக்கிறேன் பாருங்கள். என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்” என்று சொல்வதற்கு மீடியா கவரேஜ் தான் சிறந்த வழி. ஆனால் யாரும் என்னைப் பற்றி எழுதவில்லையே! எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது. இதில் முரண்பாடு என்னவென்றால் நான் சொல்வதை யாரும் கேட்க விரும்பவில்லை. வெற்றிகரகாக பணியாற்றிக்கொண்டிருந்த கார்ப்பரேட் வேலையை துறந்தேன். கூலாக ஏதாவது செய்யலாம் என்று ஸ்டார்ட் அப் துவங்கினேன். அப்படி இருக்க ஊடகங்கள் என்னுடைய கதையை சொல்ல வேண்டாமா? என்னுடைய தனித்துவமான தொழில்முனைவு குறித்து ஏதாவது குறிப்பிடவேண்டாமா? உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், என்னுடைய பழைய நிறுவனமான CNBC TV18 யின் 'ஹை ப்ரொஃபைல் 'யங் டர்க்ஸ்' (high-profile Young Turks) நிகழ்ச்சியில் என்னைப்பற்றி ஒளிபரப்ப வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அதுவும் நடக்கவில்லை. 

image


பாரம்பரிய ஊடகங்கள் கிட்டத்தட்ட என்னை நெருங்கிவிட்டது. முழங்கை அளவிலான சின்ன இடைவெளிதான் என்று கூட சொல்லலாம் (அப்படி நடக்காததும் நல்லதுதான்). சில வருடங்களுக்கு முன்னால் மூன்று பேருக்கு விருது கிடைத்தது (அதில் ஒன்று யுவர்ஸ் ட்ரூலி). இந்தியாவின் பிரபல வணிக நாளிதழ்களில் (அதிலும் நான் பணிபுரிந்துள்ளேன்) மற்ற இருவருக்கும் கிட்டத்தட்ட அரை பக்க கவரேஜ் கிடைத்திருந்தது. என்னைப் பற்றி எந்த செய்தியும் இல்லை. பேப்பரை திரும்பத் திரும்பப் புரட்டிப்பார்த்தேன். ஒருவேளை நான் பார்க்காமல் இருந்திருக்கலாம், ஒருவேளை என் கண்ணில் படாமல் செய்தி எங்கேயோ மறைந்திருக்கலாம், ஒரு சின்ன செய்தி, ஒரு வரி செய்தியாவது வந்திருக்கலாம். யுவர் ஸ்டோரி என்ற பெயரை பார்க்க அதிக ஆவலாக இருந்தேன் (உங்களைக் குறித்து பெரிதாக விளம்பரம் செய்துகொள்ள பணமில்லையென்றால், சின்ன செய்திகூட பெரிதாகத் தோன்றும்). ஆனால் எங்கும் செய்தி இல்லை. கடந்த சில வருடங்களாக மெயின்ஸ்ட்ரீம் மீடியாவில் என் பெயர் இடம்பெறவில்லை என்ற உண்மையைத் தெரிந்துகொண்டேன். ஆங்காங்கே சில குறிப்புகள் இருந்ததென்னவோ உண்மைதான். அதற்காக மகிழ்ச்சியடைந்தேன். இந்த புறக்கணிப்பால்தான் ஒரு சின்ன பொறி தட்டியது. பல தொழில்முனைவோருக்கு வெளிச்சம் தரக்கூடிய ஒரு தளமாக யுவர் ஸ்டோரி இருக்கவேண்டுமென விரும்பினேன். இதில் எந்த ஒரு தொழில்முனைவோரும் தன்னுடைய கதையினை பகிர்வதற்கான இடம் அளிக்கப்படவேண்டும். இதுவரை, கிட்டத்தட்ட 30,000 பேருடைய கதைகள் யுவர் ஸ்டோரியில் பகிர்ந்துகொள்ளப் பட்டிருக்கிறது. இடைவிடாத வேகத்தில் நாங்கள் செயல்பட்டாலும் இன்னும் இதுபோன்ற பலரது கதைகளை பகிர்ந்துகொள்ள முடியவில்லை என்பதும் உண்மைதான்.

ஆகவே ஒரு தொழில்முனைவோராக, ஏன் நம்முடைய கதைகளை மற்றவர்களுக்கு சொல்லவேண்டும், ஏன் ஊடகங்களில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று எனக்குப் புரிந்தது. CNBC யில் பணிபுரிந்துவிட்டு யுவர்ஸ்டோரி தொடங்குவதற்கு முன்னிருந்த இடைப்பட்ட நேரத்தில், ஃப்ளிப்கார்டில் பணிபுரிந்துகொண்டிருந்த ஒருவர் யங் டர்க்ஸில் ஒரு கவரேஜ் செய்ய என்னுடைய உதவியை கேட்டபோது சொன்னார், “நாங்கள் பிரபலமானவர்கள் அல்ல. அதனால் ரெக்ரூட்மென்டிற்காக ப்ரீமியம் கல்லூரிகளுக்கு செல்லும்போது இது எங்களுக்கு உதவும்”. ஊடகங்களில் கவரேஜ் செய்ய ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான காரணங்கள் இருக்கிறது. இந்தக் காரணம் அந்தந்த நேரத்திற்கேற்ப மாறலாம். ஆனால் நீங்கள் தொழிலில் இருக்கும்போது நீங்கள் தொடர்புகொண்டே தீரவேண்டும். மீடியாதான் அதற்குச் சிறந்த வழி.

2008-ல் யுவர் ஸ்டோரி தொடங்கியதிலிருந்து இந்திய ஊடகங்களில் குறிப்பிடும்படியான பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த எட்டு வருடங்களில், கிட்டத்தட்ட எல்லா செய்தித்தாள்களும், பத்திரிக்கைகளும் வெப்சைட்களும் ஸ்டார்ட் அப்பின் கதைகளைச் சொல்ல ஆர்வமாக உள்ளது.

ஸ்டார்ட் அப் குறித்து கவரேஜ் செய்வதும் அவர்களைக் குறித்து எழுதுவதும் சிறந்தது என்று உலக அளவில் மிகப்பெரிய ஊடகங்கள்கூட கடந்த இரண்டாண்டுகளில் உணர்ந்துள்ளது. இ-காமர்ஸில் அதிக பணம் புழங்குவதுதான் ஸ்டார்ட் அப்பை தலைப்புச்செய்தியாக்குகிறது. ஸ்டார்ட் அப் செய்திகள்தான் ஒவ்வொருநாளின் தலைப்புச்செய்தி. குறிப்பாக நிதி குறித்த செய்திகள். பில்லியன் டாலர் கிளப்பில் யார் சேர்கிறார்கள்? போஸ்டரில் இருக்கும் புதிய முகம் யாருடையது? யார் அதிக முதலீடு செய்கிறார்கள்? YS போன்ற cheerleader தளத்தைச் சேர்ந்தவர்கள்கூட எப்போதாவது தலைப்புச்செய்தியாகிறோம். ஆன்லைன் மீடியாவைப் பொறுத்தவரை பக்கங்களை அதிகம் பார்ப்பதுதானே முக்கியம்.

செய்திகளைக் குறித்தும் தலைப்புச்செய்திகளைக் குறித்தும் ஒரு விஷயத்தை மட்டும் நான் அனைவரையும் சிந்திக்கச் சொல்வேன்.

ஏன் ஸ்டார்ட் அப் செய்திகள் எப்போதும் இரண்டு வெவ்வேறு முனைகளில் காணப்படுகிறது. முற்றிலும் உற்சாகம் ஒரு புறம். கொந்தளிப்பு மறுபுறம். நாட்டைக் காக்கும் ஸ்டார்ட் அப் முதல் உதவிக்கரம் நாடும் ஸ்டார்ட் அப் வரை. ஒரு விஷயத்தை வெளியிடுவதற்கு எப்படி ஊடகங்கள் இரண்டு முனைகளையும் நம்புகிறது?

கடந்த வாரம் பல இறுதித்தீர்ப்பு கதைகளை படித்து மனம் நொந்துபோனேன். உற்சாகமான நிதி செய்திகளைக் கேட்டு மனம் மகிழ்ந்தும் போனேன். ஒரு தொழில்முனைவோருக்கு நிதி என்பது என்னைப்பொறுத்தவரை தொழில்முனைவு என்னும் பயணத்தை நோக்கிய ஒரு அடியாகும்.

நான் ஒரு நிபுணராக இல்லாவிட்டாலும் ஊடகங்களையும் பபிள் தியரியை ஆதரிப்பவர்களையும் பார்த்து ஒரு கேள்வி கேட்க ஆசைப்படுகிறேன். ”எந்த ஒரு பயணத்திலும் ஏற்ற இறக்கங்கள் இருப்பது இயற்கைதானே? எதற்காக ஒரு நபரை நாயகனாக சித்தரித்து, பின் ஒரு சில மாதங்களிலேயே அதே நபரை தரம் தாழ்த்தவேண்டும்? அதுவும் திறமையின் அடிப்படையில் அல்லாமல் பெரும்பாலும் யூகத்தின் அடிப்படையில் சித்தரிக்கப்படுகிறது.

தொழில்முனைவோரிடம் நான் ஒன்று கேட்கிறேன்?

”முதல் பக்கத்தில் செய்தி வெளியாகும்போது நாம் ஏன் இவ்வளவு பெருமை கொள்கிறோம்?"

கடந்த சில வருடங்களில் ஊடகங்களின் கவனம் அவர்கள் பக்கம் திரும்பும்போது ’நான் சாதித்துவிட்டேன்’ என்பது போன்ற உணர்வு பல ஸ்டார்ட் அப் ஹீரோக்களுக்கு ஏன் ஏற்படுகிறது? ஒரு தொழில்முனைவோரை நான் கருத்து கேட்டபோது கூறினார்,

”சானல்கள் என்னை துரத்துகிறார்கள். அவர்களுக்கே என்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை. உங்களுக்கு எப்படி நேரம் ஒதுக்குவது?”

இது எனக்கு ஒன்றை உணர்த்தியது. மீடியாவின் கவனம் குறுகியகாலத்திற்கானது என்பதை அவர்கள் ஏன் புரிந்துகொள்ளவில்லை?

இந்தப் பதிவு மீடியாவைப் பற்றி மட்டுமே சொல்வதற்காக அல்ல. ஏனென்றால் விறுவிறுப்பான தலைப்புச்செய்திகளை சொல்லவில்லை என்றால் அது மீடியாவே இல்லை. நியாயமான செய்திகளாக இருக்கவேண்டும். நம் கவனத்தை ஈர்க்கவேண்டும். இல்லையெனில் அது சலிப்பாகவும், மந்தமாகவும், நம் நேரத்தை வீணடிப்பதாகவும் இருக்கும். நாம் இந்த உலகத்தில் இருப்பதை மறந்துவிடும் அளவிற்கு ஒரு விறுவிறுப்பான கதையையே நாம் பெரும்பாலும் தேர்ந்தெடுப்போம்.

தொழில்முனைவோரான நாம் ஏன் முடிந்தவரை நம்முடைய கதையை நாமே விவரிக்கக்கூடாது? நேரம் இல்லையா? இப்போதைக்கு இது பொருத்தமானதல்ல என்று நினைக்கிறோமா? கதை சொல்வதில் நிபுணர்தான் சொல்லவேண்டும் என்று நாம் நினைக்கிறோம்.

நம்முடைய எடுத்துரைக்கும் திறமையை முடிந்தவரை கையாள இதுதான் சரியான நேரம். இது குறித்து நாம் பேசும்போது, தவறாமல் மீடியாவில் நம்மைப் பற்றி கேட்கவேண்டியதன் அவசியம் என்ன? ஏன் நாம் எப்போதும் செய்திகளில் இடம்பெறவேண்டும்? சொல்லப்போனால் அதிகமான கவரேஜ் இருந்தால்தான் கவலைப்படவேண்டும். எங்கும் நிறைந்திருக்கும் சமூக ஊடகங்களில் நமக்கான மீடியாவை நாமே ஏன் உருவாக்கிக்கொள்ள கூடாது? சமீபத்திய பெப்பர்டேப் கதையை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். நிறுவனத்தை மூடப்போகும் செய்தியை ஊடகங்கள் வெளியிட்டபோது நிறுவனரான நவ்நீத் சிங் சற்றும் தடுமாறவில்லை. நவ்நீத் அவரது கதையை சொன்னார். அவரது வார்த்தைகளாலேயே விவரித்தார். ஊகத்தை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் அவர் எடுத்துரைக்க முடிவெடுத்தார். அவரது கதையை அவரது நிலையிலிருந்து அவரே விவரித்தார் எதைச் சொல்லவேண்டும் என்று நினைத்தாரோ அதை தெரிவித்தார். அவரது குரல் சத்தமாகவும் தெளிவாகவும் கேட்டது.

பல தொழில்முனைவோர் என்னிடம் சொல்வார்கள் :

நான்தான் அடுத்த யூனிகார்ன். நீங்கள் துரத்தும் தலைப்புச்செய்தி நானாகத்தான் இருக்கப்போகிறேன், என்று.

அவர்களின் தன்னம்பிக்கை எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் அதேசமயம் சற்று நடுக்கமாகவும் இருக்கிறது. அவர்கள் தலைப்புச்செய்தியாவதை கடவுள் எப்படியாவது தடுத்து நிறுத்தவேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்களுக்கான நேரத்திற்கு தயாராவார்கள்.

நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் நேரம் செய்திகளின் சமநிலை, வேலை, வாழ்க்கை போன்றவற்றை குறித்து மறுபடி கற்கும் நிலைக்கு செல்கிறேன். நான் அனைவருக்கும் சொல்வது ஒன்றுதான். நம் தலைப்புச் செய்தியை நாமே எழுதுவோம். நம் ஸ்டார்ட் அப் கதையை நாமே எழுதுவோம்.

(யுவர் ஸ்டோரி நிறுவனர் ஷ்ரத்தா ஷர்மா எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது.)

தமிழில் : ஸ்ரீ வித்யா

தொடர்பு கட்டுரைகள்:

வாழ்த்துக்கள்! உங்களிடம் இல்லாதது தான் வெற்றிக்கு வித்திடக்கூடியது!

'கிடைக்காத ஒன்றே நம்மை பில்லியனை நோக்கி அழைத்துச் செல்லும்'- நம்பிக்கை ஊட்டும் ஷ்ரத்தா ஷர்மா!

பாராட்டவும் அன்பு செலுத்தவும் நாம் தயங்குவது ஏன்?

Add to
Shares
123
Comments
Share This
Add to
Shares
123
Comments
Share
Report an issue
Authors

Related Tags